முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துபேட்டையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.






முத்துப்பேட்டை, ஜூலை 30: முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி வாசலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது. 

துபாய் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை, 1 லட்சத்திற்கு மேல் மக்கள் பங்கேற்ப்பு...











துபாய், ஜூலை 28: இன்று அரபு நாடுகள் முழுவதும் நோன்பு பெருநாள் சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் துபாய் அமிரகத்தில் இன்று காலை சரியாக 6:08 மணியளவில் ஈத்கா மைதானாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் எல்லா நாடுகளை சார்ந்தவர்களும் தொழுத வண்ணம் மிக சிறப்பாக இருந்தது. இந்த தொழுகையில் கலந்து கொண்ட வர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

முத்துப்பேட்டையில் பரபரப்பு. பட்ட பகலில் பெண் தீ குளித்து சாவு.


முத்துப்பேட்டை ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை அம்பட்டாங்கொல்லை பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கரை ஓரம் நேற்று காலை பட்ட பகலில் ஒரு பெண் உடம்பில் மண்ணனையை ஊற்றி தீ வைத்த கொண்டு எரிந்த நிலையில் சத்தம் போட்டார். இதனை கண்ட பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்து நின்றனர். சற்று நேரத்தில் உடம்பில் பற்றிய தீ எரிந்து நிலையில் கீழே அந்த பெண் விழுந்தார். பின்னர் பொதுமக்கள் மணல்களை அள்ளி வீசி தீயை அணைத்தனர். அதற்குள் அந்த பெண்ணும் தீயில் கருகி இறந்து போனார். உடன் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் சென்று விசாரனை நடத்தினார்கள். 

இதில் அதே பகுதியை சேர்ந்த சாம்பசிவம் என்பவரது மனைவி சரோஜா(65) என்று தெரியவந்தது. மேலும் சரோஜா சில வருடங்களாக மன நலம் பாதிக்கப்பட்டு கோவில், தர்ஹா போன்றவைகளுக்கு சென்றும் குணம் ஆகாமல் வீட்டில் இருந்த அவர் நேற்று பகல் மண்ணனை கேன் மற்றும் தீ பெட்டியை எடுத்து சென்றும் கந்தப்பரிச்சான் ஆற்று திடலில் நின்று தீ வைத்து கொண்டதாக விசாரணையில் தெரிந்தது. இது குறித்து சரோஜாவின் உறவினர் சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை போலீசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பரபரப்பை ஏற்படுத்தியது.

முத்துப்பேட்டை தர்ஹாவில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி....




முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்பவானோடை தர்ஹாவில் மதநல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தர்ஹா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் தலைமை வகித்தார். ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக டிரஸ்டி தமீம் அன்சாரி சாஹிப் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன,; திருவாரூர் மாவட்ட எஸ்.பி.காளிதாஸ் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மதிவாணன் பேசுகையில்: இப்படி ஒரு புனித பாக்கியத்தை தந்த தர்ஹா நிர்வாகத்துக்கு நன்றி. மதங்களை கடந்து சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது. நாம் செய்த ஒவ்வொரு காரியமும் நல்லதே செய்ய வேண்டும். நல்லதே கருதவேண்டும் என்றலாம் இஸ்லாத்தில் போதிக்கப்பட்டு வருவதை நான் பல இடங்களில் கேட்டு உள்ளேன். அனைத்திலும் சமாதானம் என்ற ஒரே வாக்கியத்தையே மையப்படுத்துகிறது. இஸ்லாத்தில் போதிக்கப்படும் அனைத்திலும் சமாதானத்தையே கூறப்படுகிறது என்பது மகிழ்ச்சியை தருகிறது, இந்த நாளில் சகோதரத்துவத்தில் நாம் வாழ வேண்டும். மத நல்லினக்கத்தோடு வாழ வேண்டும் என்று நாம் உறுதி எடுப்போம் என்றார். மாவட்ட எஸ்.பி காளிதாஸ் மகேஷ்குமார் பேசுகையில்: இந்த நாளில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் விழா நடத்த கோரிக்கை வைத்தேன். செய்து கொடுத்த தர்ஹா நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவிக்கிறேன். அதே போல் இந்த இப்தார் நிகழ்ச்சியில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் இப்பொழுது நாம் காணமுடிகிறது. இது போல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்களை போன்றவர்கள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் மதியழகன், ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, முன்னால் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி, இன்ஸ்பெக்டர்கள்: எடையூர் பாண்டியன், முத்துப்பேட்டை சண்முகவேல், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஜாம்பை இளைஞர் நற்பணி மன்றம் தலைவர் கண்ணன், குட்டியர் பள்ளி தலைவர் காதர் உசேன், தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், ரோட்டரி தலைவர் வேதசங்கர், வர்த்தகக்கழக தலைவர் ராஜாராமன், பொதுச்செயலாளர் ராமலிங்கம், விவசாயிகள் பிரிவு நிர்வாகி முருகையன், சமூக ஆர்வலர் சுல்தான் இபுராஹிம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகம், புதுபள்ளி நிர்வாகி சிராஜிதீன், பேரூராட்சி கவுன்சிலர் நாசர், நகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னால் துணைத் தலைவர் கந்தவேல், மர்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளிமுத்து, தர்ஹா நிர்வாகி சேட்டு, திருத்துறைப்பூண்டி சிராஜிதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் தர்ஹா நூர் முகம்மது லெப்பை நன்றி கூறினார். 




