முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள்.. அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள்.. இன்றைக்கு மாணவர்கள் படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது.


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டை பேரூர் தி.மு.க சார்பில் கலைஞரின் பூரண மதுவிலக்கு அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் நீதி கேட்கும் பேரணி விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. முத்துப்பேட்டையில் தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேச்சு.. இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட துணைச்செயலாளரும், நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்று பேசினார். இதில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேசினார் அப்பொழுது அவர் பேசுகையில்: 

தி.மு.க ஆட்சியில் தமிழக முழுவதும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது, பெரிய முதலிட்டார்கள் கொண்டு வரப்பட்டது, அதேபோல் தளபதி தமிழகத்தில் 80ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்து சேர்ப்பேன் என்றார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டில் 62 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு சேர்த்தார். இன்றைக்கு இப்பகுதி ஏழை விவசாயி பெண் கூட சென்னையில் 1.75 லட்சம் சம்பளம் வாங்கிறது என்றால் அது தி.மு.க ஆட்சியால் மட்டும் தான் முடியும். கலைஞர் ஆட்சியில் தெருவுக்கு தெரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. ஆனால் அம்மா ஆட்சில தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை திறந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழக முழுவதும் 7312 டாஸ்மாக் பாரையும் திறந்து இருக்கிறார், கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள் அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள், இன்றைக்கு மாணவர்கள் பெற்றோரை பார்த்து படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது. அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த மட்டும் போக முடியல ஆனால் மோடியை வரவேற்க ஏர்ப்போர்டில் கால் கடுக்க நிற்கிறார். 

இன்று தமிழகத்தில் அண்ணா திமுக ஆட்சி நடைபெறவில்லை அடிமை திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது, 127 நாட்களாக சட்டமன்றம் பூட்டி கிடக்கிறது கேவலமாக உள்ளது என்று இவ்வாறு பேசினார். 


கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை.வே.மன்னர்மன்னன், மாவட்ட துணைச்செயலாளர் கலைவாணிமோகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட மாணவர் அணி நிர்வாகி ஜாம்பை.ராமஜெயம், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் முத்துராமலிங்கம்.

 முன்னால் அவைத்தலைவர்கள் சேக்தாவூது, வீரையன், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், கோவிந்தராஜன், அகமது இபுராஹிம், மகாராஜா தமீம், ஒன்றி பொருளாளர் கோவிலூர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், முத்து லட்சுமிசிவா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, ஜாம்பைகல்யாணம், சித்தமல்லி அண்ணாத்துரை, பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவஅய்யப்பன், ஜகபருல்லா, ஜெய்புநிஷா பகுருதீன், ரெத்தினகுமார், கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆடலரசன், ரவிக்குமார், நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் செல்வம், அன்பன் மற்றும் பெருகவாழ்ந்தான் இளங்கோவன் உப்பட்ட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் நகர துணைச்செயலாளர் சியா நவாஸ்கான் நன்றி கூறினார்.

Reported By 

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

முத்துப்பேட்டையில் SDPI கட்சி மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி கொடி ஏற்றினார்.


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடி ஏற்று விழா பேரூராட்சி அலுவலகம் அருகில் கடந்த 03.08.2015 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சேக் முகைதீன் தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்துக் கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். 

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், மண்டல தலைவர் நாகை தாஜ், மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட பொதுச் செயலாளர் நெய்னா முகம்மது, பாப்புலர் பிரண்ட் அமைப்பு தஞ்சை மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் நகர செயலாளர் அப்துல் மாலிக் நன்றி கூறினார்.

முத்துப்பேட்டையில் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் நேற்று (04.08.2015) அன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீஸார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், நிர்வாகி கண்ணதாசன், மற்றும் தில்லைவிளாகம் செந்தில், துரைத்தோபபு இலவரசன், பெருகவாழ்ந்தான் சிவம்பரசன், ஆரியலூர் டெஸ்சி மற்றும் வினோத் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்திருந்தனர். 

இந்த நிலையில் நேற்று வேரொரு வழக்கிற்காக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த பெரியநாயகம், முருகேஷ்;, ரவி ஆகிய 3 பேரை இந்த வழங்கில் சேர்க்கப்பட்டு கைது வைத்திருந்தனர். நேரம் ஆனதும் திடீரென்று போலீசார் அவர்கள் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருத்துறைப்பூண்டி கோர்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Reporter By   
முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication  

முத்துப்பேட்டை பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ம.ம.க சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.


முத்துப்பேட்டை, பிப்ரவரி 25/2015: முத்துப்பேட்டை பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ம.ம.க சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.MLA.,அவர்களின் கேள்விக்கு மாண்புமிகு முதல் அமைச்சர் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.....
ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நடைபெற்ற சம்பவம் குறித்து இன்று (20.2.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆற்றிய உரையில்,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்த 31.12.2014 அன்று இரவு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தின்போது இந்துக்கள் சிலர், ஷேக் தாவூத் தர்கா வழியாகச் சென்றபோது, கோஷங்களை எழுப்பியதால் அங்கிருந்த முஸ்லீம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, அப்பகுதியில் இருந்த தெரு விளக்குகள் சேதப்படுத்தப்பட்டன.
இதன் பின்னர் சில அடையாளம் தெரியாத நபர்களால் அங்குள்ள மற்றொரு தர்காவின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டது. காவல் துறையினர், உடனடியாகத் தலையிட்டு இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொண்டு, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக, முஸ்லீம் தரப்பினர் அளித்த புகார்களின் பேரில், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வீரமூர்த்தி உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவங்களையடுத்து,
01.01.2015 அன்று சில அடையாளம் தெரியாத நபர்கள் பாலமுருகன் என்பவரது பணிமனையில் இருந்த மூன்று கார்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தியது தொடர்பாக, அவரது புகாரின் பேரில், மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வருகின்றன என்று கூறினார்.
தகவல் நன்றி – பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

2016 தமிழக சட்டமன்ற தேர்தலும், முஸ்லிம் அமைப்புகளின் நிலமைகளும் ஓர் பார்வை...!!!


