முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை கொத்பா பள்ளியில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய இப்தார் விருந்து நிகழ்ச்சி.





முத்துப்பேட்டை ஆகஸ்ட் 29 : முத்துப்பேட்டை கொத்பா பள்ளியில் நேற்று 28.08 .2011 தேதியில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் என்ற இனையதளம் மாபெரும் இப்தார் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. அல்லாஹ்வின் உதவியால் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரியின் மின்சாரத்துறை இயக்குநர், ஜனாப். A.K.L.L. முஹம்மத் மன்சூர். IAS. அவர்கள், மற்றும் முத்துப்பேட்டை முன்னால் அனைத்து முகல்லா தலைவர். ஜனாப். M.K.N .முஹம்மத் முஹைதீன், முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் நிறுவனர் ஜனாப். M.A .இபுன் ஹமீது, கொத்பா பள்ளி தலைவர் ஜனாப். முஹம்மத் முகைதீன். கொத்பா பள்ளி செயலாளர் ஜனாப். H. ஜபருல்லாஹ் கான் மற்றும் முஹல்லாவைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அமீன். இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் நமது கொத்பா பள்ளியில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நோன்பு நாட்களில் கடைசி 10 ல் இப்தார் விருந்து ஏற்பாடு செய்ய உள்ளது என்பதை இதன் மூலம் தெரியப் படுத்துகிறோம். மேலும் வரக்கூடிய நோன்பு நாட்களில் முத்துப்பேட்டை அருகில் உள்ள ஊரான பாலாவை, சித்தமல்லி ஆகிய ஊர்களுக்கும் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யவும் முடிவு செய்துள்ளது. எனவே நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் இதற்கு உதவ முன்வரவேண்டும்.

சுல்தானின் மகளை அடிமை திருமணம் செய்யலாம்.

ஆகஸ்ட் 25 : பூரண சமத்துவமும் சகோதர மனப்பான்மையும் முஹம்மதியரிடையே திகள வேண்டும் என்ற உண்மையைத் தம் வாழ்க்கை வாயிலாக முஹம்மத் மெய்பித்துவிட்டார். அங்கே வேறுபாடு இல்லை; சாதி வேற்றுமை இல்லை, கொள்கை வேற்றுமை இல்லை, வர்ண வேறுபாடு இல்லை, பால் வேற்றுமையும் இல்லை. துருக்கி சுல்தான், ஆப்ரிக்காவின் அடிமை சந்தையில் நீக்ரோ இனத்தைச் சேர்ந்த ஒருவனை விலைக்கு வாங்கி, அவனை கைவிலங்கிட்டு அழைத்து வரலாம். அந்த அடிமை முசல்மானாகி விட்டால், அவனுக்கு போதுமான தகுதியும் ஆற்றலும் இருக்குமானால், சுல்தானின் மகளே அவன் மனம் புரியலாம். மற்ற இனத்தாரைக் காட்டிலும் முஹம்மதியர்கள் சிறப்புற்று இருக்கின்றார்கள். இனப்பற்று, வர்ணப் பற்று, முதலியவற்றை பொருட்படுத்தாமல் அவர்கள் காட்டுகின்ற சமதுவதிலே தான் அவர்களுடைய சிறப்பு வீற்றுரிக்கிறது.

சுவாமி விவேகானந்த


மவுத் அறிவிப்பு: "A .ஹாஜா முஹைதீன்"

முத்துப்பேட்டை ஆகஸ்ட் 24 : ஜமாலியா தெரு மர்ஹும் அப்துல் காசிம் அவர்களின் மகனும் முஹம்மத் அலி ஜின்னா, நாட்சிகுலம் TA .சலீம் ஆகியோரின் மாமனாரும் அப்துல் காசிம், ரியாஸ் அஹமது ஆகியோரின் தகப்பனாரும் மாகிய "A .ஹாஜா முஹைதீன்" அவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். இன்ன லில்லாஹி
வ இன்னாஹ் இளைகி ராஜிவூன். அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

அறிவிப்பவர்

A . அப்துல் காசிம்

முத்துப்பேட்டையில் எழுச்சி மிக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...