முத்துப்பேட்டையில் திருமண உதவி பணம் பெற லஞ்சம் வாங்கிய பெண் கிராம நல அலுவலர் கைது.நாகை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.




முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த பேட்டை அங்களம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பரமணியன்(45), மாட்டு வண்டியின் கூலி தொழிலாளியான இவரது மகள் மாரியசெல்வி(26)க்கு கடந்த 11.07.2014 அன்று பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு திருமணம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் நடைபெற்றது. அதற்காக தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தில் பணம் பெற கடந்த 22.06.2014 அன்று முத்துப்பேட்டை ஒன்றிய குழு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அன்றைய நாள் முதல் சுப்பிரமணியனை தினமும் ஒவ்வொரு ஆவனங்களை கேட்டு அலையவிட்ட கிராம நல அதிகாரிகள் இறுதியாக கடந்த 21.07.2014 திங்கள் அன்று சுப்பிரமணியன் வீட்டை கிராம நல அலுவலர் சீதா லட்சுமி தலைமையில் மூன்ற பெண் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணியத்திடம் இதில் நிறைய பணிகள் இருப்பதாகவும், பத்தாயிரம் வரை செலவு இருப்பதாகவும் அலுவலர் சீதா லட்சுமி, சுப்பிரமணியத்திடம் பத்தாயிரம் பணம் கொண்டு வரும் படி கூறி சென்றுள்ளார். 

இந்த நிலையில் அடுத்த நாள் அலுவலகம் சென்ற சுப்பிரமணியன் தான் மிகவும் சிரமப்படுவதாகவும் அதனால் என்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார். அதற்கு அலுவலர் சீதா லட்சுமி சும்மா சம்மா இங்கு வர கூடாது. இறுதியாக எட்டாயிரம் பணம் கொண்டு வந்து கொடுத்தால் தான் உதவி பணம் பெற்று தருவேன் என்று கோபமாக கூறி உள்ளார். இதனால் அதிர்ப்தி அடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மாரிசெல்வி ஆகியோர் நேற்று முன்தினம் 24.07.2014 தேதி மீண்டும் அலுவலர் சீதா லட்சுமியை நேரில் சந்தித்த போது மீண்டும் அதே பாணியில் அலுவலர் சீதா லட்சுமி கூறி திருப்பி அணுப்பி உள்ளார். இதனால் மன உலைச்சல் அடைந்த சுப்பிரமணியன், நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் படி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.சிவஞான வடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சந்திரன், உதவி அலுவலர்கள் ரவி சந்திரன், பாண்டியன், சந்திரபாலன், அன்பழகன் ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 2.30 மணிக்கு அலுவலகத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். அப்பொழுது சுப்பிரமணியத்திடம் ரசாயணம் தடவிய ரூபாய் 8 ஆயிரம் பணங்களை கொடுத்து அனுப்பினர். 

