முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் வெளுத்து வாங்கிய கன மழை-மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த பொதுமக்கள் !!

DSCF3554தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்ய வில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் பொது மக்கள் மழை பெய்யாதா என ஏங்கி கொண்டு இருந்தனர். விவசாயிகளும் மழை பெய்தால் பயிர்கள் புத்துயிர் பெறும் என்று மழையை எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை மேகம் கூடி விட்டு மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. ஆனால் இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் சீர்காழி, தென்பாதி, சட்ட நாதபுரம் ஆகிய இடங்களில் காலை 4 மணி முதல் 5.30 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு ஆகிய இடங்களில் தூரல் மழை பெய்தது.
திருவாரூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களிலும் இன்று காலை மிதமான மழை பெய்தது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. காலை வரை மழை நீடித்தது. இதனால் மானவாரி நிலங்களில் சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. வேதாரண்யத்தில் 17.7 மி. மீட்டர் மழையும், தலை ஞாயிறில் 4.6 மி. மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
வேதாரண்யம் கடியபட்டினம் ரோட்டில் உள்ள மின் கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் அப்பகுதியில் உள்ள 5 வீடுகளில் மின் சாதன பொருட்கள் கருகி சேதமானது.
தஞ்சையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை லேசான தூறல் மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை தூறல் மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.DSCF3574
DSCF3560

DSCF3569


சிறுவன் தமீம் அன்சாரி விவகாரம். காவல்துறை சார்பில் பொய்யான தகவல் அளிக்கப்பட்டதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.


சென்னை பிப்ரவரி 22: சென்னை நீலாங்கரை அருகே கைதான சிறுவன் தமீம் அன்சாரி மீத் காவல்துறை அதிகாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் பொய்யான தகவல் அளிக்கப்பட்டதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
் சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற 14 வயது சிறுவனை விசாரணைக்காக கடந்த ஜனவரி 7ம் தேதி அழைத்துச் சென்ற நீலாங்கரை காவல் நிலைய போலீசார், கோவில் உண்டியலை திருடிய குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி கடுமையாக மூன்றாந்தரச் சித்திரவதைகளைச் செய்துள்ளனர். இரண்டு போலீஸாக தொடைகளில் ஏறி நின்று கொள்ள, கிரைம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சிறுவன் அன்சாரியின் வாயில் வெறும் து
"சென்னை நீலாங்கரைக்கு அருகேயுள்ள வெட்டுவாங்கேணியில் ஒரு கோவிலின் உண்டியல் திருட்டு போனது சம்மந்தமாக அப்பகுதியை
ச்ப்பாக்கியை நுழைத்து மிரட்டி விட்டு, பின்னர் அவன் கண்ணெதிரே துப்பாக்கியில் குண்டொன்றை பொருத்தி வயிறு, நெஞ்சு, வாய் என பல இடங்களில் துப்பாக்கியை வைத்து மிரட்டி விட்டு, கழுத்தில் வைத்து மிரட்டியபோது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு முன் கழுத்தில் நுழைந்து பின் கழுத்து வழியாக வெளியேறியுள்ளது.
கு தண்டனையாக சாதாரண சிறைவாசம் அல்லது வெறும் ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையுடன் குற்றவாளியை விடுதலை செய்து விடுதல் என்பதாக உள்ளது. காவல்நிலைய வன்முறை மற்றும் கொலை வழக்குகளில் ஆர்.டி.ஓ., மாஜிஸ்ட்ரேட் விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளானவர் உயிருடன் இருந்தால் முதலில் அவரும், அவரது குடும்பத்தினரும், சாட்சிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்தும் சிறுவன் தமீம் அன்சாரி வழக்கில் இவையெல்லாம் மிக காலதாம
இத்தகைய கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது அதற்குரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், பணி இடைநீக்க உத்தரவோடு, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 388வது பிரிவின் கீழ் மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவு, கொடூரமான காயத்தை ஏற்படுத்துதல்; இத
ற்தமாக நிகழ்ந்துள்ளன. இது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பேரம் பேசவும், மிரட்டி ஒப்புதல் பெறுவதற்குமே வழி வகுக்கும். இந்த வழக்கிலும் இப்படி நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இச்சூழலில் தனது மகனை ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்; இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுவனின் தாய் சபீனா பேகம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
த்தியது' என்று பொய்யான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சட்ட நெறிமுறைகளைப் பேணாமல், மனித உரிமை மீறலில் ஈடுபட்டு, வன்முறைத்தனமாக விசாரணை நடத்தி தமீம் அன்சாரி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை காப்பாற்றும் நோக்கில் போலீசாரின் மேற்கண்ட விளக்க அறிக்கை அமைந்துள்ளது. * காவல்துறையின் இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. * இந்த சம்பவத்தில் வெறும் 1000 ரூபாய் அபராதத்துடன் குற்றவாளி விடுதலையாகி விடும் வாய்ப்புள்ள 388வது பிரிவில் வழக்குப
கடந்த 12ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலாங்கரை ஆய்வாளர் பாஸ்கர் காவல்துறை சார்பில், "சிறுவன் தமீம் அன்சாரி உணவு உண்டு விட்டு தரையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தனது துப்பாக்கியைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு உறையினுள் வைத்தபோது துப்பாக்கி தவறி கீழே விழுந்து விட்டது. அப்போது அதிலிருந்த குண்டு சிறுவனின் கழுத்தில் பாய்ந்து காயம் ஏற்ப
டு பதிவு செய்திருப்பதை நீக்கி விட்டு, கொலை முயற்சி மற்றும் சிறப்பு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை மாற்றி, இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். * இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஏனைய காவல்துறை அதிகாரிகளுக்கு படிப்பினையாக இருக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜுக்கு அதிகப்பட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும். * இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால், "துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்தது' என்று காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவுக்கு புறம்பான அறிக்கையை நீதிமன்றம் ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும். * இந்த சம்பவத்தில் ஆர்.டி.ஓ. விசாரணையை மாற்றி நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். * தமீம் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையான ஒரு லட்ச ரூபாய் போதுமானதாகாது என்பதால் இழப்பீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும்.
உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேரா. அ. மார்க்ஸ் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தமீம் அன்சாரியின் வழக்கில் ஆஜராகி வ
* ஆய்வாளர் புஷ்பராஜை காப்பாற்றும் முயற்சியை கைவிட்டு சட்டப்படி அவர் மீது கடும் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை முன் வர வேண்டும். * தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ச்சியாக காவல்துறை வன்முறைகளை கண்டித்தும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தும் வருகிறார். இந்நிலையில் குற்றவாளியை காவல்துறை காப்பாற்ற முயற்சிப்பது முதல்வரின் விருப்பத்திற்கு மாற்றமானதாகும் என்பதை காவல்துறை தலைமை உணர வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகளையும், கண்டனத்தையும் பதிவு செய்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று (20-02-2014) பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நீதிக்குப் புறம்பான காவல்துறையின் போக்கை கண்டித்தும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், மனித
ருபவருமான சங்கர சுப்பு ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட சிறுவனான தமீம் அன்சாரியும் தனக்கு நேர்ந்த சித்திரவதைகள், துப்பாக்கிச் சூடு நடந்த விதம் குறித்து செய்தியாளர்களிடம் நேரடியாக வாக்குமூலம் அளித்தான். இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளான ஃபிர்தவ்ஸ், அபு ஃபைஸல், முஹம்மது ஷிப்லி, முஹம்மது முஹ்யித்தீன், சிராஜ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: K. சாகுல் ஹமீது அழைப்பு...





