முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!
Showing posts with label உலகச் செய்திகள். Show all posts
Showing posts with label உலகச் செய்திகள். Show all posts

காஷ்மீர் அட்டூழியங்களுக்கு பதிலடியே யூரி தாக்குதல்: நவாஸ்



லண்டன், செப்டம்பர் 24,2016: யூரியில் ராணுவ உயர் பாதுகாப்பு முகாமில் நடந்த தாக்குதல், காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் அட்டூழியங்களுக்கான எதிர்வினையாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மேலும், யூரி தாக்குதலில் ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி சொல்வதை விடுத்துவிட்டு காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக நிகழ்ந்த உயிர் பலி தொடர்பாக இந்தியா விசாரணை மேற்கொள்ளட்டும் என ஷெரீப் கூறியுள்ளார்.

லன்டணில் செய்தியாளர்களை சந்தித்த ஷெரீப், "காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் உறவினர்களை இழந்தவர்களும், தங்களது பார்வையையும், தங்கள் உறவுகளின் பார்வையையும் இழந்தவர்களும் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். யூரி தாக்குதல் காஷ்மீரில் நடைபெறும் அட்டூழியங்களுக்கான எதிர்வினையாக இருக்கும்.

ஆனால், இந்தியா அவசர அவசரமாக பழியை பாகிஸ்தான் மீது சுமத்துகிறது. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் இந்தியா பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டுகிறது.

காஷ்மீரில் இந்தியா கட்டவிழ்த்துவிட்டுள்ள அட்டூழியம் உலகறிந்தது. காஷ்மீரில் இதுவரை 108 பேர் பலியாகியிருக்கின்றனர். 150-க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்துள்ளனர். காஷ்மீரில் தனது பங்கு என்ன என்பதை இந்தியா சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

யூரி தாக்குதலில் ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி சொல்வதை விடுத்துவிட்டு காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக நிகழ்ந்த உயிர் பலி தொடர்பாக இந்தியா விசாரணை மேற்கொள்ளட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

நிலவில் கேட்ட வினோதமான இசை சப்தம் – முஸ்லிம்களின் ”பாங்கு” சப்தமா?



அமெரிக்கா, பிப்ரவரி 28/2016: பூமிக்கு தென்படாத நிலவின் மறுபக்கத்தில் இசை போன்ற விண்வெளி ஓசையை 1969 ஆம் ஆண்டு அந்த பகுதியை கடந்து சென்ற விண்வெளி வீரர்கள் கேட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ளது.
நிலவில் முதல் முறை தரையிறங்கிய அப்பலோ 11 விண்கலத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரான அப்பலோ 10 விண்வெளி பயணத்திலேயே இந்த மர்மமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அசாதாரண ஒலி பற்றி அதனைக் கேட்ட விண்வெளி வீரர்களின் உரையாடலே தற்போது வெளியாகியுள்ளது. இது வரை காலமும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த சம்பவம் சயன்ஸ் சன்னல் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.
‘நாஸாவின் விளக்கமுடியாத ஆவணங்கள்’ என்ற எதிர்வரும் நிகழ்ச்சியிலேயே வெளியாகவுள்ளது.
இந்த ஒலியை ஒட்ட ஒரு விண்வெளி வீரர், “நீங்கள் அதை கேட்டீர்களா? விசில் அடிப்பது போன்ற சப்தம்? வூவூ?” என்று சக விண்வெளி வீரரிடம் சம்பாசித்துள்ளார்.
பின்னர் மற்றொரு விண்வெளி வீரர் குறிப்பிடும்போது, “இந்த இசை மிக வினோதமாக இருக்கிறது. எம்மை யாரும் நம்பப்போவதில்லை” என்று குறிப்பிடுகிறார்.
இந்த இசை போன்ற ஒலி பற்றி பல தர்க்கரீதியான காரணங்கள் கூறப்பட்ட போதும் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கு முன்னர் நிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கு நிலவில் முஸ்லிம்கள் தொழுகைக்கு கூறும் பாங்கு சப்தத்தைக் கேட்ட நீல் ஆம்ஸ்டராங்கு இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறப்படுகிறது..

