முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


காஷ்மீர் அட்டூழியங்களுக்கு பதிலடியே யூரி தாக்குதல்: நவாஸ்லண்டன், செப்டம்பர் 24,2016: யூரியில் ராணுவ உயர் பாதுகாப்பு முகாமில் நடந்த தாக்குதல், காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் அட்டூழியங்களுக்கான எதிர்வினையாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மேலும், யூரி தாக்குதலில் ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி சொல்வதை விடுத்துவிட்டு காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக நிகழ்ந்த உயிர் பலி தொடர்பாக இந்தியா விசாரணை மேற்கொள்ளட்டும் என ஷெரீப் கூறியுள்ளார்.

லன்டணில் செய்தியாளர்களை சந்தித்த ஷெரீப், "காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் உறவினர்களை இழந்தவர்களும், தங்களது பார்வையையும், தங்கள் உறவுகளின் பார்வையையும் இழந்தவர்களும் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். யூரி தாக்குதல் காஷ்மீரில் நடைபெறும் அட்டூழியங்களுக்கான எதிர்வினையாக இருக்கும்.

ஆனால், இந்தியா அவசர அவசரமாக பழியை பாகிஸ்தான் மீது சுமத்துகிறது. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் இந்தியா பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டுகிறது.

காஷ்மீரில் இந்தியா கட்டவிழ்த்துவிட்டுள்ள அட்டூழியம் உலகறிந்தது. காஷ்மீரில் இதுவரை 108 பேர் பலியாகியிருக்கின்றனர். 150-க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்துள்ளனர். காஷ்மீரில் தனது பங்கு என்ன என்பதை இந்தியா சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

யூரி தாக்குதலில் ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி சொல்வதை விடுத்துவிட்டு காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக நிகழ்ந்த உயிர் பலி தொடர்பாக இந்தியா விசாரணை மேற்கொள்ளட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

கை கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவி கொலை.!!!


ஹைதராபாத், செப்டம்பர் 20-2016:  தெலுங்கான மாநிலம் ஹைதராபாத் ல் அமீனா என்ற 9 ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவி கை கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யும் முன் அமீனா பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

சடலம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்துள்ளனர். கொலையாளியை போலிசார் சிசிடிவி காணொளி மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.

புர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு அமீனாவை அவன் பைக்கில் அழைத்து செல்கின்றான். சிசிடிவியில் இது பதிவாகியுள்ளது. கொலை செய்தவன் அக்பர் எனக் கூறப்படுகின்றது.

நன்றி:

முகநூல் நண்பர்கள்  

நிலவில் கேட்ட வினோதமான இசை சப்தம் – முஸ்லிம்களின் ”பாங்கு” சப்தமா?அமெரிக்கா, பிப்ரவரி 28/2016: பூமிக்கு தென்படாத நிலவின் மறுபக்கத்தில் இசை போன்ற விண்வெளி ஓசையை 1969 ஆம் ஆண்டு அந்த பகுதியை கடந்து சென்ற விண்வெளி வீரர்கள் கேட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ளது.
நிலவில் முதல் முறை தரையிறங்கிய அப்பலோ 11 விண்கலத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரான அப்பலோ 10 விண்வெளி பயணத்திலேயே இந்த மர்மமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அசாதாரண ஒலி பற்றி அதனைக் கேட்ட விண்வெளி வீரர்களின் உரையாடலே தற்போது வெளியாகியுள்ளது. இது வரை காலமும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த சம்பவம் சயன்ஸ் சன்னல் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.
‘நாஸாவின் விளக்கமுடியாத ஆவணங்கள்’ என்ற எதிர்வரும் நிகழ்ச்சியிலேயே வெளியாகவுள்ளது.
இந்த ஒலியை ஒட்ட ஒரு விண்வெளி வீரர், “நீங்கள் அதை கேட்டீர்களா? விசில் அடிப்பது போன்ற சப்தம்? வூவூ?” என்று சக விண்வெளி வீரரிடம் சம்பாசித்துள்ளார்.
பின்னர் மற்றொரு விண்வெளி வீரர் குறிப்பிடும்போது, “இந்த இசை மிக வினோதமாக இருக்கிறது. எம்மை யாரும் நம்பப்போவதில்லை” என்று குறிப்பிடுகிறார்.
இந்த இசை போன்ற ஒலி பற்றி பல தர்க்கரீதியான காரணங்கள் கூறப்பட்ட போதும் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கு முன்னர் நிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கு நிலவில் முஸ்லிம்கள் தொழுகைக்கு கூறும் பாங்கு சப்தத்தைக் கேட்ட நீல் ஆம்ஸ்டராங்கு இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறப்படுகிறது..

காவல்துறைக்கு இந்திய தவ்ஹித் ஜமாஅத் பாராட்டு!


சென்னை: சமூக வலைத்தளைங்களில் இந்து முன்னணி சார்பில் தமிழகத்தை சூழும் ஜிஹாதிகள் என்ற தலைப்பில் தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பதற்றமாக காட்டும் வீடியோக்கள் பரப்பப்பட்டன.
இது தொடர்பாக இந்திய தவ்ஹித் ஜமாஅத் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் உரிய அழுத்தத்தைக் கொடுத்து வந்தன. இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில் துணைத் தலைவர் முஹமது முனீர் தொடர்ந்து காவல் துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதை நீக்காவிட்டால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று தெரிவித்தார்.
நாகை, திருப்பூர், காஞ்சி மற்றும் திண்டுக்கல் என அனைத்து மாவட்ட  நிர்வாகிகளும் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறை நேற்று இரவு ஒரு வாரத்தில் நீக்குவதாக வாக்குறுதி அளித்தனர். அதைப் போன்று யூடியூபில் இந்து முன்னணி வெளியிட்டுள்ள அனைத்து ஆவனப் படங்களும் நீக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அமைப்புகளின் தொடர் முயற்சியால் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து உள்ளது.
இவ்விசயத்தில் மக்களின் உணர்வை புரிந்து கொண்டு உடனடியாக துரித நடவடிக்கை எடுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணை தலைவர் முஹமது முனீர் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார் மேலும், இந்த ஆவண படத்தை மக்களிடம் விநியோகம் செய்வதையும் தடை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

லண்டனில் இஸ்லாத்தை ஏற்ற 10 மணி நேரத்தில் பெனரல் (எ) ஜனாஜா என்ற பெண் மரணித்தார்.


லண்டனில் இஸ்லாத்தை ஏற்ற பத்து மணி நேரத்தில் பெனரல் (எ) ஜனாஜா என்ற பெண் மரணித்தார். இறுதி ஊர்வலத்திற்கு ஆள் இல்லாமல் மனம் குமறிய மகன், சமூக வளைத்தளத்தில் பதிவேற்றி உதவி கோரி அவருடைய விலாசத்தை பதிவு செய்தார்.
பதிவு செய்த சில மணி நேரங்களில்
நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஜனாசா தொழுகையில் கலந்துக்கொண்டனர்.

இந்த மார்கத்தை அன்பினால் பிணைத்திருக்கின்றோம் என்ற இறை கூற்றை மெய்பித்த மக்கள் சாரை சாரையாக அணி திரண்டார்கள். 
அல்லாஹு அக்பர்.

