விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போதுஏற்படுவது போலவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் இருந்தது.இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்று வழியையும் நமக்குச்சொல்லித் தந்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்;கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன்தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடாகஇருக்க சுய இன்பப்பழக்கம் நிச்சயம் உதவவே செய்யாது. நோன்புநோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம்விபச்சாரத்தில் இருந்து காப்பற்றும்.
இதையும் மீறி உடலில் ரொம்ப முறுக்கு ஏறி விட்டால் தூக்கத்தில்ஸ்கலிதமாவதன் மூலம் அதற்கு அல்லாஹ் இயற்கையாக வடிகாலைஅமைத்துள்ளான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற செயலில் கடந்த காலத்தில் ஈடுபட்டவர்கள்அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ளவேண்டும்.
சுய இன்பம் பற்றி விஞ்ஞானம்...!இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை பாதிக்கும் சில முறைகளை கூறினார்.
01.அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது (சுய இன்பம்)
02.உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது,
03எப்போதுமே குப்புறப்படுத்துக் கொள்வது,
04.மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது,
05.கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது.
06.பெண்களை நிமிர்ந்து பார்க்கக்கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது.
07.செக்ஸ் புத்தகங்களையே படித்துக்கொண்டிருப்பது,
08.செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது,
09.சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம்,
10.தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.
”இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.“
0 comments:
Post a Comment