அலுவலர் சீதா லட்சுமி பணத்தை பெற்று கொண்டு நாளை மீண்டும் ஒரு சான்று கொண்டு வரும் படி கூறினார். இதனை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை பல மணி நேரம் சோதனையிட்டு அலுவலர் சீதா லட்சுமியை கைது செய்து கோர்டில் ஆஜர் படுத்த நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட அலவலர் சீதா லட்சுமியின் கணவர் சேகர் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலராக இருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசில் மாட்டி பணி நீக்கம் செய்யப்பட்டவர். தற்பொழுது திருத்துறைப்பூண்டி ம.தி.மு.க நகர செயலாளாராக உள்ளார். இச்சம்பவம் செய்தி மக்கள் மத்தியில் பரவியதால் முத்துப்பேட்டையில் பெரும் பரபர்பபு எற்பட்டு உள்ளது. 


எனது திருமணத்தில் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள் M. முஹம்மது முஸ்தகீம். BE. அழைப்பு !!!




முத்துப்பேட்டை, ஜூலை 23: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஷவ்வால் பிறை 5,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 02-08-2014 ஞாயற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை  CR திருமண மண்டபத்தில்  எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இப்படிக்கு: M. முஹம்மது முஸ்தகீம். BE.




எனது திருமணத்தில் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள் M. முஹம்மது ஆசிக் ஹலீம் அழைப்பு !!!





முத்துப்பேட்டை, ஜூலை 23: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஷவ்வால் பிறை 6,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 03-08-2014 ஞாயற்று கிழமை காலை 11:30 மணியளவில்  பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை  குத்பா ஜும்மாஹ் பள்ளிவாச லில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இப்படிக்கு: M. முஹம்மது ஆசிக் ஹலீம் 


துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் இறுதி நிகழ்ச்சி

ஜுலை 18,


துபாய் அரசின் சார்பில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி நடைபெற்று வருகிறது.
சர்வதேச அளவில் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவிலிருந்து கேரளாவைச் சேர்ந்தவர் பங்கேற்றுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி 18.07.2014 வெள்ளிக்கிழமை மாலை அல் மம்சாரில் அமைந்துள்ள கல்சுரல் மற்றும் சயிண்டிஃபிக் அசோஷியேஷன் அரங்கில் நடைபெற இருக்கிறது.

The winners will be awarded during the closing ceremony on Friday night at the Cultural and Scientific Association in Al Mamzar.
சர்வதேச அளவிலான அரிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்போம்.
Dubai Quran contest ends with final performance
Last six of 78 finalists took to the stage on Tuesday night

முத்துப்பேட்டையில் நடைபெற்ற தமுமுக -மமக பொதுகுழு :ஏராளமானோர் பங்கேற்பு !!





திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரம் தமுமுக & மமக நகர பொதுக்குழு கூட்டம் நெய்னா முகம்மது நகர தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது மற்றும் முஜீபுர் ரஹ்மான் மாவட்ட தலைவர் தமுமுக,முகம்மது அலீம் மாவட்ட துணை தலைவர் தமுமுக ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நகர நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டது.

நகர தலைவர் தமுமுக:நெய்னா முகம்மது
நகர துணை தலைவர் : முகம்மது யாசீன்
நகர செயலாளர் தமுமுக:NMM.சீமான்
நகர துணை செயலாளர் தமுமுக : முகம்மது யூனுஸ்
நகர துணை செயலாளர் தமுமுக : நிசார் அகமது
நகர செயலாளர் மமக : வழக்கிறஞர்.தீன் முகம்மது
நகர துணை செயலாளர் மமக : முகம்மது சிராஜ்
நகர துணை செயலாளர் மமக : முகம்மது நியாஸ்
நகர மருத்துவ அணி செயலாளர் : முகம்மது நபீல்
நகர வர்த்தக அணி செயலாளர் மமக : அப்துல்லாஹ்
நகர மாணவரணி செயலாளர் தமுமுக : முகம்மது தாரிக்
நகர துணை மாணவரணி செயலாளர் தமுமுக : முகம்மது ஜுபைர்
மாணவர் இந்தியா நகர செயலாளர் : ரோஸ்லான்
நகர தொண்டர் அணி செயலாளர் தமுமுக: தர்ஜீத் அகமது
இக்கூட்டத்தில் ஜெகபர் சாதிக் தமுமுக ஒன்றிய செயலாளர்,முகம்மது பைசல் தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர்,சம்சுதீன் முன்னால் நகர தலைவர்,கத்தார் நிஜாம்,கத்தார் தமுமுக நிர்வாகி ஹாமீம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