தமிழகம், டிசம்பர் 16: தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் 20க்கு மேற்பட்டவைகள் உள்ளன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலாவதாக தோன்றியது பின்னர் தேசிய லீக், தமுமுக, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, இப்படி என பல அமைப்புகள் உருவாயின. இத்தனை அமைப்புகளும்  செயல்பாடுகளில் மட்டும் தான் மாறியிருக்கின்றனர். சமுதாய பணிகளில் அவரவர் தங்களால் ஆன பணிகளை தொடர்ந்து சமுதாயத்திற்கு ஆற்றி வருகின்றனர். சமுதாய பிரச்சனைகளில் ஒன்றிணைந்து தங்களின் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

பொதுவாக தேர்தல் நேரங்களில் சமுதாய அமைப்புகள் திமுக அதிமுக என இரு அணிகளிலும் கலந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருவது வழக்கம் . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணியை பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் ஆதரித்தனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு ஏமாற்றம் தந்தது.

2016 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் வெற்றி பெறவும் அதற்கான வியூகங்கல் அமைக்கும் முறையை தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் துவங்கியுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் சமுதாய அமைப்புகள் எத்தகைய நிலையை மேற்கொள்ள போகிறார்கள் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனித நேய மக்கள் கட்சி எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளின் நிலை என்ன என்பது ஒரு கேள்விக்குறி ஒன்றிணைந்து ஒரு அணியை  தேர்ந்தெடுத்து கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறார்களா? அல்லது தேர்தல் நேரத்தில் உருவாகும் அணிகளில் பிரிந்து கூட்டணி அமைக்க போகிறார்களா? என்பது பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. சமுதாய மக்களின் எதிர்பார்ப்பு அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட தொகுதிகளை பெற்று தொகுதிகளை பங்கீட்டு கொண்டு போட்டியிட்டால் நலமுடையது என கருதுகிறோம்.இப்போதே முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளை கணக்கெடுத்து நமக்குள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறி ஓரணியாக உருவானால் நமக்கான பிரதிநித்துவத்தை அதிகம் பெற வாய்ப்பாக அமையும்.

தேர்தலில் போட்டியிடாத அமைப்பான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏனைய முஸ்லிம் அமைப்புகள் போட்டியிடும் தொகுதிகளில் இவர்களுக்கு தங்களின் முழு ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்பது என்னைப்போன்ற பல இளைஞர்களின் அவாவாக உள்ளது.

அமைதிப்பூங்காவான தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எல்லோரும் கூறிவருகின்றனர். மதக்கலவரங்களை தூண்டிவிடுவோரும் அத்தகைய கருத்துக்களை கூரிவருன்றனர். சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் அரவணைப்பையும் விரும்புகிற முஸ்லிம் சமுதாயம் தேர்தல் காலத்திலாவது ஒன்றிணைந்து நமக்கான பிரதிநித்துவத்தையும் நமக்கான உரிமைகளையும் பெற ஒன்றாய் களம் காண்போம் உயர்ந்து பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹம்மது இல்யாஸ். 
MBA, MA. (Journalism & Mass Communication)
Full Rights Received.. 

அ.இ.ஆ.தி.மு.க. சார்பில் முத்துப்பேட்டை நகருக்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் நடிகர்...





முத்துப்பேட்டை, ஏப்ரல் 13: முத்துப்பேட்டையில் இன்று சரியாக 8 மணியளவில் அ.இ.ஆ.தி.மு.க. சார்பில் முத்துப்பேட்டை நகருக்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் நடிகர் ஆனந்தராஜ் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இதில் பேரூராட்சி தலைவர் கோ.அருணாச்சலம், மற்றும் முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் RKP நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். இதானால் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தாமதமானது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நமது நிருபர் 

AKL. அப்துல் ரஹ்மான்


முத்துப்பேட்டையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் AKS .விஜயன் --பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !!

முத்துப்பேட்டையில் முக்கிய பிரமுகர்களை நாகை நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் ஏ.கே.எஸ் விஜயன் சந்தித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் சென்ற விஜயன் அங்கு நகர தலைவர் நைனா முகம்மது, நகர செயலாளர் வக்கில் தீன்முகம்மது, தமுமுக ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக், நகர செயலாளர் பைசல், நகர பொருளாளர் தாவூதுஷா, முன்னால் தலைவாகள்; துவான் அப்துல் ரஹ்மான், தாவூது மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். 



