முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!
Showing posts with label சமுதாயச் செய்திகள். Show all posts
Showing posts with label சமுதாயச் செய்திகள். Show all posts

காவல்துறைக்கு இந்திய தவ்ஹித் ஜமாஅத் பாராட்டு!


சென்னை: சமூக வலைத்தளைங்களில் இந்து முன்னணி சார்பில் தமிழகத்தை சூழும் ஜிஹாதிகள் என்ற தலைப்பில் தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பதற்றமாக காட்டும் வீடியோக்கள் பரப்பப்பட்டன.
இது தொடர்பாக இந்திய தவ்ஹித் ஜமாஅத் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் உரிய அழுத்தத்தைக் கொடுத்து வந்தன. இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில் துணைத் தலைவர் முஹமது முனீர் தொடர்ந்து காவல் துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதை நீக்காவிட்டால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று தெரிவித்தார்.
நாகை, திருப்பூர், காஞ்சி மற்றும் திண்டுக்கல் என அனைத்து மாவட்ட  நிர்வாகிகளும் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறை நேற்று இரவு ஒரு வாரத்தில் நீக்குவதாக வாக்குறுதி அளித்தனர். அதைப் போன்று யூடியூபில் இந்து முன்னணி வெளியிட்டுள்ள அனைத்து ஆவனப் படங்களும் நீக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அமைப்புகளின் தொடர் முயற்சியால் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து உள்ளது.
இவ்விசயத்தில் மக்களின் உணர்வை புரிந்து கொண்டு உடனடியாக துரித நடவடிக்கை எடுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணை தலைவர் முஹமது முனீர் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார் மேலும், இந்த ஆவண படத்தை மக்களிடம் விநியோகம் செய்வதையும் தடை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எந்த இயக்கமும் கட்சியும் சுயநலமாக சிறைவாசிகள் விசயத்தை செய்தால் சும்மா விட மாட்டோம் !!




சென்னை, பிப்ரவரி 05/2016: பல ஆண்டுகளாக சிறையில் வாடும் சகோதரர்களுக்கு அணைத்து இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன அணைத்து அமைப்புகளும் அவர்களுக்காக போராடி வருகின்றன கொஞ்சம் சுன்னக்க்ம் ஏற்பட்டதை வைத்து சிறை துறை அங்கு உள்ள சிறை வாசிகளை கொடுமை படுத்தி வரும் நிலையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் முதல் தீ பொறியை சிறைவாசிகள் குடும்பத்தை பேச வைத்து கோவையில் துவங்கியது அதன் தொடர்ச்சி சிறை வாசிகள் குடும்பத்தார்கள் தானாக வீதியில் இரங்கி போராட துவங்கினார்கள் இப்போது வரை அந்த தீ வீரிமாயமாக உள்ளது சிறைவாசிகள் விசயத்தில் இது வரை கருத்து சொல்லாத தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் கூட அதன் நிலைமை புரிந்து கொண்டு தீர்மானம் போடும் வரை வந்து உள்ளது அதன் ஒரு பகுதியாக இந்திய தவ்ஹித் ஜமாஅத் முழுக்க முழுக்க சிறை வாசிகள் விடுதலை ஒற்றை கோரிக்கை மட்டும் வைத்து பல ஊர்களில் பொது கூட்டம் நடத்தி வருகிறது. 

அதை போல் ஒற்றை கோரிக்கை உடன் மிக வீரியமாக மனித நேய மக்கள் கட்சி பிப்ரவரி 7 அன்று தமிழகத்தில் மூன்று இடத்தில் மிக பிரமாண்டமான போராட்டம் நடத்த உள்ளது இதிலும் இயக்கம் கட்சி பாகு பாடு பாராமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் ஒரு பக்கம் தேசிய லீக் ரஹீம் அவர்கள் அமைப்பும் முடிந்த அளவு சிறைவாசிகள் விசயத்தில் போராடி வருகிறது இது இப்படி இருக்க ...

யார் சிறைவாசிகள் விசயத்தில் போராடினாலும் இயக்கம் கட்சி பாராமல் சிறை வாசிகள் குடும்ப பெண்கள் கலந்து கொண்டு வருகிறார்கள் அது எந்த ஊரில் நடந்தாலும் சிரம்பத்தை பார்க்காமல் சென்று போராடி வருகிறார்கள் ஒரு படி மேல் சென்று வருகின்ற பிப்ரவரி 7 போராட்டத்தை மக்கள் இடத்தில் கொண்டு செல்லும் வகையில் கோவையில் சிறைவாசிகள் குடும்பத்து பெண்களை வீதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அழைப்பு கொடுக்கிறார்கள் இது எல்லாம் அந்த சகோதர்களின் விடுதலை மட்டும் எண்ணி எண்ணி செய்து வருகிறார்கள் அதனால் எந்த இயக்கம் கட்சி போராடினாலும் பாகு பாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள் சகோதர்களை ..