ஆகஸ்ட் 22: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இதுவரை நடைபெறாத நோன்பு திரோக்கும் நிகழ்ச்சியை K .N . ஆத்மநாதன் பெரிய பண்ணை ஜாம்பை-வடகாடு, R .S .வீர சேகரன் உப்பூர், P . பாலசுந்தரம் என மூன்று மாற்று மத சகோதரர்கள் நேற்று 21 .08 .2011 முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டையை சார்ந்த அனைத்து முஹல்லா நிர்வாகிகள், மற்றும் முக்கியஸ்தர்கள், இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மாற்று மத முக்கியஸ்தர்கள், மற்றும் சான்றோர்கள் சமய நல்லிணக்க ஆர்வலர்கள் வர்த்தக பெருமக்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறபித்தார்கள். இந்நிகழ்ச்சி இரு சமூகங்களுக்கிடையேயான சகோதருத்துவம் மிக்க நெகல்வான ஒரு சந்திப்பாகவே நடந்தேறியது. முத்துப்பேட்டையில் நற்சிந்தனையோடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை யில் அனைத்து மக்களிடையேயும் மிகவும் சகோதர வாஞ்சையை ஏற்படுத்தியது. இப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. எதிவரும் காலங்களில் நாமும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மாற்று மத சகோதரர்களுக்கு அழைப்பு கொடுத்து விருந்து உபசரிப்பு செய்வது என முடிவெடுக்கப்பட்டது . இந்நிகழ்ச்சி உண்மையில் மிகப்பெரியதொரு நிகழ்வை உருவாக்கியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றே சொல்லலாம். இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கு தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெருவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 90472 61919 ...

குறிப்பு:

இந்நிகழ்ச்சியில் மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்னவெனில் முத்துப்பேட்டை காவல் துறையைச்சார்ந்த DSP,INSPECTER,SI, மற்றும் உளவு பிரிவுகளுக்கு அழைப்பு கொடுத்தும் வரவில்லை என்பது மக்கள் மத்தியிலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியிலும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இரு சமூகங்களின் நல்லிணக்க ஒற்றுமைக்கு மிகவும் முக்கியமான இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை கலந்து கொண்டிருந்தாள் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதே மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான். H . தமீம் நியாஸ்

திப்பு சுல்தானும் இஸ்லாத்தை ஏற்ற நெப்போ­லியனும்!