முத்துப்பேட்டை,பிப்ரவரி 22: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ரபிவுல் ஆஹிர் பிறை 29,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 02-03-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை குத்பா பள்ளிவாசலில்  எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு:  K. சாகுல் ஹமீது 

மேலும் தொடர்புக்கு:

K. சாகுல் ஹமீது 


துபாய் தொடர்புக்கு: 00971 - 56 33 360 93..

முத்துப்பேட்டை தொடர்புக்கு: (விரைவில் தெரிவிக்கப்படும்)

மனிதவெடிகுண்டால் பலியான ராஜீவ் காந்தி -ஓர் சிறப்பு பார்வை !!

கடந்த 20-ம் நூற்றாண்டில் உலக நாடுகளில் எத்தனையோ அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. இந்தியாவில் தேசத்தந்தை காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் இந்திரா காந்தியை அவருடைய மெய்க்காவலர்களே சுட்டுக்கொன்றனர்.
ஆயினும் 47 வயதே நிறைந்தவரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவருமான ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டாகவந்த ஒரு பெண்ணால் கொல்லப்பட்ட கொடிய சம்பவம் ரத்தத்தை உறையச் செய்வதாக இருந்தது.
பிரதமர் பதவியை 7-3-1991-ல் சந்திரசேகர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜுன் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெறுவதாக இருந்தது. மே 21-ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய ராஜீவ் திட்டமிட்டார்.





ragiv gandhi2




21-ந்தேதி பகலில் அவர் ஆந்திராவில் பல தேர்தல் கூட்டங்களில் பேசிவிட்டு மாலை 6.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தார். ஆனால் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மறுநாள் காலை சென்னை போகலாம் என்று எண்ணினார். விருந்தினர் மாளிகைக்கு சென்று கொண்டிருந்தபோது “விமானம் சரியாகி விட்டது சென்னைக்குப் புறப்படலாம்” என்று தகவல் வந்தது. எனவே காரை விமான நிலையத்துக்குத் திருப்பச் சொன்னார்.
விமானம் 7 மணிக்குப் புறப்பட்டது. அதில் இரவு 8.26 மணிக்கு ராஜீவ் காந்தி சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் பற்றி கேட்டதற்கு “மத்தியில் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்” என்று பதிலளித்தார். பிறகு சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்குக் காரில் சென்றார். அங்கு இ.காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 10.10 மணிக்கு அவர் ஸ்ரீபெரும்புதூர் போய்ச்சேர்ந்தார்.
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பிறகு மேடையை நோக்கிச் செல்லும்போது வழியில் கூடியிருந்தவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். வரவேற்க நின்று கொண்டிருந்தவர்களில் அரக்கோணத்தை சேர்ந்த லதா கண்ணன் (வயது 35) என்ற காங்கிரஸ் ஊழியரும் ஒருவர். அவருடன் அவர் வளர்ப்பு மகளான கோகிலா என்ற 15 வயதுச்சிறுமியும் வந்திருந்தாள். அவள் ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து இந்தியில் எழுதி வைத்திருந்த கவிதையைப் படித்தாள்.
அதை ராஜீவ் ரசித்துக் கேட்டார். இவர்களுடன் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். சுடிதார் உடையில் இருந்த அவள் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கையில் ஒரு சந்தன மாலை இருந்தது. கோகிலா கவிதை பாடி முடித்ததும் ராஜீவ் காந்தி அவள் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்தார். அவர் அங்கிருந்து நகரத் தொடங்கும்போது கையில் சந்தன மாலை வைத்திருந்த பெண் அவர் அருகே சென்றாள். மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள்.
கண்மூடி திறப்பதற்குள் அவள் கை இடுப்பில் மறைவாக கட்டியிருந்த பெல்ட்டைத் தொட்டது. அவ்வளவுதான். பெல்ட்டுடன் கட்டியிருந்த குண்டுகள் வெடித்தன. ராஜீவ் காந்தியும், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களும் உடல் சின்னாபின்னமாகச் சிதறி தரையில் வீழ்ந்தார்கள். குண்டு மிக சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சத்தம் அதிகம் கேட்கவில்லை.
தவிரவும் மேடை அருகே காங்கிரசார் பட்டாசுகளைக் கொளுத்திக்கொண்டு இருந்தனர். எனவே அருகே இருந்தவர்கள் கூட குண்டு வெடித்ததை உடனடியாக உணர முடியவில்லை. புகை மண்டலமாக இருக்கிறதே என்று ஓடிச்சென்று பார்த்தபோது பலர் உடல் சிதைந்து பிணமாகக் கிடந்த பயங்கரக்காட்சியைக் கண்டு அலறினார்கள்.
ragiv gandhi3
இந்தக் கூட்டத்துக்காக வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் கருப்பையா மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை அறிந்து ஓடோடி வந்தனர். “ராஜீவ் எங்கே? ராஜீவ் எங்கே?” என்று கதறினார் மூப்பனார். ராஜீவ் காந்தி தலைகுப்புற கிடந்தார். அவர் தலையின் பின்புறம், காலில் அணிந்திருந்த பூட்ஸ் ஆகியவற்றைக் கொண்டு, அவர் ராஜீவ் காந்தி என்று அடையாளம் கண்டு கொண்ட ஜெயந்தி நடராஜன் எம்.பி., தாங்க முடியாத அதிர்ச்சியும், துயரமும் அடைந்து கதறினார். இதற்குள் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அந்த இடத்திற்கு ஓடிவந்தனர். ராஜீவ் உடலைப்பார்த்து அலறித்துடித்தனர்.
வ்
ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தி டெல்லியில் இருந்த சோனியா காந்திக்கு இரவு 12 மணி அளவில் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிர்ச்சியால் உறைந்து போனார். ராஜீவ் காந்தியின் ஒரே மகன் ராகுல் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனடியாக விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார். சோனியாவும், மகள் பிரியங்காவும் தனி விமானம் மூலம் சென்னைக்கு விரைந்தனர். இதற்கிடையே ராஜீவ் காந்தியின் உடல் வேன் மூலம் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு உடல் பரிசோதனை நடந்தது. டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக பெட்டியில் வைக்கப்பட்டது.
ragiv gandhi6
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வந்தது. கவர்னர் பீஷ்மநாராயண் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ராஜீவ் உடல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டது. டெல்லியில் இருந்து சோனியாவுடனும், பிரியங்காவுடனும் புறப்பட்ட தனி விமானம் சென்னை வந்து சேர்ந்தது. ராஜீவ் காந்தி உடலைப் பார்த்து சோனியாவும், பிரியங்காவும் கதறித்துடித்தனர். பின்னர் அவர்கள் வந்த தனி விமானத்திலேயே ராஜீவ் உடல் டெல்லிக்கு கொண்டு போகப்பட்டது.
சோனியாவும், பிரியங்காவும் காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றார்கள். டெல்லிக்குக் கொண்டு போகப்பட்ட ராஜீவ் காந்தியின் உடல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆபரேஷன்கள் மூலம் உடலை டாக்டர்கள் சீரமைத்தனர். பின்னர் ராஜீவ் காந்தியின் வீட்டுக்கு உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக தீன்மூர்த்தி இல்லத்துக்கு (பண்டித நேரு வசித்த வீடு) கொண்டு போய் வைத்தார்கள்.
இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து ராகுல் டெல்லி வந்து சேர்ந்தார். தந்தையின் உடலைக்கண்டு அலறித்துடித்தார். ராஜீவ் உடல் அருகே சோனியாவும், பிரியங்காவும் துயரமே உருவாக அமர்ந்திருந்தனர். சஞ்சய் காந்தியின் மனைவி மேனகாவும் சோகத்துடன் அமர்ந்திருந்தார். பிரதமர் சந்திரசேகர் தலைமையில் மத்திய மந்திரிசபை கூடி ராஜீவ் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பது என்றும், அரசு மரியாதையுடன் ராஜீவ் உடலை தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர், பூடான் மன்னர், அமெரிக்க துணை ஜனாதிபதி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் உலகப் பிரமுகர்கள் பலர் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். 23-ந்தேதி பிற்பகல் இறுதி ஊர்வலம் நடந்தது. முப்படை தளபதிகள், ராஜீவ் உடலை சுமந்து வந்து பீரங்கி வண்டியில் வைத்தார்கள். பிரதமர் சந்திரசேகர், முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் மற்றும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ராஜீவ் உடலை தகனம் செய்ய, இந்திரா காந்தி சமாதி இருக்கும் சக்தி ஸ்தலத்தில் தகன மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாலை 4.45 மணிக்கு இறுதி ஊர்வலம் அந்த இடத்தை அடைந்தது. ராஜீவ் உடலை ராகுல், நடிகர் அமிதாபச்சன் மற்றும் உறவினர்கள் தூக்கி வந்து தகன மேடையில் வைத்தார்கள். உடல் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டு, வைதீக சடங்குகள் நடந்தன.
ragiv gandhi
பிறகு “சிதை”க்கு ராகுல் தீ மூட்டினார். மைதானத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். மறுநாள் ராஜீவ் காந்தி அஸ்தி 34 கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அலகாபாத்தில் கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், இமயமலை சாரல் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கரைப்பதற்காக அஸ்தி கலசங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திரிவேணி சங்கமத்துக்கு சோனியா காந்தி சென்றிருந்தார். ராஜீவ் காந்தி அஸ்தி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், ரெயில் மூலம் கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

