முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

துபாயில் உள்ள சில நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது..




துபாய், ஜூலை  24: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள வாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு துபாய், ஷார்ஜாஹ், அபுதாபி ஆகிய இடங்களுக்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது. 

1)  3D VISUALIZER (sHARJAH)
      Mail to your CV: 360intdesign@gmail.com
2)  UNIOR ACCOUNTANT 1-2 YEARS EXPERIENCE 
     Who has experience in Tally software,
     Salary: 1,500 - 2000
     Mail to your CV: sbmaaccountsser@accamail.com, priyanthisoloman@yahoo.com 

3)  ACCOUNT CUM ADMINISTRATION (Abu Dhabi)
     For a Trading Company in Abu Dhabi 
     Mail to your CV: rectradition@gmail.com.

4)  URGENTLY REQUIRED ACCOUNTS ASSISTANT 
     A Fruits and Vegetables Company in Dubai (Aweer)
     Looking for a accounts to do the data entry in tally ERP9 the candidates 
     should be immediately available to join. 
     Salary: from 3,000
     Mail to your CV: hr.foodnetwork@gmail.com

5) CCTV CAMERA AND PABX ENGINEER VACANCY IN (Abu Dhabi)
     Minimum 3 years experience like cctv, DVR connection 
     Mail to your CV: nelsonengineers1@gmail.com

6)  SITE SUPERVISOR - CIVIL ENG.(DIP DUBAI)
     Civil engineering degree with DM approval 4 years exp. + driving license 
     Salary: from 5,000 - 6,000
     Mail to your CV: madhu@golden-link.com
     mobile #: 050 674 3160.

7) JUNIOR WEB DEVELOPER : ASP, .NET, C#
     2 Years of experience in web development, specially CMS development 
     Skills: ASP, .NET, C#, SQL SERVER, XML, XHTML/HTML, Jquery, CSS.
     please mention your expected your salary and your online projects in CV,
     otherwise your cv will be rejected. 
     Mail to your CV: info@hopejewellery.com
     Contact #: 04 225 8111.

8)  LOOKING FOR ACCOUNT WITH 0-3 YRS EXPERIENCE
      Basic for all Account known even balance sheet also
      Salary from: 3,000 - 3,500
      Mail to your CV: recruitment@anmgroup.ae

தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ் 
      
     
  
      

ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர் பார்ப்பது என்ன?

உலகம், ஜூலை 26: இரண்டு வருடம்மூன்று வருடம்நான்கு வருடம்சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்துவெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.
 இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில்
கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.

இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.

.பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தைஅர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.

பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.]

