முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!
Showing posts with label வாரம் ஒரு கட்டுரை. Show all posts
Showing posts with label வாரம் ஒரு கட்டுரை. Show all posts

காப் பஞ்சாயத்து விதைத்தது வன்முறை என்றால் தி ஹிந்துவின் கட்டுரைக்கு என்ன பெயர்?




சென்னை, பிப்ரவரி 05/2016: நேற்றைய தேதியிட்ட தமிழ் ஹிந்து நாளேட்டில், சமஸ் என்பவர் ''இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால் வஹாபியிசத்திற்கு என்ன பெயர்?'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
(Counter criticism to 'The Hindu (Tamil) ' over it's criticism about Thowheed thoughts!)

இந்த கட்டுரையை இணைய தளத்தில் வெளியிட்டுள்ள ஹிந்து ஏடு '' (இதை படிக்கத்) தவறாதீர்! என்ற அறிவிப்போடு வெளியிட்டிருகிறது.
இதை படியுங்கள் என கூவிக் கூவி ஹிந்து நாளேடு அழைப்பதன் பின்னணி நிச்சயமாக உள்நோக்கம் கொண்டதுதான்!
அண்மையில் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய
'ஷிர்க் ஒழிப்பு மாநாடு'' ஏற்படுத்திய வயிற்றெரிச்சலை வார்த்தைகளாக விரவ விட்டிருக்கிறார் சமஸ்.
தௌஹீத், வஹாபியிசம், மதச்சார்பின்மை, இந்துத்துவம், அடிப்படைவாதம் என அனைத்தையும் போட்டு குழப்பி தானும் குழம்பி படிப்பவர்களையும் குழப்பி எடுத்திருக்கிறார் கட்டுரையாளர் சமஸ்.
எதிலும் முறையான ஆய்வில்லாமல் பக்கம் அல்லது பத்தி எழுத பிரபல ஏடுகளில் வாய்ப்பு வேண்டுமென்றால் நீங்கள் இஸ்லாத்திற்கு/முஸ்லிம்களுக்கு எதிராக எழுதவேண்டும். இந்த சிந்தனையைதான் ஏற்படுத்துகிறது ஹிந்துவின் இந்தகட்டுரை.
ஏகத்துவ சிந்தனையாளர்களுக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கி இருப்பதோடு அவர்களை ஏனைய மதங்களுக்கு எதிரிகளாக சித்தரிக்க ரொம்பவே மெனக்கெடுகிறார் கட்டுரையாளர்.
இனி அவரது கருத்துக்களிலிருந்து:

''திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.”

“எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா?''
''இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது,  தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…'' இது ஷிர்க் என்றால் என்ன என்ற சமசின் கேள்விக்கு அவரது தோழர் சொல்லும் பதில்! இந்தபதிலில் பழுதில்லை.
ஆனால்,
''ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்''- என்று சமஸ் வலிந்து திணிக்கின்ற- தௌஹீத் சிந்தனைவாதிகள் கடப்பாரையை கையில் வைத்துக்கொண்டு தர்காக்களை இடிக்க அலைவதாக சித்தரிக்கின்ற கருத்து விஷமத்தனமானது!

முப்பது ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஏகத்துவ பிராச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏகத்துவவாதிகள் இதுவரை ஒரு தர்காவை இடித்ததாக ஒரே ஒரு சம்பவம்உண்டா? ஏகத்துவ வாதிகளை வன்முறையாளர்களாக சித்தரிக்க மெனக்கெடுகிறார் சமஸ்.

(தர்காக்களை இஸ்லாம் ஏன் இடிக்கச் சொல்கிறது என்பது வேறு விஷயம். இது குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு விளக்கம்அளிப்போம். இங்கே நமது பதில் திரு. சமசின் கருத்துக்களுக்குதான்)
அடுத்ததாக....

இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?”

இவையும், ஷிர்க் என்றால் என்ன என்று கேட்டுவிட்டு தொடர்ந்து சமஸ் தன்னிச்சையாக எழுப்புகின்ற கேள்விகள்தான். தனது கோரமான கருத்துக்களை எப்படிவிதைக்கிறார் சமஸ்.! ஏகத்துவ சிந்தனைவாதிகள் வன்முறையாளர்கள் என்ற கற்பிதத்தையும் தாண்டி மிக சூட்சுமத்தோடு பரப்புரை மேற்கொள்வதோடு, தொப்புள் கொடி உறவுகளாக இருக்கின்ற பிறசமய மக்கள் மத்தியில் வெறுப்பையும் பீதியையும் ஏற்படுத்த வல்லது இவ்விஷக்கருத்து ஏகத்துவவாதிகள் தர்காக்களை இடித்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற இவரது கருத்தை இவரே உறுதிசெய்து கொண்டு, நாளை ஏகத்துவவாதிகளின் கைஓங்கினால் நிலைமை என்னவாகும்? கோவில்களையும், தேவாலயங்களையும் இடிப்பார்கள் சாமி சிலைகளை உடைத்து நொறுக்குவார்கள் (பிறசமயதவர்களே புரிந்து கொள்ளுங்கள்) என்று ஏகத்துவவாதிகளுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக பிறசமயத்தவர்களை கொம்பு சீவிவிடும் வேலையை கச்சிதமாக செய்கிறார் சமஸ்.
சமஸ் என்ற கட்டுரையாளரின் முதுகுக்கு பின்னால் இருந்து கொண்டு இந்து ஏடு இந்தவேலையை செய்கிறது என்றும் புரிந்துகொள்ளலாம்.தப்பில்லை.

''லவ் ஜிஹாத் என்ற பெயரால் ஹிந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் இழுத்து செல்கிறார்கள்'' என்று விஷக் கருத்தை விதைத்து முசாபர் நகர் கலவரத்திற்கு வித்திட்ட 'ஜாட் 'களின்மஹா காப் பஞ்சாயத்துக்கு தமிழ் ஹிந்து நாளேட்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

இன்னொருபுறம், இடவொதுக்கீடு உட்பட இன்றைக்கு தமிழக முஸ்லிம்களின் உரிமைப்பிரச்சினை, ஜீவாதாரக் கோரிக்கைகள் ஆகியவற்றை அரசியல்ரீதியாக வலிமையாக எழுப்புகின்ற அமைப்புகளாகவும் தமிழக முஸ்லிம்களின் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாகவும் தௌஹீத் அமைப்புகள்தான் களத்தில் நிற்கின்றன. இந்த அமைப்புகளின் செல்வாக்கு உயர்ந்துவிடக்கூடாது. அனைத்துத் துறைகளிலும் இவர்களது கை ஓங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சமிக்ஞையை யாருக்கு தருகிறது ஹிந்து ஏடு?.

மேலும் ''காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இது'' என்கிறார் கட்டுரையாளர்.

முட்டாள்தனமான இந்த கருத்து எப்படி இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணமாகும்? ஒருவர் எப்படி ஹிந்துவாக,முஸ்லிமாக, கிறித்தவனாக,யூதனாக ஒரே நேரத்தில் இருக்கமுடியும்? இவரை கொள்கையற்றவர் என்றுதான்சொல்லமுடியும்? இவர் எல்லா மதத்தினரையும் ஏமாற்றுகிறார் என்று அர்த்தம்! இன்னும் இதுகாந்தியின் தனிப்பட்டகருத்தாக இருக்கமுடியுமே தவிர மதச்சார்பின்மையின் இலக்கணமாக இதை அறிவுடைய எவரும் ஏற்க இயலுமா? எம்மதமும் சம்மதம் என்ற இந்தகருத்து மதச்சார்பின்மை ஆகாது.

''மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி, கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பதுபோல் பொருள் சொல்கிறார்கள்'' என்கிறார் தந்தை பெரியார். சமஸ் போன்ற ஆட்களுக்குதான் அன்றே பெரியார் சொல்லியிருக்கிறார் போல!

மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது என்பதுதான் மதச்சார்பின்மையின் இலக்கணம்!

