முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நீண்டநாள் சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்தல் ..


நாகூர், பிப்ரவரி 03/2016: நாகை மாவட்டம் நாகூரில் (INTJ) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பொது கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் நாகூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் மூன்று முறை சந்தித்தபோதும் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இருக்கிறோம். நாங்கள்  கோரிக்கைகளில் வக்பு நிலம் மட்டும் 1200 கோடி ரூபாய்க்கு மீட்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் நமக்கு தெரிவித்தார்கள். அதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மற்ற கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அதிலும் சிறைவாசிகள் விசயத்தில் காலதாமதம் செய்யாமல் அரசு கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்;நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொரடா சாதிக் மற்றும் தமிம் அன்சாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையின் செயலை மிக வண்மையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து மாவட்ட காவல்துறைக்கு தவறான தகவலை அளிக்கும் உளவுதுறை அதிகாரிகள் கார்த்திகேயன், விஸ்வா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தினார்.

இப்பேட்டியின் போது மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி,நாகை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், நாகை மாவட்ட தலைவர் கப்பப்பா, மாவட்ட நிர்வாகிகள் ஜலால்,நாஜிம்,ஆசிக் மற்றும் நாகூர் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நன்றி 

யாசர் அரபாத் 

மசூதி செல்கிறார் ஒபாமா: அதிபரான பின் இதுவே முதன்முறை...


அமெரிக்க, பிப்ரவரி 03/2016: அமெரிக்க அதிபரான பின்னர் முதன் முறையாக முஸ்லிம் வழிபாட்டுத்தளமான மசூதிக்கு செல்கிறார் ஒபாமா. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்க முஸ்லிம்கள் தாங்கள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வருவதாக கூறும் வேளையில் ஒபாமாவின் இந்த மசூதி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பால்டிமோர் இஸ்லாமிக் சொசைட்டிக்கு சென்றுவிட்டு அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அவர் செல்கிறார். கடந்த வாரம் இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் ஒபாமா உரையாற்றினார். இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் பேசிய அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா தனதாக்கிக் கொண்டார்.

தற்போது அவரது மசூதி பயணம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வட்டாரம் கூறும்போது, "அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக சகிப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், அரசியல் களத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றத்தை நோக்கிச் செல்கிறார் ஒபாமா" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இஸ்லாமிய தொடர்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ரஹிம் ஹூப்பர் கூறும்போது, "அதிபர் ஒபாமாவின் இத்தகைய நடவடிக்கைகள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.

முத்துப்பேட்டையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஓட்டலை காலி செய்யக் கோரிஜமாத் பிரமுகர்கள் ஓட்டலுக்குள் உள்ளிருப்பு போராட்டம்...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 03/2016: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே புதுப்பள்ளி வாசல் ஒன்று உள்ளது. இதன் அருகே இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 27 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த திரியெம் அஜீஸ் என்பவர் திரியெம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் 15 வருடங்களுக்கு முன்பு தனது ஓட்டலை திரியெம் அஜீஸ் அவரின் உறவினரான பாக்கம் கோட்டூரைச் சேர்ந்த ஹாஜா மைதீன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு ஹாஜா மைதீன் நடத்தி வந்தார். இந்த நிலையில் புதுப்பள்ளி வாசல் நிர்வாகம் ஓட்டல் இருக்கும் இடம் மற்றும் அதன் அருகில் உள்ள காலி இடத்தில் பெண்கள் மதரசா கட்ட முடிவு செய்தனர். அதன்படி ஓட்டல் உரிமையாளர் ஹாஜா மைதீனிடம் தனது ஓட்டலை காலி செய்யும் படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளிவாசல் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். 

அதற்கு ஓட்டல் உரிமையாளர் 3 மாதம் கால அவகாசம் கேட்டதால் கொடுக்கப்பட்டது. அதனால் சென்ற 31-ம் தேதி ஓட்டலை காலி செய்து கொள்வதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் ஹாஜா மைதீன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓட்டலை காலி செய்ய மறுத்து வக்கீல் நோட்டீஸ் ஒன்றை பள்ளி வாசல் நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளார். இதனால் பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 31-ம் தேதி ஓட்டலை காலி செய்யாமல் நேற்றும் ஹாஜா மைதீன் வழக்கம் போல் வியாபாரத்தை தொடர்ந்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் அவர்களுக்கு ஆதரவாக த.மு.மு.க நகரத் தலைவர் சம்சுதீன், மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது, எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், தி.மு.க மாவட்ட பிரதிநிதி இபுராஹிம், வார்டு செயலாளர் பியூட்டி நவாஸ்கான், ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சர்ச்சைக்குரிய அந்த ஓட்டலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

மேலும் உடனடியாக ஓட்டலை காலி செய்யவிட்டால் நாங்களே பிரித்து அகற்றுவோம் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கூச்சலிட்டனர். இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடமும் ஓட்டல் உரிமையாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் ஓட்டல் உரிமையாளர் ஹாஜா மைதீன் ஓட்டலை உடனடியாக காலி செய்வதாக உறுதி அளித்தார். அதன் பிறகே போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஓட்டலிலிருந்து வெளியேறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து குட்டிச்சுவராக ஆக்கிய பெருமை அ.தி.மு.க அரசை சாரும் என்பது பழ.கருப்பைய்யா மூலம் நிருபணமாகிவிட்டது. முத்துப்பேட்டை தி.மு.க கூட்டத்தில் மனுஷ்யபுத்திரன் பேச்சு.