 ஆலிமாக்கள் என்றால் யார்?
இரண்டு வருடம்மூன்று வருடம்நான்கு வருடம்சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்து வெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.
இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில் கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.
இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.
1. தாய்தந்தைஅண்ணன்தம்பி என்று குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் வீட்டை விட்டு விடுதிகளில் தங்கவேண்டிய கட்டாயக் கஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.
2. ஒரு கைக்குட்டையைக்(கர்ச்சிப்) கூட துவைக்கத் தெரியாத காலத்தில் தங்கள் ஆடைகள் அனைத்தையும் தாங்களே துவைக்க வேண்டிய நிலை.(ஆண்களும் இதே கஷ்டத்தை அனுபவித்தாலும் பெண்கள் படும் கஷ்டத்திற்கும் ஆண்கள் படும் கஷ்டத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகிறது).
3. பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தைஅர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.
4. வீட்டில் எத்தனையோ விஷேசங்கள் நடந்தாலும் இவர்கள் அத்தனையையும் தவிர்ந்து கொள்ளும் ஒரு நிலை.
இப்படி பல தியாகங்களைச் செய்துதான் இந்த ஆலிமாச் சகோதரிகள் தங்கள் மார்க்கப் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்கும் இந்தச் சகோதரிகள் தங்கள் படிப்பு முடிந்தபின் என்ன நிலையில் இருக்கிறார்கள்?
மார்கத்தில் அவர்களின் நிலை என்னவாகிறது?
அவர்களின் எதிர்கால கணவு என்னாகின்றது?
குடும்ப வாழ்க்கைக்கும் இஸ்லாமிய நெறிக்கும் தொடர்பு இருக்கிறதா?
திருமணத்தின் பின் இந்தச் சகோதரிகளின் நிலை மாற்றம் என்னஎப்படி அமைகிறது?
ஆடை விஷயத்தில் இவர்களின் நடை முறை செயல்பாடு எப்படி அமைகிறது?
மற்றவர்களுக்கு மார்க்கத்தை சொல்லும் நிலை இருக்கிறதாஇல்லையா?
அதிகமான ஆலிமாக்களை தஃவாக் களத்தில் காணமுடியவில்லையே அது ஏன்?
ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்னஉலகவரலாற்றை கொஞ்சம் பின் நோக்கிப் பார்த்தால் இந்த உலக மக்களின்முன்னேற்றத்திற்கு ஆண்களுக்கு சமனாக பெண்கள் செய்த சேவைகள் கண்முன் கொண்டு வந்து நிருத்தப்படும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடங்கிநாம் வாழும் இந்தக் காலம் வரை இந்த உலகத்தின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் தியாகம் மறைந்திருப்பதை நாம் தெளிவாக அறிய முடிகிறது.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் பெண்களின் நிலை என்ன?
பெண் என்றால் போதைக்காக பயண்படுபவள் என்ற மாயையை உடைத்தெரிந்தது இஸ்லாம்.
பெண்களுக்கும் ஆண்மா உண்டென்று உலகுக்குக் காட்டியது இஸ்லாம்.
வீட்டினுல் முடங்கிக் கிடந்தவர்களை உத்தமர்களாக இந்த உலகுக்கு படம் பிடித்துக் காட்டியது இஸ்லாம்.
பெண்கள் சமுதாயத்தில் இடம் பிடிக்கக் கூடாது என்று பல மார்கங்களும்,மதங்களும்சித்தாந்தங்களும் கருத்துச் சொன்ன நேரத்தில்ஸஸ..
பெண்கள் சமுதாயத்தின் கண்கள் என்று பெண்விடுதலைக்கு வித்திட்டது இஸ்லாம்.
வீடுகணவன்பிள்ளைகள் என்றிருந்தவர்களை கல்வித் துறையில் கல்லூரி வரை உயர்தியது இந்த இஸ்லாம்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய பெண்களின் கல்வி நிலைஒழுக்கம்,நன்நடத்தைகள் என்று அனைத்தும் கேள்விக்குறியாகியிருப்பதை நாம் காண முடிகிறது.
 நாங்களும் சாதித்துக் காட்டுவோம் :
ஆண்கள் கூட கல்வியைப் பற்றிக் கண்டு கொள்ளாத இக்காலத்தில் பெண்கள் தங்கள் கல்விக்காக செய்யும் தியாகங்கள் அதிகம்.
இந்த தியாகங்களை செய்வதற்கு அவர்களுக்கு பின்னனியாக இருப்பது இரும்புக் கோட்டையின் பலத்திற்கு நிகரான ஒரு எண்ணம் தான்.
அதாவது நாங்களும் சாதித்துக் காட்டுவோம் எங்களாலும் முடியும் எங்களை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை நாங்களும் கல்விக்குவித்திட்டவர்கள் தான் இது தான் ஆலிமாவாக மாறுவதற்கு அவர்களின் உள்ளத்தில் இருக்கும் முதல் எண்ணம்.
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களாஎன்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெருவார்கள். (அல்குர்ஆன் 39:09)
கல்வியை கற்பதில் எங்களுக்கும் தகுதியுண்டு ஜாஹில்யத்தைதுடைத்தெரிந்த நபிக்கு இறக்கிக் கொடுக்கப்பட்ட வேதத்தில் கற்றவர்களுக்குகல்வி கற்காதவர்களை விட மிகப் பெரியதொரு அந்தஸ்த்து இருக்கிறது.
அந்த அந்தஸ்த்து எங்களுக்கும் கிடைக்க வேண்டும் நாங்கள் எதையும் கேட்டுத் தெரிந்து அறிந்து அதன்படி தான் நடப்போம்.
கண்மூடிக் கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ள நாங்கள் அபலைகளும் அல்ல எங்கள் அண்னையர் எங்களுக்கு அப்படி வழிகாட்டவும் இல்லை.
இதுதான் அவர்களின் திடமான கொள்கை.
நபியிடத்திலேயே தட்டிக் கேட்டவர்கள் அல்லவா?
இப்னு அபீமுலைக்கா (அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.
(ஒருமுறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''எவர்(மறுமை நாளில் துருவித் துருவி) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனைசெய்யப்படுவார்'' என்று கூறினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ''அல்லாஹ் (குர்ஆனில்) 'வலக்கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டுவழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' (84:8)என்றல்லவா கூறுகின்றான்?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்இ ''இது (கேள்விக் கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார்'' என்று கூறினார்கள். (புகாரி 103)
நபியவர்கள் ஒரு செய்தியைச் சொல்கிறார்கள் அதனை ஒட்டி ஒரு எதிர்க் கேள்வியைக் கேட்டு நபியவர்கள் சொன்ன செய்தியின் உண்மை விளக்கத்தை அவர்களின் வாயிலிருந்தே சொல்ல வைக்கிறார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.
(ஒருசமயம்) பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''(நாங்கள் தங்களை அணுகி மார்க்க விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே எங்களுக்காக (தனியாக) ஒரு நாளை ஒதுக்குங்கள்'' எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களித்து அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக் கட்டளைகளை) வலியுறுத்தினார்கள்.