மத அடிப்படைவாதம் எதிர்க்கப் படவேண்டுமாம்...ஒருவன் தனது மதத்தில் அடிப்படைவாதியாக அந்த கொள்கைகளில் தீவிரமாக இருப்பதில் என்னதவறு..மதத்தின் பெயரால் யார் பிற சமயத்திற்கு தொல்லை கொடுத்தாலும் வன்முறை ஏவினாலும்அது எதிர்க்கப்படவேண்டியது என்றால் அது நியாயமான கருத்தாக இருக்கும்.இங்கே மதத்தின் சட்டதிட்டங்களை ஒழுகி வாழ்பர்களை கெட்டவர்களாக சித்தரிக்க மதஅடிப்படைவாதி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

சரி இது இருக்கட்டும், ஏகத்துவ வாதிகளை வஹாபியிசத்தோடு வலிய இணைத்து குழம்பிப்போகிறார் கட்டுரையாளர் சமஸ். தௌஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்களுக்கும் வஹாபியிசதிற்கும் என்னசம்மந்தம்?
''1703-ல் பிறந்த முஹம்மது இபின் அப்த் அல் வஹாபியிடமிருந்து உருவானது; வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது; முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும் அல்ல; முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்துவக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது'' என்கிறார் கட்டுரையாளர் சமஸ்.

இருந்து விட்டுபோகட்டும் அதெற்கென்ன இப்போது? இவரோடு தௌஹீத்வாதிகளை ஏன் தொடர்பு படுத்தவேண்டும்? அவரை முன்மாதிரியாக எற்றுக் கொண்டிருக்கிறார்களா தௌஹீத் வாதிகள்? இவரது பெயரே தவ்ஹீத் சிந்தனையை ஏற்றுக்கொண்டிருக்கும் 99% பேருக்கு தெரியாதே!
மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவருக்கு காரல்மார்க்சை தெரியும், பெரியாரிசத்தை ஏற்றுக்கொண்டவருக்கு பெரியார் ஈ.வே.ரா வைத் தெரிந்திருக்க வேண்டும். அம்பேத்கரிசத்தை அறிந்தவர்களுக்கு அவரை புரிந்திருக்க வேண்டும். இதுதான் ஒருவரின் கொள்கையை பின்பற்றுபவர்களின் அடிப்படை.
இந்த வகையில் தௌஹீத் வாதிகள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைத்தான் பின்பற்றுகிறார்கள். அப்படியானால் தௌஹீத்வாதிகளை முஹம்மதிசத்தை பின்பற்றுபவர்கள் என்று சொல்வதே அறிவார்ந்தவர்களின் செயலாக இருக்கமுடியும்.

இந்த அறிவு சமசுக்கு இருப்பதாக நேர்மறையாகவே நம்புவோம். ஆனாலும் அவர் வஹாபியிசத்திற்கும் தௌஹீத்வாதிகளுக்கும் முடிச்சு போடுவது தௌஹீத்வாதிகள் வன்முறையாளர்கள்;சமய சகிப்பற்றவர்கள், மதவெறியர்கள் என்பதுபோன்ற சித்திரத்தை உருவாக்கத்தான்!

இது தவிர, '' இதுவரை கிட்டத்தட்ட 40,000 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்; 3.5 லட்சம் பேர் உடல் உறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள்'' என்று மனிதஉரிமைஅமைப்புகள் சொல்வதாக போகிற போக்கில் ஒரு செய்தியை பதிவு செய்கிறார் சமஸ். இதற்கு எந்த புள்ளிவிபரமும் இல்லை; எந்த காலகட்டத்தில்இவை நடந்தது என்ற ஆதாரம்இல்லை.ஒருவாதத்திற்கு இதுஉண்மையாக வைத்துக் கொண்டாலும் இவர் விமர்சிக்க ஷிர்க் மாநாடு, தவ்ஹீத் முதலானவற்றுக்கும் இதற்கும்என்னதொடர்பு.?
ஆயினும், வஹாபியிசம் சௌதிஅரேபியாவிலிருந்து துவங்கியது என்பதற்காக இங்கே இதைபதிவு செய்து தௌஹீத் வாதிகளை டேமேஜ் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான்!

(இந்த கட்டுரையாளரின் ஒட்டுமொத்த கருத்துக்களும் வரிக்கு வரி அபத்தம் நிறைந்தவையாக இருக்கின்றன. விரிவஞ்சி அக்கட்டுரையின் அவதூறான ஆபத்தான பகுதியைமட்டும் இங்கே விமர்சிதிருக்கிறோம்... கட்டுரையாளர் சமஸ் இது குறித்து ஆரோக்கியமான விவாதத்திற்கு முன்வருவாரேயானால் அவரது கருத்துக்கள் எப்படியெல்லாம் முட்டாள்தனமாக வெளிப்படுகின்றன; அவரது தவறான புரிதல் அல்லது சித்தரிப்பு எதனால் என்பது குறித்தெல்லாம் இன்ஷாஅல்லாஹ் அவருக்கு புரியவைக்க தயாராக இருக்கிறோம்!)

நன்றி

அபூ பைசல்
(மக்கள் ரிப்போட்டர் ஆசிரியர்)

இன்றைய நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள்..!!


அதிரை, டிசம்பர் 22: ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது.அதன் பின் ஒன்றுமே இல்லை. அவன் இறந்த பின் மண்ணோடு மன்னாகிறான், என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,பாவம்,புண்ணியம், என்று எதற்கும் பயப்பட தேவை இல்லை. ஆனால் மனிதன் இறந்த பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.அது முடிவற்றது.வாலிப வயதில் ஒரு மனிதனின் பங்கு,பெரும் சோதனைக்கு உரியது.இந்த வயதில் தான் ஒரு இளைஞனின் வாழ்க்கை திசை மாறுகிறது. அல்லது மாற்றப்படுகிறது. ஒரு இளைஞன் தன் வாலிப வயதில் எவ்வாறு சகமனிதர்களுடனும், தோழர்களுடனும், பழகுகிறானோ அவ்வாறு தான் அவனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிவிடுகிறது. 

ஆடை இல்லா மனிதன் அறை மனிதன் என்பது பழமொழி. நல்ல நண்பர்களை தேடுவதை விட நீ நல்ல நண்பனாய் இரு, கட்டாயம் உனக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.., என்று ஓர் அறிஞர் சொன்னார். அனால் இன்றைய இளைஞர்கள் அப்படி இல்லை. இன்றைய இளைஞ்கர்கள் தன் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை கிண்டல் செய்தும், சிகரெட் பிடித்து கொண்டும்,போதை தரும் பாக்குகளை உபயோகித்தும் வருகின்றனர். அதிலும் சில இளைஞர்கள் மட்டுமே தங்களை தவறான வழியில் செல்லாமலும், தவறான நண்பர்களுடன் சேராமலும், அவர்களே அவர்களை, பாதுகாத்து வருகின்றனர். 

இஸ்லாத்தின் நற்குணங்களான பொய், புறம்,நம்பிக்கை மோசடி, பெருமை, தீய எண்ணம், கோபம், மது, சூது, லஞ்சம், திருட்டு, போன்ற இன்னும் பலவற்றினை ஒரு முஸ்லிம் அறவே விட்டொழிக்க வேண்டும். அனால் இன்று எத்தனை பேர், எத்தனை இளைஞர்கள் விட்டொழிக்கிகிறார்கள்.? சற்று நடு நிலையோடு சிந்தித்து பாருங்கள்..! இன்றைய நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள் பத்து மாதம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற தாயை அடித்து, துன்புறுத்தியும், பாசமாக வளர்த்த தந்தையை வீட்டை விட்டே விரட்டிக்கொண்டும், தவறான நண்பர்களுடன் சேர்ந்து தெரு ஓரங்களில் சிகரெட், மது, போன்ற தவறான பழக்கங்களிலும் ஈடுபடுகிறார்கள். நமது தோல் வலிமையில் தான் நாம் சம்பாதிக்கின்றோம் என்று எண்ணிவிடக்கூடாது. தோல் மூலம் நாம் ஒன்றும் சாதித்து விட முடியாது. கை, கால்களை இறைவனே கொடுத்தான். 

இதனால் தான் அவனது ஆணைப்படி உழைக்கின்றோம். அனால் இந்த உழைப்பு ஒன்றும் தந்து விட முடியாது. தரக்கூடியவன் அல்லாஹ் தான். எனவே நாம் நன்மையின் வழியையே தேர்ந்தெடுக்க வேண்டும். அனால் இன்றைய நிலையில் எத்தனை பேர் இந்த நம்பிக்கையில் இருக்கின்றோம்?  "முத்துக்கு சொந்தக்காரர்களாய் சஹாபா பெருமக்கள்.! அனால் சிப்பியாய் இருக்கக்கூட தகுதியற்றவர்கள் நாம்.! பூக்கடை மலர்களாய் அவர்கள்.! சாக்கடை புழுக்களாய் நாம்".! ஏனிந்த முரண்பாடுகள்? எப்படி வந்தது.? இதை பற்றி நாம் சிந்தித்தோமா? இதைப்படித்து விட்டு ஒருகட்டூரையை படித்தோம் என்று எண்ணி கொண்டு தூங்கிவிடுவீர்களாயின், நெடுந்தூக்கம் தூங்கிய பின் இறைவன் எழுப்புவானே..! அப்பொழுது விழித்து இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியது வரும். 

