முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!
Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

ஒரு பெண்ணை பெற்றோர்கள் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறைகள்



உலகம், பிப்ரவரி 08/2016: அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மஸ்ஜிதே நபவியில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். அதுசமயம் , சல்மான் ஃ பார்சீ [ரலி] அவர்கள் அங்கு வந்து, அண்ணலார் [ஸல்] அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! நான் தங்கள் அருமை மகளார் ஃபாத்திமா [ரலி] அவர்களின் வீட்டின் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.'' என்று கூறினார்கள்.


உடனே நபி [ஸல்] அவர்கள் தம் மகளார் வீட்டிற்கு விரைந்தார்கள். வீட்டில் ஃபாத்திமா [ரலி] அவர்கள் அழுது கொண்டிருந்தனர். அண்ணலார் [ஸல்] அவர்கள் தம் மகளாரிடம் அழுகைக் காரணத்தைக் கேட்டனர்.

மகளார்: ''அன்புள்ள தந்தையே! நானும் எனது கணவரும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தோம்,, விளையாட்டு வினையாகிவிட்டது. பேச்சுனூடே என் கணவர் '' பெண்கள் ஷைத்தான்களாவர் .. உங்களை எங்களுக்காக படைக்கப்பட்டது,, நாங்கள் அந்த ஷைத்தான்களின் தீங்கை விட்டும் அல்லாஹ் விடத்தில் காவல் தேடுகிறோம். '' என்று கூறினார்கள் .

நான் உடனே, ''நிச்சயமாக பெண்கள் ரைஹான் இலைகளைப் போன்றவர்கள்,, அவைகளை உங்களுக்காக படைக்கப்பட்டது,, நீங்கள் எல்லாம் ரைஹான்களை முகர்ந்திட ஆசைப்படுகின்றீர்கள் .'' என்று பதில் கூறினேன். இச் சொல் என் கணவரின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது. உடனே அவர்கள் வீட்டை விட்டும் புறப்பட்டு விட்டார்கள்,, எனவே தான் அழுது கொண்டிருக்கிறேன்.''

மகளாரின் மொழி கேட்டு அண்ணலார் [ஸல்] அவர்கள் மருகர் அலீ [ரலி] அவர்களைத் தேடித் புறப்பட்டார்கள். கடை வீதி, பள்ளி வாசல் முதலிய இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், ஜன்னத்துல் பகீ உ , என்னும் கப்ருஸ்தானில் அலீ [ரலி] அவர்களை கண்டார்கள்.

அது சமயம் அலீ [ரலி] அவர்கள் , ஒரு பாழடைந்த கப்ரில் ஓர் ஈச்சமரத்தின் கீழ், தலைக்கு மண் கட்டி ஒன்றை வைத்தவர்களாக, ஆழ்ந்த சிந்தனையில் படுத்திருந்தார்கள். வீட்டில் அமைதி குலைந்து விட்டால் மண வாழ்க்கையும் மண்ணறை போன்றுதானே!
அண்ணலார் [ஸல்] அவர்களின் அருகில் சென்று, 
''யா அபுத்துராப், கல் என்ன சொல்கிறது? '' எனக் கேட்டார்கள்.

அண்ணலாரின் குரல் கேட்டு துள்ளி எழுந்தார்கள் அலீ [ரலி] அவர்கள். அவர்களைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

வீட்டின் வாய்ற்படியருகே வந்து, ''அஸ்ஸலாமு அழைக்கும் யா ஃபாத்திமா ! உனது தந்தையும் , கணவரும் வந்திருக்கின்றோம். உள்ளே வரலாமா?'' என அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே சென்றனர்.

தமது மகளாரை விளித்து, ''மகளே! உனது பேச்சால் புண்பட்டுப் போயிருக்கும் உன் கணவரிடம் மன்னிப்புக் கேள் .'' என்றார்கள் . பாத்திமா [ரலி] அவர்கள் தனது கணவராம் அலீ [ரலி] அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.

தமது மகளைப் பார்த்து ''மகளே! உன்னுடைய கணவர் உன் மீது அதிருப்தி கொண்டநிலையில், உனக்கு மரணம் நேரிட்டிருக்குமாயின் நீ சுவனத்தின் மணத்தைக் கூட முகர்ந்திருக்க முடியாது போயிருப்பாய்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான் .'' எனக் கூறிவிட்டு சென்றார்கள்.

சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள், நம் குடும்பத்தில் கணவர் மனைவியர்களிடையே கசப்புணர்ச்சிகள் , சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அந்நிலையில் எம்முறையில் நாம் நடந்து கொள்கிறோம்?
'' அவன் கிடக்கிறான் வெறும்பயல். நீ வீட்டிற்கு வந்துவிடும்மா ? உண்ண உணவும் , உடுத்த உடையும் உனக்கு இல்லையென்றா அவன்தலையில் கட்டினோம்? நீ இங்கேயே இருந்துவிடு. சோறும், துணிமணிகளும் நாங்கள் தருகின்றோம். அவனோடு வாழ்ந்து போதும் .''

இவ்வாறெல்லாம் சில பெற்றோர்கள் தம் பெண்மக்களுக்கு நசீஹத்து செய்து, அவள் செய்துவிட்ட தவறுகளை அவள் உணர முடியாமலே செய்துவிடுவதுடன், அவளது மணவாழ்க்கையையும் வீணடித்து விடுகின்றனர்,, அது மட்டுமின்றி, அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உரியவளாகவும் அவளை ஆக்கிவிடுகின்றனர்.

ஆனால், அகிலத்திண் அருட்கொடை அண்ணல் நபி [ஸல்] அவர்களோ எல்லாவற்றுக்கும் முன்மாதரியாக திகழ்ந்த காரணத்தால், சுவர்க்கத் தலைவி என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்தும், தனது மகளாரின் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், மணாலரிடம் மன்னிப்புக் கேட்கச் செய்து, அவ்விருவரின் வாழ்க்கையையும் மனமுள்ள வாழ்க்கையாக மாற்றி அமைத்து நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்..


பிறை விசயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி முயற்சி...!!!


சென்னை, ஆகஸ்ட் 19: பிறையை கண்ணால் பார்த்து அமல் செய்வதே நபிவழியாகும்.பிறை விசயத்தில் தற்பொழுது நிகழும் சிறு குழப்பத்தை சரி செய்யும் பொருட்டு ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி  "பிறை ஓர் ஆய்வு"என்ற தலைப்பில் மார்க்க மற்றும் விஞ்ஞான அடிப்படையில் டிவிடி தயார் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
நேற்று(17.08.15)ஐஎன்டிஜேவின் மாநில நிர்வாகிகள் மற்றும் ஹிலால் கமிட்டியை சேர்ந்த பிர்தவுஸ்,முகம்மது முகைதீன்,முகம்மது ஷிப்லி ஆகியோர் அரசு தலைமை காஜி மற்றும் ஜமாத்துல் உலமா சபையை சேர்ந்த தர்வேஷ் ரசாதி ஆகியோரை சந்தித்து,பிறை ஓர் ஆய்வு டிவிடியை வழங்கினர்.
ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி பிறை விசயத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த, தொடர்ந்து பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.

Reported By 

SMB 

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகிருக்காது!



இந்திய, ஜனவரி 03: இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.

இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.

இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.

ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை.

நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும், அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள்.

இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும், இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும், இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும், இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும், இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும், இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.

ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.

அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை. அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.

எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை. ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது. அது விழித்தெழும் போது வீரிட்டு எழும்.

எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும்.

இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று. இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.

இந்தியாவை பாதுகாத்தல்: ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.

ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட, குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரியபோது, இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார். இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும்.

இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது. மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான். இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான். ஷேர்கானின் இறப்பிற்கு பின் மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான். வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான்.

தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது. இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.

அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான்.

மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான். அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.

அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும். (இன்ஷாஅல்லாஹ் தொடரும்) - பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர், அரசு கல்லூரி

முத்துப்பேட்டையில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாமிய (தாவா) நடமாடும் நூலகம் அறிமுகம்..






முத்துப்பேட்டை, செப்டம்பர் 05: முத்துப்பேட்டை TNTJ  கிளை 2 சார்பாக மாற்றுமத சஹோதரர்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்துகொள்ளும் வகையிலான நடமாடும் நூலகம் அமைத்து இஸ்லாமிய புத்தகம் வழங்கப்பட்டது. 

