முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் எனது கடையை மீண்டும் திறக்க இஸ்லாமியர்கள் உதவி செய்ய வேண்டும் --பெட்டிக்கடை மணி வேண்டுகோள் !!!



முத்துப்பேட்டை கொய்யா மஹால் அருகே பெட்டிக்கடை வைத்திருப்பவர் மணி .சமீபத்தில் இவருக்கு சொந்தமான பெட்டிக்கடையை யாரோ சில மர்ம ஆசாமிகள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் .இதனால் கடைக்குள் இருந்த அத்துனை பொருட்களும் தீயில் கருகி நாசமாயின .இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மணி செய்வதறியாது திகைத்து நிற்கிறார் .பாதிக்கப்பட்ட மணியை பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதலை கூறி வருகின்றனர் .

இந்நிலையில் தீயில் கருகிய பொருட்களை மதிப்பீடு செய்வதற்காக நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்தின் சார்பாக கொய்யா மஹால் அருகே இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றோம் .
பின்னர் நம்மிடம் பேசிய மணி ,நான் மீண்டும் எனது பெட்டி கடையை திறக்க முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கேன் பாய் ,இப்போ என்கிட்டே அறவே பணம் இல்லே பாய் , என்றார் .உடனே குறுக்கிட்ட நாம் ,உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை படுகிறது என்றோம் .

அதற்கு பதிலளித்த அவர் எனக்கு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் தேவைப்படுது பாய் என்றார் .பின்னர்  பேசிய அவர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் உங்களது இஸ்லாமிய சகோதரர்களிடம் சொல்லி எனக்கு பண உதவி செய்ய சொல்லுங்க பாய் என்று கண்ணீர் மல்க நம்மிடம் வேண்டுகோள் விடுத்தார் .

மணி என்பவர் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்பதாலும் ,அவர் பிறவியில் ஊனமாக இருப்பதாலும் ,இதை எல்லாம் காட்டிலும் மணி ஒரு சிறந்த மதநல்லிணக்க வாதி என்பதாலும் இதனை படிக்கும் எமது இஸ்லாமிய சொந்தங்களே ,நமது  தொப்புள் கொடி உறவான ஒரு இந்து சகோதரனுக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்து அவரின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இன்றே உதவி செய்து நாளை மறுமை வெற்றியாளர்களாக தங்களை ஆக்கி கொள்ளுங்கள் என்று அன்போடு வேண்டுகிறோம் .நீங்கள் இன்று செய்யும் உதவி ,நாளை அவரை இஸ்லாத்தின் பால் இணைக்க கூடும் என்றும் தெரிவித்து கொள்கிறோம் .

மணியை நீங்களே நேரடியாக தொடர்பு கொண்டு உதவிகளை செய்யலாம் :

மணி :அலைபேசி -9698548943




சந்திப்பு :ஜே :ஷேக் பரீத் 
                MA .JOURNALISM AND MASS COMMUNICATION 
                உறுப்பினர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் ,
                 சென்னை  

எனது கடைக்கு தீயிட்டவர்கள் கண்டிப்பாக இஸ்லாமியர்களாகவோ அல்லது மதநல்லிணக்கத்தை விரும்பும் இந்துக்களாகவோ இருக்க வாய்ப்பில்லை !!நெஞ்சை உறைய வைத்த மணியின் பளீர் பேட்டி!!!

முத்துப்பேட்டையில் கடந்த 3 ஆம் தேதி இந்துமுன்னணியினர் நடத்திய விநாயகர் ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது .சுமார் 18 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டன .

பின்னர் கொய்யா மஹால் அருகே மணி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடை யாரோ சில மர்ம ஆசாமிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்டது .இதனை தொடர்ந்து,முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ,பாதிக்கப்பட்டவரும் கடையின் உரிமையாளருமான மணி புகார் ஒன்றை கொடுத்துள்ளார் .

இந்நிலையில் தீயினால் கருகிய தனது கடையை புணரமைக்கும் பணிகளை மணி செய்துகொண்டிருந்தார் .முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் சார்பில் அவரை சந்தித்தோம் .புணரைப்பு பணிகளுக்கிடையில் மிகவும் சோகமாக காணப்பட்டவர் ,நம்மை கண்டவுடன் இன்முகத்துடன் வரவேற்றார்.பின்னர் நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார் .