ஆகவே கேள்வி கணக்கு கேட்கும் நாளை மறுமையில் சுவனம் செல்வதற்கு,நாம் செய்த குற்றங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுவோம்.. அன்புள்ள சகோதர, சகோதரிகளே.! நெடுந்தூக்கம் வரும் முன் நாம் அனைவரும் விழித்துக் கொள்வோம்..! இதோ உங்களுக்கு,குறிப்பாக என்னைப் போன்ற வாலிப வயது இளைஞர்களுக்கு 5 கேள்விகள்;- இந்த நிமிடம் உங்கள் மரணம் வந்தால் மறுமையில் உங்கள் நிலை என்ன? நீங்கள் மறுமைக்காக சேர்த்து வைத்தது தான் என்ன? நீங்கள் அடைந்த இந்த இஸ்லாத்தை உங்கள் வாழ்கையில் எத்தனை பேருக்கு எடுத்து சொன்னீர்கள்? உங்கள் வாழ்க்கை நபி (ஸல்) அவர்கள் சொன்னபடி அமைந்துள்ளதா? ஒரு நாளில் எத்தனை முறை மறுமைக்கு அஞ்சுகிறீர்கள்? இந்த 5 கேள்விகளுக்கும் நாம் சரியானவரா என்று சிந்தியுங்கள்..! இளைஞர்களே..! தடுமாறும் இந்த வாலிப வயதில் தடம் மாறாதீர்கள்.! 

நமது இணையதளத்திற்கு எழுதி அனுப்பிய கட்டுரை:

நன்றி: S.அப்துல் வஹாப் BBA., அதிரை.

இன்றைய இளைஞர்களின் சிந்தனைப்போக்கு...?

கட்டுரை, ஆகஸ்ட் 20: இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனைப்போக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் நாட்டம் குறைந்துள்ளமைக்கான அடிப்படைக் காரணமும் அது மீளமைப்புச் செய்யப்படுவதற்கான வழிமுறையும்!


இன்று எமது இளைஞர்கள் மத்தியில்மேற்க்கத்திய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் குறித்த ஒருவகையான மோகம் மேலோங்கிய நிலையில் தமது வாழ்வினது மாடலாக  அவர்கள்நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் அடிப்படையாக கொள்வதனை சர்வசாதாரணமாக காணலாம்.

இத்தகைய குப்பார்களது நடை, உடை, பாவனை போன்றவற்றை “பேஷன் “ 
என்ற பெயரில் இவர்கள்பின்பற்ற நினைப்பதற்கு காரணம் இவர்களுக்குள் 
உள்ள இஸ்லாம் குறித்த அடிப்படைச் சிந்தனையில்உள்ள தெளிவின்மையும் 
இவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வரலாற்றையும் சரிவரபடிக்காமல் 
இருப்துமேயாகும்.

முதலில் எமது இளைஞர்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகவும் வெறும் வணக்க வழிபாடுகளில்ஈடுபடும் மார்க்கமாகவும் இவர்கள் நோக்குவதால் இவர்கள்
தொழுதால் போதும் அல்லது எப்படிவேண்டும் என்றாலும் தனது வாழ்வை ஒழுங்குபடுத்த முடியும் என்று நினைப்பது அவர்கள் இஸ்லாத்தை
விளங்கியுள்ள விதத்தில் உள்ள குறைபாடாகும

உண்மையில் இஸ்லாம் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள தொடர்பைஒழுங்குபடுத்துவதுடன் நின்றுவிடாமல் அது பொதுவாழ்வில் மனிதன் எதிர்நோக்கும் அரசியல்,பொருளியல், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு

உறவுகள் என்பவற்றை ஒழுங்குபடுத்தத்தேவையான செயலாக்க அமைப்புக்களை கொண்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில் இவற்றைஒழுங்குபடுத்துகின்ற ஒரு வாழ்க்கைமுறையாக வாழ்கைச் சித்தாந்தமாக ஒரு முழுமையானஇஸ்லாமாக பார்க்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடாகவே நாம்
பார்க்கலாம்.

அவ்வாறு பார்க்கத்தவறுவதாலேயே மத ஒதுக்கல் சிந்தனையில் இருந்து பிறந்த முதலாளித்துவதாராண்மைவாதச் 
சிந்தனை, மற்றும் செயலாக்க அமைப்புகள் என்பவற்றினது தாக்கத்திற்கு 
அவன்“நாகரீகம்” எனும் பெயரில் கண்ட கண்ட ஜாஹிலிய்ய சிந்தனைகளைக் கொண்டு தனது இளமைப்பராயத்தை ஒழுங்குபடுத்த முற்படுகிறான்.

இதற்கு பிரதான காரணம் அவனுக்கு போதிக்கப்படும் இஸ்லாமும் அவன்
காணும் தாவாமுறைகளும் வெறும் இபாதாக்களை செய்யத்
தூண்டுவதுடன் நின்றுவிடுவதேயாகும்!

உண்மையில் இஸ்லாத்திற்கு அன்னியமான இஸ்லாத்தை குழிதோண்டிப்
புதைக்க முற்படும்மேற்கினது கலாச்சார படையெடுப்பும்,  வாழ்கை முறையையும்,  சிந்தனைப்படையெடுப்பையும், ஒரு முஸ்லிம் இளைஞன்
உணரவேண்டுமாயின் அதற்கு அவன் இஸ்லாத்தை ஒருமுழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாக (Ideology)  வாழ்க்கை முறையாக அவன் விளங்குவதும்அவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்வதற்கு தன்னைப் பண்படுத்திக் கொள்வானாயின் அவன் இத்தகைய மேற்கினது ஜாஹிலியத்தில் இருந்து விடுபட்டு இஸ்லாத்தை மிகவும் அக்கறையுடன் தனது தனிப்பட்ட வாழ்வில் முடிந்தளவு பின்பற்ற முற்படுவதுடன் அது சமூகவாழ்வில் மலர்வதற்கான தடைக்கற்களையும் அறிய முற்பட்டு உரிய தாவாக்களை முன்னெடுக்கக் கூடிய ஒரு இஸ்லாமிய இளைஞனாக மாறுவான்.

அத்துடன் இஸ்லாம் சமூக வாழ்வில் முழுமையாக பின்பற்றப்படுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவன் உணர முற்படும்போது இன்று முஸ்லிம்களுக்கா ஒரே தலைமை உலகில் இல்லாததும், முஸ்லிம் உம்மத் தேசியவாதச் சிந்தனைக்குள்ளும், மேற்கினது முதலாளித்துவ ஜனனாயக விழுமியங்களிலும் கொண்டுள்ள நம்பிக்கை முறைபற்றியும் அவன் உணர ஆரம்பிப்பதுடன் அவற்றில் இருந்து உம்மத்தை விடுவிக்கத் தேவையான உரிய தாவாக்களையும் அவன் மேற்கொள்வான்.

அது அவன் வாழும் நாட்டில் உள்ள அரசியல் மற்றும் ஏனைய மேற்கினது
வாழ்க்கை முறைபற்றியஅடிப்படைப் பார்வையில் உள்ள சமூக, கலாச்சார
சீர்கேடுகளை கோடிட்டுக் காட்டி இஸ்லாத்தை ஒருமாற்றீட்டு வாழ்க்கைத்
திட்டமாக அவன் பிற சமூகத்திற்கு தாவா செய்ய வழிவகுக்கும்.

அத்துடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இஸ்லாம் ஒரே தலைமையின் கீழ்,இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்பட்டு, 
முழுமையாக அமுல்படுத்தப்படுவதன் அவசியம் குறித்தும்இஸ்லாமிய
வெளிநாட்டு கொள்கை மூலமாக  தாவா மற்றும் ஜிஹாத் மூலம் அவ்வரசு
உலகில்இஸ்லாம் மீள ஒழுங்குபடுத்தி இன்றுள்ள முதலாளித்துவ தலைமைத்துவத்தை மாற்றீடு செய்யும்ஒரு தலைமையாக  இஸ்லாம் மீண்டும் வரவேண்டும் எனும் “சீரியசான இஸ்லாமிய”இளைஞனாக அவன் மாறுவான்.