இந்த சகோதரிக்கு அல்லாஹ் ஜன்னத் எனும் சொர்க்கத்தை தந்தருள்வானாக.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.!! இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லைசிங்கப்பூர், பிப்ரவரி 18/2016: சிங்கப்பூரில் (work permit) ல் வேலை பார்ப்பவர்கள் தங்களது விசா முடியும் பொழுது சிங்கப்பூரில் இருந்து கொன்டே வேறு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் அதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் அரசாங்கமே (Ministry Of Manpower ) ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதற்கு செய்ய வேண்டியதாவது, நிறுவனம் மாற விரும்புவபர்கள் தங்களது முழு விவரத்தையும் FCWDS(Foreign Construction Workers Directory System) ல் பதிவு செய்து விட்டு மேலும் நீங்கள் தற்பொழுது வாங்கி கொண்டிருக்கும் சம்பளம் & எதிர்பார்க்கும் சம்பளம் , உங்களுக்கு என்ன வேலை தெரியும், வேலை அனுபவம, மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற முழு தகவலையும் அவர்களிடம் தெரிவித்து விட வேண்டும். 

அதன் பிறகு அவர்கள் உங்களுக்கு சரியான நிறுவனத்தை கண்டுபிடித்து நேர்கானலுக்கு ஏற்பாடு செய்து தருவார்கள் (இதற்கு கட்டணம் $176 மட்டுமே) இதன் கால அவகாசம் 90 நாட்கள். அதாவது உங்களது விசா முடிவடைய 90 நாட்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும். 
விவரங்கள் படத்திள் உள்ளது.


குறிப்பு:
புதிய நிறுவனத்திற்கு மாறுவதற்கு தற்பொழுது வேலை செய்யும் நிறுவனத்தின் அனுமதி கடிதம் தேவை இல்லை.

சவுதியில் செல்போன் சிம்கார்டு பயன்படுத்த கடும் கட்டுப்பாடு அமுலுக்கு வருகிறது.சவூதி, பிப்ரவரி 12/2016: ஃபிங்கர் ப்ரிண்ட் பதிவு செய்தால் தான் இனி உங்கள் சிம் பயன்படும், இல்லை என்றால் கனெக்‌ஷன் துண்டிக்கப்படும்.இதனால் உள்நாட்டு பாதுகாப்பு மேம்படும் என்றாலும், கடும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.


சிம் கார்டு தொலைந்து விட்டால் உடனே போய் அதை ரத்து செய்ய வேண்டும், இல்லை என்றால் அந்த நம்பரை வைத்து வேறு வகையில் தவறான காரியங்களுக்கு யாரேனும் பயன்படுத்தினால், சிம்முக்குறிய நபர் தான் தண்டிக்கப்படுவார்.

அதே போல் இனி நெட் சிம் கார்டு பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.. ஏனெனில் அதற்கும் கை ரேகை அவசியம் என மெசேஜ் வந்திருக்கு.சாதாரணமாக சவுதியில் ரீசார்ஜ் செய்வது கூட சுலபமில்லை, ஏன்னில் நம்ம ஊரில் பயன்படுத்துவது போல் கார்டை சுரண்டி ரகசிய நம்பரை பதிவேற்றினால் ரீசார்ஜ் ஆகிவிடுது போல் சுலபான காரியம் அல்ல, இங்கே ரீசார்ஜ் ரகசிய நம்பருடன் சவுதி அரசால் கொடுக்கப்பட்டு இருக்கும் இகாமா ஐடியின் நம்பரையும் பதிவு செய்தால் தான் ரீசார்ஜ் ஆகும்.

ஒருவர் சிம்மில் இன்னொருவர் ஐடி நம்பர் போட்டு ரீசார்ஜ் கூட செய்ய முடியாதளவுக்கு கடும் கட்டுப்பாடு உள்ளது.

அப்படி இருக்கும் போது தற்போது கைரேகை பதிவு செய்ய சொல்வது இன்னும் கடுமையான விதிமுறைகளை தொலைதொடர்பு துறை விதித்துள்ளதை காட்டுகிறது.

நம்ம ஊர்ல ஒரு சிம் கார்டு இல்லை பத்து சிம் கார்டு கூட யாரோ ஒருத்தரின் ஜெராக்ஸ் ஐடி இருந்தால் கூட வாங்கிடலாம், இங்கேயும் அப்படி தான் இருந்தது, ஆனால் பாதுக்காப்பை பலப்படுத்த நினைத்து பார்க்க முடியாதளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கு என்பது தான் ஆச்சரியம்,அதை விட ஆச்சரியம் அதை செயல்படுத்தி காட்டுகிறார்கள் என்பது தான்.

கைரேகை பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள சிம் நிறுவனத்தின் கிளைகளை தொடர்பு கொண்டு கைரேகை பதித்து விடுங்கள், இல்லை எனில் விரைவில் தொடர்பு துண்டிக்கப்படும்

வளைகுடா நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக…இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை !உலகம், பிப்ரவரி 08/2016: வளைகுடா நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அந்த நாடுகளில் வேலைக்கு சென்ற இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல லட்சம் பேர், சொந்த ஊர் திரும்புகின்றனர்.

குவைத், பக்ரைன், கத்தார், ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள். இவை, வளைகுடா நாடுகள் என, அழைக்கப்படுகின்றன.இங்கு, கச்சா எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் அபரிமிதமான பணத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும், வெளிநாட்டு பணியாளர்களையே நம்பி உள்ளனர். பொறியாளர்கள், செவிலியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள், வீட்டுப் பணியாளர்கள் என, பெரும்பாலான பணிகளில், வெளிநாட்டினரே ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து, 50 லட்சம் – 70 லட்சம் தொழிலாளர்கள் அங்கு சென்று பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த, 10 லட்சம் – 15 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

கடந்த, 10மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தையில், அமெரிக்காவின் கொள்முதல் குறைவு; ஈராக் எண்ணெய் ஏற்றுமதிக்கு இருந்த தடை நீக்கம்; வளைகுடா நாடுகளின் எண்ணெய் நிறுவன கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு ஆகியவற்றால், கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால், பல எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு சென்றுள்ளன. தொடர்ந்து செயல்படும் நிறுவனங்களில், ஊதிய உயர்வு நிறுத்தம்; பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதி போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கச்சா எண்ணெய் மூலம் கிடைத்த வருவாயில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, வளைகுடா நாடுகளின் அரசுகள், புதிய வரிகளை விதிக்க துவங்கி விட்டன. குறிப்பாக, மின் கட்டணம்கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. நிறுவனங்கள் அளிக்கும் குடியிருப்பு வசதி ரத்து செய்யப்பட்டதால், வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்து விட்டது. வருமான வரி, 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதோடு, 4 சதவீத மதிப்புக் கூட்டு வரி, புதிதாக அறிமுகம்செய்யப்பட்டு உள்ளது. பள்ளி கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், வெளிநாட்டில் இருந்து சென்ற தொழிலாளர்களின், மாத வருவாயை முழுவதுமாக செலவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால், குடும்பத்துடன் வசித்து வந்த, இந்திய தொழிலாளர்கள், குடும்பங்களை, இந்தியாவுக்கு திரும்ப அனுப்புகின்றனர். தனியாக வசித்து வந்த பல தொழிலாளர்கள், மாத வருமானம் போதாத நிலையில், நாடு திரும்புகின்றனர்.