இதை எல்லாம் தாண்டி ஒன்றை சொல்லி கொள்கிறோம் இதை ஒரு இயக்கத்தில் இருந்து இயக்கவாதியாக இல்லை சகோதரிகளின் நிலைமையை எண்ணி ஒரு சகோதரனாக சிறைவாசிகள் விசயத்தில் இவள்ளவு தூரம் கஷ்ட்ட படும் அந்த சகோதரிகளின் வேதனையில் எந்த இயக்கமும் கட்சியும் தங்கள் தேவைக்கோ அல்லது சுயநலமாக இருந்தால் அக்கறை உள்ள ஒருவனும் சும்மா விட மாட்டோம் அது நான் சார்ந்த இயக்கமாக இருந்தாலும் சரி !!

சிறைவாசிகள் விசயத்தில் அனைவரும் குரல் கொடுப்போம் சகோதரர்களை மீட்டு எடுப்போம் !!

நன்றி:

A.யாசர் அரபாத் 
திருப்பூர்

சென்னை புத்தக கண்காட்சியில் மதவாதத்தை வென்றெடுத்து மனிதநேயம் காத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தாவா பணிகள். ஓர் பார்வை...

 நக்கீரன் (பத்திரிக்கையின்) ஆசிரியர் கோபால் அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் S.M. பாக்கர் அவர்கள் திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 போக்குவரத்து காவல்துரை அதிகாரிகளுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 நடிகர் ஜகன் அவர்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 உயர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் அவர்கள்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.


 உயர் நீதி மன்றத்தின் காவல்துறை மேல் அதிகாரி எம்.கீதா அவர்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.













சென்னை, பிப்ரவரி 04/2016: கடந்த 13.01.2016 முதல் 26.01.2016 வரை சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் தமிழ் திருநாள் பொங்கல் புத்தக கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 250 அரங்குகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு அரங்கிலும் பல்வேறு விதமான பதிப்பாளர்கள் இடம்பெற்றனர். இதில் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்தும் பதிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தக கண்காட்சியில் (சாஜிதா புக் செண்டர் அரங்கம் எண் 68 ல்) முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர்களுக்கு புனிதமான மார்க்கம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்கும் பொருட்டு நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் களமிறங்கி முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு சுமார் 2500 க்கும் மேற்பட்ட திருமரை குர்ஆனை வழங்கி உள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், திரைப்பட நடிகர்கள், பத்திரிகை நண்பர்கள், தொழிலதிபர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த புனிதமான குர்ஆனை வழங்கியிருக்கிறது. மேலும் இந்த நிகழ்வின் போது மாற்று மத சகோதரர்கள் சுமார் 3 பேர் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்டனர். மேலும் 500 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக விரைவில் ஏற்க்க இருப்பதாக தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு:

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட நிகழ்ச்சியின் போது முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர்கள் திருமரை குர்ஆனை  பெற்றவுடன் கூறிய சில வேதனையான விஷயம்:

எனக்கும் முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனால் இதுநாள் வரைக்கும் எனக்கு இஸ்லாத்தை பற்றி எந்த ஒரு செய்தியும் சொன்னது கிடையாது, மேலும் நாங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் குர்ஆனை படிக்க கேட்போம் அதற்க்கு அவர்கள் தரமாட்டார்கள். அவற்றை நீங்கள் படிக்க கூடாது என்றும் எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். இப்படி எல்லாம் அந்த குர்ஆனை பெற்ற சகோதர சகோதரிகள் சொன்ன போது எங்களுக்கு வேதனையாக இருந்தது. எனவே (இந்த குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் ஓர் நல்லுபதேசமே அன்றி வேறில்லை) எனவே இந்த இறைவசனத்திற்கொப்ப இனியாவது நமது புனிதமான இஸ்லாத்தை நம்மளுடைய நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிரவும் இல்லை எனில் நீங்களும் குற்றவாளிகளாக நாளை மறுமையில் அல்லாஹ் வின் முன்பு நிற்க நேரிடும்.

தொகுப்பு:

அ.முஹம்மது இலியாஸ்.

நீண்டநாள் சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்தல் ..


நாகூர், பிப்ரவரி 03/2016: நாகை மாவட்டம் நாகூரில் (INTJ) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பொது கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் நாகூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் மூன்று முறை சந்தித்தபோதும் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இருக்கிறோம். நாங்கள்  கோரிக்கைகளில் வக்பு நிலம் மட்டும் 1200 கோடி ரூபாய்க்கு மீட்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் நமக்கு தெரிவித்தார்கள். அதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மற்ற கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அதிலும் சிறைவாசிகள் விசயத்தில் காலதாமதம் செய்யாமல் அரசு கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்;நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொரடா சாதிக் மற்றும் தமிம் அன்சாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையின் செயலை மிக வண்மையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து மாவட்ட காவல்துறைக்கு தவறான தகவலை அளிக்கும் உளவுதுறை அதிகாரிகள் கார்த்திகேயன், விஸ்வா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தினார்.