இத்தகைய சிந்தனைப்போக்கு அவனை நிச்சயம் வழிகேட்டில் இருந்து 
பாதுகாத்து மறுமையில்ஈடேற்றம் பெறவழிவகுப்பதுடன் இஸ்லாத்திற்கும் 
பலம் சேர்க்கும் இன்ஷா அல்லாஹ்..,

     

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!

Everyone is a kind of anxiety, sadness, anger is bound to.

 உலகம், மே 23: ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.

குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.


அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.

உங்களது துணைக்கு உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில் இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.

கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லலாம்…

இது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும் கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இந்த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும்.

உனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா, கண்களில் ஏன் இந்தக் கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக்கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

கவனத்தைத் திருப்புங்கள்

சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.

மனம் விட்டு பேசச் சொல்லுங்கள்

சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடைக்கும்..

உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.

எனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்…!

கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா? மருத்துவர்கள் தரும் தகவல்கள்..




உலகம், மே 17: முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.



கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.



கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.



இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.



கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.



கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.



அதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கீழே ஆண், மேலே பெண் முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.



கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.



அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.



கர்ப்ப காலத்தின்போது வாய் வழி உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.



கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல


ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.


தாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.



பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்.

முத்துப்பேட்டை ஏழை மக்களின் நிலைகளும் பணக்கார முதலைகளின் சூழ்ச்சியும் ஓர் பார்வை.


முத்துப்பேட்டை, பிப்ரவரி 14: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பேட்டை நகரம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், தலித் என பழங்குடி இன மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இதில் மொத்த மக்கள் தொகை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். 

இதில் தனியார் கல்விக்கூடம் 4, அரசு ஆண்கள் கல்விக்கூடம் மற்றும் பெண்கள் கல்விக்கூடம் 4 என கல்வி கலாச்சாரத்தில் தமிழகத்திலேயே முதன்மை நகரமாக விளங்கி வருகிறது. இதில் பள்ளிவாசல்கள், கோயில்கள், சர்சுகள் உள்ளிட்ட ஆன்மீக கலாச்சாரத்தில் முதன்மை இடத்தை பெற்று அனைத்து மதத்தவரும் சகோதரத்துவ வாஞ்சையோடுதான்  வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இந்த நகரில் 80 சதவீதத்திற்கும் மேல் முஸ்லிம்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது முன்னோர்கள் கல்வி அறிவு இல்லாமலும், பகுத்தறிவு இல்லாமலும் வாழ்ந்து மரணித்தார்கள். இவர்களின் பொடு போக்கான இந்த வாழ்க்கை மற்றும் கேலித்தனமான பழக்கம் மது, மாது, சூது ஆகியவைகளுக்கு அடிமைகளாக மாறி தங்களுடைய சொத்துக்களை விற்றுத்தீர்தனர். அப்போது இவர்களுக்கு தெரியவில்லை வரக்கூடிய தங்களின் சந்ததிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்று.? 

நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பின்பற்றி நடந்த அவர்களின் தலைமுறையினர் இன்று மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வருவதை நாம் கண்ணெதிரே காணமுடிகிறது. இந்த நிலை அடியோடு மாற்றப்பட வேண்டும். இதற்க்கு இளைய சமுதாயமாகிய நாம் தாம் கல்வி, பகுத்தறிவு, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் முதன்மை நிலையை அடைய பாடுபட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக நமதூர் மாணவர்கள் கல்வியை நோக்கி பயணிக்கிறார்கள். 

இன்னும் பல்வேறு மாணவர்கள் சாதித்தும், சாதிக்கவும்  துடிக்கிறார்கள். இந்த நிலையில் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த எத்துணையோ மாணவர்கள் தங்களின் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயின்று அதிக மதிப்பெண்களை (முதலிடத்தை) பெற்ற எத்துனையோ மாணவர்கள் மேற்படிப்பிற்கு செல்ல முடியாமல் மனம் உடைந்து சாதாரண 2000 முதல் 2500 ரூபாய் மாத சம்பளத்திற்கு கூலி வேலை செய்யக்கூட காத்துக்கிடக்கும் இந்த இளைய சமுதாய மாணவர்களின் எதிர்காலம் தான் என்ன.?


மேலும் இந்த ஊரில் தான் அதிகமான பணம் வசதி படைத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருந்தும் கூட இந்த ஏழ்மையான மாணவர்களின் நிலை இன்று வரைக்கும் வெறும் கேள்விக் குறியாகத்தான் இருந்து வருகிறது. 

மேலும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்றாவது தங்களுடய பிள்ளைகளை மேற்படிப்பிற்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணி தங்களுடைய வீடுகள் மற்றும் நிலங்களை விற்க முன் வருகிறார்கள். இந்த சூழ் நிலையை எதிர் பார்த்து கிடக்கும் எத்துணையோ நமது பணக்கார முதலைகள் அந்த ஏழை வீடுகள் மற்றும் நிலங்களை எப்படியாவது வாங்க வேண்டும் என்று எண்ணி அவர்களிடம் பணத்தாசையை காட்டி கூடுதல் பணம் கொடுத்து அந்த நிலம் மற்றும் வீடுகளை தன் வசப்படுத்துகிரார்கள். 

மேலும் இவர்கள் வாங்கிய சொத்துகளை எந்த பயன்பாட்டிற்கும் உபயோகிக்காமல் வெறும் கிடப்பில் போட்டு விடுகிறார்கள். மேலும் வாங்கிய சொத்துகளை கிடப்பில் போட்டு சுமார் 5  வருடம் அல்லது 6 வருடம் கழித்து அவற்றை 10 மடங்கு இலாபத்திற்கு விற்கிறார்கள். 

ஆனால் அந்த சொத்துகளை விற்ற ஏழ்மை குடும்பத்தை சார்ந்த மக்கள் தங்க இடம் இல்லாமல் வேறு ஊர்களுக்கு செல்வதும், அல்லது நமது ஊரிலேயே வாடகை வீடுகளில் தங்கியும் தங்களுடைய வாழ்கையை சிரமத்திலேயே கழித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பணக்கார முதலைகள் அனைத்து ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்களின் சொத்துக்களையும் தன் வசப்படுத்தி இந்த முத்துப்பேட்டை நகரை தன்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற மாபெரும் இலட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். 

இது போன்றவர்களின் செயல்பாடுகளுக்கு முற்று புள்ளி வைக்க இளையசமுதாயம் தயாராகி வருகிறது. இது குறித்து நமது அடுத்த கட்டுரையில் காண்போம் இன்ஷா அல்லாஹ்...

தொடரும் எக்ஸ்பிரஸின் வேட்டை...

தொகுப்பு:


A. முஹம்மது இலியாஸ், MBA., MA. (Journalism & Mass Communication ) 






உலக பத்திரிகை சுதந்திரம் ஓர் பார்வை..!!!


ஊடகம், மே 05 : ஊடக சுதந்திரம் என்பது ஊடகங்களுக்கான மிரட்டலும், தணிக்கைகளும் இல்லாமல், உண்மையான தகவல்களை வெளியிடுவதற்கான சுதந்திரமாகும். இன்றைய நிலையில் உலகின் பலபாகங்களில் உண்மையான ஊடக சுதந்திரங்கள் வெவ்வேறு பாத்திரங்களை படைத்துவருகின்றன. மேற்கத்திய நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த ஊடக சுதந்திரம் கட்டுப்பாடுகளற்ற நிலையில் காணப்படுகின்றன, சீனா, ஈரான், வடகொரியா, கியூபா, கிழக்காசியாவிலுள்ள சில நாடுகளில் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அந்த நாடுகளின் அரசுகளின் கையாடல்களுடன் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஓரளவுக்கு சுதந்திரமாக செயற்படும் தன்மையும் காணப்படுகிறது. உண்மையில் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச சாசனத்தினது பிரகடனத்தின் 19வது பிரிவு இவ்வாறு கூறுகின்றது. 'சுதந்திர கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், வெளியிடுவதற்கும், எல்லோருக்கும் உரிமை உண்டு. பிறரின் தடையின்றி தான் ஒரு கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், தேசங்களின் எல்லைகளைப் பொருட்படுத்தாது எவ்வகையான ஊடகங்களின் மூலமும் தகவல்களைப் பெறுவதற்கும் வழங்குவதற்கும் உரிமையும் இதில் உள்ளடங்குகிறது' என்று அவ்வாசகம் கூறுகிறது.