இப்படி நாடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவர்களின் மறுவாழ்வுத் திட்டங்களை, கேரள மாநில அரசு உருவாக்கி வருகிறது. தமிழக தொழிலாளர்கள் கொஞ்சம், கொஞ்சமாக நாடு திரும்பி வருவதால், அரசின் முழு கவனம், இன்னும் இவர்கள் பக்கம் திரும்பவில்லை.

ஒரு பெண்ணை பெற்றோர்கள் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறைகள்உலகம், பிப்ரவரி 08/2016: அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மஸ்ஜிதே நபவியில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். அதுசமயம் , சல்மான் ஃ பார்சீ [ரலி] அவர்கள் அங்கு வந்து, அண்ணலார் [ஸல்] அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! நான் தங்கள் அருமை மகளார் ஃபாத்திமா [ரலி] அவர்களின் வீட்டின் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.'' என்று கூறினார்கள்.


உடனே நபி [ஸல்] அவர்கள் தம் மகளார் வீட்டிற்கு விரைந்தார்கள். வீட்டில் ஃபாத்திமா [ரலி] அவர்கள் அழுது கொண்டிருந்தனர். அண்ணலார் [ஸல்] அவர்கள் தம் மகளாரிடம் அழுகைக் காரணத்தைக் கேட்டனர்.

மகளார்: ''அன்புள்ள தந்தையே! நானும் எனது கணவரும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தோம்,, விளையாட்டு வினையாகிவிட்டது. பேச்சுனூடே என் கணவர் '' பெண்கள் ஷைத்தான்களாவர் .. உங்களை எங்களுக்காக படைக்கப்பட்டது,, நாங்கள் அந்த ஷைத்தான்களின் தீங்கை விட்டும் அல்லாஹ் விடத்தில் காவல் தேடுகிறோம். '' என்று கூறினார்கள் .

நான் உடனே, ''நிச்சயமாக பெண்கள் ரைஹான் இலைகளைப் போன்றவர்கள்,, அவைகளை உங்களுக்காக படைக்கப்பட்டது,, நீங்கள் எல்லாம் ரைஹான்களை முகர்ந்திட ஆசைப்படுகின்றீர்கள் .'' என்று பதில் கூறினேன். இச் சொல் என் கணவரின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது. உடனே அவர்கள் வீட்டை விட்டும் புறப்பட்டு விட்டார்கள்,, எனவே தான் அழுது கொண்டிருக்கிறேன்.''

மகளாரின் மொழி கேட்டு அண்ணலார் [ஸல்] அவர்கள் மருகர் அலீ [ரலி] அவர்களைத் தேடித் புறப்பட்டார்கள். கடை வீதி, பள்ளி வாசல் முதலிய இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், ஜன்னத்துல் பகீ உ , என்னும் கப்ருஸ்தானில் அலீ [ரலி] அவர்களை கண்டார்கள்.

அது சமயம் அலீ [ரலி] அவர்கள் , ஒரு பாழடைந்த கப்ரில் ஓர் ஈச்சமரத்தின் கீழ், தலைக்கு மண் கட்டி ஒன்றை வைத்தவர்களாக, ஆழ்ந்த சிந்தனையில் படுத்திருந்தார்கள். வீட்டில் அமைதி குலைந்து விட்டால் மண வாழ்க்கையும் மண்ணறை போன்றுதானே!
அண்ணலார் [ஸல்] அவர்களின் அருகில் சென்று, 
''யா அபுத்துராப், கல் என்ன சொல்கிறது? '' எனக் கேட்டார்கள்.

அண்ணலாரின் குரல் கேட்டு துள்ளி எழுந்தார்கள் அலீ [ரலி] அவர்கள். அவர்களைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

வீட்டின் வாய்ற்படியருகே வந்து, ''அஸ்ஸலாமு அழைக்கும் யா ஃபாத்திமா ! உனது தந்தையும் , கணவரும் வந்திருக்கின்றோம். உள்ளே வரலாமா?'' என அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே சென்றனர்.

தமது மகளாரை விளித்து, ''மகளே! உனது பேச்சால் புண்பட்டுப் போயிருக்கும் உன் கணவரிடம் மன்னிப்புக் கேள் .'' என்றார்கள் . பாத்திமா [ரலி] அவர்கள் தனது கணவராம் அலீ [ரலி] அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.

தமது மகளைப் பார்த்து ''மகளே! உன்னுடைய கணவர் உன் மீது அதிருப்தி கொண்டநிலையில், உனக்கு மரணம் நேரிட்டிருக்குமாயின் நீ சுவனத்தின் மணத்தைக் கூட முகர்ந்திருக்க முடியாது போயிருப்பாய்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான் .'' எனக் கூறிவிட்டு சென்றார்கள்.

சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள், நம் குடும்பத்தில் கணவர் மனைவியர்களிடையே கசப்புணர்ச்சிகள் , சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அந்நிலையில் எம்முறையில் நாம் நடந்து கொள்கிறோம்?
'' அவன் கிடக்கிறான் வெறும்பயல். நீ வீட்டிற்கு வந்துவிடும்மா ? உண்ண உணவும் , உடுத்த உடையும் உனக்கு இல்லையென்றா அவன்தலையில் கட்டினோம்? நீ இங்கேயே இருந்துவிடு. சோறும், துணிமணிகளும் நாங்கள் தருகின்றோம். அவனோடு வாழ்ந்து போதும் .''

இவ்வாறெல்லாம் சில பெற்றோர்கள் தம் பெண்மக்களுக்கு நசீஹத்து செய்து, அவள் செய்துவிட்ட தவறுகளை அவள் உணர முடியாமலே செய்துவிடுவதுடன், அவளது மணவாழ்க்கையையும் வீணடித்து விடுகின்றனர்,, அது மட்டுமின்றி, அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உரியவளாகவும் அவளை ஆக்கிவிடுகின்றனர்.

ஆனால், அகிலத்திண் அருட்கொடை அண்ணல் நபி [ஸல்] அவர்களோ எல்லாவற்றுக்கும் முன்மாதரியாக திகழ்ந்த காரணத்தால், சுவர்க்கத் தலைவி என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்தும், தனது மகளாரின் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், மணாலரிடம் மன்னிப்புக் கேட்கச் செய்து, அவ்விருவரின் வாழ்க்கையையும் மனமுள்ள வாழ்க்கையாக மாற்றி அமைத்து நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்..


சிந்திக்க வைத்த மூதாட்டியின் கேள்வியும், இதன் விளைவாக இஸ்லாத்தை தழுவிய கின்னஸ் பேட்டியாளரும்...