முத்துப்பேட்டை, பிப்ரவரி 03/2016: முத்துப்பேட்டையில் நகர தி.மு.க சார்பில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் அவலங்களை விளக்கிய பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னால் பேரூராட்சி துணைத் தலைவர் ஹனிபா நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளரும் நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கவிஞர் மனுஷ்யபுத்தரன் கலந்துக் கொண்டு பேசுகையில்: தற்பொழுது நடக்கின்ற ஆட்சி ஊழல் நிறைந்த, மோசமான.. அவலமான ஆட்சி என்பது மக்கள் அனைவரும் உணர்ந்துவிட்டனர். 

மேலும் அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பைய்யா மூலம் தற்பொழுது நடப்பது கமிஷன் ஆட்சி என்பதும் மக்களின் வாழ்வாதரத்தை கெடுத்து குட்டிச்சுவராக ஆக்கிய ஒரு ஆட்சி என்பதும் நிருபணமாகிவிட்டது. திட்டங்கள் என்ற பெயரில் தற்பொழுது விளம்பர வெறிதான் நடந்து வருகிறது. ஆட்சி மீது ஊடகங்கள் குறைகளை சுற்றிக்காட்டி எழுதினால் அதற்கு விளக்கம் அளிக்காமல் அவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. முதலாளிக்களுக்குதான் இந்த அரசு சலுகைகளை காட்டி வருகிறது. தமிழகத்தில் எந்தந்த துறை அமைச்சர் என்று யாருக்கும் தெரியாது. ஓட்டு கேட்க மட்டும் முகத்தை காட்டுபவர்தான் ஜெயலிலதா, மக்களுக்கு பாதிப்பு என்றால் ஒழிந்து விடுவார். அதே நேரத்தில் மக்களை பார்த்து கண் கலங்கும் கலைஞர் தலைவரா? மக்களை பார்க்க நினைக்காமல் இருக்கும் ஜெயலலிதா தலைவரா? மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
 
கூட்டத்;தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை வே.மன்னர் மன்னன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட ஆதி திராவிட நல வாரிய செயலாளர் பிரபாகரன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் தேவதாஸ், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத் தலைவர் முத்துராமலிங்கம், நகர அவைத் தலைவர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிகள் அன்பழகன், தமீம், இபுராஹிம், கண்ணன், கோவிந்தராஜன்;, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் செல்வம், ராஜாராம், ரபிஅகமது, அன்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, ஜாம்பை கல்யாணம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவ.அய்யப்பன், ஜெகபருல்லா, ரெத்தினகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள்; ஆடரலசன், ரவிகுமார் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர்.


இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.








துபாய், பிப்ரவரி 03/2016: இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டி சார்பாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் செயல்வீரர்கள் ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் துபை தேராவில் உள்ள மலபார் ரெஸ்டாரண்டில் இனிதே நடைபெற்றது.
இக்கூட்டத்தை இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் துபை மண்டல தலைவர் யூசுஃப் தலைமையேற்று துவங்கி வைத்தார். இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் பொது செயளாலர் பத்ரு ஜமான் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டியின் தமிழ் மாநில தலைவர் திருச்சி முபாரக் மற்றும் தமிழ் மாநில துணை தலைவர் பிரேம் நஸீர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
 இதனையடுத்து தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை நடத்த இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் கோட்டைக்கள் ஹுசைன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக வருகை புரிந்திருந்தார். அழகிய முறையில் கட்சியின் கட்டுப்பாட்டுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில் கீழ்கண்ட நிர்வாக குழு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியல் கல்ச்சுரல் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக குழு விபரம்.

தலைவர் – முகமது ரஹீஸ்  ( மதுக்கூர் )
துனை தலைவர் – செய்யாத்  (ஆதிரம்பட்டினம்)
பொதுச்செயலாளர்  அஸ்கர் அலி
செயலாளர்கள் – ஜாகிர் ( மதுக்கூர் )
செயலாளர்கள் - நூருல் ஹசன் (ஆதிரம்பட்டினம்)

 இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டி த திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு விபரம்.

 தலைவர் – இத்ரீஸ் (முத்துப்பேட்டை)
துனை தலைவர் – ஷைக் தாவூத்  ( முத்துப்பேட்டை)
 பொதுச்செயலாளர் – முஹிதீன்  ( பூத மங்களம்)
செயலாளர்கள் – யூசுப்  ( அத்திக்கடை )
செயலாளர்கள் - பரக்கத் அலி ( முத்துப்பேட்டை)

 இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டி திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு விபரம்.
 கட்சியின் செயல்திட்டம் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ் மாநில தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து கேள்வி பதில் மற்றும் சமகால அரசியல் சூழ்நிலைகளை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இறுதியாக ஜனாஃப் இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் துபை மண்டல செயளாலர் அஷதுல் ஹக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் துபை மண்டல செயளாலர் முகமது ரஹீஸ் அவர்கள் நெறிப்படுத்தி அழகுற தொகுத்து வழங்கினார்.

 இதில் செய்ல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

நன்றி:

ரெங்கிஷ் கான் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)