மதுரை சுங்கம் பள்ளிவாசலில் கேமரா: அதிருப்தியில் ஜமாத் உறுப்பினர்கள்.!!!



மதுரை, செப்டம்பர் 04: மதுரையில் உள்ள பிரபலமான சுங்கம் பள்ளி வாசல் வளாகத்திற்குள் 12 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

போலீஸாரின் ஆலோசனைப்படி இந்த பள்ளிவாசலுக்குள் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், முஸ்லீம் ஐக்கிய ஜமாத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் ஆகியவை இந்த கேமரா பொருத்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் முஸ்லீம் சமுதாயத்தினரிடையே கருத்து பிளவு ஏற்பட்டுள்ளது.

*இந்த செய்தியை ஆகஸ்ட் 16 தேதியிட்ட ஒரு சில நாளிதழ்களும்,இணையதளங்களும் வெளியிட்டிருந்தன.

வழிபாட்டு தளங்களில் கண்காணிப்பு காமெரா பொருத்தவேண்டும் என்பது காவல்துறையின் வாய்மொழி உத்தரவுதான். அப்படியே பொறுத்தவேண்டும் என்றாலும் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பொருத்தவேண்டும் என காவல்துறை அறிவுறுத்த வேண்டும். இதை கூட காவல்துறை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பள்ளிவாசலில் மட்டும் பொறுத்த வேண்டும் என்பது உள்நோக்கம் கொண்டதும் ஒரு சமுதாயத்தை அவமதிப்பதும் ஆகும்.

நெல்லை மேலப்பாளையம், மதுரை நெல்பேட்டை ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் மீது காவல்துறை நிகழ்த்தி வரும் வரம்பு மீறல் நடவடிக்கைகள் குறித்த உண்மை நிலையை அறிய மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தைச் சேர்ந்த பேரா.அ.மார்க்ஸ் தலைமையில் சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் குழு மதுரையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, மதுரை காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தது.

இதில் பேசிய பேரா.மார்க்ஸ், ''போலீசாரின் (மறைமுக) உத்தரவின் பேரில் முஸ்லிம் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டிருப்பதாக உள்ளூர் முஸ்லிம்கள் கூறுகின்றனர். இப்படி சிவில் சமூக மக்களின் (அன்றாட) வாழ்க்கையை கண்காணிப்பது சட்டவிரோத நடவடிக்கையாகும்'' எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம்களை குற்றப்பரம்பரை போல் சித்தரிக்கும் போக்கை காவல்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும்.எங்கேனும் பள்ளிவாசல்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் படி காவல்துறை கட்டாயப்படுத்தினால் சம்மந்தப்பட்ட ஜமாத்துகள் நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடுக்க தயங்கக்கூடாது.
காவல்துறை இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம்.

நன்றி: INTJ  

ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர் பார்ப்பது என்ன?

உலகம், ஜூலை 26: இரண்டு வருடம்மூன்று வருடம்நான்கு வருடம்சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்துவெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.
 இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில்
கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.

இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.

.பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தைஅர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.

பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.]