பாலஸ்தீன், 06/2016: 124 வயதுடையை மரியம் ஹம்தான் அம்மாஸ் என்பவர் பாலஸ்தீனிய பெண்மணியாவார்.
ஐந்துமுறை ஹஜ்ஜும், பத்து தடவை உம்றாவும் செய்துள்ள இவர், எப்பொழுதும் ஹிஜாபுடனேயே காணப்படுவதுடன், மிகவும் உறுதியான ஈமான் கொண்டவர்.
இவருக்கு 9 பிள்ளைகளும் 600 வழித்தோன்றல்களும் உள்ளனர்.
இவருடைய வயதை கின்னஸில் பதிவதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தின் அதிகாரிகள் இவரை பேட்டி எடுக்க முயற்சித்தபொழுது, இவருடைய ஹிஜாபை அகற்றும்படி கேட்டுக்கொண்டார்கள்.
இதனை ஏற்றுக்கொள்ளாத அம்மூதாட்டியிடம் அவர்கள், "உங்களுடைய வயதென்ன" என்று கேட்டார்கள்.
அம்மூதாட்டியும் சிரித்துக்கொண்டே 43 என்று பதிலளித்தவர், கின்னஸ் பேட்டியாளரை பார்த்து "நீங்கள் முஸ்லிமா" என்று வினவினார்.
"இப்பொழுது இது முக்கியமா" என்ற கின்னஸ் பேட்டியாளரின் கேள்விக்கு மூதாட்டி இவ்வாறு கூறினார்.....
"நீங்கள் எது சரி, எது பிழையென பகுத்தறியும் நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் முஸ்லிமல்ல. 
அதாவது நீங்கள் உண்மையை பொய்யிலிருந்து பிரித்தறிய
முடியாதவறாயிருக்கிறீர்கள். ஒரு குழந்தைக்குத்தான் இந்த நிலையிருக்கும்."

" மற்றவர்கள் முன்நிலையில் உலகாயுத விடயங்களில் தங்களை பெருமைபடுத்தப்பட்டவர்களாகவும், படைத்தவன் முன் சிறுமைபட்டவர்களாகவும் இருப்பார்கள்.ஆகவே நான் இவ்வுலக வாழ்வை தேர்ந்தெடுப்பதா??? மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வை தேர்ந்தெடுப்பதா???"
"அதாவது உலகின் ஆதாயங்களுக்காக பெருமைப்பட்டவளாக இருப்பதா??? அல்லது படைத்தவனின் திருப்தியைபெற்று மரணத்திற்குபின் பெருமையுடையவளாக இருப்பதா???
இதில் எதை நான் தேர்ந்தெடுப்பது???"

மூதாட்டியின் இக்கேள்வியினால் கின்னஸ் பேட்டியாளர் பதில்
கூற முடியாமல் திகைத்து நின்றார்.

பணம், புகழ் போன்ற இன்னோரன்ன உலக ஆதாயங்களை பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கும் மனிதர்கள் மத்தியில், இந்த வயதான பெண்மணியின் ஈமானின் உறுதி அவரை சிந்திக்க வைத்தது.
அவரின் திகைப்பை கண்ணுற்ற மூதாட்டி , "நீங்கள் திரும்பிச்சென்று நன்றாக சிந்தித்துவிட்டு திரும்பிவாருங்கள். நீங்கள்வரும்வரை நான் இறக்க மாட்டேன்." என்று சிரித்தவாறே கூறினார்.
இச் சம்பவத்தின்மூலம் நடந்தது ஓர் அதிசயம்...........
இதன்பின்னர் ஏழுமாதங்கள் கடந்த நிலையில் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார் அந்த கின்னஸ் பேட்டியாளர். இதிலிருந்து நான்கு மாதங்களின் பின் இம்மூதாட்டியும் இறைவனடி சேர்ந்தார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்)

கின்னஸ் புத்தகம் வெளியிடுவோர் மூதாட்டியை எதற்காக ஹிஜாபை நீக்கும்படி கேட்டுக்கொண்டார்கள் என்பது விந்தையாகவே உள்ளது.
நன்றி 
Gulf News 

ஹைதராபாத் உள்ளாட்சி (GHMC) தேர்தல்கள்... அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அமோக வெற்றி...!!
ஹைதராபாத், பிப்ரவரி 06/2016: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 (வார்டு) இடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த (02.02.2016 ) அன்று நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று மாலை 4:00 மணிக்கு துவங்கியது...
தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி(TRS),  அகில இந்திய மஜ்லிஸ் கட்சி (AIMIM), காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி உள்ளிடவை முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர்..

வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்தே ஆளும் கட்சியான TRS முன்னிலை பெற்றிருந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கடும் போட்டியை கொடுத்தது...
இறுதியாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி(AIMIM) தான் போட்டியிட்ட 60 இடங்களில் 44 இடங்களை வென்று அசத்தியது...

எந்த இயக்கமும் கட்சியும் சுயநலமாக சிறைவாசிகள் விசயத்தை செய்தால் சும்மா விட மாட்டோம் !!
சென்னை, பிப்ரவரி 05/2016: பல ஆண்டுகளாக சிறையில் வாடும் சகோதரர்களுக்கு அணைத்து இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன அணைத்து அமைப்புகளும் அவர்களுக்காக போராடி வருகின்றன கொஞ்சம் சுன்னக்க்ம் ஏற்பட்டதை வைத்து சிறை துறை அங்கு உள்ள சிறை வாசிகளை கொடுமை படுத்தி வரும் நிலையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் முதல் தீ பொறியை சிறைவாசிகள் குடும்பத்தை பேச வைத்து கோவையில் துவங்கியது அதன் தொடர்ச்சி சிறை வாசிகள் குடும்பத்தார்கள் தானாக வீதியில் இரங்கி போராட துவங்கினார்கள் இப்போது வரை அந்த தீ வீரிமாயமாக உள்ளது சிறைவாசிகள் விசயத்தில் இது வரை கருத்து சொல்லாத தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் கூட அதன் நிலைமை புரிந்து கொண்டு தீர்மானம் போடும் வரை வந்து உள்ளது அதன் ஒரு பகுதியாக இந்திய தவ்ஹித் ஜமாஅத் முழுக்க முழுக்க சிறை வாசிகள் விடுதலை ஒற்றை கோரிக்கை மட்டும் வைத்து பல ஊர்களில் பொது கூட்டம் நடத்தி வருகிறது. 

அதை போல் ஒற்றை கோரிக்கை உடன் மிக வீரியமாக மனித நேய மக்கள் கட்சி பிப்ரவரி 7 அன்று தமிழகத்தில் மூன்று இடத்தில் மிக பிரமாண்டமான போராட்டம் நடத்த உள்ளது இதிலும் இயக்கம் கட்சி பாகு பாடு பாராமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் ஒரு பக்கம் தேசிய லீக் ரஹீம் அவர்கள் அமைப்பும் முடிந்த அளவு சிறைவாசிகள் விசயத்தில் போராடி வருகிறது இது இப்படி இருக்க ...