ஆகஸ்ட் 21 : 565 சமஸ்தானங்களாக சிதறுண்டு நம்மவர்களிடையே ஒற்றுமையின்மை யால் ந­வடைந்து ஆங்கில ஏகாதிபத் தியத்திடம் அடிபணிந்து அத்தனை சமஸ்தானங்களுமே சுயநலத்திற்காகத் தன்மானத்தையும் நாட்டின் மண்,மானத்தையும் இழந்து நின்ற வேளையில்தான் சுதந்திர வேட்கையின் உதய ஞாயிறாக கி.பி. 1761ல் நவாப் ஹைதர் அ­லிகான் பகதூர் மைசூரின் ஆட்சியைக் கைப் பற்றினார். அதன்பின் ஸ்ரீரங்கபட்டினம் என்னும் சிறு தீவுகள் இருந்த மைசூரின் புகழ் தென்னகமெங்கும் விரியத் தொடங்கியது.
கி.பி.1782ல் ஹைதர் அலி­யின் மரணத்திற்குப் பின் திப்புசுல்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அவரது 18 ஆண்டுகால இறையாட்சியில் அகண்ட இந்த பாரத கண்டம் அதற் குமுன் கண்டிராத ஒரு புதிய பொ­லிவு டன் இம்மண்ணின் மைந்தரின் தலைமை யில் ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் காலூன்ற விடாமல் விரட்டியடித்தது. திப்புசுல்தானின் ஆட்சி கிருஷ்ணா நதியி­ருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல்களும், மலபாரி­ருந்து கிழக்குத் தெடார்ச்சி மலை வரை மேற்கு கிழக்காக முந்நூறு மைல்களும் பரந்து விரிந்திருந்தது. இந்த நல்லவேளையில் தான் ஆங்கில எதேச்சதிகாரத்தை இம்மண்ணி­ருந்து அடியோடு ஒழிக்க மாவீரன் திப்புசுல் தான் ஐரோப்பிய மாவீரன் நெப்போ­ய னுடன் உறவு கொண்டார். அதுதான இன்றைய கூட்டணிகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய முதல் சர்வதேச கூட்டணி.
பிரெஞ்சுப் புரட்சி முடிவும் நெப்போலி­யனின் தலைமையும்
கி.பி.1787­லும், கி.பி.1792லும் பிரான்ஸ் நாட்டில் பெரும் புரட்சி வெடித்து மன்னர் 16ம் லூயி ஆட்சி முடிந்து பி.பி.1796க்குள் மாவீரன் நெப்போ­யன் பிரெஞ்சுப் படைகளின் தலைமைத் தளபதியாக உயர்ந்து விட் டான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்னும் கோஷங்கள் பிரெஞ்சு மண்ணில் எழுப்பப்பட்டன. அதன் எதிரொ­ உலகின் பல பாகங்களிலும் கேட்க ஆரம்பித்தது.
இந்தப் புரட்சி கோஷத்தை வரவேற்ற முதல் இந்திய மன்னன் திப்புசுல்தான் மட்டுமே. அன்றே ஸ்ரீரங்கப்பட்டண வீதிகளில் இப்புரட்சி முழக்கங்களைக் கூறிக்கொண்டு மக்கள் ஊர்வலத்தை நடத்திக் காட்டினார் திப்புசுல்தான். பிரான்ஸில் ஜனநாயகக் குடியரசு ஏற்பட்டதும், மைசூரின் தலைநகரில் 108 பீரங்கிக் குண்டுகள் முழங்க அதனை வரவேற்றார். புரட்சிக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்புசுல்தான் ஆரம்பித்தார். பிரெஞ்சுக் கடற்படை அதிகாரி ரிப்பாடு அக்கழகத்தின் தலைவராக செயலாற்றினார்.
முடி மன்னன் அல்ல - குடிமகன்
திப்புசுல்தான அக்கழகத்தில் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண் டார். குடியரசின் குடிமகன் என்ற பட்டத்தை அப்புரட்சிக்கழகம் மன்னர் திப்புசுல்தானுக்கு வழங்கியது. கி.பி.1797ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிரெஞ்சுக் குடியரசின் தேசியக் கொடி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றிவைக்கப்பட்டது.
7.6.1985ல் பிரான்சின் தலைநகர் பாரீஸில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் உரையாற்றும் போது கி.பி.1792ல் பிரான்சின் தலை நகரம் பாரீஸில் மக்கள் புரட்சி ஆரம் பமாகி சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை என்ற சங்கநாதம் எழுந்தது. எழுந்ததும் அதனுடைய எதிரொ­ இந்தியத் திருநாட்டிலும் கேட்டது. திப்புசுல்தானின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அன்றைய தினமே இப்புரட்சிக் குரல் எதிரொ­த்திருக்கிறது என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.
மக்களாட்சி மலர்ந்ததன் சிறப்பை அங்கு கூடியிருந்த மக்களுக்கு திப்புசுல் தான் எடுத்து விளக்கினார். முற்போக்கு சிந்தனைகளை மனமுவந்து ஏற்று மக்கள் முன்பு அதை செய்துகாட்டிய இந்திய மன்னர் திப்புசுல்தான் ஒருவர் மட்டுமே.
நெப்போ­லியனின் வெற்றிகள்
நெப்போ­லியன் ஜெர்மனி, ஆஸ் திரியா இவற்றை வென்று ரஷ்யாவில் மாஸ்கோ வரை வென்றுவிட்டார். பல போர்களில் ஆங்கிலேயர் நெப்போ­ யனிடம் தோல்வி கண்டனர். அதேபோல் இந்தியாவில் தென்னகத்தில் பரவலான பல இடங்களில் திப்புசுல்தானிடம் தோல்வி கண்டனர்.
அல்லாமா இக்பால் அவர்கள் திப்புவைப் பற்றிக் குறிப்பிடும்போது, அன்று கிழக்கு தூங்கிக் கொணடிருந்த போது அவன் மட்டும்தான் விழித்திருந் தான் என சிறப்பிப்பார். நெப்போ­ய னின் வெற்றிகள் தொடர்ந்த வேளை இந்தியாவில் திப்புவுக்கும் நெப்போலி­யனுக்கும் கடிதத் தொடர்புகள் ஆரம்பித்தன.
மாவீரன் நெப்போ­ யன் நைல் நதிப் பகுதியை வென்றபின் இந்தியா மீது படை யெடுக்கத் திட்டமிட்டி ருந்தார். இதனையே திப்புசுல்தான் ஆவ லோடு எதிர்பார்த்தார். கி.பி.1798 ஜனவரியில் பெரும் படையுடன் மத்திய தரைக்கடலைக் கடந்து அரபிக் கடலைக் கடந்து கி.பி.1798 மத்தியில் இந்தியக் கரையை அடைவதே மாவீரன் நெப்போ­யனின் திட்டம். இத்திட்டம் திப்புசுல்தானுக்குத் தெரிவிக்கப்பட்டதும் ஆங்கிலேயரின் எதிர்ப்பை மீறி பாண்டிச் சேரியிலுள்ள பிரெஞ்சு கவர்னரிடம் கி.பி. 1798 ஜனவரியில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மாவீரன் நெப்போ­யன் 1798 ஜூன் மாதம் 8ஆம் தேதி அலெக்ஸாந்திரியா துறைமுகத்தில் படையிறங்கினார். இருபதே நாட்களில் கெய்ரோ வீழ்ந்தது. எகிப்தை ஆண்ட துருக்கி சுல்தானின் பிரதிநிதி நெப்போ­ யனிடம் சரணடைந்தார்.
திப்புவின் தூதரும் நெப்போலி­யனும்
நெப்போலி­யன் கெய்ரோவில் முகாமிட்டிருக்கும் வேளையில் திப்பு சுல்தானின் பிரதிநிதி மீர் அ­கான் அவரை சந்தித்தார். திப்புவின் கருத்துக் களை நெப்போ­லியன் நன்கு கேட்டறிந் தார். ஆங்கிலேயரை விரட்டியடிக்க இது நல்ல தருணம் என்றும், அப்போதுதான் ஐரோப்பாவிற்குப் பாதுகாப்பு என்றும், இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் உலக சரித்திரமே மாறிவிடும் என்றும் தெரிவிக் கப்பட்ட திப்புசுல்தானின் சீரிய கருத்துச் சரியென நெலிப்போ­யன் ஏற்றுக் கொண்டார்.