என்னதான் நவீன ஊடகங்கள் வந்தாலும் ஊடகக்துறையிலேயே முதலிடத்தை வகிப்பது பத்திரிகைத்துறையாகும். அக்காலத்தில் மன்னரிடமிருந்து செய்திகளை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவும், போர்பிரகடனம் செய்யவும், செய்திகளை பரப்பவும் வேண்டி பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு வந்தன. தீமூட்டுதல், புகைவைத்தல், புறாவை தூது அனுப்புதல், குதிரைவீரன், சப்தமிடல் போன்ற பல்வேறு வடிவங்களின் இறுதியாக பின்நாளில் சீனர்களின் காகிதக் கண்டுபிடிப்புக்குப்பிறகு புத்துயிர் பெற்று, அச்சு ஊடகத்தில் பத்திரிகைத்துறையானது வரலாறு படைத்தது. அன்று இலங்கையில் அறிஞர் சித்திலெவ்பையின் 'முஸ்லீம் நேசன்' எனும் பத்திரிகை எழுச்சிபெற்று விளங்கியது. கடந்த காலங்களில் கொழும்பில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பத்திரிகைத்துறையானது இன்று நாட்டின் மூலை முடுக்கொல்லாம் செய்திப்பத்திரிகைகள் நாட்டு நடப்புக்களையும், மக்களின் பல்வேறு விசயங்களையும் அன்றாட செய்திகளாக வழங்கிவருகின்ற அளவுக்கு மக்களின் மத்தியில் பத்திரிகைத்துறை தனிமுத்திரை பதித்தே வருகின்றது.

வாசிப்பின்மீதான பற்றினை பற்றிக் கொள்வதவற்கும், மொழிரீதியான மேம்பாட்டை வளர்த்துக் கொள்ளவும் பத்திரிகை சிறந்த ஊடகமாக தொழிற்படுகிறது. ஆதலால்தான் மொழியானது ஒருசாதனமாகும் என்பர். அதனை வளப்படுத்தவும், அறிஞர்கள் மட்டுமன்றி, எவரும் தமது எண்ணக்கருவை வெளியிடவும், எழுத்தாக்கம் செய்து மற்றவர்கள் படித்தறிவதற்கும் பத்திரிகை மிகவும் அவசியமானதாக காணப்படுகிறது. என்னதான் பல்வேறு நவீன தொழிற்நுட்ப அறிவு வந்திட்டபோதிலும் பத்திரிகைத் துறை சோர்வடைந்து போகாது தலைநிமிர்ந்தே வலம்வந்து கொண்டிருக்கிற நிலையில் உலக மக்கள் பத்திரிகையின் உயரபிமானத்தை நினைவுபடுத்தும் வகையில் உலகின் பல அமைப்புக்களுக்கும், விசயங்களுக்கும் சர்வதேச தினங்கள் அமைந்துள்ளதுபோல் தகவல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் பத்திரிகைகளுக்கும் அதன் சுதந்திரமான தன்மைகள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்கிற நோக்கில் அமைந்ததுதான் இந்த உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகும்.

இன்று மனிதவாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட பத்திரிகைகள் உண்ணுகின்ற உணவைப் போன்று மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது அதிகாலை மலர்ந்துவிட்டால் இணையத்தில் தேடுகிறோம் பத்திரிகையை. இணையம் இல்லாதவர்கள் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் செய்தித் தலைப்புக்களையாவது அலுவலகம் செல்வதற்கு முன்னர் பார்த்து விட்டு செல்வதில் மிகவும் ஆர்வமாய் இருக்கின்றனர். இதற்குக் காரணம் நாட்டினதும், உலகினதும் நடப்புக்களை அறிந்து கொள்வதற்கேயாகும். அதுமட்டுமன்றி உலகின் ஒவ்வொரு காட்சிகளை புதிய புதிய விசயங்களுக்கு, நிகழ்வுகளும், மாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதனை சுடச்சுட அறிவதில் அதிக ஆர்வம் கொள்கின்ற ஒருநிலைமைக்கு இன்றைய மக்கள் சிந்தனை அறிவியியல் ரீதியிலமைந்த போக்குக்கு உட்பட்டுள்ளமையினாலாகும்.

பொதுவாக பத்திரிகையின் பிரதான தொழிற்பாடாக பல்வேறு கோணங்களில் இருந்து செய்திகளை ஒன்றுதிரட்டி தன்னுடைய வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளையிட முனைகின்றன. பள்ளி செல்லும் மாணவர்கள் தொடக்கம் வயதுமுதிர்ந்த கிழடுகள் வரைக்கும் பத்திரிகையை வாசித்து மகிழ்வர். தினசரி, வாராந்தம், மாதாந்தம், காலாண்டு எனப்பல பிரிவுகளாக பத்திரிகைகள் வெளியாகின்றன. அந்தவகையில் தேசிய பத்திரிகைகளாக அமைந்த, நாளாந்த பத்திரிகைகளுக்குத்தான் மக்களின் ஏகோபித்த ஆதரவு அதிகம் கிடைக்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது. தினசரி நடப்புக்கள் பற்றிய விடயங்களும், அன்றாடம் நடைபெறும் உலக நிகழ்வுகளையும் படம்பிடித்துக் காட்டிம் தினசரிகள் முன்னிலை பெறுகின்றன. இருப்பினும் பொதுவாக வாசிப்பவர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதில் பத்திரிகைகள் மிகவும் அவதானமாக செயற்படுகின்றன. அப்போதுதான் உரிய பத்திரிகையின் மீதான கண்னோட்டத்தில் மக்களும் ஆர்வமாக இருப்பர்.

எமது நாட்டைப்பொறுத்தளவில் ஒருகாலத்தில் யுத்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வந்த பத்திரிகைகள் இன்று சினிமா, விளையாட்டு, பிரதேசவாரியான அபிவிருத்திச் செய்திகளையும். அரசியல் அலசல்களையும், சுகாதார மற்றும் உடல், உளநல விஞ்ஞான, ஆய்வியல், கல்விப்பகுதி போன்ற இன்னோரன்ன கட்டுரைகளையும் தாங்கிவருகின்ற நிலையில் பத்திரிகைகள் காணப்படுகின்றன. பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாப்படும் என்று வாய்கிழிய பேசுகின்ற சிலரது பார்வையில் சில பத்திரிகைகளை மக்கள் கண்டுகொள்ளாததும் கவலைக்குரிய விடயமாகும். நடுநிலைமை வகிக்காது பக்கச்சார்பான பத்திரிகைகள் பலவும் நாட்டுக்குள் உலாவருகிறது. இதனையும் கவனித்து உண்மையான பக்கசார்பற்ற பத்திரிகைளை இனங்காண்பதும் ஒருவகையில் சிறந்தவாசிப்புக்கு தீணியாக அமைகின்றமை நோக்கத்தக்கதாகும்.

எனவேதான் மக்களின் குழப்பத்திற்கு வழிவகுக்கக்கூடிய செய்திகளையும், ஆதாரமற்ற செய்திகளையும், நம்பத்தகுந்த செய்திகளையும் பிரசுரிப்பதனால் மக்களின் மீதான நம்பிக்கை குறைவடைந்து செல்கின்ற பத்திரிகைகளும் எம்மத்தியில் இருந்த இடம் தெரியாது போன சரித்திரமும் நமக்குத் தெரியாததா என்ன? அதேNவைள சில பத்திரிகைகள் உரிய பிரதேசத்தின் செய்திகளை பிரசுரித்து மக்களின் மனங்களில் விரைவில் இடம் பிடிப்பதற்காகவேண்டி பிரதேசத்து முக்கிய புள்ளிகளின் வயிற்றில் புளிக்கரைக்கும் விடயங்களை போட்டு வாங்கிக் கட்டிய சம்பவங்களும் உண்டு. அவ்வாறான பத்திரிகைகள் தம்முடைய சிலநோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வேண்டிய வெளியிடப்படுகின்றன. எழுதும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக இல்லாதது பொல்லாதது என எல்லாவற்றையும் அலசுவதும், அதனை பிரசுரிப்பதும் ஆபத்தான விளைவுகளையே தரும். அதேவேளை நாட்டினதும், மக்களினதும் நலன்கருதி செய்திகளை அறியச்செய்வதில் பத்திரிகைகளுக்குள்ள தார்மீகப் பொறுப்புக்களையும் அறிந்து பிரச்சினைகளை உண்டுபண்ணாதவகையில் பிரசுரிப்பதும் அவசியமாகும்.