யார் சிறைவாசிகள் விசயத்தில் போராடினாலும் இயக்கம் கட்சி பாராமல் சிறை வாசிகள் குடும்ப பெண்கள் கலந்து கொண்டு வருகிறார்கள் அது எந்த ஊரில் நடந்தாலும் சிரம்பத்தை பார்க்காமல் சென்று போராடி வருகிறார்கள் ஒரு படி மேல் சென்று வருகின்ற பிப்ரவரி 7 போராட்டத்தை மக்கள் இடத்தில் கொண்டு செல்லும் வகையில் கோவையில் சிறைவாசிகள் குடும்பத்து பெண்களை வீதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அழைப்பு கொடுக்கிறார்கள் இது எல்லாம் அந்த சகோதர்களின் விடுதலை மட்டும் எண்ணி எண்ணி செய்து வருகிறார்கள் அதனால் எந்த இயக்கம் கட்சி போராடினாலும் பாகு பாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள் சகோதர்களை ..

இதை எல்லாம் தாண்டி ஒன்றை சொல்லி கொள்கிறோம் இதை ஒரு இயக்கத்தில் இருந்து இயக்கவாதியாக இல்லை சகோதரிகளின் நிலைமையை எண்ணி ஒரு சகோதரனாக சிறைவாசிகள் விசயத்தில் இவள்ளவு தூரம் கஷ்ட்ட படும் அந்த சகோதரிகளின் வேதனையில் எந்த இயக்கமும் கட்சியும் தங்கள் தேவைக்கோ அல்லது சுயநலமாக இருந்தால் அக்கறை உள்ள ஒருவனும் சும்மா விட மாட்டோம் அது நான் சார்ந்த இயக்கமாக இருந்தாலும் சரி !!

சிறைவாசிகள் விசயத்தில் அனைவரும் குரல் கொடுப்போம் சகோதரர்களை மீட்டு எடுப்போம் !!

நன்றி:

A.யாசர் அரபாத் 
திருப்பூர்

காப் பஞ்சாயத்து விதைத்தது வன்முறை என்றால் தி ஹிந்துவின் கட்டுரைக்கு என்ன பெயர்?
சென்னை, பிப்ரவரி 05/2016: நேற்றைய தேதியிட்ட தமிழ் ஹிந்து நாளேட்டில், சமஸ் என்பவர் ''இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால் வஹாபியிசத்திற்கு என்ன பெயர்?'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
(Counter criticism to 'The Hindu (Tamil) ' over it's criticism about Thowheed thoughts!)

இந்த கட்டுரையை இணைய தளத்தில் வெளியிட்டுள்ள ஹிந்து ஏடு '' (இதை படிக்கத்) தவறாதீர்! என்ற அறிவிப்போடு வெளியிட்டிருகிறது.
இதை படியுங்கள் என கூவிக் கூவி ஹிந்து நாளேடு அழைப்பதன் பின்னணி நிச்சயமாக உள்நோக்கம் கொண்டதுதான்!
அண்மையில் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய
'ஷிர்க் ஒழிப்பு மாநாடு'' ஏற்படுத்திய வயிற்றெரிச்சலை வார்த்தைகளாக விரவ விட்டிருக்கிறார் சமஸ்.
தௌஹீத், வஹாபியிசம், மதச்சார்பின்மை, இந்துத்துவம், அடிப்படைவாதம் என அனைத்தையும் போட்டு குழப்பி தானும் குழம்பி படிப்பவர்களையும் குழப்பி எடுத்திருக்கிறார் கட்டுரையாளர் சமஸ்.
எதிலும் முறையான ஆய்வில்லாமல் பக்கம் அல்லது பத்தி எழுத பிரபல ஏடுகளில் வாய்ப்பு வேண்டுமென்றால் நீங்கள் இஸ்லாத்திற்கு/முஸ்லிம்களுக்கு எதிராக எழுதவேண்டும். இந்த சிந்தனையைதான் ஏற்படுத்துகிறது ஹிந்துவின் இந்தகட்டுரை.
ஏகத்துவ சிந்தனையாளர்களுக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கி இருப்பதோடு அவர்களை ஏனைய மதங்களுக்கு எதிரிகளாக சித்தரிக்க ரொம்பவே மெனக்கெடுகிறார் கட்டுரையாளர்.
இனி அவரது கருத்துக்களிலிருந்து:

''திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.”

“எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா?''
''இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது,  தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…'' இது ஷிர்க் என்றால் என்ன என்ற சமசின் கேள்விக்கு அவரது தோழர் சொல்லும் பதில்! இந்தபதிலில் பழுதில்லை.
ஆனால்,
''ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்''- என்று சமஸ் வலிந்து திணிக்கின்ற- தௌஹீத் சிந்தனைவாதிகள் கடப்பாரையை கையில் வைத்துக்கொண்டு தர்காக்களை இடிக்க அலைவதாக சித்தரிக்கின்ற கருத்து விஷமத்தனமானது!

முப்பது ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஏகத்துவ பிராச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏகத்துவவாதிகள் இதுவரை ஒரு தர்காவை இடித்ததாக ஒரே ஒரு சம்பவம்உண்டா? ஏகத்துவ வாதிகளை வன்முறையாளர்களாக சித்தரிக்க மெனக்கெடுகிறார் சமஸ்.

(தர்காக்களை இஸ்லாம் ஏன் இடிக்கச் சொல்கிறது என்பது வேறு விஷயம். இது குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு விளக்கம்அளிப்போம். இங்கே நமது பதில் திரு. சமசின் கருத்துக்களுக்குதான்)
அடுத்ததாக....

இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?”

இவையும், ஷிர்க் என்றால் என்ன என்று கேட்டுவிட்டு தொடர்ந்து சமஸ் தன்னிச்சையாக எழுப்புகின்ற கேள்விகள்தான். தனது கோரமான கருத்துக்களை எப்படிவிதைக்கிறார் சமஸ்.! ஏகத்துவ சிந்தனைவாதிகள் வன்முறையாளர்கள் என்ற கற்பிதத்தையும் தாண்டி மிக சூட்சுமத்தோடு பரப்புரை மேற்கொள்வதோடு, தொப்புள் கொடி உறவுகளாக இருக்கின்ற பிறசமய மக்கள் மத்தியில் வெறுப்பையும் பீதியையும் ஏற்படுத்த வல்லது இவ்விஷக்கருத்து ஏகத்துவவாதிகள் தர்காக்களை இடித்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற இவரது கருத்தை இவரே உறுதிசெய்து கொண்டு, நாளை ஏகத்துவவாதிகளின் கைஓங்கினால் நிலைமை என்னவாகும்? கோவில்களையும், தேவாலயங்களையும் இடிப்பார்கள் சாமி சிலைகளை உடைத்து நொறுக்குவார்கள் (பிறசமயதவர்களே புரிந்து கொள்ளுங்கள்) என்று ஏகத்துவவாதிகளுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக பிறசமயத்தவர்களை கொம்பு சீவிவிடும் வேலையை கச்சிதமாக செய்கிறார் சமஸ்.
சமஸ் என்ற கட்டுரையாளரின் முதுகுக்கு பின்னால் இருந்து கொண்டு இந்து ஏடு இந்தவேலையை செய்கிறது என்றும் புரிந்துகொள்ளலாம்.தப்பில்லை.