கடிதம் பிரிட்டிஷார் வசம்
திப்புசுல்தானுக்கு நெப்போ­லியன் கடிதம் ஒன்றைத் திப்புவின் தூதர் மீர் அ­கானிடம் தருகிறார். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவர் வரும் வழியில் ஹஜ் கடமை நிறைவேற்றும் பொருட்டு மக்காவில் தங்கிய சமயம் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சிக்கிக் கொண்டார். நெப்போ­லியனின் கடிதம் பறிக்கப்படு கிறது. இக்கடிதத்தால் நெப்போ­யன் லி திப்புசுல்தான் உறவு ஆதாரத்துடன் ஆங்கிலேயருக்குத் தெரிந்தவுடன் முத­ல் திப்புசுல்தானை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்து கி.பி.1798 ஏப்ரல் 26ஆம் தேதி வெல்லெஸ்­ பிரபுவை பிரிட்டிஷ் அரசு இந்தியக் கரையில் இறக்கியது.
போப்பாண்டவருடன் நெப்போ­லியன் மோதல்
ஜோஸப்பைன் என்ற மனைவி மூலம் நெப்போ­லியனுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் மறுமணம் செய்ய எண்ணி போப்பாண்டவரிடம் அனுமதி வேண்டினார்.
போப்பாண்டவருக்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்பது சட்டம். அரசர்கூட அவர் கட்டளையை மீறக்கூடாது. ரோமில் உள்ள போப்பின் அதிகாரத்தை மீறினால் மத பிரஷ்டம் செய்யவும் போப்புக்கு அதிகாரம் உண்டு.
இரண்டாம் திருமணத்திற்கு நெப்போ­லியனுக்கு அனுமதி மறுத்ததோடு அவரை மதத்தி­ருந்தும் விலக்கிவிடுவேன் என் போப் பயம் காட்டியதால், பி.பி.1798ஆம் ஆண்டு போப்பின் மேலாதிக்கத்தை நெப்போ­யன் பிரான்ஸி­ருந்து அகற்றி விட்டார்.
இம்மோத­ன் உச்சக்கட்டத்தில்தான் எகிப்தின் மீது படையுடன் வந்தார் நெப்போலி­யன்.
நெப்போலி­யனும் இஸ்லாமும்
கெய்ரோ நகரில் முஸ்­ம் மார்க்க அறிஞர்களை அழைத்து அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி அறியும் வாய்ப்பைப் பெற்றார் நெப்போ­லியன். ஏற்கெனவே பிரெஞ்சு மொழியில் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. இஸ்லாம் பற்றி வேறு பல நூல்களும் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டிருந் தன. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் கெய்ரோவில் அடிக்கடி உரையாடல்கள் நடத்தி இஸ்லாம் பற்றி நன்கு தெளிவா னார் நெப்போலி­யன்.
இஸ்லாமியக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நெப்போ­லியன்
இஸ்லாமியத் திருமணம், தலாக், பலதாரமணம் போன்றவைக் குறித்தும், நடைமுறையில் இவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் நெப்போ­லியன் தெரிந்து கொண்டபின் நிஜமான நடைமுறை வாழ்க்கைக்கு இஸ்லாமியக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் ஒத்துப் போகின்றன என்று மனதார மிகவும் பாராட்டியதோடு கெய்ரோவி லுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர் களிடம் இஸ்லாம் மார்க்கம் பற்றிய தம் கருத்தையும் வெளியிட்டார்.