மறுபக்கம் பார்ப்போமானால் உலகில் உண்மைத்தன்மை மிக்கதான செய்திகளை பிரசுரிக்கின்றபோது செய்தியாளர்களும், பத்திரிகைகளும் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். உலகில் கடந்த பல வருடங்களில் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளளனர். கடந்த 2004ஆம் மட்டும் 129பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில்கூட பல பத்திரிகையாளர்கள் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டு வருகின்ற சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், உண்மையை எழுதுவதற்கு தயங்குகின்றனர். அவர்கள் எழுதியவை, கூறியவை தொடர்பாக ஒருவர் விருப்பம் இல்லாமலிருந்தமையாகும். ஒருவர், ஆராயக்கூடாததை ஆராய்ந்தமையினாலாகும், ஒருவர் ஊடகவியலாளர்களை விரும்பாமையினாலாகும். தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்த காரணத்தினாலாகும். எனவே இந்த பத்திரிகைத்துறையானது மிகவும் ஆபத்தானது என்பது ஒருபுறம் இருப்பினும், ஒருவருக்காக வேண்டி சமுதாயம் பாதிக்கின்ற விடயங்களுக்கு முன்னுரிமைவழங்கி செய்திகள் பிரசுரமாகின்றபோது பிரச்சினைகளும், அடிதடிகளும், உயிராபத்துக்களும், நடைபெறுகின்ற நிலைமைகளை இல்லாதொழிப்பதும், பத்திரிகைச்சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக வேண்டியே, அன்று உலகப் பத்திரிகை தொடர்பான பிரகடனம் வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநாளை உலக பத்திரிகைகள் அமைப்பு உலகளாவிய ரீதியில் கொண்டாடி வருகின்றன. உண்மையில் பத்திரிகைகள் சுதந்திரமான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி செய்திகளை வெளியிடுகின்ற போதுதான் அவற்றை மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை வீணாகபோகாதவாறு பத்திரிகைதுறை சார்ந்தோருக்கு உயர்விருதுகள் வழங்கப்படுகின்றன. சமூகத்தின் நண்மை கருதி பிரசுரிக்கப்படுகின்ற செய்திகள் மக்கள் சக்தியாக போற்றப்படும். போர்வீரனின் வாளைவிட எழுத்தாளனின் பேணாமுனை வலிமையானது என்பர். சர்வதேச ரீதியிலும் எழுத்தாளர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு அவர்களுக்கான கருத்தாடல்கள், நம்பிக்கைகள் ஊட்டப்பட்டு வருவதுடன், ஊடகத்தின் மூலமாக சமாதனம், பிரஜைகளின் ஊடகவழிமுறைகள், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்புச் செயன்முறைகள் போன்ற சர்வதேச பட்டறைகள் வழங்கப்பட்டு, சரியான நேரத்தில் சரியான விபரங்களை சரியாக தொகுத்து வழங்குகின்ற ஊடகவியலாளராக அமைகின்றபோது அது தீர்க்கமான சகவாழ்வுக்கு உந்து சக்தியாக அமையும். அவ்வாறான உண்மைகளை எழுதுகின்றபோது சில சில அரசியல்வாதிகள் தங்களை இழிவுபடுத்திவிட்டது என்கிற காரணத்தை மையப்படுத்தி நீதிமன்றம் செல்கின்ற போக்குகளும் காணப்படுகின்றது. விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றபோது அதற்குரிய பரிகாரத்தை செய்கின்ற ஒரு நிலை அரசாளும் அரசிடமும், அதிகார வர்க்கத்திடமும் காணப்படுமானால் நீதிகளும், சமசர்மபோக்கும், மக்களுக்காக சேவை செய்கின்ற தார்;ப்பரியமும் உண்மைத்தன்மையான நிருவாகக் கட்டமைப்புக்;களும் மேலோங்கிக் காணப்படும்.

அந்த வகையில் யுனெஸ்கோவின் அண்மைக்கால பிரகடனங்களுள் மிகவும் குறிப்பிடத்தான விடயமாக கருதப்படுகிற ஒருவிடயமாக ஊடகங்களின் பன்மைத் தன்மையும், சுதந்திரமும்(வின்ட் ஹொக், நமீபியா – 1991) சகிப்புத்தன்மை (பரீஸ் - 1995) முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அதாவது இந்தப்பிரகடனமானது 'ஒருநாட்டில் சிறந்த ஜனநாயகத்தை பராமரிக்கவும், பொருளாதார அபிவிருத்தியின் மேம்பாட்டுக்கு உதவுவனவாகவும், சுதந்திரமானதும், பல்லினத்தன்மைவாய்ந்த பத்திரிகைத்துறையை உருவாக்கவும், அதை படிப்பதற்காக வெளியிடுவதனையும் வலியுறுத்தியே' இவை முன்மொழியப்பட்டுள்ளன. அதனை கட்டிக்காத்து வருடாந்தம் சிறந்த பத்திரிகைகளுக்கு 'புரடைடநசஅழ ஊயழெ' பெயரில் உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான பரிசுகள் வழங்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்படவும். சுதந்திரமான எண்ணக்கருக்களை வெளியிடவும் உரிமையுள்ளது. இதனால் பத்திரிகைகளுக்கும், அதன் செய்தியாளர்களுக்கும் ஏற்படுகின்ற தாக்கங்களை இத்தினத்தில் நினைவுகூறல் அவசியமானது என்பதை யுனெஸ்கோ அமைப்பு சில விடயங்களை முன்னிறுத்தியுள்ளது. அதாவது இன்றைய நாளில் பத்திரிகைச்சுதந்திரத்திரம் பாதுகாக்கப்படும் நோக்கில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை உட்சாகப்படுத்தி, ஆக்கபூர்வமான முறையில் விருத்தி செய்தல், உலக ரீதியாக பத்திரிகை சுதந்திரனது நிலையை மதிப்பிடவும், பத்திரிகை சுதந்திரம் மீதான நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தல், பொதுமக்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பத்திரிகை மீதான பத்திரிகைசுதந்திரம் பற்றி பத்திரிகையாளர்களிடையே விவாதங்களை மேற்கொள்ளல், பத்திரிகையாளர்கள் தம்முடைய தொழிலின் நிமித்தம் கடமையின் போது காணாமல் போனவர்களினது பெயரில் நினைவுபடுத்துவதும், பத்திரிகை சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றபோது எற்படுகின்ற பத்திரிகைகளுக்கு எதிராக ஏற்படுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுப்பது போன்ற விடயங்களில் முன்னுரிமை வழங்கியே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

அதேவேளை இலங்கைப் பத்திரிகை புகார்கள் ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொழில் ஒழுக்கக்கோவையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பார்க்கிறபோது ஒவ்வொரு ஊடகவியலாளரும் தொழிலின் கௌரவத்தைப் பேணும் வகையில் நடந்துகொள்வதுடன், நாட்டினதும், பொதுமக்களினதும் நலன்கருதி சனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப்பாதுகாத்தல் அத்துடன் குற்றச் செயல், ஊழல், சீர்கெட்ட பரிபாலனம் அல்லது பாரிய தவறொன்றினைக் கண்டு பிடித்தல் அல்லது அம்பலமாக்குதல் விடயங்களில் மிகக் கவனமாக செயற்பட்டு தமது சமூகப் பொறுப்புடன் செயலாற்றுதல் அவசியமாகும் என்பதை வலியுறுத்தியுள்ளன.