பின்னர் ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிக்கு சென்று தொழுகை முடிந்து வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் பிரிலியண்ட் பள்ளிக்கு சென்று முதல்வர் முகம்மது யாகூபை சந்தித்தார், முஸ்லிம் லிக் அலுவலகம் சென்று மாவட்ட செயலாளர் முகைதீன் அடுமை, நிர்வாகி முகம்மது அலி, கவுன்சிலர் தம்பி மறைக்காயர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அப்பொழுது தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் நகர துணைச் செயலாளர் நவாஸ் கான்,மாவட்ட பிரதிநிதிகள் இபுராஹிம், மகாராஜா தமீம், நிர்வாகிகள் செல்வம், பாலு ஆகியோர் உடன் இருந்தனர். 

காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! பல்வேறு இயக்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு!



சென்னை, பிப்ரவரி 19: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் 17/2/2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியில் பொதுமக்கள் மீது காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று 18/2/2014 மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் தலைமை தாங்கினார். பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் பாப்புலர் ஃப்ரண்ட் தினப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து கோஷம் எழுப்பபட்டது. பல்வேறு இயக்கத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இராமநாதபுரத்தில் நடந்தது என்ன.? வெளிவராத உண்மை சம்பவம்...



இராமநாதபுரம், பிப்ரவரி 19: முஸ்லிம்களின் இரத்தம் இந்திய நாட்டிற்கு மிக அவசிய தேவையாகி போனது. சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு, ஜனநாயக ரீதியில் முஸ்லிம்கள் வாழ்வதை இந்திய ஆளும் வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும், வந்தேறிகளான ஃபாஸிச ஆரிய வர்க்கமும் விரும்பவில்லை என்பது நன்றாக புலப்படுகிறது.
அடக்கி ஒடுக்கப்பட்டு, வஞ்சனைகளுக்கு உள்ளாகி, உரிமைகளையும், உடைமைகளையும், உயிர்களையும் இழந்து அகதிகள் நிலைக்கு தள்ளப்படும் ஒரு சமூகத்திற்குத்தான் அதன் வலியின் வேதனையும், வாழ்க்கையின் ரணங்களும் தெரியும். நிச்சயம் அது எதிர்வினையாற்ற அவர்களது வாழ்க்கைப் பாதையினை மாற்றி அமைத்து விடும் என்ற நியதி தெரியாத அறிவிலிகள் சட்டம் ஒழுங்கு என்ற போர்வையின் மாய தோற்றத்தில் வரம்புகளை மீறி சோதித்து பார்க்கின்றனர்.
நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ஆம் தேதியான திங்கள் கிழமை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் அனுசரிக்கப்பட்டது.
‘மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்’ என்ற முழக்கத்துடன் சீருடை அணிந்த செயல்வீரர்களின் ஒற்றுமை அணிவகுப்பு, மக்கள் பேரணி, பொதுக் கூட்டங்கள், சமூக சேவைகள் ஆகியன இத்தினத்தில் நடத்தபடுவது வழக்கம்.
தமிழகத்தின் இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட “ஒற்றுமை அணிவகுப்பு” (யூனிட்டி மார்ச்) மற்றும் பேரணியில் காவல்துறை அராஜகத்தை அரங்கேற்றியிருக்கிறது.
காவல்துறையிடம் முறையாக முன் அனுமதி பெற்று நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. ஆனால் அனுமதியளித்த நிகழ்ச்சிக்கு காவலர்களை ஆயுதங்களுடன் தயார் நிலையில் குவித்திருந்ததன் காரணம் ஒருவருக்கும் அப்போது புலப்படவில்லை. ஆனால் இன்று காக்கிகளின் போர்வையில் காவி கயமைத்தனம் உட்புகுந்திருப்பது நமக்கு தெளிவாகிவிட்டது.
சரியாக மாலை 4 மணி அளவில் ஒற்றுமை அணிவகுப்பு தொடங்க, அணிவகுப்பு வீரர்கள் மிடுக்கான நடையுடன் தங்களது பாதங்களை நகர்த்த ஆரம்பித்தனர். ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் காவல்துறை தாங்கள் திட்டமிட்டு வைத்திருந்த சதிவேலைகளை அரங்கேற்ற தொடங்கியது.