கே :உங்கள் கடைக்கு  தீவைத்தவர்கள் யாருன்னு தெரியுமா ?

பதில் : கடவுள் மேல சத்தியமா தெரியாதுங்க .வழக்கம் போல் 3 ஆம் தேதி இரவு கடையை சாத்திவிட்டு  வீட்டிற்கு சென்றுவிட்டேன் .பின்னர் கலையில் மீண்டும் எனது கடையை திறக்க வரும்போது ,எனது கடையின் சட்டர மீது படிந்திருந்த தீக்கரியை கண்டு அதிர்ச்சியடைந்தேன் .பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது ,உள்ளே இருந்த அத்துனை பொருட்களும் தீயால் கருகி இருந்ததை கண்டேன் .

கே :உங்கள் கடையை சேதப்படுத்தியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுத்துள்ளீர்களா ?

பதில் :ஆம் கொடுத்துள்ளேன் .

கே :உங்களிடம் என்ன விசாரித்தார்கள் ?

பதில் :உங்களுக்கு தனிப்பட்ட எதிரிகள் யாரும் உண்டா என கேட்டார்கள் .எனக்கு அப்படிப்பட்ட எதிரிகள் யாரும் இல்லை என தெரிவித்துவிட்டேன் .

கே :இந்து முன்னணி நடத்திய விநாயகர் ஊர்வலத்தில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளது .இதற்கு பதிலாக உங்கள் கடையை சேதபடுத்தி இருப்பார்கள் என நினைகின்றீர்களா ?

பதில் :கண்டிப்பாக அப்படி நான் நினைக்கவில்லை பாய் .ஏன் என்று சொன்னால் எனக்கு எல்லோரிடமும் நல்ல பழக்க வழக்கம் உள்ளது .குறிப்பாக இஸ்லாமிய பெரியோர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் என்னிடம் அன்பாக பழகுவார்கள் .எனவே என் கடையை ஒரு இஸ்லாமியரோ அல்லது மதநல்லிணக்கத்தை விரும்பும் இந்துக்களோ செய்திருக்க வாய்ப்பே இல்லே பாய் .

சந்திப்பு :ஜே :ஷேக் பரீத் 
                MA .JOURNALISM AND MASS COMMUNICATION 
                உறுப்பினர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் ,
                 சென்னை  

முத்துப்பேட்டை கலவரம் -இந்துமுன்னனிக்கு SDPI பொதுசெயலாளர் நிஜாம் முஹைதீன் எச்சரிக்கை !!

கடந்த 03.09.2014 அன்று முத்துப்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வணிக வளாகம் மற்றும் வீடுகளின் மீது சமூகவிரோதிகள் கல், உருட்டுக்கட்டை, இரும்பு பைப் போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் முத்துபேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சதி திட்டம் தீட்டி மதக் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், இந்து முன்னணி மற்றும் பிஜேபி கட்சியினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கு தகுந்தாற்போல் இரவு நேரங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்க கூடிய பகுதிக்குள் ஊர்வலம் நடத்தி வன்முறையை தூண்டி வருகின்றனர். ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளின் மீது கற்களை வீசுவதும், ஆபாசமான முறையில் நடந்துகொண்டு, மத வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் வன்முறை நடவடிக்கைகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்த கலவர கும்பலலுக்கு தலைமை ஏற்று நடத்திவருபவர் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு என்ற முருகனாந்தத்தம் ஆவார்.

ஆகவே கருப்பு முருகானந்தம் தலைமையில் வன்முறையை நிகழ்த்தும் சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, முத்துபேட்டையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டி, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் குழு புகார் மனுவினை அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கையினை மேற்க்கொள்வதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களையும் மற்றும் முத்துபேட்டை ஊர் ஜமாஅத் நிர்வாகிகளையும் நேரில் சென்று சந்தித்து சம்வத்தின் உண்மை நிலைமையை கண்டு அறிந்தனர்.

இந்த நேரடி ஆய்வில் திருவாரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் M.A.லத்தீப், மாவட்ட பொதுச் செயலாளர் நைனா முஹம்மது, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் குழு மற்றும் முத்துபேட்டை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)