லண்டனில் இஸ்லாத்தை ஏற்ற 10 மணி நேரத்தில் பெனரல் (எ) ஜனாஜா என்ற பெண் மரணித்தார்.


லண்டனில் இஸ்லாத்தை ஏற்ற பத்து மணி நேரத்தில் பெனரல் (எ) ஜனாஜா என்ற பெண் மரணித்தார். இறுதி ஊர்வலத்திற்கு ஆள் இல்லாமல் மனம் குமறிய மகன், சமூக வளைத்தளத்தில் பதிவேற்றி உதவி கோரி அவருடைய விலாசத்தை பதிவு செய்தார்.
பதிவு செய்த சில மணி நேரங்களில்
நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஜனாசா தொழுகையில் கலந்துக்கொண்டனர்.

இந்த மார்கத்தை அன்பினால் பிணைத்திருக்கின்றோம் என்ற இறை கூற்றை மெய்பித்த மக்கள் சாரை சாரையாக அணி திரண்டார்கள். 
அல்லாஹு அக்பர்.

இந்த சகோதரிக்கு அல்லாஹ் ஜன்னத் எனும் சொர்க்கத்தை தந்தருள்வானாக.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.!! இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை



சிங்கப்பூர், பிப்ரவரி 18/2016: சிங்கப்பூரில் (work permit) ல் வேலை பார்ப்பவர்கள் தங்களது விசா முடியும் பொழுது சிங்கப்பூரில் இருந்து கொன்டே வேறு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் அதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் அரசாங்கமே (Ministry Of Manpower ) ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதற்கு செய்ய வேண்டியதாவது, நிறுவனம் மாற விரும்புவபர்கள் தங்களது முழு விவரத்தையும் FCWDS(Foreign Construction Workers Directory System) ல் பதிவு செய்து விட்டு மேலும் நீங்கள் தற்பொழுது வாங்கி கொண்டிருக்கும் சம்பளம் & எதிர்பார்க்கும் சம்பளம் , உங்களுக்கு என்ன வேலை தெரியும், வேலை அனுபவம, மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற முழு தகவலையும் அவர்களிடம் தெரிவித்து விட வேண்டும். 

அதன் பிறகு அவர்கள் உங்களுக்கு சரியான நிறுவனத்தை கண்டுபிடித்து நேர்கானலுக்கு ஏற்பாடு செய்து தருவார்கள் (இதற்கு கட்டணம் $176 மட்டுமே) இதன் கால அவகாசம் 90 நாட்கள். அதாவது உங்களது விசா முடிவடைய 90 நாட்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும். 
விவரங்கள் படத்திள் உள்ளது.


குறிப்பு:
புதிய நிறுவனத்திற்கு மாறுவதற்கு தற்பொழுது வேலை செய்யும் நிறுவனத்தின் அனுமதி கடிதம் தேவை இல்லை.

சவுதியில் செல்போன் சிம்கார்டு பயன்படுத்த கடும் கட்டுப்பாடு அமுலுக்கு வருகிறது.



சவூதி, பிப்ரவரி 12/2016: ஃபிங்கர் ப்ரிண்ட் பதிவு செய்தால் தான் இனி உங்கள் சிம் பயன்படும், இல்லை என்றால் கனெக்‌ஷன் துண்டிக்கப்படும்.இதனால் உள்நாட்டு பாதுகாப்பு மேம்படும் என்றாலும், கடும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.


சிம் கார்டு தொலைந்து விட்டால் உடனே போய் அதை ரத்து செய்ய வேண்டும், இல்லை என்றால் அந்த நம்பரை வைத்து வேறு வகையில் தவறான காரியங்களுக்கு யாரேனும் பயன்படுத்தினால், சிம்முக்குறிய நபர் தான் தண்டிக்கப்படுவார்.