ராமநாதபுரம் எஸ் பி வெள்ளைத்துரைக்கு மனநல மருத்துவம் பார்க்க வேண்டும் -மதுரை வக்கீல் சங்கம் கோரிக்கை !!

ராமநாதபுரம் தடியடிக்கு காரணமான ஏடி.எஸ்.பியும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுமான வெள்ளைத்துரைக்கு மனநல சிகிச்சை அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் சங்க செயற்குழு கூட்டம் வக்கீல் சங்க செயலாளர் ஏ.கே.மாணிக்கம் தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். பொருளாளர் அமர்நாத், இணை செயலாளர் முகமது அப்பாஸ் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மதுரை வக்கீல் சங்க உறுப்பினர்களான எம்.காஜா நஜ்முதீன், எஸ்.ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய நாமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தமிழக அரசு உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
தாக்குதலுக்கு உள்ளான வக்கீலுக்கு தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். போலீஸ் அதிகாரி வெள்ளத்துரை பொதுமக்கள், வக்கீல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார். எனவே, அவரை மனநல மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உட்படுத்த வேண்டும். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் வெள்ளத்துரைக்கு மனநல சிகிச்சை அளிக்கக்கோரி 21ந் தேதி ஐகோர்ட்டு கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேளும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல் அமைச்சருக்கு நன்றியும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! பல்வேறு இயக்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு!



சென்னை, பிப்ரவரி 19: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் 17/2/2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியில் பொதுமக்கள் மீது காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று 18/2/2014 மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் தலைமை தாங்கினார். பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் பாப்புலர் ஃப்ரண்ட் தினப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து கோஷம் எழுப்பபட்டது. பல்வேறு இயக்கத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: "TMMK.முஹைதீன் பிச்சை" அழைப்பு...





முத்துப்பேட்டை, பிப்ரவரி 19: இறைவனின் மிகப்பெரும் கிருபையினால் 23-02-2014 அன்று முத்துப்பேட்டை கொயா மஹாலில் எனது திருமணம் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் டாக்டர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.MBA.,Mphil.Phd., எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. 



தமுமுக மாநில தலைவரும், சமுதாய தலைவருமான மவ்லவி. ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி அவர்களும், ம.ம.க பொதுச்செயலாளர் அண்ணன் மு.தமிமுன் அன்சாரி.MBA., அவர்களும் வாழ்த்துரை வழங்குகிறார்கள். மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகளும் என பல்வேறு பகுதி நிர்வாகிகளும் பங்குகொள்ள இருக்கிறார்கள். 

வாய்ப்புள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு நபிவழியில் வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறேன்..

இப்படிக்கு 

இராமநாதபுரத்தில் நடந்தது என்ன.? வெளிவராத உண்மை சம்பவம்...