''உங்களில் ஒரு பெண் (தனது மரணத்திற்கு) முன்பாக தம் குழந்தை களில் மூவரை (இறப்பின் மூலம்)இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திரி ருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்'' என்றுகூறினார்கள். உடனே ஒரு பெண்மணி 'இரண்டு குழந்தைகளை ஒருத்திஇழந்துவிட்டால்...?' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''(ஆம்) இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்''என்றும் அவ்வுரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹுபுகாரி 101)
நபியவர்களின் வார்த்தைகளில் கூட மேலதிக விளக்கம் வேண்டி கேள்வி கேட்ட அண்ணையர்களின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்?
கேள்வி கேட்டாயினும் நாம் மார்க்கத்தை தெளிவாக அறிய வேண்டும் என்ற எண்ணம் உயிரில் ஊரியிருக்காதா என்ன?
பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.


பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு, இஸ்லாமிய தலைவர்களுக்கும் வழங்க வேண்டும்..


தமிழகம், ஜூலை 24: கடந்த வெள்ளியன்று பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து அந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் இந்து அமைப்பினர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று  கூறி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று பாஜக, ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து இயக்க அலுவலகங்களுக்கும், இந்து அமைப்பை சார்ந்த நிர்வாகிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்கியது.

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்  , மற்றும் இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்கியது .வன்முறையே கொள்கை, வன்முறையே தீர்வு என்று வீதியெங்கும் முழங்கும் இவர்களுக்கெல்லாம்  துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுத்திருப்பது மிகவும் வியப்பாக உள்ளது .

இதேபோல் தமுமுக, SDPI, தவ்ஹீத் ஜமாஅத், INTJ, PFI, முஸ்லிம் லீக்,உள்ளிட்ட அணைத்து இஸ்லாமிய இயக்க அலுவலகங்களுக்கும் ,நிர்வாகிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் அரசின் தலையாய கடமையாகும் .

 தமுமுக வை சேர்ந்த மாநில செயலாளர் திருநெல்வேலி மைதீன் சேட்கான், தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த முன்னாள் மாநில செயலாளர் முத்துப்பேட்டை அன்சாரி, SDPI கட்சியை சார்ந்த மாநில செயலாளர் முத்துபேட்டை  அபூபக்கர் சித்திக் உள்ளிட்டோருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் .

தமுமுக வை சேர்ந்த மைதீன் சேட்கான் அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு டெல்லி பேரணி தொடர்பான பணிகளில் ஈடுப்பட்ட பொது ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி போன்ற பயங்கர வாத அமைப்பினரால் கொலை வெறி தாக்குதல் நடத்தபட்டு அல்லாவின் பேருதவியால் மீண்டெழுந்தார் .

அதேபோல் கடந்த 1999 ஆம் ஆண்டு  முத்துப்பேட்டையை சேர்ந்த அன்சாரி அவர்களின்  கடை பயங்கர வாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டது. அதே போல் SDPI கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் முத்துப்பேட்டை அபூபக்கர் சித்திக் அவர்களை கடந்த சில வருடங்களுக்கு முன் பழைய பேரூந்து நிலையம் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல்  அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சில தேச விரோத சக்திகள் இவரை சுற்றி வளைத்து  தாக்க முயற்சித்தனர் .