அதே போல் இனி நெட் சிம் கார்டு பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.. ஏனெனில் அதற்கும் கை ரேகை அவசியம் என மெசேஜ் வந்திருக்கு.சாதாரணமாக சவுதியில் ரீசார்ஜ் செய்வது கூட சுலபமில்லை, ஏன்னில் நம்ம ஊரில் பயன்படுத்துவது போல் கார்டை சுரண்டி ரகசிய நம்பரை பதிவேற்றினால் ரீசார்ஜ் ஆகிவிடுது போல் சுலபான காரியம் அல்ல, இங்கே ரீசார்ஜ் ரகசிய நம்பருடன் சவுதி அரசால் கொடுக்கப்பட்டு இருக்கும் இகாமா ஐடியின் நம்பரையும் பதிவு செய்தால் தான் ரீசார்ஜ் ஆகும்.

ஒருவர் சிம்மில் இன்னொருவர் ஐடி நம்பர் போட்டு ரீசார்ஜ் கூட செய்ய முடியாதளவுக்கு கடும் கட்டுப்பாடு உள்ளது.

அப்படி இருக்கும் போது தற்போது கைரேகை பதிவு செய்ய சொல்வது இன்னும் கடுமையான விதிமுறைகளை தொலைதொடர்பு துறை விதித்துள்ளதை காட்டுகிறது.

நம்ம ஊர்ல ஒரு சிம் கார்டு இல்லை பத்து சிம் கார்டு கூட யாரோ ஒருத்தரின் ஜெராக்ஸ் ஐடி இருந்தால் கூட வாங்கிடலாம், இங்கேயும் அப்படி தான் இருந்தது, ஆனால் பாதுக்காப்பை பலப்படுத்த நினைத்து பார்க்க முடியாதளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கு என்பது தான் ஆச்சரியம்,அதை விட ஆச்சரியம் அதை செயல்படுத்தி காட்டுகிறார்கள் என்பது தான்.

கைரேகை பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள சிம் நிறுவனத்தின் கிளைகளை தொடர்பு கொண்டு கைரேகை பதித்து விடுங்கள், இல்லை எனில் விரைவில் தொடர்பு துண்டிக்கப்படும்

பிரிட்டனில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு. 'Office of the National Statistics' (ONS) புள்ளி விவரம் வெளியீடு..!


பிரிட்டன், பிப்ரவரி 04/2016: "10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் முஸ்லிம் குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்"
பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகை புள்ளி விவரங்களின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது தெரியவந்துள்ளது.
தலைநகர் லண்டனின் பல பகுதிகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்கள் வசிப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள இந்த புள்ளி விவரத்தில்,
அடுத்த 10 ஆண்டுகளில் லண்டன் நகரின் அனேக பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகி விடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ப்ளேக் பர்னில்----29 சதவிகிதமும்
சிலூவில்-----------26 சதவிகிதம்
லியூடனில்-------- 25 சதவிகிதம்
பர்மிங்கமில்-------23 சதவிகிதம்
லேசீடரில்---------- 20 சதவிகிதம்
மான்செஸ்டரில்-18 சதவிகிதம், என முஸ்லிம்களின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துள்ளதாக மேற்படி புள்ளி விவரம் கூறுகிறது.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை ஒட்டுமொத்த பிரிட்டனிலும் சேர்த்து பார்த்தாலும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
நன்றி: 
மறுப்பு 

மசூதி செல்கிறார் ஒபாமா: அதிபரான பின் இதுவே முதன்முறை...


அமெரிக்க, பிப்ரவரி 03/2016: அமெரிக்க அதிபரான பின்னர் முதன் முறையாக முஸ்லிம் வழிபாட்டுத்தளமான மசூதிக்கு செல்கிறார் ஒபாமா. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்க முஸ்லிம்கள் தாங்கள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வருவதாக கூறும் வேளையில் ஒபாமாவின் இந்த மசூதி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பால்டிமோர் இஸ்லாமிக் சொசைட்டிக்கு சென்றுவிட்டு அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அவர் செல்கிறார். கடந்த வாரம் இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் ஒபாமா உரையாற்றினார். இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் பேசிய அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா தனதாக்கிக் கொண்டார்.

தற்போது அவரது மசூதி பயணம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வட்டாரம் கூறும்போது, "அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக சகிப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், அரசியல் களத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றத்தை நோக்கிச் செல்கிறார் ஒபாமா" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இஸ்லாமிய தொடர்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ரஹிம் ஹூப்பர் கூறும்போது, "அதிபர் ஒபாமாவின் இத்தகைய நடவடிக்கைகள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்...