திப்புவின் தூதர் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்ற நெப்போ­லியன்
இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம் என்று பகிரங்கமாகக் கூறியதோடு, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் முன்னிலையில் திப்புசுல்தானின் தூதர் மீர் அ­கான் (எகிப்தில்) அங்கிருந்தபோதே க­மாச் சொல்­ இஸ்லாத்தில் தம்மை இணைத் துக் கொண்டார் நெப்போ­லியன். இறை வனுக்கே புகழனைத்தும்.
இவ்விபரங்களை மீர்அ­கான் திப்பு சுல்தானிடம் தெரிவித்தபொழுது, இறை வனுக்கு நன்றி செலுத்தினார் திப்புசுல் தான். நெப்போ­யன் தமக்கு எழுதிய கடிதம் பறிபோனதைக்கூட மறந்து மீர் அ­கானிடம் இந்த விபரம் பற்றியே அதிகம் விசாரித்தாராம் திப்புசுல்தான்.
எதிர்பாராத ஏமாற்றம்
எகிப்தில் பிரெஞ்சுப் படைகள் நைல் நதியில் நடைபெற்ற போரில் எதிர்பாராத விதமாக தோல்வி முகம் காண ஆரம் பித்ததும் மாவீன் நெப்போ­யலின் இந்தியா வரும் எண்ணத்தைக் கைவிட்டு சிரியாவின் பக்கம் திரும்பி, பின்னர் ஐரோப்பாவுக் குத் திரும்பிவிட்டார். இந்நிகழ்வு திப்புசுல்தானுக்கு மிகப்பெரும் ஏமாற்றம் அளித்தது.
நெப்போ­லியன் தோல்வி
கி.பி.1810ல் நெப்போலி­யன் தம் இரண்டாம் திருமணத்தை முடித்தார். கி.பி.1811ல் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கி.பி.1815ல் வாட்டர் லூ என்னு மிடத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த போரில் ஆங்கிலேயர் வென்றனர். மாவீரன் நெப்போ­யன் செயின்ட் ஹெ­னா தீவில் சிறை வைக்கப்பட்டார்.
இஸ்லாத்தில் நெப்போ­லியனின் முழு ஈடுபாடும் இறையடி சேர்தலும்
சிறையில் இருந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் மாவீரன் நெப்போ­யன் இஸ்லாம் பற்றி ஆராய்ந்து அறிந்து எப்பொழுதும் குர்ஆனின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை படித்தபடியே இருந்தாராம். அவர் தவறாமல் தொழு கையைக் கடைப்பிடித்து நோன்பும் நோற்றிருக்கிறார்.
வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி கெய்ரோவில் நெப்போ­யன் க­மாச் சொல்­ இஸ்லாத்தில் இணைந்தது உண்மை என்பதும், முழுமையான முஸ்­லிமாகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார் என்பதும் புலனாகிறது.
இறுதியாக, சிறைச்சாலையில் நெப்போ­லியன் தங்கியிருந்த அறையில் தொழுகை விரிப்புடன் திருக்குர்ஆன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று மட்டுமே இருந்தது என்ற உண்மையை அவரது மறைவிற்குப் பின் அங்கு சென்று குறிப் பெடுத்த சிறை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