தீர்மானம் 1 :

மத்திய அரசு அறிவித்த ரயில்வே பட்ஜெட்டில் திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்துக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படாத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 2 :

அப்பாவி பாலஸ்தீன் மக்களை தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேலைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்காக மத்திய அரசே தலையிட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன .
செய்தி :வழக்கறிஞர் .தீன் முஹம்மது

அடக்கு முறையை கண்டு அஞ்சாத இயக்கம் எஸ்.டி.பி.ஐ கட்சி. முத்துப்பேட்டை கூட்டத்தில் மாநில பொது செயலாளர் பேச்சு.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சோசியல் டெமக்ராட்டிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் கொய்யா மகாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லத்திப் தலைமை வகித்தார். கிளை தலைவர் தீன் முகம்மது வரவேற்று பேசினார். மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது முன்னிலை வகித்தார். 





கூட்டத்தில் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு பேசுகையில்: இந்திய அரசியலில் மே 24 ம் தேதிக்கு பிறகு நாட்டில் நடத்தர மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்பையும் மீறி பா.ஜ.க அரசு ஆட்சியை பிடித்து விட்டது. மனித லட்சனத்திற்கே தகுதி இல்லாத நரேந்திர மோடி இன்று இந்தியாவின் பரதமராகி விட்டார். இதற்கெல்லாம் மிக பெரிய சத்தியாக விளங்கிய ஊடகம் தான் காரணம். மேலும் நரேந்திர மோடி உழைப்பும் கொஞ்சம் இல்லை. ஒன்னறை வருடங்களில் 532 கூட்டங்களில் நரேந்திர மோடி பேசி இருக்கிரார். 3 லட்சத்துக்கு மேற்பட்ட மைல் தூரம் கடந்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு உள்ளார். 80 கோடி மக்களை அவர் சந்தித்து உள்ளார். 

இந்தியாவில் இதுவரை எந்த ஒரு தலைவரும் செய்தது இல்லை. கடைசியில் கழுதைக்கு வாக்கப்பட்ட நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளளோம். நரேந்திர மோடி பிரதமரானால் நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நோபால் பரிசு பெற்ற அமரயசிங், எழுத்தாளர் ஆனந்த மூர்த்தி ஆகியோர் சொன்னார்கள். அந்த அளவிற்கு விரும்பத்தக்க மனிதர் நரேந்திரமோடி, அதனால் நாங்கள் நாட்டில் நடக்கும் அடக்கு முறைகளை கண்டு அஞ்ச மாட்டோம். 

அஞ்சாத இயக்கம் தான் எஸ்.டி.பி.ஐ என்பதை உணர்த்துவோம் இவர்களுக்கு வைக்கோ, விஜயக்காந்த், தமிழருவி மணியன் போன்றவர்கள் இடைதாரராக இருந்து சாதித்து விட்டனர். மொத்த்ததில் பா.ஜ.க வின் நரோந்திர மோடி பிரதமராகுவதை இந்த நாட்டின் யாராலும் தடுக்க முடியவில்லை என்றார். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் பேசுகையில்: சென்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சி இந்தியாவின் மிகபெரிய கட்சியாக நிகழ்கிறது. 


அரசியல் அதிகாரத்தை வைத்து கொண்டு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை எப்படியல்லாம் முடக்க பார்க்கிறது என்பதை நாங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். தற்பொழுது நாட்டில் பெரும்பான்மையாக சீட்டு பிடித்து ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு தங்களுக்கு சாதகமாகவும் மக்களுக்கு விரோதமாகவும் செயல்படுவதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கோம். 2004 ஆம் ஆண்டு மிக பெரிய வீழ்;ச்சியை அடைந்த பா.ஜ.க. குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தான் இதற்கு காரணம் என்று அன்றை பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் கூறப்பட்டது. 