அமெரிக்கா, ஆகஸ்ட் 14: கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம். "மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.
மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்.
‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:
அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.

அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.

Reported By

மௌலவி அ.முஹம்மது கான் பாகவி அவர்கள்.

இஸ்லாத்திர்கும் தீவிரவாதத்திர்கும் தொடர்ப்பில்லை என்பதை வலியுறுத்தி ஜெர்மனின் அனைத்து சமூக மக்களும் ஒன்று திரண்டு நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பேரணி.


பிரான்ஸில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை முஸ்லிம் விரோதிகள் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்ப்பதர்கு கருவியாக பயன்படுத்திவரும் நிலையில்
ஜெர்மன் நாட்டை சார்ந்த அனைத்து மத மக்களும் ஒன்று திரண்டு பிரனாஸ் தாக்குதலுக்கும் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பதை வலியுறுத்தி கிழக்கு ஜெர்மனில் உள்ள டிரெஸ்டென் (DRESDEN) நகரில் மிக பெரிய பேரணி ஒன்றை நடத்தினர.

இந்த பேரணியில் கிருத்துவர்கள் யுதர்கள் முஸ்லிம்கள் என 35 ஆயிரம் பொது மக்கள் கலந்து கொண்டனர் இந்த பேரணி நடத்துவதர்கு உரிய அனைத்து உதவிகளையும் ஜெர்மன் அரசு முன் நின்று செய்தது பிரான்ஸ் தாக்குதலை இஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும் தொடர்ப்பு படுத்தும் ஊடகங்களுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்த அந்த பேரணி ஜெர்மனில் முஸ்லிமும் கிருத்துவரும் யுதரும் அண்ணன் தம்பிகளாகவே வாழ்கிறோம் எங்கள் ஒற்றுமையை எந்த சக்தியாலும் சிதைக்க முடியாது இதே ஒற்றுமையையும் சகிப்பு தன்மையும் உலகெங்கும் தழைத்து ஓங்க வேண்டும் என்ப போன்ற கருத்துகளை கொண்ட பதாகைகளை போராட்ட காரர்கள் கையில் ஏந்தி வந்தனர்.

பிரான்ஸ் பிரச்சனைக்காக உலகில் வேறு எங்கும் இது போன்ற ஒரு பேரணி நடத்த படாத நிலையில் ஜெர்மன் மக்கள் முந்தி கொண்டு உலகிர்கு வழி காட்டியிருக்கிறார்.
ஜெர்மன் மக்கள் தொடங்கி வைத்துள்ள இந்த ஒற்றுமை கோசம் உலகெங்கும் எதிரொலிக்கட்டும் அதன் பலனாய் உலக மக்களை அமைதி தென்றல் தாலாட்டடும்.

சிங்கபூர் விமானம் Air Asia இன்று தொடர்பை இழந்து வலி தவறியது. 162 பயணிகள் மாயம்...


 
சிங்கப்பூர், டிசம்பர் 28: இந்தோனோசியாவில் இருந்து இன்று காலை 7 மணிக்கு சிங்கபூருக்கு புறப்பட்ட "Air Asia" விமானம் சரியாக 7.24 லோக்கல் நேரம் Air Asia விமான குழுவினரின் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றால் அதில் பயணித்த பயணிகளின் விபரமும் இன்னும் தெரியவில்லை. மேலும் இது குறித்த செய்தியை Air Asia நிறுவனத்தின் FACE BOOK பகுதியில் எங்களிடம் இருந்து விமானம் கட்டுப்பாட்டு தொடர்புக்கு வெளியில் சென்று விட்டது என்று விமான என்: QZ8501 Airbus A320-200 குறிப்பிட்டுள்ளது. விமானம் காலை சரியாக 8:30 மணிக்கு சிங்கப்பூர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையை அந்நாட்டு தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது அதன் விபரம், 157 இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்றும், 3 சவுத் கொரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 1 சிங்கபூர், 1 மலேசியன் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

"AIR ASIA" விமானம் தொடர்பு இழந்தபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வளையத்தில் விமானம் ராடார்படி விமானம் ஜாவா கடலில் 32,000 அடி தூரத்தில் பயணித்துக்கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக பயணிகள் மற்றும் எங்கள் குழு உறுபினர்கள் குறித்த எந்த செய்திகளும் எங்களுக்கு ஈனும் கிடைக்க வில்லை என்றும் ஆனால் மிக விரைவில் எங்களுக்கு அனைத்து தகவலும் கிடைத்து விடும் என்றும் எதிபார்க்கிறோம். 