ஆகவே இவர்களுக்கும் பாதுகாப்பளித்து இவர்களை காக்க வேண்டியதும் அரசின் கட்டாய கடமையாகும் .

போலீஸ் பாதுகாப்பில் கீழ்கண்ட பிரிவுகள் :

ஏ -பிரிவு பாதுகாப்பு =24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பி -பிரிவு பாதுகாப்பு = வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மட்டும் பாதுகாப்பு

கீழ்கண்ட தலைவர்களுக்கு கீழ்கண்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் :

1.குணங்குடி ஹனீபா -தமுமுக  (ஏ பிரிவு பாதுகாப்பு )

2.தடா அப்துல் ரஹீம் -இந்திய தேசிய லீக்  (ஏ பிரிவு பாதுகாப்பு )

3.பி .ஜைனுலாபிதீன் -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ஏ பிரிவு பாதுகாப்பு )

4.ஜவாஹிருல்லாஹ் -மனிதநேய மக்கள் கட்சி (ஏ பிரிவு பாதுகாப்பு )

5.எஸ் .எம்  .பாக்கர்      -இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஏ பிரிவு பாதுகாப்பு )

6.தெஹ்லான் பாகவி  -SDPI கட்சி (ஏ பிரிவு பாதுகாப்பு )

7.ஹைதர் அலி              - தமுமுக (ஏ பிரிவு பாதுகாப்பு )

8.தமீமுன் அன்சாரி      -மனிதநேய மக்கள் கட்சி (ஏ பிரிவு பாதுகாப்பு )

9.கோவை செய்யது      -தமுமுக (ஏ பிரிவு பாதுகாப்பு )

10.குலாம் முஹம்மது -வைகறை (ஏ பிரிவு பாதுகாப்பு )

11.ஏ.எஸ் .இஸ்மாயில் -பாப்புலர் பிரண்ட் (ஏ பிரிவு பாதுகாப்பு )


தொகுப்பு :  ஜே:ஷேக்பரீத்
                       (MA .Journalism & Mass Communication )
                       Member Tamilnadu Press Club
                       Chennai .

தொடரும் பா ஜ க வினர் கொலை...பின்னணி என்ன? ஓர் பார்வை!!!


தமிழகம், ஜூலை 23: தொடரும் பா ஜ க வினர் கொலை, உண்மையில் மேற்படி கொலைகளை யார், எதற்காக செய்தார்கள் ? ஓர் அலசல் ரிப்போர்ட். 

‪‎கோயம்பேடு‬ விட்டல் கொலை 27.4.2012 .

சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127-வது வட்ட பா.ஜனதா தலைவராக இருந்தார்.கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.27.4.2012 .அன்று இரவு கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் விட்டல் பிணமாக கிடந்தார்.


கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுந்தரபாண்டியன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை சுந்தரபாண்டியன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விட்டல் சுந்தரபாண்டியன் வீட்டுக்கு சென்று வீட்டு பெண்களை ஆபாசமாக பேசியுள்ளான் .இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தரபாண்டியன் அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

‪டாக்டர்‬ அரவிந்த் ரெட்டி கொலை 23.10.12 .

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜ மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 24ம்இரவு 7.30 மணியளவில்,பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர் .


கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர் . உடனே முஸ்லிம் தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக பந்த் நடத்தினார்கள் .


விசாரணையில் பெண் விவகாரத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது .இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா தீட்டியுள்ளார் .
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28) மேலும், இந்த கொலையில் ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் .


‪#‎ராமேஸ்வரம்‬ குட்டநம்பு கொலை 7.7.13 ,

ராமேசுவரத்தை சேர்ந்தவர் குட்டநம்பு இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவராக இருந்து வந்தார்.சம்பவத்தன்று மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.


விசாரணையில் ரெயில்வே ரோடு பகுதியில் குடிபோதையில் குட்டநம்பு தகராறு செய்ததால் ஊர்மக்கள் கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது .இது தொடர்பாக ராமச்சந்திரன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் .

‪#‎நாகப்பட்டிணம்‬ புகழேந்தி கொலை 5.7.12 .

நாகப்பட்டிணத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53),காலை நடைபயணம் சென்ற போது ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர்களால் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார்.


சம்பவ இடத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது:-
கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடி வந்தவர் புகழேந்தி. இவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து போராடியவர் .இதனால் இந்த கொலை நடந்ததாக கூறினான். ஆனால் போலீஸ் விசாரணையில் .