இப்பேட்டியின் போது மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி,நாகை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், நாகை மாவட்ட தலைவர் கப்பப்பா, மாவட்ட நிர்வாகிகள் ஜலால்,நாஜிம்,ஆசிக் மற்றும் நாகூர் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நன்றி 

யாசர் அரபாத் 

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐந்துஅம்ச கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்...






தஞ்சை, ஆகஸ்ட் 24: தஞ்சை மாவட்டம் இராஜகிரியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐந்துஅம்ச கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்டத்தலைவர் குடந்தை ஜாபர் தலைமையில். நடைபெற்றது.மாநிலச்செயலாளர் ரஸ்தாசெல்வம் மாவட்டபொருளாளர் ஹனாஇஸ்மாயில் மாவட்டசெயலாளர்முகம்மதுநபில் மா.தகவல் தொடர்பாள் ஹாஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கமாக மாநிலப்பேச்சாளர் ஒளிமுகம்மது பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற தலைப்பிலும் மாநிலசெயலாளர் நா.கோவில் ஜாஃபர் வஃக்பு சொத்துக்களை மீட்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மாநிலச்செயலாளர் அப்துல்காதர்மன்ப ஈ அப்பாவிசிறைவாசிகளின் விடுதலை என்ற தலைப்பிலும் மாநிலதுணைத் தலைவர் முகம்மதுமுனீர் முஸ்லிம்களுக்குதனி இட ஒதுக்கீட்டின் அவசியம் என்ற தலைப்பிலும் மாநிலத் தலைவர் S.M. பாக்கர் ஊடகங்களின்சதிவலைகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். முடிவாக ஜாவித்முகம்மது நன்றியுரை கூறினார்
கூட்டம் ஆரம்பம் முதல் மழை தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தபோதும் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் திரண்டு வருகை தந்துஇருந்த்து குறிப்பிடத்தகுந்த்து.
அன்று காலை இந்தியதவ்ஹீத்ஜமாஅத் சார்பில் நடைபெற இருந்த மைதீன் மருத்துவமனை மீண்டும் செயல்பட வலியுறுத்தி கண்டண ஆர்ப்பாட்டம் இறுதிநேரத்தில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் நீதிமன்ற உத்தரவுடன் மீண்டும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது்
கூட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது தாக்குதல் நடைபெற இருந்த சம்பவத்திற்கு கடும்கண்டணம் தீர்மானமாக நிறைவேற்றியதுடன் அவருக்கு தமிழகரசு உரியபாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது்

Reported By 

SMB  

INTJ தஞ்சையில் நடத்த இருக்கும் மாபெரும் 5 அம்ச கோரிக்கை விளக்க போத்துக்கூட்டம்...


தஞ்சாவூர், ஆகஸ்ட் 19: தஞ்சையில் மாபெரும் 5 அம்ச கோரிக்கை விளக்க போத்துக்கூட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடத்த உள்ளது. இதில் 5 அம்ச கோரிக்கைகளான: 1) தனி இடஒத்துக்கீடு, 2) வக்பு நிலா மீட்பு, 3) ஷரீயத் நீதி மன்றங்களுக்கு சட்ட அதிகாரம், 4) சிறைவாசிகளின் விடுதலை, 5) பூரண மது விளக்கு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலிருத்து நடைபெற உள்ளது.  இடம்: ஜமாலியா தெரு ராஜகிரி, நேரம்: மாலை 6 மணிக்கு. 

Reported By 

SMB 

இறையில்லம் அமைய உதவிடுவீர்!!!


பிப்ரவரி/19/15: காஞ்சிபுரம் மாவட்டம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதி இஸ்லாமியர் அதிகம் குடியேறும் பகுதிகளில் ஒன்று.இப்பகுதி இஸ்லாமியர்கள் தங்கள் மார்க்க கடமையை நிறைவேற்றும் பொருட்டு,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கானத்தூர் கிளை 1800 சதுரஅடி கொண்ட நிலத்தை ரூ:55,00,000(ஐம்பத்தைந்து லட்சம்)விலை பேசப்பட்டு முன் பணமாக ரூ:5,00,000(ஐந்து லட்சம்)கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்திற்கான பத்திரப்பதிவு மற்றும் கட்டிடப்பணிக்கான செலவு உட்பட ஒரு சதுர அடிக்கு ரூ:5500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் அன்றாடக்கூலிகளாவும்,சொற்ப ஊதியம் உடையவர்களாவும் இருப்பதால் இறையில்லம் அமைக்கும் பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வங்கி கணக்கு எண்:
India Thowheed Jamath Kanathur Branch
State Bank Of India
AC No:32647825963
Uthandi Branch
IFSC Code:SBIN0011771
தொடர்புக்கு:
மஸ்ஜிதுல் அக்ஸா
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
368/825,வாஞ்சிநாதன் தெரு
கானத்தூர் ரெட்டிக்குப்பம்
காஞ்சி மாவட்டம்
செல்:9444742067,9841844086,
9940374793,9884461830
படம்:மாநில நிர்வாகிகள் மற்றும் கானத்தூர் கிளை நிர்வாகிகள் தலைமையகத்தில் ஆலோசித்த போது.