இதன்படி பார்க்கின்றபோது இன்று நமது நாட்டுப்பத்திரிகைகளில்கூட நமது நாட்டில் நடைபெறும் அன்றாட அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, மதவிவகார, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த விடயங்களை நேரிடையாக எழுதுவற்கு துணிவின்றிக் ஊடகவியலாளர்கள் காணப்படுகின்றனர். மறைமுகமாக வேறுபெயர்களில் எழுதுகின்ற நிலை காணப்படுகிறது. உண்மையான எழுத்துச் சுதந்திரத்தை சரியான முறையில் அமுல்படுத்துவதில் அரசு காட்டும் அக்கரையின்மையே துணிவின்றி காணப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாக நோக்கப்படுகின்றது. முழுமையாக அரசுக்கு சார்பாக எழுதுகின்ற ஒருநிலைப்பாடு காணப்படுவதன் காரணமாக செய்திகளில் அல்லது அந்தப் பத்திரிகைகளைப் பார்ப்பதற்குக்கூட மக்கள் வெறுப்புற்ற நிலையும் காணப்படுகிறது. இது உண்மையான பத்திரிகை சுதந்திரமாகக் கொள்ள முடியுமா என்ன? மக்களுக்கு ஊடகங்கள் தொடர்பான உரிமைகளும், பொறுப்புக்களும் உள்ளன என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. உண்மையிலேயே ஊடக சுதந்திரம் என்பது பிரஜைகளின் உரிமையேயொழிய ஊடக நிறுவனங்களின் உரிமையல்ல. ஊடகவியலாளர்களும், நிறுவனங்களும் இந்தமக்கள் சார்பாக இவ்வுரிமையை நிறைவேற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர். இதனை தெரிந்து கொள்ள முடியாத நமது மக்களை சில படப்பிடிப்பாளர்கள் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாகி எழுதவும் தெரியாது, ஊடகம் என்றால் என்னவென்றும் புரியாத சிலர் அடையாள அட்டைகளுடன் பத்திரிகைக்காரர்கள் என்று போலித்தனம் செய்து மக்கள் மத்தியில் உலாவருகின்றனர். இவர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள்தானா? என்பதை சமூகம் இனங்கண்டுகொள்ள வேண்டும்.

உண்மையான சமூக சிந்தனையுள்ள, சமூகத்தின் உண்மைத்தன்மைகளை வெளிக்கொணரவைக்கின்ற ஊடகவியலாளர்கள் இருக்க ஒருசில படங்களை மாத்திரம் பிடித்துக் கொண்டு நாங்களும் ஊடகவியலாளர்கள்தான் என்கிற மமதையில் கிராமப்புறங்களில் சிலர் ஊடறுக்கின்றனர். இவர்களைப் போல அன்று ரிச்சட் டி சொய்சா, ரோகன குமார, ரமேஷ் குமார், பாலநடராஜா, நிமலாராஜன், லசந்த விக்கிரதுங்க, ஆரியரத்ன தொம்பகாவத்தை இன்னும் பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும், படுகொலையும் செய்யப்பட்டனர். இவர்கள் செய்தது சமூகத்தில் காணப்படுகின்ற அக்கிரமங்கள், ஆட்சியதிகாரங்களின் வீரோதத்தன்மைகளை, குழிபறிப்புக்கள் போன்றவைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததுதான் இவர்கள் செய்த குற்றங்களாகும். இன்று இதனைத் தவிடுபொடியாக்குகின்ற நிலமையிலிருந்து விடுபட்டு உண்மைத்தன்மையான விடயங்களை வெளிக்கொணர்வதற்கு பத்திரிகையாளன் காரியமாற்ற வேண்டும். இன்று பட்டிதொட்டியெல்லாம் பத்திரிகையாளர் மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. அந்தளவுக்கு பத்திரிகைகள் சமூகத்தின் காலக்கண்ணாடியாக மாறியுள்ளது. தங்களது கருத்துக்களை வெளியிடுகின்ற சுதந்திரம் ஒருபக்கமிருக்க சிலர் தங்களை அடையாளப்படுத்துவதற்காக பத்திரிகையாளர் மாநாடுகள் என்கிற பேரில் ஒருசில பத்திரிகையாளர்களை அழைத்து நடாத்துவது கேலிக்கூத்துக் ஒப்பான விடயமாகவே பார்க்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட்டு உண்மையான, சமூகத்திற்கு உதவிடும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு விடயத்திற்கு பத்திரிகைகள் உதவிடுகின்ற அதேவேளை பத்திரிகையாளர்களின் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படாது பாதுகாக்கப்படுகின்ற மேம்பட்ட சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற ஊடகமாக தொழிற்படுவதற்கும் இன்றைய நாளை நினைவுகூறல் வேண்டும்.

எனவே, பத்திரிகைகள் உண்மைத்தன்மை, பக்கச்சார்பற்ற தன்மை, சமூகத்திற்கு தீங்குவிளைவிக்காதவாறு செய்திகளை வெளியிடுவதில் மிகவும் அவதானமாக செயற்படுதல் வேண்டும். சமூதாயத்தை தீய வழியில் செல்லுகின்றவாறு செய்திகளை வெளியிட்டு குழப்பங்களுக்கு தூபமிடக்கூடியவாறு பத்திரிகைகள் நடவாது பார்த்துக்கொள்ள வேண்டிய பாரியபொறுப்பும் உண்டு. இந்த நிலைகைள் இருபக்கமும் சாதக பாதக நிலையில் நின்று சிந்திக்;கின்ற நிலை தோற்றம் பெறல்வேண்டும். செய்திகளின் அடிப்படையில் அரசியல் வாதிகளாலும், அவர்களது அடியாட்களாலும் ஏற்படுத்தப்படுகின்றன பத்திரிகைச்சுதந்திர மீறல்கள் ஒழிக்கப்பட்டு சிறந்த தொடர்பூடகத்தன்மை அச்சூடகங்களுக்கு கௌரவத்;தன்மை வழங்கவும் வேண்டியே உலக பத்திரிகை சுதந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னின்று செயற்படுத்த இன்றைய நாளை நினைவுறுவோம்.

எஸ். எல். மன்சூர் (B.Ed)

பிற்ப்படுத்தப்பட்ட மாணவர்களும், எதிர்கொள்ளும் சவால்களும் ஓர் பார்வை:


முத்துப்பேட்டை, ஜனவரி 05 : ஒரு நாட்டின் மிகப்பெரிய சக்தி என்றால் அது மாணவ சக்தி என்பதை அனைவரும் அறிந்ததே! நாட்டின் அரசியல் சூழ்நிலைகளில் மாற்றங்களை கொண்டு வரும் அளவிற்கு திறமை கொண்ட மாணவர்கள் இந்தியாவில் வாழ்வது மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்:
இந்தியாவில் நடக்கும் தற்போதைய சூழ்நிலைகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நமது நாடு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுதும் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர் கொடுமைப்படுத்துவது நிறுத்தப்படவில்லை. அரசியல் தந்திரங்கள், அடக்கு முறைகள், ஒடுக்கு முறைகள், ஊழல் போன்ற சாதாரணமான அரசியலுக்கு நடுவே நேர்மையையும், நீதியையும், சுதந்திரத்தையும், அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழும் சிந்தனை எழுச்சியே மாணவர்களின் இயல்பான குணம் ஆகும். உலகின் எந்த ஒரு நாட்டின் வரலாற்று நெடிகிலும் மாணவர்களின் புரட்சி இன்று வரலாற்றை எழுதி விட முடியாது. இப்படிப்பட்ட இயல்பான குணங்களை கொண்ட மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்துகிற வகையில் சங்பரிவார இயக்கங்கள் உயர் ஜாதி மாணவர்களிடம் மதவாத தீவிர சக்திகள் உணர்வை ஏற்படுத்தி, பிற்படுத்தப்பட்ட தலித் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக தூண்டி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் இந்திய ஆட்சியிலும், அதிகார வர்கத்திலும் முழுவதுமாக மதவாத தீவிர சக்திகள் அமர்ந்து கொண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மீது தாக்குதல்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் கல்வியிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மதவாத தீவிர சக்திகளின் நோக்கமே பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வளர்சியடையக்கூடது என்பது தான் இவர்களின் நோக்கம். இவ்வாறே பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை பெரிதும் அவல நிலையாக உள்ளது.
எதிர்கொள்ளும் சவால்கள்:
ஆகா இன்றைய உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல்,தனியார்மயமாக்கள் என்று இந்தியா தனது வணிக தொடர்பை விரிவு படுத்தி உலக அளவில் போட்டி போடும் நிலையில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டிய அரசும், அதிகாரிகளுமே சிறுபான்மை இன மாணவர்களுக்கு துரோகம் செய்யும் போது அதை எதிர்கொள்வதே மாணவர்களுக்கு ஓர் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
நாம் என்ன செய்ய வேண்டும்?:
இந்த நாட்டில் அரசியல் வாதிகளை விடவும், ஆட்சியாலர்களைவிடவும் பொறுப்புள்ள ஓர் சமூகம் என்றால் அது மாணவச் சமூகம்தான். ஆட்சியாளர்களாலும், அதிகார வர்காத்தாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் நாட்டின் கொள்கைகளும், சட்டங்களும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவும் பாமர மக்களுக்கு விரோத கொள்கையாகவும் இருந்து வருகின்றது. மாணவ சமூகமே! அநீதிகளையும், அடக்குமுறைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையை கலைத்து விட்டு இந்த இந்திய சமூகம் அமைதியுடனும், சுதந்திரத்துடனும், நீதிடனும் வாழ வேண்டுமாயின் நாம் களத்தில் இறங்க வேண்டும். மதவாத தீவிர சக்திகள் சூழ்ந்துள்ள இந்திய ஆச்சியிலும், அதிகாரத்திலும் நாம் அமர வேண்டும். இந்திய சுதந்திர போராட்ட காலத்திலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துமையாமை இயக்கம் நடத்தி போராட்டம் செய்த வரலாற்றிலே அதிக பங்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உண்டு.ஆம் ஆகையால் மாணவர்களே நாம் மீண்டும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்தும் காலம் நெருங்கி விட்டது மதவாத தீவிர சக்திகளின் கோரப்பிடியிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டும். நாம் அதற்கு உறுதியுடன் களமிறங்க ஒருங்கிணைய வேண்டும்.
முடிவுரை:
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மீதான இனவெறி தாக்குதல்களை கட்டுப்படுத்த வேண்டிய அரசியல் வாதிகள் லஞ்சம், ஊழல் என உல்லாச வாழ்க்கையில் எதிர்கால இந்தியாவை சிறிது சிறிதாக தொலைத்து வருகின்றனர். இந்த அவலத்தை மாற்றி எதிர்கால இந்தியாவை அபாயத்திலிருந்து காப்பாற்றும் கடமை இன்றைய மாணவர்களுக்குத்தான் உள்ளது. எனவே நாளைய தலைவர்களாகிய நாம் தேசத்திற்கு வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராகுவோம். பிற்படுத்தப்பட்ட மாணவ சமூகமே ஒன்றிணைவோம் சக்தி பெறுவோம்...
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