கொலை செய்யப்பட்ட புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து நில ஆக்கிரமிப்பு அடாவடி செயலில் ஈடுபடுவதும் , சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது . இவனால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது . முனீஸ்வரன் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார் .

‪#‎பரமக்குடி‬ முருகன் கொலை 19.3.13

பரமக்குடி. பாரதீய ஜனதா முன்னாள் கவுன்சிலரான முருகன்இவர் வாஜ்பாய் மன்ற தலைவராகவும் இருந்து வந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜபாண்டி மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது .

‪#‎வேலூர்‬ வெள்ளையப்பன் கொலை .

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வெள்ளையப்பன் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது.


வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் அருகே 4 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர் .


இது தொடர்பாக ஜூலை 02,2013 வெளிவந்த தினமலர் செய்தியில் ''


வேலூர், புது பஸ்நிலையம் அருகே, இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், 45, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த இடத்தில், கறுப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில், ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருந்தன. பேட்டரி இணைக்கப் பட்டிருந்த வெடி குண்டை, கொலைக்கு அல்லது தப்பி செல்லும் போது, பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பைப் வெடிகுண்டுகள், தென் மாவட்டங்களில் பிரபலம் என்பதால், தென் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர், இதில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்.


இப்படியாக இந்த பிஜேபி இந்து முன்னணியினர் குடிபோதை கந்துவட்டி கள்ளத்தொடர்பு நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு பாதிகப் பட்டவனால் துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்யப் பட்டபோது அந்த பழியை மற்றவர்கள் மீது போட்டு , பஸ் எரிப்பு கடையடைப்பு பந்த் நடத்தி அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி அரசியல் ஆதாயம் அடைகின்றனர் .இவர்களை அடக்கி ஒடுக்காமல் அதிமுக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று புரியவில்லை . 
கொலையாளிகள் யாராக இருந்தாலும் இதற்கு முற்று புள்ளி வைத்து மக்கள் முன் தெளிவு படுத்தினால் தான் பதற்றம் தணியும். அரசு செய்யுமா ???


நன்றி - தமிசுதீன் என்கிற முஹைதீன் (நாகை) 

முத்துப்பேட்டையில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி- பா.ஜ.க. வினர் கைது



முத்துப்பேட்டை, ஜூலை 22: பா.ஜ.க. வின் மாநில பொதுச் செயலாளர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் என்பவர் கடந்த வெள்ளியன்று அவரின் அலுவலகத்திற்கு வெளியே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இந்த படுகொலையை கண்டித்து முத்துப்பேட்டையில் பா.ஜ.க. வினர் பஸ் றியலில் ஈடுபட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர்.  மனித சமூகத்தில் மனிதர்களின் உயிர் பலியிடப்படுவதை எந்த ஒரு மனித சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. இந்த கொலையை காட்டி இஸ்லாமியர்கள் மீது வீன் பலி போட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும். 

ஆடிட்டர் ரமேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருவதாக கூறப்படுகிறது. இப்படுகொலையின் பின்னணியில் தொழில் போட்டிகள் ஏதும் உள்ளனவா என விசாரிக்கப்பட வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுருக்கும் நிலையில் சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் இக்கொலையை "ஜிஹாதிகள்" தான் செய்தார்கள் என கற்பனையான ஒரு கருத்தை கூறி இரு சமுதாய மக்களிடையே மத மோதலை தூண்ட முயற்சி செய்து வருகிறார்கள். 

மேலும் ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து சேலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் மகளிரணி தலைவி ராஜ ராஜேஸ்வரி என்பவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையின் பின்னணியும், ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கும் நேரடி தொடர்புகள் உள்ளனவா என்று எண்ண தோன்றுகிறது. இந்த கொலைக்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருப்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. ஏனெனில் குஜராத்தில் பல்லாயிரக்கனக்கான மனித உயிர்கள் மிக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்டு நரபளியாக்கப்பட்டது இந்த மோடியின் ஆட்சியில் தான்.

எதுவாயினும் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாமியர்களின் கருத்தாகும். ஆனால் வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் மீது பலி போடுவதை R.S.S., பா.ஜ.க., இந்து முன்னணி போன்ற மதவாத சக்திகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு:

ஜே. ஷேக் பரீத்

தமிழகத்தில் SDPI கட்சியை கண்டு பயந்து நடுங்கும் பா.ஜ.க.