அணிவகுப்பு நடத்த அணுமதி இல்லை, நிறுத்த வேண்டும் என்ற கட்டளை அதிகார மமதையில் அநியாயம் செய்யும் காவிகளின் கட்டளை போல் இருந்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் தமக்கே உரிய கண்ணியத்துடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி இருப்பதை சுட்டிக்காட்ட விழைந்தனர். பேச்சுவார்த்தை என்ற சூழ்நிலையே அவசியம் இல்லை என்பது போல் திடீரென அங்கிருந்த மாடிகளின் மேல் இருந்து கற்கள் கூட்டத்தை நோக்கி வர ஆரம்பித்தன.
இந்தத் தருணத்திற்காக காத்திருந்தது போல் தயார் நிலையில் ஆவலுடன் ஆயுதம் தாங்கி காத்திருந்த மனிதத் தன்மையற்ற காவலர்கள் தாக்க ஆரம்பித்தனர். தங்களது முதல் அடியையே அங்கு நின்று கொண்டிருந்த மாநில மாவட்ட நிர்வாகிகளின் மேல் செலுத்தி, தங்கள் மிருகத் தாக்குதலைத் தொடுத்தனர்.
அதற்கு அடுத்தபடியாக, அவர்களுடன் இருந்த வழக்கறிஞர்கள், செய்தி ஊடகத் துறையை சேர்ந்தவர்கள் என முன்கூட்டியே முடிவு செய்திருந்தது போல் தொடர்ச்சியாக காவலர்கள் தங்கள் மிருகத் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
அடுத்த குறியாக, வெறி கொண்ட காவல்துறையின் ஒரு பிரிவு கூட்டத்திற்கு வந்திருந்த அப்பாவி பொதுமக்களின் மேல் பாய்ந்தது. அலறி அடித்து ஓடத் தொடங்கிய பொதுமக்களை விரட்டி விரட்டி அடித்து மண்டைகளை உடைத்து, மூச்சு, பேச்சு இல்லாத அளவிற்கு தரையில் விழுந்த நபர்களை தொடர்ச்சியாக தாக்கிய இவர்களது கேடுகெட்ட வீரத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
இந்தக் கலவர சூழலில் தங்களுக்கு இடப்பட்டிருந்த அணிவகுப்பு கட்டளைக்காக தங்களது பாதங்களை முன்னெடுத்து வைத்து நகர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் அணிவகுப்பு வீரர்களின் உறுதிக்கு முன்னால் காசுக்கும், காவிக்கும், பதவிக்கும் மாரடிக்கும் கயவர் கூட்டம் திகைத்துப் போனது.
முன்னேறிய கால்களையும், கம்பீரமாக வீசி நடந்த கைகளையும் முறிக்கும் அளவிற்கு தங்களது தடிகளை கொண்டு காவல்துறை வெறித் தாக்குதல் நடத்தியது.
ஆனால் வீங்கிய கால்களுடன், இரத்தம் சொட்டும் மண்டைகளுடன், தொடர்ச்சியாக இடியாய் விழும் தடியடிகளுக்கு மத்தியில் வீறு கொண்ட வேங்கைகளாய் தாங்கள் எடுத்த இலட்சிய வேட்கைக்காக, முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்திற்காக உறுதிகொண்ட நெஞ்சுரத்தோடு முன்னேறிக் கொண்டிருந்தனர் ஃபாஸிசத்திற்கு சாவுமணி அடிக்க வந்த பாப்புலர் ஃப்ரண்டின் அணிவகுப்பு வீரர்கள்.
அவர்களை பாதுகாப்பதற்காக தங்களது உயிரையும் கொடுப்போம் என்று உறுதிமொழி எடுத்தது போல் அங்கிருந்த பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் அணிவகுப்பு வீரர்களைச் சூழ்ந்து, தாங்கள் அடி வாங்கி காயங்களுடன் சரிந்த தருணத்தை காணும் எந்தக் கண்ணும் கண்ணீரை காணிக்கையாக்க மறுக்காது.
பெண்களையும், குழந்தைகளையும் தாக்க வேண்டும் என்று குறுமதி கொண்டு முன்னேறிய வெறி பிடித்த மிருகங்களிடமிருந்து அவர்களை பாதுகாக்க பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் தங்களது உடல்களை கேடயமாக்கி, தங்களது கரங்களுடன் கரம் கோர்த்து பாதுகாப்பு அரணை உருவாக்கி வாங்கிய அடிகளுக்கும், சிந்திய இரத்தத்திற்கும் சான்றுகளாய் மருத்துவமனைகளை நிரப்பியுள்ளனர்.
தங்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியையும் சமூகத்தின் கண்ணியத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தாங்கிக்கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் சகோதர்களைக் கண்டு தாய்மார்களும், சகோதரிகளும் கலங்கிய கண்களோடு, பதறிய நெஞ்சத்தோடு வல்ல அல்லாஹ்விடம் கையேந்திய அந்தக் காட்சி, எகிப்தில் நடக்கும் அநீதிக்கு எதிரான போராட்டதை நினைவு படுத்தத் தவறவில்லை.
இந்த நேரத்தில் உஹதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. உஹது போர்க்களம். எதிரிகள் முஸ்லிம்களை வெறி கொண்டு தாக்க ஆரம்பித்த தருணம். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்வதற்காக அம்புகளை அன்னாரை நோக்கி ஏவ ஆரம்பித்தனர். அவர்களை பாதுகாக்க 12 சஹாபாக்கள் சுற்றி நின்று பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றனர்.
அம்புகள் மின்னல் வேகத்தில் வர ஆரம்பித்தன. ரஸூல் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்து தூதரை நோக்கி வந்த அம்புகளை தனது கரங்களால் தடுக்க ஆரம்பித்தார் ஒரு மனிதர். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் வராலாற்றில் நீங்காமல் பதிவாகிப் போனது.
இதோ அந்த வார்த்தைகள்: “யாரசூலல்லாஹ்! என் கழுத்துக்கு பின்னால் உங்கள் கழுத்து இருக்கட்டும். என் நெஞ்சுக்கு பின்னால் உங்கள் நெஞ்சு இருக்கட்டும். அதையும் மீறி அம்புகள் வருமானால் அவை என்னையும், என் உடலையும், உயிரையும் துளைத்து கொண்டு உங்களை தொடட்டும்!”
தனது இரு கரங்களும் சிதைந்து, உடல் முழுக்க அம்புக் காயங்களுடன் நிலத்திலே சரிந்து இரத்த சாட்சியாக மாறிப் போன அந்த வீரத் தோழர் அபூ தல்ஹா (ரலி) அவர்களின் வாரிசுகள் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் நீருபித்து இருக்கிறார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (திருக்குர்ஆன் 61:8)
இது போன்ற அடக்குமுறைகளும், அநீதிகளும் உரிமைக்காக போராடும் போராளிகளின் வேகத்தையும், வீரத்தையும் அதிகப்படுத்துமே தவிர அடக்கி ஒடுக்க முடியாது என்பதை ஆளும் வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும், வந்தேறிகளான ஃபாஸிஸ்டுகளும் மறக்க வேண்டாம்.