இராமநாதபுரம், பிப்ரவரி 19: முஸ்லிம்களின் இரத்தம் இந்திய நாட்டிற்கு மிக அவசிய தேவையாகி போனது. சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு, ஜனநாயக ரீதியில் முஸ்லிம்கள் வாழ்வதை இந்திய ஆளும் வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும், வந்தேறிகளான ஃபாஸிச ஆரிய வர்க்கமும் விரும்பவில்லை என்பது நன்றாக புலப்படுகிறது.
அடக்கி ஒடுக்கப்பட்டு, வஞ்சனைகளுக்கு உள்ளாகி, உரிமைகளையும், உடைமைகளையும், உயிர்களையும் இழந்து அகதிகள் நிலைக்கு தள்ளப்படும் ஒரு சமூகத்திற்குத்தான் அதன் வலியின் வேதனையும், வாழ்க்கையின் ரணங்களும் தெரியும். நிச்சயம் அது எதிர்வினையாற்ற அவர்களது வாழ்க்கைப் பாதையினை மாற்றி அமைத்து விடும் என்ற நியதி தெரியாத அறிவிலிகள் சட்டம் ஒழுங்கு என்ற போர்வையின் மாய தோற்றத்தில் வரம்புகளை மீறி சோதித்து பார்க்கின்றனர்.
நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ஆம் தேதியான திங்கள் கிழமை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் அனுசரிக்கப்பட்டது.
‘மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்’ என்ற முழக்கத்துடன் சீருடை அணிந்த செயல்வீரர்களின் ஒற்றுமை அணிவகுப்பு, மக்கள் பேரணி, பொதுக் கூட்டங்கள், சமூக சேவைகள் ஆகியன இத்தினத்தில் நடத்தபடுவது வழக்கம்.
தமிழகத்தின் இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட “ஒற்றுமை அணிவகுப்பு” (யூனிட்டி மார்ச்) மற்றும் பேரணியில் காவல்துறை அராஜகத்தை அரங்கேற்றியிருக்கிறது.
காவல்துறையிடம் முறையாக முன் அனுமதி பெற்று நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. ஆனால் அனுமதியளித்த நிகழ்ச்சிக்கு காவலர்களை ஆயுதங்களுடன் தயார் நிலையில் குவித்திருந்ததன் காரணம் ஒருவருக்கும் அப்போது புலப்படவில்லை. ஆனால் இன்று காக்கிகளின் போர்வையில் காவி கயமைத்தனம் உட்புகுந்திருப்பது நமக்கு தெளிவாகிவிட்டது.
சரியாக மாலை 4 மணி அளவில் ஒற்றுமை அணிவகுப்பு தொடங்க, அணிவகுப்பு வீரர்கள் மிடுக்கான நடையுடன் தங்களது பாதங்களை நகர்த்த ஆரம்பித்தனர். ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் காவல்துறை தாங்கள் திட்டமிட்டு வைத்திருந்த சதிவேலைகளை அரங்கேற்ற தொடங்கியது.

அணிவகுப்பு நடத்த அணுமதி இல்லை, நிறுத்த வேண்டும் என்ற கட்டளை அதிகார மமதையில் அநியாயம் செய்யும் காவிகளின் கட்டளை போல் இருந்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் தமக்கே உரிய கண்ணியத்துடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி இருப்பதை சுட்டிக்காட்ட விழைந்தனர். பேச்சுவார்த்தை என்ற சூழ்நிலையே அவசியம் இல்லை என்பது போல் திடீரென அங்கிருந்த மாடிகளின் மேல் இருந்து கற்கள் கூட்டத்தை நோக்கி வர ஆரம்பித்தன.
இந்தத் தருணத்திற்காக காத்திருந்தது போல் தயார் நிலையில் ஆவலுடன் ஆயுதம் தாங்கி காத்திருந்த மனிதத் தன்மையற்ற காவலர்கள் தாக்க ஆரம்பித்தனர். தங்களது முதல் அடியையே அங்கு நின்று கொண்டிருந்த மாநில மாவட்ட நிர்வாகிகளின் மேல் செலுத்தி, தங்கள் மிருகத் தாக்குதலைத் தொடுத்தனர்.
அதற்கு அடுத்தபடியாக, அவர்களுடன் இருந்த வழக்கறிஞர்கள், செய்தி ஊடகத் துறையை சேர்ந்தவர்கள் என முன்கூட்டியே முடிவு செய்திருந்தது போல் தொடர்ச்சியாக காவலர்கள் தங்கள் மிருகத் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
அடுத்த குறியாக, வெறி கொண்ட காவல்துறையின் ஒரு பிரிவு கூட்டத்திற்கு வந்திருந்த அப்பாவி பொதுமக்களின் மேல் பாய்ந்தது. அலறி அடித்து ஓடத் தொடங்கிய பொதுமக்களை விரட்டி விரட்டி அடித்து மண்டைகளை உடைத்து, மூச்சு, பேச்சு இல்லாத அளவிற்கு தரையில் விழுந்த நபர்களை தொடர்ச்சியாக தாக்கிய இவர்களது கேடுகெட்ட வீரத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
இந்தக் கலவர சூழலில் தங்களுக்கு இடப்பட்டிருந்த அணிவகுப்பு கட்டளைக்காக தங்களது பாதங்களை முன்னெடுத்து வைத்து நகர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் அணிவகுப்பு வீரர்களின் உறுதிக்கு முன்னால் காசுக்கும், காவிக்கும், பதவிக்கும் மாரடிக்கும் கயவர் கூட்டம் திகைத்துப் போனது.
முன்னேறிய கால்களையும், கம்பீரமாக வீசி நடந்த கைகளையும் முறிக்கும் அளவிற்கு தங்களது தடிகளை கொண்டு காவல்துறை வெறித் தாக்குதல் நடத்தியது.
ஆனால் வீங்கிய கால்களுடன், இரத்தம் சொட்டும் மண்டைகளுடன், தொடர்ச்சியாக இடியாய் விழும் தடியடிகளுக்கு மத்தியில் வீறு கொண்ட வேங்கைகளாய் தாங்கள் எடுத்த இலட்சிய வேட்கைக்காக, முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்திற்காக உறுதிகொண்ட நெஞ்சுரத்தோடு முன்னேறிக் கொண்டிருந்தனர் ஃபாஸிசத்திற்கு சாவுமணி அடிக்க வந்த பாப்புலர் ஃப்ரண்டின் அணிவகுப்பு வீரர்கள்.
அவர்களை பாதுகாப்பதற்காக தங்களது உயிரையும் கொடுப்போம் என்று உறுதிமொழி எடுத்தது போல் அங்கிருந்த பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் அணிவகுப்பு வீரர்களைச் சூழ்ந்து, தாங்கள் அடி வாங்கி காயங்களுடன் சரிந்த தருணத்தை காணும் எந்தக் கண்ணும் கண்ணீரை காணிக்கையாக்க மறுக்காது.
பெண்களையும், குழந்தைகளையும் தாக்க வேண்டும் என்று குறுமதி கொண்டு முன்னேறிய வெறி பிடித்த மிருகங்களிடமிருந்து அவர்களை பாதுகாக்க பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் தங்களது உடல்களை கேடயமாக்கி, தங்களது கரங்களுடன் கரம் கோர்த்து பாதுகாப்பு அரணை உருவாக்கி வாங்கிய அடிகளுக்கும், சிந்திய இரத்தத்திற்கும் சான்றுகளாய் மருத்துவமனைகளை நிரப்பியுள்ளனர்.
தங்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியையும் சமூகத்தின் கண்ணியத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தாங்கிக்கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் சகோதர்களைக் கண்டு தாய்மார்களும், சகோதரிகளும் கலங்கிய கண்களோடு, பதறிய நெஞ்சத்தோடு வல்ல அல்லாஹ்விடம் கையேந்திய அந்தக் காட்சி, எகிப்தில் நடக்கும் அநீதிக்கு எதிரான போராட்டதை நினைவு படுத்தத் தவறவில்லை.
இந்த நேரத்தில் உஹதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. உஹது போர்க்களம். எதிரிகள் முஸ்லிம்களை வெறி கொண்டு தாக்க ஆரம்பித்த தருணம். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்வதற்காக அம்புகளை அன்னாரை நோக்கி ஏவ ஆரம்பித்தனர். அவர்களை பாதுகாக்க 12 சஹாபாக்கள் சுற்றி நின்று பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றனர்.
அம்புகள் மின்னல் வேகத்தில் வர ஆரம்பித்தன. ரஸூல் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்து தூதரை நோக்கி வந்த அம்புகளை தனது கரங்களால் தடுக்க ஆரம்பித்தார் ஒரு மனிதர். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் வராலாற்றில் நீங்காமல் பதிவாகிப் போனது.
இதோ அந்த வார்த்தைகள்: “யாரசூலல்லாஹ்! என் கழுத்துக்கு பின்னால் உங்கள் கழுத்து இருக்கட்டும். என் நெஞ்சுக்கு பின்னால் உங்கள் நெஞ்சு இருக்கட்டும். அதையும் மீறி அம்புகள் வருமானால் அவை என்னையும், என் உடலையும், உயிரையும் துளைத்து கொண்டு உங்களை தொடட்டும்!”
தனது இரு கரங்களும் சிதைந்து, உடல் முழுக்க அம்புக் காயங்களுடன் நிலத்திலே சரிந்து இரத்த சாட்சியாக மாறிப் போன அந்த வீரத் தோழர் அபூ தல்ஹா (ரலி) அவர்களின் வாரிசுகள் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் நீருபித்து இருக்கிறார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (திருக்குர்ஆன் 61:8)
இது போன்ற அடக்குமுறைகளும், அநீதிகளும் உரிமைக்காக போராடும் போராளிகளின் வேகத்தையும், வீரத்தையும் அதிகப்படுத்துமே தவிர அடக்கி ஒடுக்க முடியாது என்பதை ஆளும் வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும், வந்தேறிகளான ஃபாஸிஸ்டுகளும் மறக்க வேண்டாம்.