தமிழகம், ஜூலை 22: சமீபகாலமாக தமிழகத்தில் மீண்டும் காலூன்ற மதவாத கட்சியான பாரதீய ஜனதாகட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கட்சி தாங்கள் தான் எனவும்,நரேந்திர மோடிக்கு தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என கூறிக் கொண்டு கூட்டங்கள் போடுவதும்,இந்துத்வா தலைவர்களுக்கு ஏற்படும் சொந்தப் பிரச்சனைகளை மத ரீதியாக திசை திருப்புவதும் தொடர் கதையாகி போனது.  இவர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் காவல்துறையும் அப்பாவி பொதுஜனங்கள் மீது வழக்கு போடுவதும் பிறகு நீதிமன்றம் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மோடி வேண்டுமானால் பாஜகவுக்கு தலைவராக இருக்கலாம்.இந்தியாவுக்கு அவர் தலைவரில்லை. அவரை விட சிறப்பான ஏன் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியான தலைவர்கள் நமது தமிழகத்தில் உண்டு.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பதில் சொல்ல பலமுறை தயங்கும் மோடியை, முன்னுக்கு பின் முரணாக பேட்டி கொடுக்கும் மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது என்ற செய்தி இந்துத்வா வாதிகள் மூலம் கசிவதை பார்த்தால் அக்கட்சியில் பிரதமர் வேட்பாளருக்கு வேறு ஆள் இல்லாதாதால் மோடியை வேறு வழியின்றி தேர்ந் தெடுத்திருப்பார்களோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேரு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த வேளையில் எஸ்.டி.பி.ஐ கட்சியும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மதச்சார்பற்ற இந்திய தேசத்தை மதவெறி கொண்டு பிளப்பதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே இந்து மகாசபையும், முஸ்லீம் லீக்கும் செய்த தவறை இனி இந்த தேசத்தில் அனுமதிக்க முடியாது.

ஆனால் பாஜக வின் செயல்பாடுகள் பிரிவினையை ஆதரிப்பதாக உள்ளது.

வேறு எந்த கட்சிகளும் செய்யத்துணியாத காரியத்தை பாஜக செய்ய துணிகிறது. ஆகவே எஸ்.டி.பி.ஐ கட்சி இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதனை பொறுக்க முடியாமல் பாஜக மறைமுகமாக இந்து முண்ணனியினரை தூண்டி விட்டு எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு எதிராக நெல்லையில் புகார் செய்துள்ளது.  அந்த புகார் என்னவெனில் வருங்கால பிரதமர் மோடியினை எஸ்.டி.பி.ஐ கட்சி அவதூராக பிரச்சாரம் செய்வதாக புகார்.

இந்த கேடு கெட்ட புகாரையும் வாங்கி கொண்டு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜகவின் மோடியை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் விமர்சித்தார்கள் என்று பாஜக காரன் புகார் கொடுத்தால் கூட ஒரு வழியில் பார்த்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் இந்து முண்ணனி மூலம் புகார் கொடுத்து, அதன் மூலம் மோடிக்கு அனுதாபத்தை பெற்றுக்கொள்ள பாஜக முயல்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகள் காட்டுகிரது என்றே கருதுகிறேன்.

எது எப்படியோ காங்கிரஸ் கட்சி பாஜக வை கண்டு பயப்படுவதை போல், பாஜக எஸ்.டி.பி.ஐ கட்சியினை கண்டு பயப்படுகிறது என்பதே உண்மை, மடியினில் கணம் இல்லையெனில் அரசியல் வழியில் பாஜகவுக்கு பயம் எதுக்கு.

நன்றி 


மாநில செய்தி தொடர்பாளர், BSI. கனி 

முத்துப்பேட்டையில் ரயில்வே ரிசர்வேசன் வர காரணம் TNTJ தான் ஆதாரங்கள் பல உள்ளன.