இராமநாதபுரத்தில் PFI தின நிகழ்ச்சியில் காவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டிக்கிறோம் – தமிழக அரசே நடவடிக்கை எடு!


சென்னை, பிப்ரவரி 18: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கப்பட்ட தினமான பிப் 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட்டு வரும் அன்றைய தினத்தில் கொடியேற்றுதல், ஒற்றுமை பேரணி, நலத்திட்ட உதவிகள், பொதுகூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றது. இவ்வருடம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் 3 இடங்களிலும், கேரளாவில் 16 இடங்களிலும் அமைதியான முறையில் பேரணி மற்றும் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவ்வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா, ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளோடு ராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை எழுத்துப்பூர்வமாக அனுமதியும் வழங்கியிருந்தனர். இருப்பினும் பேரணி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டது. 
எழுத்துப்பூர்வமாக பேரணி மற்றும் பொதுகூட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின், பேரணி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மைதானத்தில் மக்கள் கூடும் வரை அனுமதித்து, பின்னர் தடை விதித்தது விநோதமானது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் கூர்ந்து கவனித்தே வந்தார்கள். காவல்துறை அனுமதி வழங்கிய பின்பும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னரே கலவர தடுப்பு படையினர், கண்ணீர் புகை குண்டு வாகனம் போன்ற ஏற்பாடுகளை காவல்துறையினர் தயார் செய்து வைத்தது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. இத்துனை ஏற்பாடுகளை செய்த பிறகே காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சிக்கு பொது மக்கள் மைதானத்தில் கூடிய பின்னர் தடை விதிக்கிறார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில நிர்வாகிகள் காவல்துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கும் சமயத்தில் சில விஷமிகள் காவல்துறையின் மீது கல்வீசினர். அவர்களில் இருவரை பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தும் இருந்தனர். இருப்பினும் பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியினை நடத்த விட கூடாது என்று முன்னரே திட்டமிட்டது போல் காவல்துறையினரின் நடவடிக்கைகள் இருந்தது. திடிரென்று காவல்துறை கூட்டத்தின் மீது தடியடி நிகழ்த்தினர். பொது மக்கள் செய்வதறியாது நின்ற சூழ்நிலையில் கண்ணீர் புகை வீசப்படுகிறது. ரப்பர் குண்டுகள் வீசப்படுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடியோ குழுமத்தையும் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்களது விலை உயர்ந்த வீடியோ காமிராக்கள் காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்டும் பிடுங்கிசெல்லப்பட்டும் உள்ளது. இந்த தாக்குதலில் பத்திரிகை நிருபர்களும் புகைப்பட கலைஞர்களும் தப்பவில்லை. இப்படியாக தேவையில்லாமல் ஒரு கலவர சூழல் காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டது. இதில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் வழக்குகளை நடத்தி வந்த வழக்கறிஞர்களை குறிவைத்து காவல்துறை தாக்குதல் நடத்தியது காவல்துறை முன்விரோதத்துடன் செயல்பட்டது தெளிவாகிறது. வழக்கறிஞர்கள் நஜ்முதீன், அலாவுதீன் மற்றும் சட்ட கல்லூரி மாணவரான முஹம்மது யூசுஃப் ஆகியோர் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர் நஜ்முதீன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருக்கிறார். காவல்துறையின் மொத்த நடவடிக்கையையும் பார்க்கும் போது காவல்துறை முன்னரே பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியில் பிரச்சனை ஏற்படுத்தி அத்துமீறலை நிகழ்த்த திட்டமிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நிகழ்ச்சியினை ரத்து செய்து கூடியிருந்த அனைவரையும் கலைந்து செல்ல கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கடந்த (2013)ம் வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் நிகழ்ச்சி திருச்சியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களை வர விடாமல் தடுக்க திருச்சி காவல்துறை கடும் கெடுபிடிகளை கொடுத்தது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாக சோதனை, முஸ்லிம் கல்லூரி மாணவர்களிடம் விசாரனை போன்ற தேவையில்லாத கெடுபிடிகள் கடந்த ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஜனநாயக அடிப்படையில் நடத்தவிருக்கும் ஒரு இயக்க நிகழ்ச்சிக்கு இவ்வளவு கெடுபிடிகளை கொடுப்பது தேவையற்றது. இந்நிலையில் திருச்சி மாவட்ட செயலாளர் ஸஃபியுல்லா நீதிமன்றத்தில் காவல்துறையின் கெடுபிடிகளை விசாரிக்க அளித்த மனு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரனைக்கு வந்தது. இந்த குரோதத்தை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியில் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை திட்டமிட்டு இந்த அத்துமீறலை நிகழ்த்தியுள்ளதாக தெரிகிறது. ஜனநாயக அடிப்படையில் நடத்தும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது தனி மனித சுதந்திரத்தை தடுக்கும் செயலே அன்றி வேறில்லை. இந்த சம்பவத்தில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் வரை பாப்புலர் ஃப்ரண்டின் நீதிக்கான போராட்டம் தொடரும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பாக ஒரு நேர்மையான நீதி விசாரனை நடத்தி இந்த கொலைவெறி தக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கிறது.
இப்படிக்கு
ஏ. எஸ். இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

தமுமுக தலைமையகத்திற்கு நேரில் வந்த முக ஸ்டாலின் -திமுக -தமுமுக தொண்டர்கள் நிரம்பி வழிந்ததால் மண்ணடியில் கடும் நெரிசல் !