அதில் குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி தான் இன்று கதாநாயகனாக ஆக்கி பிரதமராக்கி உள்ளனர். அது போல் அமித்ஷா போன்றவர்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று அவர் பா.ஜ.கவின் தலைவர், பார்த்து கொள்ளுங்கள் செயல்பாட்டை, இந்தியாவின் சுதந்திரத்துக்கு பிறகு முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் பிடுங்கப்பட்டவிட்டது. 

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி நடந்த மும்பை குண்டு வெடிப்பில் முஸ்லிம்களை பாராபட்டசமாக பட்டுத்தி விட்டனர் என்றார். கூட்டத்தில் மாநில செயலாளர் அப்துல் சத்தார் உட்பட பலரும் பேசினார்கள். இதில் நிர்வாகிகள் முகம்மது யாசர், மீரா உசேன் சபீர் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிளை தலைவர் முகம்மது அசன் நன்றி கூறினார்.

இந்து முன்னணி நிர்வாகி கொலை: கைதான முதல் மனைவி வாக்குமூலம்

சங்கரன்கோவில், ஜூலை. 6–
 இந்து முன்னணி நிர்வாகி கொலை: கைதான முதல் மனைவி வாக்குமூலம்

சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (வயது 37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீவராஜை அவரது முதல் மனைவி அய்யம்மாள் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:–

எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் என்னுடன் தகராறு செய்வார். இதனால் அவரை நான் கண்டித்தேன். இருப்பினும் அவர் குடியை நிறுத்தவில்லை. இதன் காரணமாக நான்அவரை பிரிந்து எனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன்.

என் மீதான கோபத்தில் ஷர்மிளா என்பவரை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை தட்டிக்கேட்ட என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும் நான் இருக்கும் போதே ஷர்மிளாவுடன் உல்லாசம் அனுபவித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

நேற்று முன்தினம் இரவு ஷர்மிளா வீட்டில் இல்லை. மேலும் ஜீவராஜ் நல்ல குடிபோதையில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நான் ஜீவராஜின் கழுத்தை அரிவாள்மனையால் அறுத்து கொலை செய்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

பழனிபாபா -ஓர் வீர வரலாற்று பார்வை !!!

இதே ரமலான் மாததில் நம்மை விட்டு பிரிந்த நம் பழனி பாபா அவர்களின் ஞாபகமாக.. சிறு நினைவூட்டல்...
இவர் இஸ்லாமிய சமூதாயத்திற்க்காக இறுதியாக முழு மூச்சோடு மேற்கொண்ட முயற்ச்சியான.. அனைத்து ஜமாத் ஓன்றிணைப்பை பாதியில் விட்டு பயணத்தை முடித்தார்.. ஆனால் 16 ஆண்டுகளாகியும் இன்னும் ஓற்றுமை என்பது எட்டா கனியாக இருப்பதை நினைத்தால் ஒருபுறம் வேதனையாகவும், சில சமயம் அசிங்கமாகவும் உள்ளது...

