"AIR ASIA" " ஏர்பஸ் A320-200 பதிவு எண் PK- AXC இந்த கட்டத்தில் எங்களுக்கு "AIR ASIA" நிறுவனம் தேடுதல் மற்றும் மீட்ப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் மலேசியா நாட்டின் விமான நிறுவனங்கள் ஒரு கடினமான ஆண்டு இறுதியில் இருந்து வருகிறது என்றும், தேசியக்கொடியை தாங்கி மலேசியா எர்லைன்ஸ் 2 விமானங்களை இந்த ஆண்டு தொலைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் இல்யாஸ். (All Rights Received)

பாகிஸ்தானில் மனிதமிருகங்கள் நடத்திய கோர தாக்குதல் -முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் கடும் கண்டனம் !!

பெஷாவர்,

தலீபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூர மான மிருகவெறி தாக்குதலை நடத்தி, அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்தது, உலகையே உலுக்கி உள்ளது.

இதுபற்றிய தகவல்கள் ரத்தத்தை உறைய வைப்பதாக அமைந்துள்ளன.

தற்கொலைப்படை தீவிரவாதிகள்

பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ஒரு மயானமும் உள்ளது. அந்த மயானத்தின் வழியாக, ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள், ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் புகுந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு புகுந்த அவர்கள், மறுநிமிடமே இலக்கின்றி, ஈவிரக்கமின்றி அப்பாவி மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்கள்.

ஒவ்வொரு வகுப்புக்கும் அவர்கள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். தொடர் துப்பாக்கிச்சூடு காரணமாக அந்த பகுதியே அதிர்ந்தது. எங்கும் குண்டு வெடிப்பும், மரண ஓலமும், கூச்சலும் கேட்டது.

தேர்வு எழுதிய மாணவர்கள்

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில், பள்ளிக்கூடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்தனர். பள்ளிக் கூடத்தில் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் உஷார் ஆனார்கள். மாணவர்களை, தேர்வு எழுதுவதை நிறுத்தி விட்டு, வகுப்பறையில் தரையில் படுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். பல மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறினார்கள்.

134 பேர் கொன்று குவிப்பு

தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று சம்பவ பகுதியை சுற்றி வளைத்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருப்பினும், இந்த கொடூர தாக்குதல்களில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறின. ஆனால் 134 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு வானொலி அறிவித்தது. இவர்களில் 132 பேர் குழந்தைகள், ஒருவர் ஆசிரியை, மற்றொருவர் பள்ளிக்கூட காவலாளி. குழந்தைகளைப் பறிகொடுத்தோரின் கதறல், கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்தது.

பலி உயரும்?

245 பேர் படுகாயம் அடைந்து, மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனாலும், பலரது நிலைமை கவலைக்கிடம் அளிப்பதாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.

6 தீவிரவாதிகளும் பலி

தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளில் ஒருவர், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார்.

மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரை ஆனார்கள். இதையடுத்து தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 140 ஆகும்.

ஜனாதிபதி, பிரதமர் கண்டனம்

உலக நாடுகளில், சமீப காலத்தில் நடந்த தாக்குதல்களில் அதிபயங்கரமான தாக்குதல் இதுதான் என்றும், குழந்தைகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இதுதான் என்றும் கருதப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் கடும் கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கண்டனம் தெரிவித்ததுடன், நிலைமையை நேரில் ஆராய்வதற்காக பெஷாவர் விரைந்தார். இதே போன்று ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப்பும் அங்கு விரைந்தார். எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

தலீபான்கள் பொறுப்பேற்பு

இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தலீபான்கள் உடனடியாக பொறுப்பேற்றனர்.