இராமநாதபுரத்தில் PFI தின நிகழ்ச்சியில் காவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டிக்கிறோம் – தமிழக அரசே நடவடிக்கை எடு!


சென்னை, பிப்ரவரி 18: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கப்பட்ட தினமான பிப் 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட்டு வரும் அன்றைய தினத்தில் கொடியேற்றுதல், ஒற்றுமை பேரணி, நலத்திட்ட உதவிகள், பொதுகூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றது. இவ்வருடம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் 3 இடங்களிலும், கேரளாவில் 16 இடங்களிலும் அமைதியான முறையில் பேரணி மற்றும் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவ்வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா, ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளோடு ராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை எழுத்துப்பூர்வமாக அனுமதியும் வழங்கியிருந்தனர். இருப்பினும் பேரணி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டது. 
எழுத்துப்பூர்வமாக பேரணி மற்றும் பொதுகூட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின், பேரணி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மைதானத்தில் மக்கள் கூடும் வரை அனுமதித்து, பின்னர் தடை விதித்தது விநோதமானது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் கூர்ந்து கவனித்தே வந்தார்கள். காவல்துறை அனுமதி வழங்கிய பின்பும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னரே கலவர தடுப்பு படையினர், கண்ணீர் புகை குண்டு வாகனம் போன்ற ஏற்பாடுகளை காவல்துறையினர் தயார் செய்து வைத்தது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. இத்துனை ஏற்பாடுகளை செய்த பிறகே காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சிக்கு பொது மக்கள் மைதானத்தில் கூடிய பின்னர் தடை விதிக்கிறார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில நிர்வாகிகள் காவல்துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கும் சமயத்தில் சில விஷமிகள் காவல்துறையின் மீது கல்வீசினர். அவர்களில் இருவரை பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தும் இருந்தனர். இருப்பினும் பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியினை நடத்த விட கூடாது என்று முன்னரே திட்டமிட்டது போல் காவல்துறையினரின் நடவடிக்கைகள் இருந்தது. திடிரென்று காவல்துறை கூட்டத்தின் மீது தடியடி நிகழ்த்தினர். பொது மக்கள் செய்வதறியாது நின்ற சூழ்நிலையில் கண்ணீர் புகை வீசப்படுகிறது. ரப்பர் குண்டுகள் வீசப்படுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடியோ குழுமத்தையும் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்களது விலை உயர்ந்த வீடியோ காமிராக்கள் காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்டும் பிடுங்கிசெல்லப்பட்டும் உள்ளது. இந்த தாக்குதலில் பத்திரிகை நிருபர்களும் புகைப்பட கலைஞர்களும் தப்பவில்லை. இப்படியாக தேவையில்லாமல் ஒரு கலவர சூழல் காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டது. இதில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் வழக்குகளை நடத்தி வந்த வழக்கறிஞர்களை குறிவைத்து காவல்துறை தாக்குதல் நடத்தியது காவல்துறை முன்விரோதத்துடன் செயல்பட்டது தெளிவாகிறது. வழக்கறிஞர்கள் நஜ்முதீன், அலாவுதீன் மற்றும் சட்ட கல்லூரி மாணவரான முஹம்மது யூசுஃப் ஆகியோர் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர் நஜ்முதீன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருக்கிறார். காவல்துறையின் மொத்த நடவடிக்கையையும் பார்க்கும் போது காவல்துறை முன்னரே பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியில் பிரச்சனை ஏற்படுத்தி அத்துமீறலை நிகழ்த்த திட்டமிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நிகழ்ச்சியினை ரத்து செய்து கூடியிருந்த அனைவரையும் கலைந்து செல்ல கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கடந்த (2013)ம் வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் நிகழ்ச்சி திருச்சியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களை வர விடாமல் தடுக்க திருச்சி காவல்துறை கடும் கெடுபிடிகளை கொடுத்தது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாக சோதனை, முஸ்லிம் கல்லூரி மாணவர்களிடம் விசாரனை போன்ற தேவையில்லாத கெடுபிடிகள் கடந்த ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஜனநாயக அடிப்படையில் நடத்தவிருக்கும் ஒரு இயக்க நிகழ்ச்சிக்கு இவ்வளவு கெடுபிடிகளை கொடுப்பது தேவையற்றது. இந்நிலையில் திருச்சி மாவட்ட செயலாளர் ஸஃபியுல்லா நீதிமன்றத்தில் காவல்துறையின் கெடுபிடிகளை விசாரிக்க அளித்த மனு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரனைக்கு வந்தது. இந்த குரோதத்தை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியில் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை திட்டமிட்டு இந்த அத்துமீறலை நிகழ்த்தியுள்ளதாக தெரிகிறது. ஜனநாயக அடிப்படையில் நடத்தும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது தனி மனித சுதந்திரத்தை தடுக்கும் செயலே அன்றி வேறில்லை. இந்த சம்பவத்தில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் வரை பாப்புலர் ஃப்ரண்டின் நீதிக்கான போராட்டம் தொடரும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பாக ஒரு நேர்மையான நீதி விசாரனை நடத்தி இந்த கொலைவெறி தக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கிறது.
இப்படிக்கு
ஏ. எஸ். இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