ஹிந்து பத்திரிகையில் 19.12.1982 அன்று வெளிவந்த ஒரு பெட்டிச் செய்தி விபரம்:
1932ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அன்றைய ஹைதராபாத் நிஜாமின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள கா­த்ஷெல் டிரேக் என்ற ஆங்கில முஸ்­ம், இந்தியா வந்திருந்தார். அக்கூட்டத் தில் அவா நெப்போ­யன் தம் இறுதிக் காலத்தில் முழு முஸ்­மாகவே வாழ்ந்தார் என்றும், நெப்போ­யன் வாழ்ந்த சிறை அறையில் திருக்குர்ஆனின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு மட்டுமே இருந்தது என்பது பல நூல்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது என்றும் அந்த ஆதார நூல்களை மேற்கோள் காட்டியும் விளக் கம் தந்துள்ளார். முக்கியமாக கி.பி.1815லில் நெப்போ­யனை செயின்ட் ஹெ­னா தீவுக்கு அழைத்துச் சென்ற அட்மிரல் காக்பர்ன் என்ற ஆங்கிலத் தளபதியின் செயலாளர் ஆர். குளோவர் என்பவர் எழுதி வெளியிட்ட டைரியில் இதுபற்றிய உண்மைகள் புலனாகின்றன.
இறுதியாக மாவீரன் திப்புசுல்தான், கி.பி.1799 மே மாதம் 4ஆம் தேதி தம் இன்னுயிர் நீத்ததுபோல் உள்ளத்தால், திடத்தால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் ஒன்று பட்ட மாவீரன் நெப்போ­யனும் கி.பி. 1821ல் மே மாதம் 5ஆம் தேதி இறையடி எய்தினார் உண்மை முஸ்­லிமாக!

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான்.
(எம்।கே। ஜமால் முஹம்மது அவர்களின் தியாகச் சுடர் திப்பு சுல்தான் நூ­­லிருந்து...)

முத்துப்பேட்டை பொது மக்களை கஷ்டங்களுக்கு உட்படுத்தும் HP சிலிண்டர் நிறுவனம்!!!





