நாகூர், பிப்ரவரி 03/2016: நாகை மாவட்டம் நாகூரில் (INTJ) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பொது கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் நாகூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் மூன்று முறை சந்தித்தபோதும் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இருக்கிறோம். நாங்கள் கோரிக்கைகளில் வக்பு நிலம் மட்டும் 1200 கோடி ரூபாய்க்கு மீட்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் நமக்கு தெரிவித்தார்கள். அதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மற்ற கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அதிலும் சிறைவாசிகள் விசயத்தில் காலதாமதம் செய்யாமல் அரசு கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்;நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொரடா சாதிக் மற்றும் தமிம் அன்சாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையின் செயலை மிக வண்மையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து மாவட்ட காவல்துறைக்கு தவறான தகவலை அளிக்கும் உளவுதுறை அதிகாரிகள் கார்த்திகேயன், விஸ்வா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தினார்.
இப்பேட்டியின் போது மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி,நாகை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், நாகை மாவட்ட தலைவர் கப்பப்பா, மாவட்ட நிர்வாகிகள் ஜலால்,நாஜிம்,ஆசிக் மற்றும் நாகூர் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நன்றி
யாசர் அரபாத்
0 comments:
Post a Comment