 ஆலிமாக்கள் என்றால் யார்?
இரண்டு வருடம்மூன்று வருடம்நான்கு வருடம்சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்து வெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.
இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில் கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.
இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.
1. தாய்தந்தைஅண்ணன்தம்பி என்று குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் வீட்டை விட்டு விடுதிகளில் தங்கவேண்டிய கட்டாயக் கஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.
2. ஒரு கைக்குட்டையைக்(கர்ச்சிப்) கூட துவைக்கத் தெரியாத காலத்தில் தங்கள் ஆடைகள் அனைத்தையும் தாங்களே துவைக்க வேண்டிய நிலை.(ஆண்களும் இதே கஷ்டத்தை அனுபவித்தாலும் பெண்கள் படும் கஷ்டத்திற்கும் ஆண்கள் படும் கஷ்டத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகிறது).
3. பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தைஅர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.
4. வீட்டில் எத்தனையோ விஷேசங்கள் நடந்தாலும் இவர்கள் அத்தனையையும் தவிர்ந்து கொள்ளும் ஒரு நிலை.
இப்படி பல தியாகங்களைச் செய்துதான் இந்த ஆலிமாச் சகோதரிகள் தங்கள் மார்க்கப் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்கும் இந்தச் சகோதரிகள் தங்கள் படிப்பு முடிந்தபின் என்ன நிலையில் இருக்கிறார்கள்?
மார்கத்தில் அவர்களின் நிலை என்னவாகிறது?
அவர்களின் எதிர்கால கணவு என்னாகின்றது?
குடும்ப வாழ்க்கைக்கும் இஸ்லாமிய நெறிக்கும் தொடர்பு இருக்கிறதா?
திருமணத்தின் பின் இந்தச் சகோதரிகளின் நிலை மாற்றம் என்னஎப்படி அமைகிறது?
ஆடை விஷயத்தில் இவர்களின் நடை முறை செயல்பாடு எப்படி அமைகிறது?
மற்றவர்களுக்கு மார்க்கத்தை சொல்லும் நிலை இருக்கிறதாஇல்லையா?
அதிகமான ஆலிமாக்களை தஃவாக் களத்தில் காணமுடியவில்லையே அது ஏன்?
ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்னஉலகவரலாற்றை கொஞ்சம் பின் நோக்கிப் பார்த்தால் இந்த உலக மக்களின்முன்னேற்றத்திற்கு ஆண்களுக்கு சமனாக பெண்கள் செய்த சேவைகள் கண்முன் கொண்டு வந்து நிருத்தப்படும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடங்கிநாம் வாழும் இந்தக் காலம் வரை இந்த உலகத்தின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் தியாகம் மறைந்திருப்பதை நாம் தெளிவாக அறிய முடிகிறது.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் பெண்களின் நிலை என்ன?
பெண் என்றால் போதைக்காக பயண்படுபவள் என்ற மாயையை உடைத்தெரிந்தது இஸ்லாம்.
பெண்களுக்கும் ஆண்மா உண்டென்று உலகுக்குக் காட்டியது இஸ்லாம்.
வீட்டினுல் முடங்கிக் கிடந்தவர்களை உத்தமர்களாக இந்த உலகுக்கு படம் பிடித்துக் காட்டியது இஸ்லாம்.
பெண்கள் சமுதாயத்தில் இடம் பிடிக்கக் கூடாது என்று பல மார்கங்களும்,மதங்களும்சித்தாந்தங்களும் கருத்துச் சொன்ன நேரத்தில்ஸஸ..
பெண்கள் சமுதாயத்தின் கண்கள் என்று பெண்விடுதலைக்கு வித்திட்டது இஸ்லாம்.
வீடுகணவன்பிள்ளைகள் என்றிருந்தவர்களை கல்வித் துறையில் கல்லூரி வரை உயர்தியது இந்த இஸ்லாம்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய பெண்களின் கல்வி நிலைஒழுக்கம்,நன்நடத்தைகள் என்று அனைத்தும் கேள்விக்குறியாகியிருப்பதை நாம் காண முடிகிறது.
 நாங்களும் சாதித்துக் காட்டுவோம் :
ஆண்கள் கூட கல்வியைப் பற்றிக் கண்டு கொள்ளாத இக்காலத்தில் பெண்கள் தங்கள் கல்விக்காக செய்யும் தியாகங்கள் அதிகம்.
இந்த தியாகங்களை செய்வதற்கு அவர்களுக்கு பின்னனியாக இருப்பது இரும்புக் கோட்டையின் பலத்திற்கு நிகரான ஒரு எண்ணம் தான்.
அதாவது நாங்களும் சாதித்துக் காட்டுவோம் எங்களாலும் முடியும் எங்களை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை நாங்களும் கல்விக்குவித்திட்டவர்கள் தான் இது தான் ஆலிமாவாக மாறுவதற்கு அவர்களின் உள்ளத்தில் இருக்கும் முதல் எண்ணம்.
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களாஎன்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெருவார்கள். (அல்குர்ஆன் 39:09)
கல்வியை கற்பதில் எங்களுக்கும் தகுதியுண்டு ஜாஹில்யத்தைதுடைத்தெரிந்த நபிக்கு இறக்கிக் கொடுக்கப்பட்ட வேதத்தில் கற்றவர்களுக்குகல்வி கற்காதவர்களை விட மிகப் பெரியதொரு அந்தஸ்த்து இருக்கிறது.
அந்த அந்தஸ்த்து எங்களுக்கும் கிடைக்க வேண்டும் நாங்கள் எதையும் கேட்டுத் தெரிந்து அறிந்து அதன்படி தான் நடப்போம்.
கண்மூடிக் கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ள நாங்கள் அபலைகளும் அல்ல எங்கள் அண்னையர் எங்களுக்கு அப்படி வழிகாட்டவும் இல்லை.
இதுதான் அவர்களின் திடமான கொள்கை.
நபியிடத்திலேயே தட்டிக் கேட்டவர்கள் அல்லவா?
இப்னு அபீமுலைக்கா (அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.
(ஒருமுறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''எவர்(மறுமை நாளில் துருவித் துருவி) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனைசெய்யப்படுவார்'' என்று கூறினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ''அல்லாஹ் (குர்ஆனில்) 'வலக்கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டுவழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' (84:8)என்றல்லவா கூறுகின்றான்?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்இ ''இது (கேள்விக் கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார்'' என்று கூறினார்கள். (புகாரி 103)
நபியவர்கள் ஒரு செய்தியைச் சொல்கிறார்கள் அதனை ஒட்டி ஒரு எதிர்க் கேள்வியைக் கேட்டு நபியவர்கள் சொன்ன செய்தியின் உண்மை விளக்கத்தை அவர்களின் வாயிலிருந்தே சொல்ல வைக்கிறார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.
(ஒருசமயம்) பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''(நாங்கள் தங்களை அணுகி மார்க்க விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே எங்களுக்காக (தனியாக) ஒரு நாளை ஒதுக்குங்கள்'' எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களித்து அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக் கட்டளைகளை) வலியுறுத்தினார்கள்.