முத்துப்பேட்டை, ஜூலை 19: முத்துப்பேட்டையில் அகற்றப்பட்ட ரயில்வே முன்பதிவு மையத்தை மீண்டும் கொண்டுவர தவ்ஹித்ஜமாத் பலகட்ட முயற்ச்சிகளை மேற்கொண்டது அதன் பலனாக மறுபடியும் ரயில்வே முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது

உடனே ஊரில் உள்ள அனைத்து தரப்பினரும் தாங்கள்தான் இதற்கு காரணம் என போஸ்டரும் பிட் நோட்டீசும் போட்டு வருவதால் இதன் உண்மை நிலையை ஆதாரத்தோடு வெளி யிட்டுள்ளோம் இந்த உண்மையை அதிகமான மக்களுக்கு ஷேர் செய்து கொண்டு செல்லவும்.

ஆதாரம் 1

நாம் முதல் முதலில் இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊர் முழுவதும் ஒட்டிய லித்தோஸ் போஸ்டர் அப்போது நம் இனையதளத்தில் வெளியிட்ட செய்தி

http://www.tntjmtt.blogspot.com
ஆதாரம் 2

இந்த கோரிக்கையை வழியுறுத்தி முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் திருச்சி சென்று டிவிசனல் ரயிவே மேனாஜரை சந்தித்து மனு அளித்தது அப்போது நம் இனைய தளத்தில் அது சம்மந்தமாக வெளியிட்ட செய்தி

http://www.tntjmtt.blogspot.com

ஆதாரம் 3

இந்த கோரிக்கையை நிறைவேற்ற வழியுறுத்தி தொகுதி எம் பி ஏகேஎஸ் விஜயன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தது அப்போது நம் இனைய தளத்தில் அது சம்மந்தமாக வெளியிட்ட செய்தி
நன்றி 

செய்து இபுராஹிம் 

செக்ஸில் உச்சம் அடைதல் என்பது ஆணைவிட பெண்ணுக்கு, தாமதப்படுவது ஏன்? மருத்துவர்கள் தரும் தகவல்கள்.







மருத்துவம், ஜூலை 19: ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல்  வெளி ப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல்  இருக்கி ன்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libi dinal Energy), பெண்களை மன நோய்க்கு ஆளாக்கி வருகிறது என்றும் பாலியல் ஆய்வு சொல்கி றது.
மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைக ளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வ தில் தொடங்கி  பிள்ளைகளை அடிப்ப துவரை 40 வகைகள் எனச் சொல்கி றது அந்த ஆய்வு. மேலும், பெண்ணை உச்சகட்டம்  அடையவைப்பது தொழில் நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடங்கி ஜி ஸ்பாட் வரை அது தொடர்கிறது.
ஆண் பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. பெண் தானே அதை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அதாவது, ஒரு பெண் கலவியில் சுதந்தரமாக ஈடுபட்டு தன் மனநிலை மற்று ம் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவளது உச்சக் கட்டத்துக்கு ஆண்  உதவுவதுதான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள், புற விளையாட்டுகளில் (Foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண் கள் விரும்புகிறார்கள்.
பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக் (Erotic Site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக()மாற்ற வே ண்டும். பாலியலை  நமது தன்னமை வில் இருந்து (Sexual Act) கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல் (Basic Instinct) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாலுறவில் பெண் உச்ச நிலையை அடைய, பாலுறவில் கட்ட மைக்கப்பட் டுள்ள அனைத்து ஒழுங்கு விதிமுறைக ளையும்  உடைக்க வேண்டும். அதாவது, பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம்  அற்ற புரிதலுடன் சந்தோஷ மாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில்  உச்சக்கட்டத்தை அனுப விக்க முடியும்.

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?


உலகம், ஜூலை 19: உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் தங்களுடைய கணவன் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக சமையல், மற்றும் இன்னபெற செயல் பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி அசத்துவார்கள். எனவே கணவனிடமிருந்து மனைவிமார்கள் எதிர்ப்பார்ப்பது என்ன என்று இங்கே காணலாம். 
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றைமனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்...!

தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ் 

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி நடத்தும் 4-ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி அழைப்பு..


முத்துப்பேட்டை, ஜூலை 19: துபாய் வாழ் முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் சார்பில் நான்காம் ஆண்டு நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி வருகிற 26-07-2013 ஆம் தேதி நடைபெற உள்ளது. இடம்: அல் தவார் பார்க் யூனியன் கோ ஆப்ரடிவ் பின் புறம். எனவே அனைவரும் தவறாது கலந்து கொண்டு இப்தார் விருந்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

இங்ஙனம்:

முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)