நம் பாபா அவர்களை பற்றி...
பழனிபாபாவின் தந்தை பெயர் முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. இவரது இயற்பெயர் அஹமதுஅலி சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில்திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ள புதுஆயக்குடிஎன்னும் கிராமம். இவரது தந்தை நீலகிரி மாவட்டம்குன்னூரைச் சேர்ந்தவர். பாபா குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் காண்வென்ட்டில் கல்வி பயின்றார். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புதுஆயக்குடியில்உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில்பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாகசென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆனார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்ட திமுக, எம்.ஜி.ஆரை எதிர்க்க இவரைப் பயன்படுத்திக்கொண்டது. தி.மு.க. அரசும் பின்னர் இவரை எதிர்த்த போது பாபாவின் சமுதாய பார்வை புதியபாதை காண வைத்தது. தமிழகம் முழுவதும் கேரளா, மும்பை உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளிலும் சுற்றுபயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளை பேசினார். அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவாளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்கவைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன்அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதிகோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடுத்தார்.
முஸ்லிம் சமூகத்தில் பரவலாக இருந்த வரதட்சணை ,வட்டி போன்ற பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். சந்தன கூடு, சமாதி வழிபாடு போன்ற பழக்கங்களைப் பின்பற்றிய முஸ்லிம்களை கடுமையாக சாடினார் பாபா. இதனால் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரின் கோபத்தை சம்பாதித்தார். எனினும் தனது கருத்துகளை ஜமாத்தார்கள் முன்னிலையிலேயே எடுத்து வைத்தார். பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் நட்புறவு பேணி முஸ்லிம் மற்றும் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக்கு வழி வகுத்தார். பல மனித உரிமை போராளிகளோடு இணைந்து போராட்ட களங்கள் கண்டார்.பேரா.கல்யாணி,டாக்டர் சேப்பன் போன்றவர்களோடும் மக்கள் குடியியல் உரிமைக் குழு (PUCL) போன்ற மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து செயல்பட்டார். இஸ்லாமிய மார்க்க விளக்கத்திலும் சிறந்த அறிவு பெற்றிருந்தார் பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்க கூட்டங்களில் பேசினார். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் தனது இஸ்லாமிய கருத்துகளை எடுத்து வைத்தார்.
கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். பைபிள் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பாக கிருஸ்தவ பாதிரிமார்களோடு இவர் விவாதம் நடத்தினார். ராமகோபலய்யருக்கு மறுப்பு நூல் எழுதியதற்காகவும் பாபா கைது செய்யப்பட்டார். தான் நூல்கள் எழுதியது மட்டுமல்லாமல் இஸ்லாம் குறித்து மற்ற அறிஞர்கள் எழுதிய நூல்களுக்கும் உதவி செய்தார் பாபா. பேரா அ. மார்க்ஸ் எழுதிய முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக்கதைகள் என்ற புத்தகம் வெளியிட நிதியுதவி அளித்தார். பாபரி மஸ்ஜித் தொடர்பாக WHO IS LAW ABIDING ON THE ISSUE OF BABRI MASJID? என்ற புத்தகம் தவிர ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார் பாபா. நூல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் துவக்கினர் பாபா. புனிதபோராளி பத்திரிக்கையில் கடுமையான கட்டுரைகளை எழுதினார். முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் செயல்பாடுகளைப் பற்றி எழுதினார். இதனால் அவருக்கு இந்துத்வ அமைப்புகளுள் எதிரிகள் உருவாகினர்.
தனது இறுதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். ஆரவாரமான மேடை பேச்சுக்களை விட்டு அமைதியான முறையில் ஆக்கபூர்வமான வேலைகளை கவனிக்க திட்டமிட்ட பாபா முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தார். தமிழகம் முழுவதும் ஜமாத்துகளை சந்திக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டார். இந்நிலையில்பொள்ளாச்சியில் தனது குடும்ப நண்பர் பசவராஜ் தனபால் என்பவர் வீட்டுக்கு வந்த பாபா அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் நின்ற தனது ஜீப்பில் ஏற முற்படும்போது தான் 1997 ஜனவரி 28ஆம் நாள் (ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் முதல்நாள்) இரவு பழனிபாபா 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
(இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்)
அர் ரஹ்மான் உங்களுக்கு சொர்கத்தில் உயர்ந்த படிதரங்களை தந்தருள் புரிவானாக-ஆமீன்..

அதிரையில் மர்ம நபர்கள் ஹாஜா செரிப் மீது திடீர் தாக்குதல் !

அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஹாஜா ஷரிஃப். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்படும் இவரை காணாதவர்கள் இல்லை என சொல்லுமளவுக்கு அதிரையருக்கு மிகவும் பரிச்சையமானவர். சற்று மனநிலை பாதிப்படைந்தவர்.


இன்று இரவு பழஞ்செட்டி தெரு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். வலியால் துடித்துகொண்டிருந்தவரை அருகில் நின்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.  தாக்கப்பட்டதில் கை எலும்பு முறிந்ததால் தற்போது அதிரை அரசு மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை எடுத்துவருகிறார். தகவலறிந்த நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்துவருகின்றனர். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.




தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)