சென்னை, ஜனவரி 25: திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திமுக மாநாட்டிற்கு அழைப்பு கொடுப்பதற்காக 21.01.2014 அன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைமையகம் வருகை தந்தார். இந்நிகழ்வின் போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்,  ஜே.எஸ். ரிபாயி,மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற தலைவர்பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா, மூத்த தலைவர்  எஸ். ஹைதர் அலி,பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது,  பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ்,ணைத் தலைவர் குணங்குடி ஆர். எம். அனிபா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அழைப்பு விடுத்தார்.






முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

முத்துப்பேட்டை, ஜனவரி 24: நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. 



இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம். இந்த சங்கபரிவார அமைப்புகளின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியின் மதவாதம், ஊழல், போலி தேசிய வாதம், தீவிர வாதம் போன்ற பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டும் முகமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தை மாநில அளவில் நடத்த உள்ளது. இதன்படி ஜனவரி 2014 முதல் ஏப்ரல் 2014 வரை மாநிலம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரான நோட்டீஸ் மற்றும் போஸ்டர் பிரச்சாரம், சமூக வலைதளங்களில் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்களை நடத்த உள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், அனைத்து இயக்க தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பாசிசத்திற்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் சார்பாக பா. ஜ. க. வின் இரட்டை வேடத்தை மக்களுக்கு தெளிவு படுத்தும் விதமாக தமிழக முழுவதும் நோட்டீஸ் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு அங்கமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று (24.01.2014) நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



முஸ்லீம் லீக் தலைவருடன் முத்துப்பேட்டை நிர்வாகிகள் சந்திப்பு !!









சென்னை, ஜனவரி 19: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் KM .காதர் மொஹிதீன் அவர்கள்  கடந்த சில நாட்களுக்கு முன்  கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் .திருச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு முத்துப்பேட்டை மற்றும் திருவாரூர் மாவட்ட முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் காதர் மொஹைதீன் அவர்களை நேரில்  சந்தித்து நலம் விசாரித்தனர் .

முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர்  K.முகைதீன்அடுமை. மாவட்ட  துணை செயலாளர் Mமுஹம்மதுஅலி. Sதம்பிமரைக்காயர் நகர பொருளாளர் நேனா மோட்டார்ஸ்  A.S.N.முஹம்மதுஇபுராகிம். நகர தலைவர்  S.அபுஹனிபா. Y.B.சலீம். Sஹாஸ்பாவா. ஷாஜகான். சூப்பர் டிராவல்ஸ்  H.ஜாஹிர்உசேன். ஆகியோர் நேரில் சந்தித்தனர் .

தகவல் :S .ஹாஸ் பாவா 




தி.மு.க.வுடன் கூட்டணி கருணாநிதியுடன் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை, ஜனவரி 18: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.


கருணாநிதியுடன் சந்திப்பு
கடந்த 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ரிபாயி, பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க. தரப்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் உடன் இருந்தனர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு 12.30 மணி வரை நீடித்தது.
தி.மு.க.வுக்கு ஆதரவு
பின்னர், வெளியே வந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ரிபாயி, பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
கடந்த 10–ந் தேதி சென்னையில் நடைபெற்ற எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதை முறையாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து கூறினோம்.
தொகுதி பங்கீடு பற்றியும் பேசியுள்ளோம். எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்ட பிறகு கூட்டணி தலைவர் கருணாநிதி அறிவிப்பார். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வும் வர வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம்.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். மத்தியில் மதசார்பற்ற கட்சி ஆட்சியமைக்க வேண்டும். ராஜ்யசபா தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சச்சார் பரிந்துரைகளில் 76 இல் 72 ஓகே ! மன்மோகன் அதிரடி...!!!


இந்தியா, ஜனவரி 14: இந்தியா போன்ற பாரம்பரியம் மிக்க நாட்டில் மதச்சார்பற்ற தன்மையை வாழ்க்கையுடன் இணைத்து மக்கள் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இதுதான் இந்தியாவின் பலமாக கருதப்படுகிறது. ஆனால், சமுதாயத்தில் மதம்,மொழி, கலாசாரம் ஆகியவற்றில் நிலவி வரும் ஒற்றுமையை சீர்குலைக்க பிரிவினைவாதச் சக்திகள் முயன்று வருகின்றன.
மேலும், மதச்சார்பற்ற தன்மையை மாற்றியமைக்கவும் அவை திட்டமிட்டு வருகின்றன. இதை நாட்டு மக்கள் அனுமதிக்கக் கூடாது. பெரும்பான்மை சமுதாயத்தினருக்கும் சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் இடையே உள்ள நல்லுறவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் பலபகுதிகளில் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதனால் பாதிக்கப்படும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
சமுதாயத்தில் பின்தங்கிய முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக, சச்சார்குழு அளித்த 76 பரிந்துரைகளில் 72 பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுகொண்டுள்ளது

.டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தின் மாநாட்டில் மன்மோகன் சிங் பேசியது.