தேனியில் 3 நாட்களாக நடைபெற்ற PFI மாநில பொதுக்குழு நிறைவு: M. முஹம்மது இஸ்மாயீல் மாநில தலைவராக தேர்வு!







தேனீ, ஜனவரி 11/15: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு ஜனவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தேனியில் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்கள் தலைமை தாங்கினார். இப்பொதுக் குழுவில் துவக்கவுரையாற்றிய மாநில தலைவர் தனது உரையில் பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த காலங்களில் கடந்து வந்த பாதை மற்றும் இயக்கத்தின் வளர்ச்சி குறித்து கோடிட்டுக்காட்டினார். பின்பு தேசிய செயற்குழு உறுப்பினர்
வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் அவர்கள் தேசிய அளவிலான பணிகளைக் குறித்து எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது அவர்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். அதன் பின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆண்டறிக்கை குறித்தும், சமூக , பொருளாதார, அரசியல் நிலைகள் குறித்தும், வருங்காலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் எடுத்து செல்ல வேண்டிய செயல்பாடுகள், முன்னேற்றம் , நிகழ்ச்சிகள்
ஆகியவை குறித்தும் விவாதித்தனர். 
 
தேசிய தலைவர் K.M.ஷெரீஃப் சிறப்புரை :

பொதுக்குழுவிற்கு வருகை தந்திருந்த தேசிய தலைவர் K.M.ஷெரீஃப் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், “மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் மதவாத பா.ஜ.க அரசின் மக்கள் விரோத கொள்கைகள், மததுவேஷ பேச்சுக்கள், சர்வாதிகார போக்கு ஆகியவற்றை வீழ்த்தி தேசத்தின் உன்னத கோட்பாடுகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை பாதுகாக்கும் நீதிக்கான போராட்டக்களங்களில் உறுதியோடு பயணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
 
புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் :

பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வாக அடுத்த இரண்டாண்டிற்கான (2015-16) மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. பாப்புலர்  ஃப்ரண்டின் தேசிய தலைமையிலிருந்து தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்களான A.யாமுஹைதீன் மற்றும் வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் ஆகியோர் இந்த தேர்தலை நடத்தினர். இதில் கீழ்க்காணும் நபர்கள் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களாக
தேர்வு செய்யப்பட்டனர்.
 
மாநில நிர்வாகிகள் :

மாநிலத்தலைவர் : M.முஹம்மது இஸ்மாயீல்
 
மாநில துணைத்தலைவர் : A.ஹாலித் முஹம்மது
 
மாநில பொதுச்செயலாளர் : M.முஹம்மது ஷேக் அன்சாரி
 
மாநில செயலாளர்கள் : J.முஹம்மது ரசீன்
 
A.முஹைதீன் அப்துல் காதர்
 
மாநில பொருளாளர் : S.இப்ராஹீம் பாதுஷா
 
மாநில செயற்குழு உறுப்பினர்கள் :

1. S.அமீர் பாஷா
2. வழக்கறிஞர் M.முஹம்மது ஷாஜஹான்
3. A.K.அமீன்
4. A.முஹம்மது பயாஸ்
5. M.முஹம்மது அலி நியாஸ்
6. A.ஆபிருதீன் மன்பயீ
7. M.முஹம்மது அலி ஜின்னா
8. A.மாஹின்
9. S.அஹமது நவவி
10. S..இல்யாஸ்
11. A.சாஹுல் ஹமீது
 
பதவிப் பிரமான நிகழ்ச்சி - தேசிய பொதுச்செயலாளர் M.முகம்மது அலி ஜின்னா பங்கேற்பு :

இப்பொதுக்குழுவிற்கு மேலிடப் பார்வையாளராக தேசிய பொதுச் செயலாளர்
M. முகம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயீல் அவர்களுக்கு தேசிய பொதுச் செயலாளர் M.முகம்மது அலி ஜின்னா அவர்கள் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயீல் முன்னிலையில் உறுதிமொழி (OATH) எடுத்துக் கொண்டனர். பின்னர், முந்தைய மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்களும்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்களும் நிறைவுரையாற்றினர். பொதுக் குழு இயக்குனர்
S. இல்யாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார். பொதுக்குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 
.
பொதுக்குழு தீர்மானங்கள்:
 