முத்துப்பேட்டை ஆகஸ்ட் 20 : (Exclusive Muthupettai Express)திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சுமார் 75 ஆயிரம் மக்கள்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் முஸ்லிம்களே வசிப்பது யாவரும் அறிந்ததே. எனினும் முத்துப்பேட்டை மக்கள் மாதம் ஒரு முறை சிலிண்டர் (கேஸ்) வாங்குவதற்கு பல மணி நேரம் வெவ்வேறு இடங்களிலிருந்தும் வந்து காத்து கிடப்பது மிகப்பெரிய ஓர் துயரமாகத்தான் இருக்கிறது. எனினும் பக்கத்து ஊருகலான அதிராம்பட்டினம், திருத்துறைப் பூண்டி, பட்டுக்கோட்டை, நாட்சிகுலம், மதுக்கூர் இன்னும் பல்வேறு முஸ்லிம்கள் வசிக்க கூடிய இடங்களில் வீடு வீடாக சென்று சிலிண்டரை விநியோகம் செய்யும் இந்த "HP கேஸ் நிறுவனம்" ஏன் முத்துப்பேட்டையில் மட்டும் செய்வதில்லை. இது குறித்து "முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்" பொது மக்களிடம் கேட்டபோது அம்மக்கள் கூறும் பதில். இதில் பெண்களாகிய நாங்கள் மிகவும் சிரமத்திற்கும், கஷ்டத்திற்கும் ஆளாகிறோம். பொதுவாக முத்துப்பேட்டை பகுதிகளுக்கு சிலிண்டர் வந்தால் வீட்டில் யாரும் ஆட்கள் இல்லாதபோது வெளியில் உள்ள ஆட்களிடம் வாங்கி கேட்டல் அதற்கு அவர்கள் 50 ரூபாய், அல்லது 100 ரூபாய் , தாருங்கள் என்று கேட்கின்றனர். அனால் ஒரு சிலிண்டரின் விலை தற்போது 430 இப்படி இருக்கும் நிலையில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எனவே வீடு வீடாக சென்று சிலிண்டரை விநியோகம் செய்ய வேண்டும். ஆண்கள் வியாபாரம் செய்யும் நேரத்தில் வியாபாரத்தை போட்டுவிட்டு வரக்கூடிய மிக மோசமான சூழ்நிலைதான் இந்த முத்துப்பேட்டையில் அரங்கேறி வருகின்றது. ஏன் இந்த நிலை? இதற்க்கு நிரந்தர தீர்வுதான் என்ன? அரசியல் வாதிகளின் சதியா? அல்லது அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியா? பொறுந்திருந்து பாப்போம் இதற்கு விடை கிடைக்குமா என்று?

தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.



முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டிய ஊடகத்துறை!!!

