முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள்.. அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள்.. இன்றைக்கு மாணவர்கள் படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது.


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டை பேரூர் தி.மு.க சார்பில் கலைஞரின் பூரண மதுவிலக்கு அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் நீதி கேட்கும் பேரணி விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. முத்துப்பேட்டையில் தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேச்சு.. இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட துணைச்செயலாளரும், நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்று பேசினார். இதில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேசினார் அப்பொழுது அவர் பேசுகையில்: 

தி.மு.க ஆட்சியில் தமிழக முழுவதும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது, பெரிய முதலிட்டார்கள் கொண்டு வரப்பட்டது, அதேபோல் தளபதி தமிழகத்தில் 80ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்து சேர்ப்பேன் என்றார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டில் 62 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு சேர்த்தார். இன்றைக்கு இப்பகுதி ஏழை விவசாயி பெண் கூட சென்னையில் 1.75 லட்சம் சம்பளம் வாங்கிறது என்றால் அது தி.மு.க ஆட்சியால் மட்டும் தான் முடியும். கலைஞர் ஆட்சியில் தெருவுக்கு தெரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. ஆனால் அம்மா ஆட்சில தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை திறந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழக முழுவதும் 7312 டாஸ்மாக் பாரையும் திறந்து இருக்கிறார், கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள் அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள், இன்றைக்கு மாணவர்கள் பெற்றோரை பார்த்து படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது. அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த மட்டும் போக முடியல ஆனால் மோடியை வரவேற்க ஏர்ப்போர்டில் கால் கடுக்க நிற்கிறார். 

இன்று தமிழகத்தில் அண்ணா திமுக ஆட்சி நடைபெறவில்லை அடிமை திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது, 127 நாட்களாக சட்டமன்றம் பூட்டி கிடக்கிறது கேவலமாக உள்ளது என்று இவ்வாறு பேசினார். 


கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை.வே.மன்னர்மன்னன், மாவட்ட துணைச்செயலாளர் கலைவாணிமோகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட மாணவர் அணி நிர்வாகி ஜாம்பை.ராமஜெயம், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் முத்துராமலிங்கம்.

 முன்னால் அவைத்தலைவர்கள் சேக்தாவூது, வீரையன், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், கோவிந்தராஜன், அகமது இபுராஹிம், மகாராஜா தமீம், ஒன்றி பொருளாளர் கோவிலூர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், முத்து லட்சுமிசிவா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, ஜாம்பைகல்யாணம், சித்தமல்லி அண்ணாத்துரை, பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவஅய்யப்பன், ஜகபருல்லா, ஜெய்புநிஷா பகுருதீன், ரெத்தினகுமார், கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆடலரசன், ரவிக்குமார், நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் செல்வம், அன்பன் மற்றும் பெருகவாழ்ந்தான் இளங்கோவன் உப்பட்ட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் நகர துணைச்செயலாளர் சியா நவாஸ்கான் நன்றி கூறினார்.

Reported By 

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

1 comments:

  1. announced as a taluk the muthupet, in dmk period. but not activation yet this dirty period.

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)