மரியாதைக்குரிய பிரதமர் அவர்களே சூப்பராக பேசியுள்ளிர்கள் .
ஆமா சார்
முஸ்லிம்கள்,
சச்சார் கமிட்டி ,
76 பரிந்துரைகளில் 72 பரிந்துரைகளை ஏற்று கொண்டது
இதெலாம் இப்பதான் உங்களுக்கு நினைவுக்கு வந்ததோ ?
சாரி சார் மறந்து போச்சு நீங்க நாலரை வருஷமா
பாரின் டுர்லேயே இருந்துடீங்கலே..... !


நன்றி: எஸ்.என்.சிக்கந்தர்

தஞ்சையில் மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் வெட்டி கொலை-பதற்றம்

தஞ்சாவூர், ஜனவரி 05: தஞ்சை பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள குண்டு தைக்கால் சின்ன புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் சையத் ஜமாலூதீன் (58). இவர் தஞ்சை நகர மனித நேய மக்கள் கட்சி தலைவராகவும், மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வந்தார். வக்பு வாரியத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 31 ஏக்கர் நிலத்தையும் பராமரித்து வந்தார். அந்த நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வந்தார். மேலும் தஞ்சை பூ மார்க்கெட்டில் பூ வியாபாரமும் செய்து வந்தார்.

இன்று அதிகாலை சையத் ஜமாலூதீன் பூ வியாபாரத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் மார்க்கெட்டுக்கு புறப்பட்டு வந்தார். வீட்டின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டத்தில் உள்ள பூக்களையும் பறித்து கொண்டு சென்றார்.

பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை அருகே சென்ற போது 2 பேர் கும்பல் அவரை வழி மறித்து தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் பலத்த வெட்டு விழுந்த அவர் மூளை சிதறி சம்பவ இடத்திலே பலியானார். இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இதனால் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த கொலை குறித்து தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட சையத் ஜமாலூதீன் உடலை ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சையில் இன்று காலை மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் வெட்டி கொலை



கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தஞ்சை தாலுகா போலீசில் சரண் அடைந்தனர்.


அவர்களிடம் விசாரித்த போது சையது அமீர் என்பவரது மகன்கள் சையது உசேன் (47), சையது பாபு(42) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் சையத் ஜமாலூதீன் உறவினர்கள் ஆவார்கள்.


வக்பு வாரிய சொத்தை பரமாரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடைபெற்றது தெரிய வந்தது. மேலும் அவரது உறவினர்கள் வக்பு வாரிய சொத்தை விற்க முயன்றதை தட்டிக் கேட்டதால் இந்த கொலை நடந்துள்ளது.
கொலையாளி சையது உசேன் சென்னை தாம்பரத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

சையது பாபு விவசாயம் செய்து வருகிறார். கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சையத் ஜமாலூதீனுக்கு அலிமா என்ற மனைவியும், சையத் காதர் என்ற மகனும், நசீனா பானு, பர்வீன் பானு என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள்.


மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆயிரக்கணக்கானவரை கொன்றவன் நான் அல்ல: பிரதமர் மன்மோகன் சிங்..


குஜராத், ஜனவரி 03: குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடிக்கு என்னை விமர்சிக்க தகுதியில்லை எனவும் ஆயிரக்கணக்கானவரை கொன்றவன் நான் அல்ல எனவும் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தான் பலவீனமான பிரதமர் என்ற மோடியின் கருத்துக்கு பதில் அளித்து இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி: PM. ஜாஹீர் உசேன் 

டென்டருக்கான செட்யூல் காப்பி கேட்டு அதிமுக ஒப்பந்தக்காரர் ரகளை. முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் பரபரப்பு.


முத்துப்பேட்டை, டிசம்பர் 28: முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் நேற்று மங்களுர் கிராமத்தில் சாலைப்பணி 9.56 லட்சம் பொது நிதியலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் டென்டர் செட்யூல் வாங்கப்பட்டது. அப்பொழுது தம்பிக்கோட்டை கூடடுறவு வங்கி தலைவரும் அதிமுக பிரமுகரும் ஒப்பந்தக்காரருமான நாராயணசாமி நேற்று முன்தினம் அந்தப் பணிக்காக ரூ.3120-யும் அர்ச்சுணன் என்ற பெயரில் அந்தப் பணிக்கு 3120-ம் செட்யூல் தொகை கட்டியிருந்தார். நேற்று செட்யூல் காப்பி வாங்கும் நாள் என்பதால் அதிமுக ஒப்பந்தக்காரர் நாராயணசாமி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து மேலாளர் பாலசுப்ரமணியத்திடம் நான் பணம் கட்டியதற்கான மேற்கண்ட பணியின் செட்யூல் காப்பி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு மேலாளர் பாலசுப்ரமணியன் ஆணையர் யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கார். அதனால் ஆணையரிடம் கேட்டுத்தான் தரமுடியும் என்று கூறினார்.

 இதனால் ஆத்திரமடைந்த நாராயணசாமி தரமுடியுமா முடியாதா? என்றும் தரமாட்டேன் என்று எழுதிக் கொடுங்கள் என்றும் ரகளை செய்து தர்னாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு ஒன்றியக்குழ தலைவர் நடராஜன் ஒன்றியக்கவுன்சிலர் ஜெகன் ஆகியோர் நாராயணசாமியை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து ஒப்பந்தக்காரர் நாராயணசாமி கூறுகையில் முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகம் மூலம் நடைபெறும் பணிகளை செய்ய முறைப்படி ஒப்பந்தக்காரருக்கு வழங்காமல் ஆணையர் தன்னிச்சையாக முடிவு செய்து அவருக்கு வேண்டப்பட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்குகிறார். புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த ஆணையரின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

முஸ்லிம்​ லீக் பெயரைக் களங்கப்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை: எச்சரிக்கை!