''லவ் ஜிஹாத் என்ற பெயரால் ஹிந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் இழுத்து செல்கிறார்கள்'' என்று விஷக் கருத்தை விதைத்து முசாபர் நகர் கலவரத்திற்கு வித்திட்ட 'ஜாட் 'களின்மஹா காப் பஞ்சாயத்துக்கு தமிழ் ஹிந்து நாளேட்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

இன்னொருபுறம், இடவொதுக்கீடு உட்பட இன்றைக்கு தமிழக முஸ்லிம்களின் உரிமைப்பிரச்சினை, ஜீவாதாரக் கோரிக்கைகள் ஆகியவற்றை அரசியல்ரீதியாக வலிமையாக எழுப்புகின்ற அமைப்புகளாகவும் தமிழக முஸ்லிம்களின் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாகவும் தௌஹீத் அமைப்புகள்தான் களத்தில் நிற்கின்றன. இந்த அமைப்புகளின் செல்வாக்கு உயர்ந்துவிடக்கூடாது. அனைத்துத் துறைகளிலும் இவர்களது கை ஓங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சமிக்ஞையை யாருக்கு தருகிறது ஹிந்து ஏடு?.

மேலும் ''காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இது'' என்கிறார் கட்டுரையாளர்.

முட்டாள்தனமான இந்த கருத்து எப்படி இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணமாகும்? ஒருவர் எப்படி ஹிந்துவாக,முஸ்லிமாக, கிறித்தவனாக,யூதனாக ஒரே நேரத்தில் இருக்கமுடியும்? இவரை கொள்கையற்றவர் என்றுதான்சொல்லமுடியும்? இவர் எல்லா மதத்தினரையும் ஏமாற்றுகிறார் என்று அர்த்தம்! இன்னும் இதுகாந்தியின் தனிப்பட்டகருத்தாக இருக்கமுடியுமே தவிர மதச்சார்பின்மையின் இலக்கணமாக இதை அறிவுடைய எவரும் ஏற்க இயலுமா? எம்மதமும் சம்மதம் என்ற இந்தகருத்து மதச்சார்பின்மை ஆகாது.

''மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி, கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பதுபோல் பொருள் சொல்கிறார்கள்'' என்கிறார் தந்தை பெரியார். சமஸ் போன்ற ஆட்களுக்குதான் அன்றே பெரியார் சொல்லியிருக்கிறார் போல!

மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது என்பதுதான் மதச்சார்பின்மையின் இலக்கணம்!

மத அடிப்படைவாதம் எதிர்க்கப் படவேண்டுமாம்...ஒருவன் தனது மதத்தில் அடிப்படைவாதியாக அந்த கொள்கைகளில் தீவிரமாக இருப்பதில் என்னதவறு..மதத்தின் பெயரால் யார் பிற சமயத்திற்கு தொல்லை கொடுத்தாலும் வன்முறை ஏவினாலும்அது எதிர்க்கப்படவேண்டியது என்றால் அது நியாயமான கருத்தாக இருக்கும்.இங்கே மதத்தின் சட்டதிட்டங்களை ஒழுகி வாழ்பர்களை கெட்டவர்களாக சித்தரிக்க மதஅடிப்படைவாதி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

சரி இது இருக்கட்டும், ஏகத்துவ வாதிகளை வஹாபியிசத்தோடு வலிய இணைத்து குழம்பிப்போகிறார் கட்டுரையாளர் சமஸ். தௌஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்களுக்கும் வஹாபியிசதிற்கும் என்னசம்மந்தம்?
''1703-ல் பிறந்த முஹம்மது இபின் அப்த் அல் வஹாபியிடமிருந்து உருவானது; வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது; முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும் அல்ல; முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்துவக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது'' என்கிறார் கட்டுரையாளர் சமஸ்.

இருந்து விட்டுபோகட்டும் அதெற்கென்ன இப்போது? இவரோடு தௌஹீத்வாதிகளை ஏன் தொடர்பு படுத்தவேண்டும்? அவரை முன்மாதிரியாக எற்றுக் கொண்டிருக்கிறார்களா தௌஹீத் வாதிகள்? இவரது பெயரே தவ்ஹீத் சிந்தனையை ஏற்றுக்கொண்டிருக்கும் 99% பேருக்கு தெரியாதே!
மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவருக்கு காரல்மார்க்சை தெரியும், பெரியாரிசத்தை ஏற்றுக்கொண்டவருக்கு பெரியார் ஈ.வே.ரா வைத் தெரிந்திருக்க வேண்டும். அம்பேத்கரிசத்தை அறிந்தவர்களுக்கு அவரை புரிந்திருக்க வேண்டும். இதுதான் ஒருவரின் கொள்கையை பின்பற்றுபவர்களின் அடிப்படை.
இந்த வகையில் தௌஹீத் வாதிகள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைத்தான் பின்பற்றுகிறார்கள். அப்படியானால் தௌஹீத்வாதிகளை முஹம்மதிசத்தை பின்பற்றுபவர்கள் என்று சொல்வதே அறிவார்ந்தவர்களின் செயலாக இருக்கமுடியும்.

இந்த அறிவு சமசுக்கு இருப்பதாக நேர்மறையாகவே நம்புவோம். ஆனாலும் அவர் வஹாபியிசத்திற்கும் தௌஹீத்வாதிகளுக்கும் முடிச்சு போடுவது தௌஹீத்வாதிகள் வன்முறையாளர்கள்;சமய சகிப்பற்றவர்கள், மதவெறியர்கள் என்பதுபோன்ற சித்திரத்தை உருவாக்கத்தான்!

இது தவிர, '' இதுவரை கிட்டத்தட்ட 40,000 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்; 3.5 லட்சம் பேர் உடல் உறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள்'' என்று மனிதஉரிமைஅமைப்புகள் சொல்வதாக போகிற போக்கில் ஒரு செய்தியை பதிவு செய்கிறார் சமஸ். இதற்கு எந்த புள்ளிவிபரமும் இல்லை; எந்த காலகட்டத்தில்இவை நடந்தது என்ற ஆதாரம்இல்லை.ஒருவாதத்திற்கு இதுஉண்மையாக வைத்துக் கொண்டாலும் இவர் விமர்சிக்க ஷிர்க் மாநாடு, தவ்ஹீத் முதலானவற்றுக்கும் இதற்கும்என்னதொடர்பு.?
ஆயினும், வஹாபியிசம் சௌதிஅரேபியாவிலிருந்து துவங்கியது என்பதற்காக இங்கே இதைபதிவு செய்து தௌஹீத் வாதிகளை டேமேஜ் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான்!

(இந்த கட்டுரையாளரின் ஒட்டுமொத்த கருத்துக்களும் வரிக்கு வரி அபத்தம் நிறைந்தவையாக இருக்கின்றன. விரிவஞ்சி அக்கட்டுரையின் அவதூறான ஆபத்தான பகுதியைமட்டும் இங்கே விமர்சிதிருக்கிறோம்... கட்டுரையாளர் சமஸ் இது குறித்து ஆரோக்கியமான விவாதத்திற்கு முன்வருவாரேயானால் அவரது கருத்துக்கள் எப்படியெல்லாம் முட்டாள்தனமாக வெளிப்படுகின்றன; அவரது தவறான புரிதல் அல்லது சித்தரிப்பு எதனால் என்பது குறித்தெல்லாம் இன்ஷாஅல்லாஹ் அவருக்கு புரியவைக்க தயாராக இருக்கிறோம்!)