இதுபற்றி அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தற்கொலைப்படையினர் 6 பேர் இந்த தாக்குதல்களை நடத்தினர். வடக்கு வாஜிரிஸ்தானில் போராளிகளுக்கு எதிராக ராணுவம் எடுக்கிற நடவடிக்கைக்கு பழிக்கு பழிவாங்கத்தான் (ராணுவ பள்ளிக்கூடத்தை குறி வைத்து) இந்த தாக்குதல்கள். எங்கள் வலியை, வேதனையை அவர்கள் உணர வேண்டும் என்று விரும்புகிறோம்” என கூறினார்.

நேரில் பார்த்தவர்கள் பேட்டி

பள்ளிக்கூடத்தின் அருகில் வசிக்கும் ஷாகுப்தா என்ற மாணவி, “பள்ளிக்கூடத்தில் 2 குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. முதல் குண்டுவெடிப்பை விட இரண்டாவது குண்டு வெடிப்பு சத்தம் பலமாக இருந்தது” என்று கூறினார். சுஜா என்ற மாணவர், “நாங்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிற சத்தம் கேட்டது. உடனே ஆசிரியர் எங்களை தேர்வு எழுதுவதை விட்டு விட்டு தரையில் படுத்துக்கொள்ளுமாறு கூறினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அப்படி தரையில் படுத்திருந்தோம். பின்னர் ராணுவ அதிகாரி வந்து கூறிய பின்னர்தான் எழுந்து வெளியேறினோம்” என்றார்.

மற்றொரு மாணவர், தீவிரவாதிகள் அதிநவீன துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டதாக கூறினார். இன்னொரு மாணவர், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நீளமான தாடி வைத்திருந்தனர், சல்வார் கமீஸ் அணிந்திருந்தனர் என கூறினார்.

மனித கேடயங்கள்

முதலில், ராணுவத்தின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கத்தில் மாணவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து, மனித கேடயங்களாக பயன்படுத்தினர்.

சம்பவத்தின்போது பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக தப்பிய மாணவர்களில் ஒருவர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, “முதலில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு ராணுவ அதிகாரி எங்களை பின்புற வாயில் வழியாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் வெளியேறி விட்டோம்” என்று கூறினார்.

3 நாள் துக்கம்

தீவிரவாதிகள் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் தேசிய துக்கத்தை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார். பெஷாவரில் நிருபர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வரையில், தீவிரவாதத்துக்கு எதி

ரான போர் ஓயாது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என கூறினார்.

இந்த தாக்குதல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் மற்றும் உலகத் தலைவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

பழிக்கு பழி

பாகிஸ்தானில் பெஷாவரையொட்டியுள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான், அல்கொய்தா தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. இங்குள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களும், பாகிஸ்தானின் போர் விமானங்களும் கடந்த 6 மாதங்களாக நடத்தி வருகிற வான்தாக்குதல்களில் தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு பழிக்கு பழிவாங்கும் விதத்தில்தான் தலீபான் தீவிரவாதிகள் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூட தாக்குதல்களை நடத்தி, உலகையே நடுங்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



அதிகமானோர் WHATS APP ஐ விரும்புவது ஏன்?