நிக்காஹ்: "M. முஹம்மது யூனுஸ். MBA "








முத்துப்பேட்டை, பிப்ரவரி 18: மர்ஹூம் A.S. அபூபக்கர், மர்ஹும். M.M. முஹம்மது தம்பி மரைக்காயர் ஆகியோரது பேரனும்,  முஹம்மது முஹைதீன் அவர்களின் செல்வ புதல் வனுமாகிய M. முஹம்மது யூனுஸ். MBA மணாளருக்கும்,


மர்ஹும் சாகுல் ஹமீது, ஜனாப் MS, முஹம்மது அலியார் ஆகியோரின் பேத்தியும், LMS முஹம்மது முஹைதீன் ஆகியோரின் மகளுமாகிய M. ஹதீஜா BSC. மணாளிருக்கும்   

 ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டு ரபியுல் ஆஹீர் பிறை 15 அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 16-02-2014  ஞாயற்று    கிழமை அன்று முத்துப்பேட்டை கொய்யா மகாலில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து நண்பர்களும் மற்றும் உற்றார் உறவினர் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டு  வாழ்த்தினார்கள். மணமக்கள் எல்லாம் வளமும் பெற்று வளமோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக ஆமீன் ......


முத்துப்பேட்டையில் தேமுதிக கொடியேற்று விழா...

முத்துப்பேட்டை பிப்.14
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர தேமுதிக சார்பில் கட்சியின் கொடி அமைப்பு தினம் கொடியேற்றுவிழா நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது.

 ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் ஓவன்னா என்கிற ஹபிப்கான் தலைமை வகித்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார். 

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் பஷிர் அகமது, செந்தில், ஹமீது உஸ்மான,; நகரத்துணைச் செயலாளர்கள் நாகூர் பிச்சை, சுந்தர்ராஜன், சேகர், நகர அவைத்தலைவர் ஜயாஜூதீன,; நகர பொருள்ளார் முருகானந்தம,; நகர துணைத்தலைவர் துறை முருகேசன், இளைஞர் அணி நிர்வாகி பாரிவள்ளல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

யுவன்ஷங்கர் ராஜாவின் மனம் திறந்த பேட்டி!!

தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்:
அனுபமா சுப்ரமணியன்:    இஸ்லாத்துக்கு செல்வதென்ற முடிவு திடீரென்று ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?
யுவன் சங்கர்:    திடீரென்று எடுத்த முடிவாக இதனை நான் சொல்ல மாட்டேன். கடந்த ஒரு வருடமாக இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து இஸ்லாம் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டேன். இதன் பின் பல சிறந்த கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது.
இதற்கு முன் எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. பலமுறை இது எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல இயலாது. ஏதோ ஒரு இறை சக்தி என்னை ஆட்கொள்கிறது என்பதை மட்டும் விளங்கிக் கொண்டேன். ஆனால் அது என்னவென்று சரியாக விளங்காமல் இருந்தது.
அதன் பிறகு புனித குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த சந்தேகங்கள், கனவுகளுக்கான விடைகளை குர்ஆனில் நான் கண்டு கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்க முழு காரணமாக இருந்தது. இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றே நினைக்கிறேன்.
1621702_10201594694737487_1580670340_n
அனுபமா சுப்ரமணியன்:   ஒரு வதந்தி நிலவுகிறதே! டைரக்டர் அமீர் தான் உங்களின் மனமாற்றத்துக்கு காரணம் என்றும் அவர்தான் உங்களை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று   இஸ்லாத்துக்கு மாற்றியதாக ஒரு செய்தி உலவுகிறதே!
யுவன் சங்கர்:   (பலமாக சிரிக்கிறார்) நீங்கள் சொல்லும் அனைத்தும் தவறான தகவல்கள். என்னை யாரும் இஸ்லாத்தை ஏற்கச் சொல்லி வற்புறுத்தவில்லை. இது அவரவர்களின் மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.   உங்களின் உள் மனதில் இறை நம்பிக்கையில் ஏற்படும் சில மாற்றங்களே தற்போது என்னுள் நடந்துள்ளது.   இது தான் உண்மையும் கூட.
அனுபமா சுப்ரமணியம்:   உங்கள் தந்தை இந்து மத நம்பிக்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். உங்களின் இந்த மன மாற்றத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டார்?
யுவன் சங்கர்:   ஒரு மகனாக, எனது இந்த மன மாற்றத்தை முதலில் எனது அப்பாவிடம் தான் சொன்னேன். ஆம். சொன்னவுடன் அவர் முதலில் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு எனது முடிவை ஒத்துக் கொண்டு என்னையும் ஏற்றுக் கொண்டார். தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதையே அவர் விரும்பினார். எனது தங்கை பாவனாவிடமும், எனது அண்ணன் கார்த்திக்கிடமும் இதைப் பற்றி கூறினேன்.
அவர்கள் இருவரும் கூட என்னை நன்கு புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கும் எனது தந்தைக்குமிடையே இந்த மன மாற்றம் சம்பந்தமாக பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி சில காலமாக மீடியாவில் உலவுகிறது. அனைத்து செய்திகளும் தவறானவை.   நானும் எனது குடும்ப அங்கத்தினர்களும் எப்போதும் போலவே சந்தோஷமாக இருக்கிறோம்.
அனுபமா சுப்ரமணியம்:   ஏ ஆர் ரஹ்மானை நீங்கள் பின்பற்றுவதாக சிலர் கூறுகின்றனரே!
யுவன் சங்கர்:   அவரை நான் ஏன் பின்பற்ற வேண்டும்? என்னுள் ஏற்பட்ட சில மாற்றங்கள் இந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது. அவ்வளவுதான்.
அனுபமா சுப்ரமணியம்: நீங்கள் மூன்றாம் முறையாக ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும்,   அதுவும் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்திருப்பதாகவும் ஒரு செய்தி உலவுகிறதே?
யுவன் சங்கர்:   இந்த செய்தியை நானும் படித்தேன். இது பற்றி நான் தெளிவுபடுத்தி விடுகின்றேன். எனது நண்பர் கிருஷ்ணாவின் திருமணத்துக்காக கோவை சென்றிருந்த போது மீடியாக்களால் இந்த செய்தி பரப்பப்பட்டது. எனது இஸ்லாமிய நண்பரும் அவரது மனைவியும் நானும் அந்த போட்டோவில் ஒன்றாக இருப்பதை பார்த்து இந்த வதந்தி பரப்பப்பட்டது. உடனே சிலர் அந்த போட்டோவை பத்திரிக்கையில் போட்டு நான் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக பொய்களை பரப்பி வந்தனர்.   இதனை பலமுறை மறுத்தும் உள்ளேன்.    தற்போதும் அதே மறுப்பை பதிய செய்கிறேன்.
அனுபமா சுப்ரமணியம்:   ’யுவன் சங்கர் ராஜா’ என்ற உங்களின் இந்த பெயரும் மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா?
யுவன் சங்கர்:   இது பற்றிய செய்தியை விரைவிலேயே வெளியிடுவேன்.
அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்” என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17
ஆம்.   இதைத்தான் யுவன் சங்கர் ராஜாவும் ‘இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான்’ என்று அழகாக தனது பேட்டியில் சொல்லியுள்ளார். இந்த குர்ஆன் வசனத்தின்படி ஏ ஆர் ரஹ்மானோ, யுவன் சங்கர் ராஜாவோ, மைக்கேல் ஜாக்ஸனோ யார் இஸ்லாத்திற்குள் வந்தாலும் அதனால் இஸ்லாம் எந்த வகையிலும் நன்மையை அடையப் போவதில்லை. மாறாக மாறிய அந்த நபர்கள் சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொள்கிறார்கள்.
வாளால் இஸ்லாம் உலகமெங்கும் பரப்பப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் பிடித்துக் கொண்டு ‘எது வேண்டும?’ என்று ஒளரங்கஜேப் கேட்டதாக நமது வரலாற்று புத்தகங்களில் ஏகத்துக்கும் கதை அளந்திருப்பார்கள். அந்த கதைகள் அனைத்தும் கற்பனைகளே என்பதற்கு இந்த பேட்டி மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.
ஹூஸைனீ எனும் அன்ஸாரீ ஒருவருக்கு கிறிஸ்தவர்களான இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் இஸ்லாத்தைத் தழுவும்படி அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் தொடர்ந்தும் இருக்கப் போவதாக பிடிவாதமாக இருந்தனர். எனவே, அவ்விருவரையும் இஸ்லாத்தைத் தழுவ நிர்ப்பந்திக் கட்டுமா என நபி அவர்களிடம் அவர் வினவியபோது நபியவர்கள் அவரைத் தடுத்தார்கள். அப்போது இந்த வசனம் இறக்கப்பட்டது.
“மார்க்கத்தில் பலவந்தமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழியானது தெளிவாகிவிட்டது”
குர்ஆன்: (2:256)
எனவே எவரையும் அவரின் வறுமையையும், சிரமத்தையும், இயலாமையையும் காரணமாக்கி அதன் மூலம் வலுக்கட்டாயமாக எவரையும் இஸ்லாத்தில் இணைக்க முற்படுவது குர்ஆனின் கட்டளைக்கே மாற்றமானது என்பதை விளங்குகிறோம்.

