அக்டோபர் 24: முத்துப்பேட்டையில் இருந்து தில்லைவிளாகம் நோக்கி மோட்டார்சைக்கிளில் பள்ளியமேட்டை சேர்ந்த ராஜீவ் (வயது22) என்பவரும், தில்லைவிளாகத்தை சேர்ந்த கணபதி (வயது26) என்பவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது போகும் வழியில் ஊர், பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த ஒரு வாலிபர் தில்லைவிளாகம் வரை அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார். இவர்களும் ஏற்றி கொண்டு போனார்கள். போகும் வழியில் உள்ள ஜாம்புவானோடை தர்ஹா உள்ளது. அங்கு சென்றவுடன் பெயர் தெரியாத வாலிபர் ஜெய்காளி, ஓம்காளி என்று சத்தம் போட்டாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தர்ஹாவை சேர்ந்த சேக்தாவூது(32) என்பவர் ஏன் இங்கு வந்து சத்தம் போடுகிறார் என்று கேட்டு கையால் அடித்தாராம். அந்த வாலிபர் ஒடிவிட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து சேக்தாவூது, ராஜீவ், கணபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து, திருத்துறைப்பூண்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். தப்பியோடிய வாலிபரை தேடிவருகின்றனர்.
0 comments:
Post a Comment