whatsapp

உலகம், டிசம்பர் 04: இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக  Whatsapp மற்றும் Wechat போன்ற வசதிகளை  விரும்புகிறார்கள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது.
ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும் அல்லாமல் இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பனதாகவு ம் உள்ளது.
பேஸ்புக்கில் யார் வேண்டுமென்றாலும் பொய்யான ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் மற்றவர்களை ஏமாற்ற முடியும் ஆனால் Whatsapp மற்றும் Wechat ல் அவ்வாறு செய்ய இயலாது.
இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat பயன்படுத்துவதற் கான 5 காரணங்களைக் கூறுகிறார்கள் அது என்னவென்று பார்ப்போமா..!
1) இந்த Whatsapp மற்றும் Wechat-ஐ பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் உண்மையான நண்பர்கள் அதில் இருப்பார்கள்.
பேஸ்புக்கில் 1000 நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது ஆனால் Whatsapp மற்றும் Wechatல் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது.குருப் என்கிற அந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி நமக்கு நெருக்கமான நண்பர்களை சேர்த்து எப்பொழுது வேண்டுமானலும் தொடர்புக்கொள்ளலாம்.
2) பொய்யான நண்பர்களிடம் இருந்து பாதுகாக்கிறது Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் ஒரு நம்பகத்தன்மையை அளிக்கிறது. இதில் பொய்யான நண்பர்கள் அமைய வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் அனைத்து நண்பர்களின் தொடர்பு எண்கள் நமது மொபைலில் இருப்பாதால் இது பாதுகாப்பானதாக உள்ளது.
3) Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிக விரைவாக செயல்படுகின்றன. பேஸ்புக்கில் செய்தியை அனுப்பிய பிறகு அது நண்பர்களை சென்று அடைந்ததா இல்லையா என்பது நமக்கு தெரியாது.ஆனால் Whatsapp மற்றும் Wechatல் மிக விரைவாகசெய்திகள் பரிமாறிக்கொள்ளப் படுகிறது.
4) Whatsapp மற்றும் Wechat பயன்பாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது.பேஸ்புக்கில் நமது விஷயங்களை பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நமது தகவல்களை தெரிந்து கொள்வார்கள் . Whatsapp மற்றும் Wechatல் ஏனெனில் இதில் யாரும் நமது தகவல்களை திருட முடியாது.
5)பேஸ்புக்கில் நமக்கு தெரியாமல் நமது பக்கத்தை யார் வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.Whatsapp மற்றும் Wechatல் அவ்வாறு செய்ய இயலாது ஏனெனில் அனைத்து செய்திகளும் தனிப்பட்ட செய்திகளாக நமது போனிலே இருப்பதால் யாரும் இதனைத் திருட முடியாது.

துபாயில் ரூம் இன்சார்ஜுகள் எப்படி இருப்பார்கள் ?ஒரு சுவாரஸ்யமான தகவல்கள் :

துபாயில் ரூம் இன்ச்சார்ஜிகள் எப்படி இருப்பார்கள் என்று துபாய் வாழ் நண்பர்கள் நன்கு அறிந்து இருப்பார்கள் அறியாதவர்களுக்கு அது பற்றிய சில சுவாரசியமான ஒரு பதிவு
துபாயில் ரூம் இன்ஜார்ஜிகள் :-
1.அடுத்தவன் பணத்தில் ரூம் வாடகை கழிப்பார்கள்
2.ரூம்பில் அவர் படுக்கும் போது மட்டும் ஏசி எப்போதும் ஆன் செய்து இருக்கும்
3.ரூம்பில் உள்ள சின்ன சின்ன வேலைகளை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பார் அவர் ஒரு வேலையும் செய்ய மாட்டார்
3.ரூம்பில் முக்கிய இடத்தில் அவருக்கு படுக்கையே வசதியாக அமைத்து கொள்ளுவார்
4.எப்போதும் டிவி ரிமோட்டை அவர் மட்டும் தான் வைத்து இருப்பார் . அவர் விரும்பும் நிகழ்ச்சிகளை தான் மற்றவர்களும் பார்க்க வேண்டும்
5.அவர் படுக்கும் போது மட்டும் FAN அதிகபடுத்தி இருப்பார்
6.அனைவரின் பணத்தில் ஓசி சாப்பாடு சாப்பிட்டு கொண்டு அவர் விரும்பும் சமையல் மட்டும் செய்ய சொல்லுவார்
7.தண்ணீர் கேன் அவருடைய பக்கத்திலேயே வைத்து இருப்பார்
8.அனைவரும் அவர்களுடைய துணிகளை ஆண்கரில் மாட்ட தக்காளி அவர் மட்டும் தனி பிரோ வைத்து இருப்பார்
இப்படி மோசமான ரூம் இஞ்சார்ஜிகளும் இருக்கிறார்கள் துபாயில் …
இப்படி உள்ள நண்பர்கள் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து உங்களுடைய நடவடிக்கையை மாற்றி கொள்ளுங்கள், யாரும் யாருக்கும் எங்கும் எப்போது அடிமை இல்லை

முத்துப்பேட்டை தர்ஹா அருகே ஓம் காளி-ஜெய் காளி :காளித்தனம் செய்த மூன்று பேர் கைது !!!