மௌத்து அறிவிப்பு " நிஜாமுதின் "

பிப்ரவரி 16: கீழ நம்மங்குறிச்சி L. துல்கர்னைன் அவர்களின் மகனும், சித்தீக் அவர்களின் தம்பியும், ஆசாத்நகர் N. முத்துமரைக்காயர் அவர்களின் மருமகனுமான “T. நிஜாமுதீன்” அவர்கள் 14.02.2014 மாலை 4.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா நேற்று (15-02-2014) இரவு 8.30 மணியளவில் ஆசாத்நகர் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்.
L. துல்கர்னைன்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நடிகர் டி ராஜேந்தர் சிம்பு குடும்பத்தினர் !!

யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறியதுதான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் நியூஸ்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பரபரப்பு செய்தி கிளம்பியுள்ளது. சிம்பு உட்பட டி.ராஜேந்தரின் குடும்பமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளதாம். சிம்பு, குறளரசன், இலக்கியா ஆகியோருக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மதம் மாறிவிட்டார்களாம். இதனால்தான் டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவில் கூட சிலுவைக் குறியீடு இடம்பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 10ம் தேதி டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவிற்கு திருமணம் நடைபெற்றது நினைவிருக்கலாம். இந்த திருமணத்தின் போதுதான் டி.ஆர். குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது அம்பலத்துக்கு வந்துவிட்டது. முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இலக்கியாவின் திருமணம் நடந்தது. டி.ராஜேந்தர் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி சில வருடங்களாகிவிட்டதாம். இருந்தும், அதனை வெளிக்காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அது அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியதற்கு ஆதரது தெரிவித்து சிம்பு டுவிட் செய்திருந்தார். நண்பன் என்ற முறையில் யுவனுக்கு ஆதரவாக டுவிட் செய்திருப்பார் என்று அனைவரும் எண்ணி இருந்தனர். ஆனால் இப்போதுதான் அதற்கான காரணம் என்ன என்று பலருக்கு தெரியவந்திருக்கும்.

இளையராஜாவை தொட விரும்பாத ஜெயேந்திரர் ! யுவன்ஷங்கர் ராஜாவை தொட விரும்பும் இஸ்லாமியர்கள் !!

2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர். நால்வருக்கு விருது வழங்கினார் அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந் திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார். இதை விட ஒரு மனிதனை யாரும் அசிங்க படுத்தமுடியாது , இவர்களுக்கு இந்த உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கியது யார் ?
1412528

தன்னுடைய கையே இளையராஜா மீது படகூடாது என்று மேடையில் அசிங்க படுத்தி அனுப்பியதை மறந்து விட்டு இளையராஜாவின் மகன் மதம் மாறியதை பற்றி கருத்து பேசுவதற்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை இந்த பார்பனர்களுக்கு என்பதை மறந்து விட்டு அவாள்களின் பத்திரிக்கையான தினமலம் தினவாந்தி மற்றும் சில அவர்களின் அடிமை பத்திரிகைகளில் அவர்களின் அருவருக்க தக்க கருத்துகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்
தன்னுடைய சொந்த மதத்திலேயே அவன் எவ்வளவு பெயர் புகழ் இருந்தும் அவாள்களுக்கு மத்தியில் ஏன் தீண்ட தகாதவனாக இருக்கிறார்கள் .ஹிந்து சகோதர்கள் இந்த தருணத்தில் சற்று சிந்திக்க வேண்டும் . இந்தியாவில் ஹிந்து மதம் எப்படி வந்தது என்று ஆராயுங்கள் .தமிழகத்தில் ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்றே இருந்தந்தை நாம் நினைவு கூற வேண்டும் . இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் இஸ்லாமியர்கள் யாரும் அயல் நாட்டில் இருந்து குதித்து விடவில்லை எல்லாம் இவர்களின் வர்ணாசிரமம் கொள்கைக்கு எதிராக மனம் மாறியவர்கள்
ஒன்றே பாரத2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர். நால்வருக்கு விருது வழங்கினார் அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந் திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார். இதை விட ஒரு மனிதனை யாரும் அசிங்க படுத்தமுடியாது , இவர்களுக்கு இந்த உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கியது யார் ?