நன்றி

அபூ பைசல்
(மக்கள் ரிப்போட்டர் ஆசிரியர்)

"இந்து'' ஆசிரியர் குழுவின் பார்வைக்கு...


இந்தியா, பிப்ரவரி 04/2016: எந்த மண்ணில் இஸ்லாம் தோன்றி வளர்ந்ததோ அந்த மண்ணில், நேர்வழி சென்ற கலீஃபாக்களின் காலம் முடிந்த பிறகு, சில அநாச்சாரங்களும் மூட நம்பிக்கைகளும் தோன்றின. இவற்றைக் கண்டித்து, மீண்டும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துரைக்கக் களம் கண்டவர்தான் இமாம் முஹம்மது அவர்கள்.

இவருடைய தந்தையின் பெயர்தான் அப்துல் வஹ்ஹாப். சீர்திருத்தம் செய்ய களம் கண்டவரோ மகன்; வசை வாங்கிக் கட்டிக்கொள்பவரோ தந்தை.  

இதைக்கூட தெரிந்துகொள்ளாமல்  வஹ்ஹாபியிசம் என்று சமஸ் பிதற்றியுள்ளார். அது மட்டுமல்ல, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பின் போது தங்கள் இன்னுயிர்களையும்  பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை ஆற்றியவர்கள் யார் தெரியுமா? வஹ்ஹாபிகள் என்று யாரை சமஸ் இன்று முத்திரை குத்துகிறாரோ அந்தத் தோழர்கள்தாம். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சமஸின் கண்களுக்கு  மனிதநேயச் செல்வர்களாய்த் தெரிந்தவர்கள் இன்று தீவிரவாதிகளாய்த் தெரிகிறார்கள். 

அது எப்படி? இடையில் என்ன மாயம் நிகழ்ந்தது? பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தலைவரை இந்திய முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று  தயங்காமல் அறிவுரை கூறுகிறார். “நீங்கள் பின்பற்றும் ஏக இறைவன் கொள்கை  எதை மிச்சம் வைக்கும்?” என்று  வெறுப்பு அரசியலை விதைக்கிறார். சமஸ் அவர்களும் இந்து நாளிதழும் முஸ்லிம் விரோதப்  போக்கைக் கட்டமைக்கத்  தீர்மானித்துவிட்டதாகவே தெரிகிறது.
இந்து ஆசிரியர்குழு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்  ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின்  வெறுப்புக்கும் "இந்து" நாளிதழ் ஆளாக நேரிடும்.

நன்றி:

சிராஜுல்ஹஸன்

சென்னை புத்தக கண்காட்சியில் மதவாதத்தை வென்றெடுத்து மனிதநேயம் காத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தாவா பணிகள். ஓர் பார்வை...

 நக்கீரன் (பத்திரிக்கையின்) ஆசிரியர் கோபால் அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் S.M. பாக்கர் அவர்கள் திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 போக்குவரத்து காவல்துரை அதிகாரிகளுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 நடிகர் ஜகன் அவர்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 உயர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் அவர்கள்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.


 உயர் நீதி மன்றத்தின் காவல்துறை மேல் அதிகாரி எம்.கீதா அவர்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.

சென்னை, பிப்ரவரி 04/2016: கடந்த 13.01.2016 முதல் 26.01.2016 வரை சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் தமிழ் திருநாள் பொங்கல் புத்தக கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 250 அரங்குகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு அரங்கிலும் பல்வேறு விதமான பதிப்பாளர்கள் இடம்பெற்றனர். இதில் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்தும் பதிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தக கண்காட்சியில் (சாஜிதா புக் செண்டர் அரங்கம் எண் 68 ல்) முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர்களுக்கு புனிதமான மார்க்கம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்கும் பொருட்டு நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் களமிறங்கி முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு சுமார் 2500 க்கும் மேற்பட்ட திருமரை குர்ஆனை வழங்கி உள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், திரைப்பட நடிகர்கள், பத்திரிகை நண்பர்கள், தொழிலதிபர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த புனிதமான குர்ஆனை வழங்கியிருக்கிறது. மேலும் இந்த நிகழ்வின் போது மாற்று மத சகோதரர்கள் சுமார் 3 பேர் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்டனர். மேலும் 500 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக விரைவில் ஏற்க்க இருப்பதாக தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு:

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட நிகழ்ச்சியின் போது முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர்கள் திருமரை குர்ஆனை  பெற்றவுடன் கூறிய சில வேதனையான விஷயம்:

எனக்கும் முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனால் இதுநாள் வரைக்கும் எனக்கு இஸ்லாத்தை பற்றி எந்த ஒரு செய்தியும் சொன்னது கிடையாது, மேலும் நாங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் குர்ஆனை படிக்க கேட்போம் அதற்க்கு அவர்கள் தரமாட்டார்கள். அவற்றை நீங்கள் படிக்க கூடாது என்றும் எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். இப்படி எல்லாம் அந்த குர்ஆனை பெற்ற சகோதர சகோதரிகள் சொன்ன போது எங்களுக்கு வேதனையாக இருந்தது. எனவே (இந்த குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் ஓர் நல்லுபதேசமே அன்றி வேறில்லை) எனவே இந்த இறைவசனத்திற்கொப்ப இனியாவது நமது புனிதமான இஸ்லாத்தை நம்மளுடைய நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிரவும் இல்லை எனில் நீங்களும் குற்றவாளிகளாக நாளை மறுமையில் அல்லாஹ் வின் முன்பு நிற்க நேரிடும்.

தொகுப்பு:

அ.முஹம்மது இலியாஸ்.

பிரிட்டனில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு. 'Office of the National Statistics' (ONS) புள்ளி விவரம் வெளியீடு..!


பிரிட்டன், பிப்ரவரி 04/2016: "10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் முஸ்லிம் குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்"
பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகை புள்ளி விவரங்களின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது தெரியவந்துள்ளது.
தலைநகர் லண்டனின் பல பகுதிகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்கள் வசிப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள இந்த புள்ளி விவரத்தில்,
அடுத்த 10 ஆண்டுகளில் லண்டன் நகரின் அனேக பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகி விடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ப்ளேக் பர்னில்----29 சதவிகிதமும்
சிலூவில்-----------26 சதவிகிதம்
லியூடனில்-------- 25 சதவிகிதம்
பர்மிங்கமில்-------23 சதவிகிதம்
லேசீடரில்---------- 20 சதவிகிதம்
மான்செஸ்டரில்-18 சதவிகிதம், என முஸ்லிம்களின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துள்ளதாக மேற்படி புள்ளி விவரம் கூறுகிறது.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை ஒட்டுமொத்த பிரிட்டனிலும் சேர்த்து பார்த்தாலும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
நன்றி: 
மறுப்பு 