அக்டோபர் 24: முத்துப்பேட்டையில் இருந்து தில்லைவிளாகம் நோக்கி மோட்டார்சைக்கிளில் பள்ளியமேட்டை சேர்ந்த ராஜீவ் (வயது22) என்பவரும், தில்லைவிளாகத்தை சேர்ந்த கணபதி (வயது26) என்பவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது போகும் வழியில் ஊர், பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த ஒரு வாலிபர் தில்லைவிளாகம் வரை அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார். இவர்களும் ஏற்றி கொண்டு போனார்கள். போகும் வழியில் உள்ள ஜாம்புவானோடை தர்ஹா உள்ளது. அங்கு சென்றவுடன் பெயர் தெரியாத வாலிபர் ஜெய்காளி, ஓம்காளி என்று சத்தம் போட்டாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தர்ஹாவை சேர்ந்த சேக்தாவூது(32) என்பவர் ஏன் இங்கு வந்து சத்தம் போடுகிறார் என்று கேட்டு கையால் அடித்தாராம். அந்த வாலிபர் ஒடிவிட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து சேக்தாவூது, ராஜீவ், கணபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து, திருத்துறைப்பூண்டி  மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். தப்பியோடிய வாலிபரை தேடிவருகின்றனர்.

முத்துப்பேட்டை மக்கள் லண்டனில் பெருநாள் கொண்டாடிய காட்சி ஓர் பார்வை.!!!








லண்டன், அக்டோபர் 17:  தியாக திருநாள் லண்டன் மாநகரில் அணைத்து பள்ளிவாசல்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது , அணைத்து பள்ளிவாசல்களிலும் மூன்று நான்கு ஜமாஅத் தொழுகை நடைபெற்றது , அணைத்து பள்ளிவாசல்களிலும் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது . லண்டன் மாநகரில் வாழும் பல நாடுகளை சேர்ந்த நம் சமுதயா மக்கள் அவர்கள் நாட்டு பாரம்பரிய புதிய உடைகள் அணிந்து வந்து தொழுகையில் கலந்து கொண்டும் வாழ்த்துகளை பரிமாரிகொன்டர்கள் . அல்லாஹ் இந்த நல்ல நாளில் நம் சமுதயா மக்கள் ஒற்றுமையுடன் இருக்க எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெற ஏக இறைவன் அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன்
நமது ஊர் ஒற்றுமைக்காகவும் அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன்

லண்டன் வாழ் முத்துப்பேட்டை மக்கள் 

லண்டனில்ருந்து
அப்துல் ரஹ்மான்
ஜமால் முஹமது
அலி அஹமது
ஆசிம் முஹமது
அசார் முஹமது

லண்டனில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை ஓர் பார்வை...




லண்டன், அக்டோபர் 16: முத்துப்பேட்டை நண்பர்கள் லண்டனில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு பின்னர் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி 

முஹம்மது நபியை இழிவு படுத்திய யூதனைக் கண்டித்த உலக இஸ்லாமிய நாடுகள் ஓர் பார்வை.














உலகம், செப்டம்பர் 17 : நமது உயிரிலும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி இழிவு படுத்தும் விதமாக சினிமாவை வெளியிட்ட யூத இரு பயங்கரவாதிகளைக் கண்டித்து உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த சகோதரர்கள் மற்றும் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ள மாற்று மத சகோதரர்களும் நம்முடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை ஏற்படுத்தி வருகின்றனர். அதில் சவூதி அரேபியா, துபாய், சூடன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா, குவைத், மலேசிய, பஹ்ரைன், எகிப்த், ஆப்ரிக்கா, ஆஸ்த்ரேலியா, அமெரிக்க, லண்டன் ஆகிய நாடுகளில் மாபெரும் எதிர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் இந்த கொடியவனை தூக்கில் போடா வேண்டும் என்று உலக மக்கள் கோசங்களையும் எழுப்பி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)