சென்னை, டிசம்பர் 15: பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து ஒரு நபர் பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங் கியுள்ளதாகவும், அது நாடாளு மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க போவதாகவும் சில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
அச்செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து எவரும் பிரிந்து செல்லவும் இல்லை-சதக்கத்துல்லா என்ற நபர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தவரும் அல்ல. இந்த தகவல் அவரை பா.ஜ.க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை மையகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சதாம் என்.கே.எம்.சதக் கத்துல்லா, நிறுவனத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 66 மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி சென்னை -1 என முகவரியிட்டு 9677843231 என தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு லெட்டர் பேட் தயாரித்து பா.ஜ.க.,வுக்கு ஆதரவுக் கடிதம் அளிக்கப் பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரை மாநில மாவட்ட நிர்வாகிகளில் என்.கே. எம்.சதக்கத்துல்லா என்ற பெயரில் ஒருவரும் இல்லை. எங்களின் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் போன்றவற்றிலும் இந்த பெயரில் எந்த நிர்வாகியும் இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தியது உண்மையாக இருக்குமே யானால் அது பாரதீய ஜனதா கட்சி தலைமையை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட திட்ட மிட்ட மோசடி செயலேயாகும்.
மதசார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாய சக்திகளே நாட்டை ஆளும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை ஒருங்கி ணைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் சமுதாயமும் இத்தேர்தலில் ஒருமுக முடிவெடுக்க வலியுறுத்தும் வகையில் எதிர் வரும் 28 - ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டையும், இளம்பிறை எழுச்சி பேரணியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது. அதில் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட 12 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க.,விற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவளிக்கும் என்று வெளிவரும் செய்தி பகல் கனவேயாகும்.
இதுபோன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்."
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.​

மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த BJP உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம்.



சென்னை, டிசம்பர் 14: ஆள் கிடைக்கமால் அனாதை ஒருவனை பிடித்து மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த பிஜே பி உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம் இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளர் இக்பால் சத்தியம் தொலைக்காட்சியில் பரபரப்பு பேச்சு 

சத்தியம் டிவி : இப்படி முஸ்லிம் கட்சி பிஜேபி க்கு ஆதரவை கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிரிர்கள் ஆனால் உங்கள் முஸ்லிம் அமைப்புகளின் வெப் சைட்டுகள் எல்லாம் தேடி விட்டோம் இப்படி ஒரு இயக்க பெயரை இல்லையே !!!



சையது இக்பால் அவர்கள் : நான் நீண்ட அரசியல் வரலாற்றை நான் படித்தவன் .பயணித்தவன் என்ற முறையில் தமிழ் நாட்டில் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் அமைப்பு பெயரைவோ? இப்படி அயோக்கிய நபரையோ ?பார்த்தது இல்லை .மாறாக கந்தியாவதி போல் தன்னை காட்டி கொண்டு பிஜேபிக்கு ஆள் பிடிக்கும் புரோக்கராக மாறியுள்ள மணியன்! தமிழ் நாடு முழுவதும் சுற்றி பார்த்தார் யாருமே பிஜேபிக்கு ஆதரவு அளிப்பது போல் இல்லை .அதனால் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி வேண்டும் என்று அநாதை ஒருவரை பிடித்து வந்து முஸ்லிம் இயக்கம் ஆதரவு என்று இப்படி ஈன வேலையே பார்த்து உள்ளார். 

அவரால் இல்லை நர பலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்க கூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாதுஅப்படி ஒரு முஸ்லிமும் ஆதரவு தர மாட்டான் உதாரணதுக்கு ததஜ என்ற அமைப்பில் உள்ள ஒரு நிருவாகி 10 % இட ஒதிக்கீடு அளித்தால் பிஜேபிக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவிப்பு செய்தற்கு முஸ்லிம் சமுதயாத்தில் இருந்து பெரிய கண்டனங்கள் எழுந்தன அதனால் . நாங்கள் பாராளமன்றத்தில் இன்ஷா அல்லாஹ் யாரை அமரவைப்பது என்பதை விட யாரை அமர விடகூடாது என்ற விசயத்தில் தெளிவாக இருக்கிறோம் . முஸ்லிம் லீக் தலைவர் எங்கள் அமைப்புக்க களங்கம் விளைவித்து விட்டதாக அந்த அயோக்கியன் சதக்கத்துல்லாவை சொல்லி உள்ளார் நாங்கள் சொல்லுகிறோம் அவன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் களங்க படுத்தும் வேலையே மணியன் செய்ய தொடங்கி உள்ளார் அதுவும் இல்லாமல் ,இந்த நாடகம் எப்படி மோடி குல்லாவும் புர்க்காவும் விலைக்கு வாங்கி கூட்டத்தை கூட்டி முஸ்லிம்கள் ஆதரவு நாடகத்தை நடத்தினாரோ அதன் தொடர்ச்சி இது அந்த அயோக்கியனை ஒரு போதும் பிரதமராக முஸ்லிம்கள் வர விட மாட்டோம் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)