1. மத துவேஷ பா.ஜ.க விற்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் :

பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க
அரசு நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் மதவாத ஆர்.எஸ்.எஸ்
கொள்கைகளை நடைமுறை படுத்துவதில்தான் மும்முரமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மறைமுக இந்துத்துவ மற்றும் மக்கள் விரோத
செயல்திட்டங்கள் தற்போது படிப்படியாக அமல்படுதப்படுகின்றது. இது நமது நாட்டின் பன்முகத்தன்மைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களை பிரித்தாளும் மதவாத கருத்துக்களை நித்தம் வெளியிடுவதை பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் தலைவர்களும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனைக் குறித்து பிரதமர் மோடி எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமஸ்கிருத திணிப்பு,கல்வியில் பாசிச சிந்தனைகளை புகுத்துவது, அறிவியலை கேலிக்கூத்தாக்குவது, மாற்று கருத்துக்களை நசுக்குவது ,தொழிலாளர் விரோதக் கொள்கைகளை அமல்படுத்துவது என தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டு வரும் பாசிச இந்துத்துவ செயல்திட்டங்களை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.மேலும் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி கோட்சேவிற்கு நாடு முழுவதும் சிலை வைக்க இந்த பாசிச சக்திகள் துடிக்கின்றன. நாட்டு நலனை கேள்விக்குறியாக்கும் இப்போக்கை எதிர்கொள்வதில் மதச்சார்பற்ற சக்திகள் முன்வர வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
2. தமிழகத்தில் மதவாத பா.ஜ.க வை காலூன்ற
விட மாட்டோம் :

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து தமிழகத்தில் மத மோதல்கள் அதிகரித்துள்ளன . பந்த் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் அராஜகங்களில் ஏராளமான அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பெண்களை கொச்சைப்படுத்தும் வாசகங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க மற்றும் சங்க பரிவார கும்பல்கள் வட இந்தியாவில் கடைபிடித்த அதே மத மோதல் கலாச்சாரத்தை அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் ஏற்படுத்த
துடித்து வருவதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் இந்த பிரிவினைவாத சக்திகள் மீது மாநில அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
3. வக்ஃப் சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் :

முஸ்லிம் சமூகத்தின் நல்வாழ்விற்கும், மேம்பாட்டிற்காகவும் கொடுக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை தனிநபர்கள் ,சமூக விரோதக்கும்பல்கள், கல்வி நிறுவனங்கள், அரசு துறைகள் என அனைவரும் ஆக்கிரமித்துள்ளனர். இந்த
ஆக்கிரமிப்புகளை மீட்டு அவற்றின் உரிய சொந்தக்காரர்களான முஸ்லிம் சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டியது அரசுகளின் கடமையாகும் .மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாதமும் மீட்கப்படும் வக்ஃப் சொத்துக்கள் குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியாளர்கள் மாநில அரசு மற்றும் மாநில வக்ஃப்
வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். மாநில வக்ஃப் வாரியத்திற்கு உரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிப்பதிலும் மாநில அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசாங்களுக்கு இந்த கோரிக்கைகளை முன் வைக்கும் அதே சமயம் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் முஸ்லிம் சமுதாயம் களமிறங்க வேண்டும் என்றும்
இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
4. பாலியல் வன்கொடுமைகள் இல்லா தமிழகம் உருவாக வேண்டும் :

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த கொடுமைக்கு தற்போது பச்சிளம் குழந்தைகளும் பலியாகி வருவது வேதனையை அளிக்கிறது. இந்த வன்கொடுமை நடைபெறுவதற்கு மது முக்கிய காரணம் என்பதை அறிவதற்கு பெரிய அறிவியல் ஆராய்சிகள் ஏதும் அவசியமில்லை.அத்துடன் நவீன கலாச்சார சீர்கேடுகள், ஆபாச வலைத்தளங்களும் இந்த கொடுமைக்கு வழிவகுப்பதில் சம பங்கை வகிக்கின்றன. நாட்டின் சரிபாதியாக திகழும் பெண் சமுதாயத்தை பாதுகாப்பதற்காக மதுவை தடை செய்வதுடன் ஆபாச வலைத்தளங்களையும் தடை செய்ய வேண்டும். மிக முக்கியமாக மாணவர்களுக்கு நல்போதனை வகுப்புகளை நடத்துவதில் கவனம் செலுத்துவதுடன் பெற்றோர்களும் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் ஏழை பணக்காரன் என்ற பாரபட்சம் இல்லாமல் சட்டங்களை நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
5. திப்பு சுல்தான் மணிமண்டபம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்:

தமிழக அரசு கடந்த பட்ஜெட்டில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு வீர மரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தீர்மானித்து அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் இதுவரை அதற்கான அடிக்கல் நாட்டுவிழா கூட நடைபெறவில்லை. இதில் உள்ள நெருக்கடிகளையும், முட்டுக்கட்டைகளையும் சரி செய்து உடனடியாக மணி மண்டபம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை தமிழக
அரசு நிறைவேற்ற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
6:தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்கள்: நியூட்ரினோ திட்டம்:

தேனி மாவட்டம் போடி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொட்டிபுரம் கிராமத்தில் இயற்கை பேரழிவு திட்டமான நியூட்ரினோ ஆய்வு மையம் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குறியது.
ஏற்கனவே அஸ்ஸாமிலும், கேரளாவிலும் இத்திட்டம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டபோது அந்ததந்த மாநில மக்களின் எதிர்ப்பினால் இது கைவிடப்பட்டது. இந்நிலையில் தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி 5ஆம் தேதி மத்திய அமைச்சரவை இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. நியூட்ரினோ ஆய்விற்காக மலையில் சுரங்கம் தோண்டும் போதும், அதற்காக மலையை தகர்க்கும் போதும் அப்பகுதி முழுவதும் பூமி அதிர்ச்சி எற்படுவதை போன்று குலுங்கி பேரதிர்வு ஏற்படுவதுடன், சுற்றியிருக்கும் விவசாய நிலங்கள் பாழ்பட்டு பெரும் இயற்கை அழிவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே இத்தாலியில் இது போன்ற ஆய்வு மையம் அமைக்கப்பட்டு மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது. எனவே மக்களை அச்சுறுத்தும், இயற்கையையும் விவசாயத்தையும் பேரழிவிற்கு உள்ளாக்கும், நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கும் திட்டத்தை உடனே மத்திய அரசு கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. மீத்தேன் எரிவாயு திட்டத்தால் பல்வேறு அபாயங்கள் உள்ளன. 1500 அடி ஆழத்திற்கு மேல் ஆயிரக்கணக்கான துளைகள் இடப்பட்டு குழாய்கள் பதித்து, நிலத்தடி நீரை வெளியேற்றுவதால் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்காமல் காவிரி படுகை பாலைவனமாக மாறும், சென்னை முதல் ராமேஸ்வரம் வரை கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
 
மீத்தேன் திட்டம்:

பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி பாலங்களை அழுத்தி விரிசல் உருவாக்குவதற்காக வேதிப்பொருள்கள் அடங்கிய கலவை குழாய் வழியாக அடி ஆழத்துக்குச்செலுத்தப்படும். இதில் வெறும் 30 சதவிகிதம் மட்டுமே திரும்ப வெளியில் எடுக்கப்படும். 70 சதவிகிதம் நிலத்துக்குள்ளேயே தங்கி விடும். அது நிரந்தரமாக மண்ணை விஷமாக்கி விடும். இந்த ரசாயனக் கழிவு குடிநீரில் கலந்தால், புற்றுநோய், தைராய்டு உள்ளிட்ட பல நோய்கள் உருவாகக்கூடும். மேலும் மீத்தேனை எடுத்துச் செல்ல குழாய்கள் பதிப்பதற்காக ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் விவசாயத்தையே வாழ்க்கையாகக் கொண்ட லட்சக்கணக்கான குடும்பங்கள்
வேறு தொழில்நாடி இடம் பெயர நேரிடும். மொத்தத்தில் டெல்டாவின் பங்களிப்பான 36% உணவு உற்பத்தி பாதிக்கப்படும். எனவே மத்திய மாநில அரசுகள் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எந்த நிபந்தனையுமின்றி முற்றிலுமாக நிறுத்திட வேண்டும்,காலாவதியான ஒப்பந்தங்களை தமிழக
அரசு புதிப்பிக்கக்கூடாது எனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
7:பகுதி வாரி மாநாடுகள் (ஏரியா கான்பிரன்ஸ்):

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு மக்கள் பேரியக்கம். அனைத்து தரப்பு மக்களின் சமஉரிமைக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம், நீதிக்கான போராட்டம் என பல்வேறு பணிகளை முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது. மேலும் பணிகளை வலுப்படுத்தும் முகமாக தேசம் முழுவதும் பகுதி வாரியாக மாநாடுகளை (ஏரியா கான்பிரன்ஸ்) நடத்த தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏரியாக்கள் மற்றும் நகரங்கள் தோறும் மாநாடு நடைபெறும். இம்மாநாட்டிற்கு
பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு இப்பொதுக்குழு அன்புடன் அழைக்கிறது.
 
8:பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும்:

மக்களுக்கு கல்வியையும், ஒழுக்கங்களையும் போதித்து கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும், சட்ட ஒழுங்கையும் பேணி பாதுகாக்க வேண்டிய அரசு தானே மதுக்கடைகளை நடத்துவது என்பது இழிவானதாகும். இப்போது மதுப்பழக்கம் இளைஞர்களை வெகுவாக சீரழித்து வருகின்றது .சமீபமாக இந்தப்பழக்கம் பெண்களிடமும்,சிறுவர்களிடமும் பரவி வருவது கவலைக்குரியதாகும். மதுப்பழக்கத்தால் லட்சக்கணக்கான பெண்கள் பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். வாழ்க்கையை இழந்து வருகிறார்கள். பின் தங்கியுள்ள ஏழை மற்றும் தொழிலாளர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் இது சீரழித்து வருகிறது. நாட்டில் பரவி வரும் ஒழுக்கக்கேடுகளும், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கு மதுவே காரணமாக விளங்குகிறது. இந்த சீர்கேடுகளை தடுக்க வேண்டிய மற்றும் கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அரசு தமது பொறுப்பை மறந்து இலவசங்களுக்காக பயன்படும் வருமானத்திற்காக மட்டுமே மதுக்கடைகளை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எனவே மக்களின் நலன் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
 
9:இலங்கையில் நீதியும் மக்கள் உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும்:

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் முந்தைய ஜனாதிபதி ராஜபக்சே தோல்வியை தழுவி புதிய ஜனாதிபதியாக ஸ்ரீ சேனா அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.ராஜபக்சேவின் தோல்வி அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள்,தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளின் விளைவு தான் என்பது தெளிவாகிறது. இதை மனதில் கொண்டு புதிய ஜனாதிபதி ஸ்ரீ சேனா அரசு முந்திய அரசின் செயல்திட்டங்களில் இருந்து பாடம் படிக்க வேண்டும். குறிப்பாக 2009ஆம் ஆண்டு நடந்த போரில் பாதிக்கப்பட்டு அகதிகளாக உள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அங்கு சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவும் அனைத்து மக்களுக்கும் நீதிமிக்க ஆட்சி நடத்தவும் இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது.
 
பத்திரிகையாளர் சந்திப்பு :

பொதுக்குழு நிறைவடைந்த பின்னர் தேசிய பொதுச்செயலாளர் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முந்தைய மாநில தலைவர் A.S.இஸ்மாயீல், புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்ட மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயீல், மாநில துணைத்தலைவர் A.ஹாலித் முஹம்மது, மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது ஷேக் அன்சாரி, மாநில செயலாளர்கள் J.முகம்மது ரசீன், A.முஹைதீன் அப்துல் காதர் மற்றும் மாநில பொருளாளர் S.இப்ராஹீம் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
தொகுப்பு:

 
ரிப்போர்ட்டர் இல்யாஸ்

மல்லிப்பட்டினம் கலவரத்தின் புதிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. மறுமலர்ச்சி த.மு.மு.க அமைப்பாளர் குற்றச்சாட்டு.







முத்துப்பேட்டை, ஏப்ரல் 21: முத்துப்பேட்டைக்கு நேற்று மல்லிப்பட்டினம் கலவர பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆப்தீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கடந்த 14 –ம் தேதி அன்று தேர்தல் பிரச்சாரம் என்ற பேரில் பா.ஜ.க வன்முறையில் ஈடுப்பட்டது. இது குறித்து மறுநாள் 15-ம் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவிண் குமாரை சந்தித்து முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளதையும், அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி இதற்கு காரணமான பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், அவரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தோம். 

மறுநாள் 16-ம் தேதி காவல் துறை தலைவர் அனூஸ் மிஸ்ராவை சந்தித்தும் மனு கொடுத்தோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் வேலும் பல உன்மைகளை கண்டறிய இன்று(20-ம் தேதி) மல்லிப்பட்டினம் சென்று கலவர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அங்கு முஸ்லிம்களின் பெட்ரோல் பங்கு, மீன்பிடி போட்டுகள், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் ஏகப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமாகி உள்ளன. இதில் 1.5 கோடிக்கு மேல் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளன. 

அதற்காக அரசு இதுநாள் வரை எந்த வித ஒரு ரூபாய் கூட நிவாரனம் வழங்கப்படவில்லை, உயர் அதிகாரிகளும் கலவர பகுதியை பார்வையிட வில்லை, ஒரு வார காலமாகியும் எந்தவித முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை, முஸ்லிம்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுநாள் வரை நீதி கிடைக்கவில்லை, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை இன்று வரை குற்றவாளிகளை தேடுகிறோம் என்ற பேரில் காவல் துறை துன்புறுத்தி வருகிறது, அவர்களுக்கு உரிய நியாயம் வேண்டும், உரிய நிவாரனமும் வேண்டும். இது குறித்து நாளை 21-ம் தேதி(இன்று) சென்னையில் டி.ஜி.பியை சந்தித்து புகார் கொடுக்க இருக்கிறோம்.