A .முஹம்மது தமீம் அன்சாரி
மாணவன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
முத்துப்பேட்டை.

முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டிய ஊடகத்துறை!!!

உலகம் ஆகஸ்ட் 20 : ஊடகம் (மீடியா) இன்று உலகை சுருக்கிகி உள்ளங்கையில் தந்து விட்டது. அதன் வளர்ச்சியும் பிரம்மாண்டமும் இன்று ஒவ்வொரு தனி மனிதன் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பிரம்மிக்கத் தக்க வளர்ச்சியும் வளமும் கொண்டதாய் திகழ்கின்றது. வெகு ஜன கருத்தை உருவாக்கவும் மக்கள் சமூகத்தின் ஆளுமையை வளர்பதிலும் கூட அது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது .ஆனால் இவ்வளவு ஆற்றல் மிகுந்த ஊடகம் (மீடியா) எவ்வாறு தவறாக பயன்படுத்தபடுகிறது. என்பதைப் பற்றி ஆராயும் முன்பு ஊடகம் (மீடியா) என்றல் என்ன? என்பதனைப்பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஊடகம் (மீடியா) என்பதன் விளக்கம்:
ஊடகம் (மீடியா) என்றால் சென்றடையும் வழி என்பது பொருளாகும். அதாவது ஒரு தகவல் மற்றொருவருக்கு சேருவதற்கு பயன்படுத்துகின்ற சாதனங்களின் வழியாகத்தான் செய்திகள் பிறரிடம் சென்றடையும் அதனால்தான் ஊடுருவிச் செல்லக்கூடியவை என்ற அடிப்படையில் இது ஊடகம் எனபடுகிறது.
இந்த ஊடகம் ஒரு காலத்தில் தெருமுனைகளில் நடக்கும், தெருக்கூத்து நாடகம் ஆகியவைகளிலிருந்து தொடங்கி இன்று தினசரி, வார, மாத, இதழ்கள் தொலைக்காச்சி வானொலி, கணினி வலை என்று விரிந்து அபரிமிதமான தொழில் நுட்ப மாற்றங்களைப் பெற்று திகழ்கிறது.
ஊடகம் செய்து வருவது என்ன
இதன் மூலம் மக்களை உயர்த்தி விதவ வேண்டிய மீடியா இன்று அவர்களை அதல பாதாளத்தில் தள்ளிவிடுகின்ற காரியத்தை செய்து வருகின்றது. ஹிட்லாரின் அமைச்சர் கோயபல்ஸ் பாணியில் பொய் பிரசாரமும் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிப்போடும் கலாச்சார சிரழிவுகலாயுமே வழங்கி இன்று மனிதனை மதிமயக்கும் போதை மருந்துகளாக மாற்றி வருகின்றன. அத்துடன் அந்த மீடியா அதிகமான இலாபம் சம்பாதிக்கும் தொழிலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இத்தகைய வேதனையான நிலையினால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. என்றாலும் கூட இன்று பெரும்பாலும் ஊடகம் (மீடியா) இஸ்லாத்திற்கு எதிரான பயங்கரமானதொரு கருத்துப் போரில் ஈடுபட்டிருப்பது முஸ்லிம் சமுதாயம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
முஸ்லிம்கள் எல்லாவற்றிலும் கீழ்நிலையில் இருப்பதை போன்றே ஊடகத்திலும் கீழ்நிலையில் இருப்பது யாவரும் அறிந்ததே அதற்கு காரணம் முஸ்லிம்களது கீழ்நிலைலான கல்வித்தரத்தின் எதிரொலியே.
இஸ்லாமிய சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய பத்திரிக்கையளர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். இந்நிலை மாறவேண்டும்.குறைந்தது ஊருக்கு ஒருவராவது முஸ்லிம் பத்திரிக்கையாளர் இருக்கும் நிலையை இன்ஷா அல்லா நாம் உருவாக்க வேண்டும். இது ஒருபுறம் இருக்கட்டும். இன்று நம்மில் எத்தனை பேர் வாசகர் கடிதம் எழுதுகிறோம். நம் பங்களிப்பு அந்த அளவிலாவது இருக்க வேண்டாமா.?
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி தவறான அவதூறான செய்திகள் பரப்பப்படும்போது ஆத்திரத்திற்கு ஆட்படாமல் அல்லாஹ்வின் கட்டளையான பொறுமையை மேற்கொண்டு மிக ஆழகான முறை யில் சர்ச்சைக்குரிய பிரச்சனையான ஜிஹாத், தீவிரவாதம், பார்த்த போன்ற வற்றில் இஸ்லாமியக் கண்ணோட்டம் குறித்து சம்மந்தப்பட்ட நாளிதழ், வார,மாத, இதழ் டிவி, இவர்களுக்கு அனுப்பிவைத்து தேளிவன முறையில் புரிய வைத்திட வேண்டும்.
ஒருவேளை வேன்றுமென்றே வன்மமான கலவர நிலையை உருவாக்கிட இதுபோல் வேலிடப்பட்டாலும் கூட ஆத்திரப்படாமல் பொறுமையை அணிகலனாகக் கொண்டு நமது சார்பிலேயே இஸ்லாத்தை எடுத்து விளக்கிடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இம் முயற்சி அவர்களது எண்ணத்தில் மண்ணைக் கவ்வச்செய்யும்.
இனியாவது முஸ்லிம் சமூகத்தை கல்வியில் உயர்த்தி அவர்களின் சிலரை ஊடகத்திற்கு வழங்குவதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நாம் உதவிடுவோம். அதே வேலையில் நாமும் அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சைக் குரிய கருத்துகளுக்கு இஸ்லாமியத் தீர்வுதான் என்ன? என்ற வின எழுப்பி அதற்கான தீர்வுகளை ஊடகத்தின் வாயிலாக வேலிடச் செய்வதின் மூலம் ஊடகத்தையும் தூய்மை படுத்தி நமக்குச் சாதகமான சிந்தனைக்கு வழி வகுப்போம்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் அபு பைசல்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)