உலகம் ஆகஸ்ட் 20 : ஊடகம் (மீடியா) இன்று உலகை சுருக்கிகி உள்ளங்கையில் தந்து விட்டது. அதன் வளர்ச்சியும் பிரம்மாண்டமும் இன்று ஒவ்வொரு தனி மனிதன் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பிரம்மிக்கத் தக்க வளர்ச்சியும் வளமும் கொண்டதாய் திகழ்கின்றது. வெகு ஜன கருத்தை உருவாக்கவும் மக்கள் சமூகத்தின் ஆளுமையை வளர்பதிலும் கூட அது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது .ஆனால் இவ்வளவு ஆற்றல் மிகுந்த ஊடகம் (மீடியா) எவ்வாறு தவறாக பயன்படுத்தபடுகிறது. என்பதைப் பற்றி ஆராயும் முன்பு ஊடகம் (மீடியா) என்றல் என்ன? என்பதனைப்பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஊடகம் (மீடியா) என்பதன் விளக்கம்:
ஊடகம் (மீடியா) என்றால் சென்றடையும் வழி என்பது பொருளாகும். அதாவது ஒரு தகவல் மற்றொருவருக்கு சேருவதற்கு பயன்படுத்துகின்ற சாதனங்களின் வழியாகத்தான் செய்திகள் பிறரிடம் சென்றடையும் அதனால்தான் ஊடுருவிச் செல்லக்கூடியவை என்ற அடிப்படையில் இது ஊடகம் எனபடுகிறது.
இந்த ஊடகம் ஒரு காலத்தில் தெருமுனைகளில் நடக்கும், தெருக்கூத்து நாடகம் ஆகியவைகளிலிருந்து தொடங்கி இன்று தினசரி, வார, மாத, இதழ்கள் தொலைக்காச்சி வானொலி, கணினி வலை என்று விரிந்து அபரிமிதமான தொழில் நுட்ப மாற்றங்களைப் பெற்று திகழ்கிறது.
ஊடகம் செய்து வருவது என்ன
இதன் மூலம் மக்களை உயர்த்தி விதவ வேண்டிய மீடியா இன்று அவர்களை அதல பாதாளத்தில் தள்ளிவிடுகின்ற காரியத்தை செய்து வருகின்றது. ஹிட்லாரின் அமைச்சர் கோயபல்ஸ் பாணியில் பொய் பிரசாரமும் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிப்போடும் கலாச்சார சிரழிவுகலாயுமே வழங்கி இன்று மனிதனை மதிமயக்கும் போதை மருந்துகளாக மாற்றி வருகின்றன. அத்துடன் அந்த மீடியா அதிகமான இலாபம் சம்பாதிக்கும் தொழிலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இத்தகைய வேதனையான நிலையினால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. என்றாலும் கூட இன்று பெரும்பாலும் ஊடகம் (மீடியா) இஸ்லாத்திற்கு எதிரான பயங்கரமானதொரு கருத்துப் போரில் ஈடுபட்டிருப்பது முஸ்லிம் சமுதாயம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
முஸ்லிம்கள் எல்லாவற்றிலும் கீழ்நிலையில் இருப்பதை போன்றே ஊடகத்திலும் கீழ்நிலையில் இருப்பது யாவரும் அறிந்ததே அதற்கு காரணம் முஸ்லிம்களது கீழ்நிலைலான கல்வித்தரத்தின் எதிரொலியே.
இஸ்லாமிய சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய பத்திரிக்கையளர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். இந்நிலை மாறவேண்டும்.குறைந்தது ஊருக்கு ஒருவராவது முஸ்லிம் பத்திரிக்கையாளர் இருக்கும் நிலையை இன்ஷா அல்லா நாம் உருவாக்க வேண்டும். இது ஒருபுறம் இருக்கட்டும். இன்று நம்மில் எத்தனை பேர் வாசகர் கடிதம் எழுதுகிறோம். நம் பங்களிப்பு அந்த அளவிலாவது இருக்க வேண்டாமா.?
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி தவறான அவதூறான செய்திகள் பரப்பப்படும்போது ஆத்திரத்திற்கு ஆட்படாமல் அல்லாஹ்வின் கட்டளையான பொறுமையை மேற்கொண்டு மிக ஆழகான முறை யில் சர்ச்சைக்குரிய பிரச்சனையான ஜிஹாத், தீவிரவாதம், பார்த்த போன்ற வற்றில் இஸ்லாமியக் கண்ணோட்டம் குறித்து சம்மந்தப்பட்ட நாளிதழ், வார,மாத, இதழ் டிவி, இவர்களுக்கு அனுப்பிவைத்து தேளிவன முறையில் புரிய வைத்திட வேண்டும்.
ஒருவேளை வேன்றுமென்றே வன்மமான கலவர நிலையை உருவாக்கிட இதுபோல் வேலிடப்பட்டாலும் கூட ஆத்திரப்படாமல் பொறுமையை அணிகலனாகக் கொண்டு நமது சார்பிலேயே இஸ்லாத்தை எடுத்து விளக்கிடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இம் முயற்சி அவர்களது எண்ணத்தில் மண்ணைக் கவ்வச்செய்யும்.
இனியாவது முஸ்லிம் சமூகத்தை கல்வியில் உயர்த்தி அவர்களின் சிலரை ஊடகத்திற்கு வழங்குவதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நாம் உதவிடுவோம். அதே வேலையில் நாமும் அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சைக் குரிய கருத்துகளுக்கு இஸ்லாமியத் தீர்வுதான் என்ன? என்ற வின எழுப்பி அதற்கான தீர்வுகளை ஊடகத்தின் வாயிலாக வேலிடச் செய்வதின் மூலம் ஊடகத்தையும் தூய்மை படுத்தி நமக்குச் சாதகமான சிந்தனைக்கு வழி வகுப்போம்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் அபு பைசல்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)