முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கடாபியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யமாட்டோம்: புரட்சியாளர்கள் அறிவிப்பு


திரிபோலி,அக்டோபர் 23 : லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற சந்தேகம் வலுத்திருக்கும் வேளையில் அவரது உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யமாட்டோம் என புரட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.கடாபியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு தேவை இல்லை என மிஸ்ருத்தா ராணுவ கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஃபாதி அல் பஸாகா எ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதர ராணுவ கமாண்டர்கள் இதனை தெரிவித்துள்ளனர். கத்தாஃபியின் மரணம் தொடர்பாக விசாரணை தேவை என ஐ.நாவும், அவரது குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ள சூழலில் போஸ்ட் மார்ட்டம் நடத்தப்படும் என செய்தி வெளியாகியிருந்தது.அதேவேளையில் கத்தாஃபியின் உடலை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. மிஸ்ருத்தாவில் ஒரு இறைச்சிக் கடையில் உள்ள ப்ரீசரில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறந்த உடலை பார்ப்பதற்காக ஏராளமானோர் வருகை தருகின்றனர். ஸிர்த்தில் கொல்லப்பட்ட கத்தாஃபியின் மகன் முஃதஸிமின் உடலும் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது உடலை அடக்கம் செய்வது குறித்து விவாதிக்க திரிபோலியில் புரட்சியாளர்களின் ராணுவ கமாண்டர் அப்துல் ஹகீம் பெல்ஹாஜ் மிஸ்ருத்தாவிற்கு வருகிறார்.கத்தாஃபியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என புரட்சியாளர்கள் குழு தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் பெங்காசியில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் அவர். மேலும் சில தினங்கள் கத்தாஃபியின் உடல் பாதுகாக்கப்படும் என எண்ணெய்வள அமைச்சர் அலி தர்ஹூனி தெரிவித்துள்ளார். கத்தாஃபியின் பிறந்த நாடான ஸிர்த்திலோ அல்லது மிஸ்ருத்தாவிலோ அவரது உடல் அடக்கம் செய்யப்படும். அடக்கஸ்தலம் புண்ணியஸ்தலமாக மாறும் வாய்ப்பு இருப்பதால் கடலில் உடலை அடக்கம் செய்யவும் ஆலோசித்து வருகின்றனர். இல்லையெனில் ரகசியமாக அவரது உடல் அடக்கம் செய்யப்படும். கத்தாஃபியின் ரகசிய புலனாய்வு அதிகாரி அப்துல்லா அல் ஸனூஸி வடக்கு நைஜீரியாவிற்கு சென்றுள்ளதாக செய்தி கூறுகிறது.நேற்று நடப்பதாக அறிவித்திருந்த சுதந்திர பிரகடனம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெங்காசியில் நிகழ்ச்சி நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஜூனில் தேர்தல் நடத்துவதாக திட்டமிட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் மஹ்மூத் ஜிப்ரீல் ஜோர்டானில் தெரிவித்தார். புதிய அரசியல் சட்டத்தை தயார் செய்தல், அதன் மீது மக்கள் விருப்பவாக்கெடுப்பு நடத்துதல், அரசை உருவாக்குதல் ஆகிய பணிகள் தங்களின் முன்னால் உள்ள முக்கிய பணிகள் என அவர் தெரிவித்தார். இம்மாதம் 31-ஆம் தேதி லிபியாவில் பணியை நிறுத்துவோம் என நேட்டோ அறிவித்துள்ளது.அதேவேளையில் 20 ஆயிரம் கோடி டாலர் சொத்து கத்தாஃபிக்கு பல்வேறு நாடுகளில் இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் வெளியிட்ட புள்ளிவிபரத்தைவிட கத்தாஃபியின் சொத்து இரண்டு மடங்காகும். இதில் பணம், தங்கம், நிலம் ஆகியன அடங்கும்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டை: MP, MLA ,தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நாளை தொடக்கம் :


முத்துப்பேட்டை,அக்டோபர் 23 : திருவாரூர் மாவட்டம் முழுவதும் MP /MLA தேர்தலுக்கான வாக்களர் பட்டியல் திருத்தப்பணி நாளை தொடங்க உள்ளது. எனவே 01 .01 .2012 ஆம் தேதியன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் (31 .12 .1993 மற்றும் அதற்கு முன்பு பிறந்தவர்கள்) அனைவரும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட 24 .10 .2011 முதல் 08 .11 .2011 வரை (30 .10 .2011 மற்றும் 06 .11 .2011 Sunday உட்பட) குடியிருக்கும் பகுதிக்கு தொடர்புடைய வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி நியமன அலுவலரிடம் (DESIGNATED OFFICER ) சென்று வாக்களர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான விண்ணப்பங்கள் பெற்று அவற்றை ஆதாரங்களுடன் இணைத்து முழுமையாக பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நியமன அலுவலரிடம் அளித்து வாக்காளர் பட்டியலில் சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அறிவிப்பு
மாவட்ட ஆட்சித் தலைவர்
திருவாரூர்

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)