முத்துப்பேட்டை நகரம் பல்வேறு வசதிகள் இருந்தும் ஏன் தாலுக்காவாக மாறவில்லை, அரசியல் வாதிகளின் சூழ்ச்சியா?
முத்துபேட்டை, பிப்ரவரி 04/2016: திருவாரூர் மாவட்டதில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த சிறிய நகரம். சென்னையிலிருந்து சுமார் 350 கி.மீ தெற்கே அமைந்துள்ளது.
இவ்வூரில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் மற்றும் சதுப்புநில பகுதிகள்(Mangrove Forest) எனும் அழகிய சுற்றுலா தலம் இன்னும் வெளியுலகிற்கு தெரியாமலே உள்ள ஒரு அற்புதமான பொக்கிஷம். சொல்லப்போனால் இப்பகுதியில் உள்ள பலரும்கூட இங்கு சென்றுவந்ததில்லை எனலாம்.
பாமனி ஆறு, கோரை ஆறு, கிளைதாங்கி ஆறு, மரைக்கா கோரையாறு என பல்வேறு ஆறுகள் இப்பகுதியில் வங்க கடலில் (பாக் ஜலசந்தியில்) கலக்கும் இடமாகும். இந்த ஆறுகள் உருவாக்கியுள்ள லகூன் எனும் பகுதியும், 
இங்கு அமைந்துள்ள சதுப்பு நில காடுகளும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இப்பகுதியை மேலும் ரம்மியமாக்குகிறது.

இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் எளிதில் செல்லும் வண்ணம் சுந்தரம் பாலம் அருகேயோ அல்லது வேறு இடத்திலோ பிச்சாவரம், முட்டுக்காடு போன்ற இடங்களில் உள்ளது போன்ற படகுத்துறைகளைஅமைத்து தகுந்த வசதிகளை தமிழ்நாடு அரசும் சுற்றுலா துறையும் ஏற்படுத்தினால் கண்டிப்பாக இது அனைவரும் விரும்பும் ஒரு சுற்றுலா ஸ்தலமாக மாறும்.
தில்லைவிளாகம் ஸ்ரீராமர் கோவில் மற்றும் கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் போன்ற சரித்திர புகழ்பெற்ற ஆலயங்கள் அருகில் உள்ள முக்கிய இந்து ஆலயங்கள். ஜாம்பவனோடை தர்கா நாகூர் தர்காவைவிட பழமை வாய்ந்தது. இங்கு தினமும் ஏராளமான முஸ்லிம் யாத்திரீகர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்தும் வருகின்றனர்.
இவ்வூருக்கு செல்லும்போது இங்குள்ள ஐயர் கடை அல்வாவும் நாகூர் ஆண்டவர் கடை தம்ரூட் அல்வாவவையும் ருசிக்க மறக்காதீர்கள். திருநெல்வேலி அல்வாவைவிட ருசியானது. அதேபோல இங்குள்ள பரோட்டா கடைகளின் பரோட்டா சுவையைவிட தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடைக்காது (மதுரை மற்றும் விருதுநகர் உட்பட) என்று சவால் விட்டு சொல்லலாம்.
வேளாங்கன்னி, நாகூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவாரூர், திருத்துறைபூண்டி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் போண்றவை அருகில் உள்ள முக்கிய நகரங்கள்.
இவ்வளவு பெருமைவாய்ந்த இவ்வூரை இன்னும் தாலுகாவாக மாற்றுவதற்கும், இங்குள்ள சுற்றுலா தளத்தை உலக மக்களுக்கு கொண்டு சேர்கவும், மூடப்பட்டுள்ள காரைகுடி - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நிறைவேறுமா?

நன்றி

முத்துபேட்டை, ராஜேஷ்

பெங்களூருவில் கொடூரம்: வெளி நாட்டு முஸ்லிம் மாணவியை நிர்வாணமாக்கி தாக்குதல்!
பெங்களூரு, பிப்ரவரி 04/2016: தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாணவியை நிர்வாணமாக்கி பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 31-ம் தேதி இரவு, சாலையில் நடந்து சென்ற சபானா தாஜ் என்ற பெண் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அந்த காரை ஓட்டி வந்த நபர், சூடான் நாட்டை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்ற மாணவர் என தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இஸ்மாயிலை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தான்சானியாவைச் சேர்ந்த இளநிலை வர்த்தக மேலாண்மை (பி.பி.எம்.) படித்து வரும் மாணவி உட்பட சிலர், விபத்து ஏற்பட்ட இடம் வழியாக காரில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், காரை மடக்கி அவர்களை தாக்கியுள்ளது. இதில், காரில் இருந்த மாணவி ஒருவரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், மாணவியை கடுமையாக தாக்கியதோடு, நிர்வாணமாக்கி போலீசார் முன்னிலையிலேயே ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. அப்போது, கிழிந்த ஆடையுடன் தன் மானத்தை காப்பாறிக்கொள்ள அந்த மாணவி, அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது, அவரைத் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை கீழே இழுத்துப் போட்டு உதைத்துள்ளது.


அதேநேரத்தில், விபத்து ஏற்படுத்திய காரையும், தான்சானியா மாணவியின் காரையும் அந்த கும்பல் தீ வைத்துள்ளது. விபத்து ஏற்படுத்திய நபருக்கும், அந்த மாணவிக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் மெகாரிக் கூறும்போது, ''மாணவியிடம் இருந்து புகார் பெறப்பட்டு உள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்துவிடுவோம். இது போன்ற தாக்குதல்களை அனுமதிக்கவே முடியாது" என்றார்.இதனிடையே, தான்சானியா அரசு இந்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் பயிலும் தான்சானிய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தச் சம்பவம் மிகவும் வெட்ககேடானது. இதற்காக மிகவும் வேதனைப்படுகிறேன். கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாரமையாவைத் தொடர்பு கொண்டு, தான்சானிய மாணவியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளேன்" என்று கூறி உள்ளார்.

'ஆதார் அட்டை' இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட் பெறலாம்!


சென்னை, பிப்ரவரி 04/2016: பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை சமர்ப்பித்தால் 3  நாட்களில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள முடியும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,

" சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, காவல்துறை  அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்குக்  கட்டணம் 1,500 ரூபாய் தான். இந்த நடைமுறையை வெளியுறவு துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது.

இனிமேல் சாதாரண முறையில் 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது  'ஆதார்' அட்டை, 'பான்கார்டு' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், காவல்துறை அறிக்கை பெறாமலே  பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், காவல்துறை அறிக்கை பெறப்படும்.

தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும்  'தக்கல்' முறையும் அமலில் உள்ளது.அதற்குக்  கட்டணம் 3,500 ரூபாய் ஆகும்.

ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, 'ஆன்லைனில்' தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற வேண்டும். திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரையிலான 5  நாட்களில்  வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறை உறுதி செய்த தேதியை மறுமுறை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

காவல்துறையின் அறிக்கை பெற விண்ணப்பதாரரின் விவரங்கள் மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு  சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட  21 நாட்களுக்கு முன் மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும். 

பாஸ்போர்ட் உதவிமையங்கள், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன.இதற்கு சேவை கட்டணம் 100 ரூபாய்.

மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, வரும் 7ம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள் வரும்  8 ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம்" என்று கூறினார்.  

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)