 மேலும் அவரிடம் எங்களுக்கு கிடைத்த கலவரம் தொடர்பான புதிய வீடியோ ஆதாரங்களையும், காவல் துறை துணையோடு நடந்த வண்முறை ஆட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களையும் கொடுக்க இருக்கிறோம். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 30 பேர்களில் 22 பேர் அப்பாவி முஸ்லிம்கள் அவர்களை நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட விடுதலை செய்ய வேண்டும், தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும், சட்டரீதியான நடவடிக்கையில் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் தலைமை செயலகத்தையும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முஸ்லிம் அமைப்புகளை ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வயிலாக எதிர்ப்பை காட்டுவோம். இவ்வாறு ஜெய்னுல் ஆப்தீன் கூறினார். பேட்டியின் போது மாநில ஒருங்கினைப்பாளர்கள் பாட்சா, காரைக்கால் யூசுப், முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகி  முஹம்மது இலியாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.


நமது நிருபர் 

AKL. அப்துல் ரஹ்மான்...

சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்..!!!


சென்னை, டிசம்பர் 30: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்!
பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த மருத்துவமனையில் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் அதிகமானவர்கள் 
மருத்துவ மனையில் அனுமதித்து தங்கி சிகிச்சை பெறுகின்றனர் இவர்களில் பெரும்பாலனவர்கள் கட்டாய கடமையான 5 வேலை தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது .

ஆனால் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஒரு பள்ளிவாசல் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. இந்த பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைகான அழைப்பு விடுக்கபடுவதில்லை.(காரணம் இருதய அறுவை சிகிச்சை அரங்கிற்கு அருகில் உள்ளதால்.)
இது பற்றி அங்கு பணி புரியும் புற்று நோய் பிரிவு மருத்துவர் மதார்ஷா நம்மிடம் கூறும் பொழுது....
இந்த பள்ளிவாசலை இங்கு பணிபுரியும் ஒருசில இஸ்லாமிய மருத்துவர்களால் அரசுக்கு கோரிக்கை வைத்து அனுமதி வாங்கி நிர்வகித்து வருகிறோம்.
இதற்குண்டான செலவீனங்களை பணிபுரியும் மருத்துவர்களே வழங்குன்றனர் இதிலிருந்து கிடைக்கும் தொகையிலிருந்து ஒரு இமாம் மற்றும் மோதினார் உள்ளிட்டவர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம்.
இந்த பள்ளியிலேயே பெண்கள் தொழுகைக்கு தனியிடம் உள்ளது இந்த பள்ளியில் 5 வேலை தொழுகையும் வாரந்திர ஜும்மாவும் நடைபெறுகிறது என்றார் அவர்.

நன்றி: அதிரை புதியவன்

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ரத்ததான முகாம் -நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு !!!






























தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 நடத்திய மாபெரும் இரத்த தான 

முகாம் ,மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் இன்று 22.12.2013 நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் சகோ அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார்கள் . 

துணைத்தலைவர் நிஜாம் அலி அவர்கள் வரவேற்புரை வழங்க, மாவட்ட துணை 
\
கண்காணிப்பாளர் ( டி.எஸ். பி) ஆர். கணபதி அவர்கள் முகாமைதுவங்கி வைத்தார்கள். இதில் 37 சகோதரர்கள் இரத்தத்தை கொடையாக கொடுத்தனர். ஹாஜ அலாவுதீன் மாவட்ட மாணவரணி பேச்சாளர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார் , 

மருத்துவர் இளங்கோ MBBS அவர்கள் இரத்ததானம் செய்வதினால் ஏப்படும் 

நனமைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
முன்னாள் மாவட்ட தலைவர் A.அன்சாரி மற்றும் முன்னாள் இந்நாள நிர்வாகிகள் 

முன்னிலை வகித்தனர் . இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி மன்ற தலைவர் கோ . 

அருணாச்சலம் , மாவட்ட தி மு க துணை செயலாளர் M.S கார்த்திக் , ரோட்டரி மண்டல 

பொறுப்பாளர் G. கிருஷ்ணமூர்த்தி, மனித உரிமை கண்காணிப்பகத்தின் மாநில தலைவர் 

G.பஷீர் அஹமது மற்றும் பலர் கலந்து கொண்டனர் . இறுதியாக சேதி தொடர்பாளர் தமீம் அன்சாரி அவர்களின் நன்றிஉரையோடு நிகச்சி 

இனிதே நிறை வேறியது ...

தகவல் : முத்துப்பேட்டை செய்யது இப்ராஹிம்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)