தன்னுடைய கையே இளையராஜா மீது படகூடாது என்று மேடையில் அசிங்க படுத்தி அனுப்பியதை மறந்து விட்டு இளையராஜாவின் மகன் மதம் மாறியதை பற்றி கருத்து பேசுவதற்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை இந்த பார்பனர்களுக்கு என்பதை மறந்து விட்டு அவாள்களின் பத்திரிக்கையான தினமலம் தினவாந்தி மற்றும் சில அவர்களின் அடிமை பத்திரிகைகளில் அவர்களின் அருவருக்க தக்க கருத்துகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்

தன்னுடைய சொந்த மதத்திலேயே அவன் எவ்வளவு பெயர் புகழ் இருந்தும் அவாள்களுக்கு மத்தியில் ஏன் தீண்ட தகாதவனாக இருக்கிறார்கள் .ஹிந்து சகோதர்கள் இந்த தருணத்தில் சற்று சிந்திக்க வேண்டும் . இந்தியாவில் ஹிந்து மதம் எப்படி வந்தது என்று ஆராயுங்கள் .தமிழகத்தில் ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்றே இருந்தந்தை நாம் நினைவு கூற வேண்டும் . இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் இஸ்லாமியர்கள் யாரும் அயல் நாட்டில் இருந்து குதித்து விடவில்லை எல்லாம் இவர்களின் வர்ணாசிரமம் கொள்கைக்கு எதிராக மனம் மாறியவர்கள்

ஒன்றே பாரதம் வென்றே தீருவோம் என்று கொக்கரிக்கும் அறிவாளிகளுக்கு ஒரு சிறிய கேள்வி ? ஏன் நீங்கள் மற்ற சாதிகளுடன் பெண் எடுப்பது மற்றும் கொடுப்பது இல்லை .எல்லாம் ஹிந்துகள் தானே இதை செய்ய தயங்குவது ஏன் ? இது நடைபெறாதவரை ஹிந்து மதத்தில் இருந்து கிறுத்துவனாகவோ இஸ்லாமியனாகவோ பவுத்தனாகவோ மதம் மாறுவதை யாராலும் தடுக்க முடியாது .மனம் மாறுவது ஒருவனுடைய தனிப்பட்ட விருப்பம் அதை விமர்சனம் செய்ய எந்த கொண்டைக்கும் உரிமை இல்லை

ஒரு கிருத்துவர் நினைத்தால் ஹிந்துவாகவோ முஸ்லிமாகவோ அல்லது ஒரு முஸ்லிம் நினைத்தால் கிறுத்துவனாகவோ ஹிந்துவாகவோ அல்லது நாத்திகராகவோ ஆகா முடிகிறது ஆனால்
ஒரு ஹிந்து சகோதரர் நினைத்தால் தன்னுடைய தாய் மதம் என்று சொல்லப்படும் ஹிந்து மதமாக மாறமுடியுமா ? அதாவது ஒரு தலித்தோ அல்லது மற்ற சாதியே சார்ந்தவர்கள் பிராமணராக மாற முடியுமா ? ஏன் முடியவில்லை ? இப்படி சிந்தித்தவர்கள் தான் நிறைய மனம் மாறியவர்கள் இந்தியாவில் .

யாரும் இங்கே அயல் நாட்டில் வந்து குதித்துவிட வில்லை இனியும் யாரும் புதியதாக இந்தியாவில் குதிக்க போவதும் இல்லை . என்பதை ஹிந்துத்துவா சிந்தனையாளர்கள் மனதில் ஆணி தரமாய் எழுதி வைத்து கொள்ளுங்கள் . இஸ்லாமியர்களில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் எங்களில் தீண்ட தகாதவர்கள் என்று யாருமே இல்லை இறுதியாக தலைப்பை வைத்தே பதிவை முடித்து கொள்கிறேன் இளையராஜாவை தொட விரும்பாத ஜெயேந்திரர் .யுவன் சங்கர் ராஜாவை தொட விரும்பும் இஸ்லாமியர்கள் இது தான் உங்களுக்கும் எங்களுக்கு உள்ள வித்தியாசம் . மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்ம் வென்றே தீருவோம் என்று கொக்கரிக்கும் அறிவாளிகளுக்கு ஒரு சிறிய கேள்வி ? ஏன் நீங்கள் மற்ற சாதிகளுடன் பெண் எடுப்பது மற்றும் கொடுப்பது இல்லை .எல்லாம் ஹிந்துகள் தானே இதை செய்ய தயங்குவது ஏன் ? இது நடைபெறாதவரை ஹிந்து மதத்தில் இருந்து கிறுத்துவனாகவோ இஸ்லாமியனாகவோ பவுத்தனாகவோ மதம் மாறுவதை யாராலும் தடுக்க முடியாது .மனம் மாறுவது ஒருவனுடைய தனிப்பட்ட விருப்பம் அதை விமர்சனம் செய்ய எந்த கொண்டைக்கும் உரிமை இல்லை
ஒரு கிருத்துவர் நினைத்தால் ஹிந்துவாகவோ முஸ்லிமாகவோ அல்லது ஒரு முஸ்லிம் நினைத்தால் கிறுத்துவனாகவோ ஹிந்துவாகவோ அல்லது நாத்திகராகவோ ஆகா முடிகிறது ஆனால்
ஒரு ஹிந்து சகோதரர் நினைத்தால் தன்னுடைய தாய் மதம் என்று சொல்லப்படும் ஹிந்து மதமாக மாறமுடியுமா ? அதாவது ஒரு தலித்தோ அல்லது மற்ற சாதியே சார்ந்தவர்கள் பிராமணராக மாற முடியுமா ? ஏன் முடியவில்லை ? இப்படி சிந்தித்தவர்கள் தான் நிறைய மனம் மாறியவர்கள் இந்தியாவில் .
யாரும் இங்கே அயல் நாட்டில் வந்து குதித்துவிட வில்லை இனியும் யாரும் புதியதாக இந்தியாவில் குதிக்க போவதும் இல்லை . என்பதை ஹிந்துத்துவா சிந்தனையாளர்கள் மனதில் ஆணி தரமாய் எழுதி வைத்து கொள்ளுங்கள் . இஸ்லாமியர்களில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் எங்களில் தீண்ட தகாதவர்கள் என்று யாருமே இல்லை இறுதியாக தலைப்பை வைத்தே பதிவை முடித்து கொள்கிறேன் இளையராஜாவை தொட விரும்பாத ஜெயேந்திரர் .யுவன் சங்கர் ராஜாவை தொட விரும்பும் இஸ்லாமியர்கள் இது தான் உங்களுக்கும் எங்களுக்கு உள்ள வித்தியாசம் . மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)