''உங்களில் ஒரு பெண் (தனது மரணத்திற்கு) முன்பாக தம் குழந்தை களில் மூவரை (இறப்பின் மூலம்)இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திரி ருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்'' என்றுகூறினார்கள். உடனே ஒரு பெண்மணி 'இரண்டு குழந்தைகளை ஒருத்திஇழந்துவிட்டால்...?' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''(ஆம்) இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்''என்றும் அவ்வுரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹுபுகாரி 101)
நபியவர்களின் வார்த்தைகளில் கூட மேலதிக விளக்கம் வேண்டி கேள்வி கேட்ட அண்ணையர்களின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்?
கேள்வி கேட்டாயினும் நாம் மார்க்கத்தை தெளிவாக அறிய வேண்டும் என்ற எண்ணம் உயிரில் ஊரியிருக்காதா என்ன?
பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.


சென்னையில் கூடியது இஸ்லாமிய இஜ்திமா மாநாடு :லட்சகணக்கானோர் பங்கேற்பு :

சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம் பகுதியில் உள்ளது அலமாதி எனும் கிராமம் .இங்கு கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இஸ்லாமிய இஜ்திமா மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர் .இதற்காக பிரம்மாண்டமான முறையில் பல விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட
 ராட்சத பந்தல்கள் போடப்பட்டு அதில் சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள்    மற்றும்  ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன .மைதானத்தின் உள்ளே உளு செய்வதற்காக கிரேன் மூலம் பள்ளங்கள் வெட்டப்பட்டு 4 இடங்களில் மிக நீளமான அஹல்கள் அமைக்கப்பட்டிருந்தன .உளு செய்வதற்காக மிக நீளமான பிளாஸ்டிக் பைப்புகள் பொருத்திய தண்ணீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன . சிறுநீர் கழிப்பதற்கு வசதியாகவும்   ,மலம் கழிப்பதற்கு வசதியாகவும் தனித்தனியே பிளாஸ்டிக்கிலான ரெடிமேடு பாத்ரூம்கள் அமைக்கப்பட்டிருந்தன . 10 க்கும் மேற்பட்ட உணவகங்கள் அமைக்கப்பட்டு அதில் ஊர்வாரியாக  பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது .உணவு டோகண் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக உணவை வாங்கிச்சென்று ,சாப்பிடுவதர்காக அமைகப்படிருந்த  விஷேச பந்தலில் அமர்ந்து உணவருந்தினார்கள் .இதுதவிர பல சிற்றுண்டிகடைகளும் நீண்ட வரிசையில் அமைக்கப்படிருந்தன.
தற்காக தமிழக அரசின் சார்பில் 500 க்கும் மேற்பட்ட அரசு  பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன  ,பேருந்துகள் அனைத்தும் மைதானத்தின் உள்ளே அணிவகுத்து  நின்றன . .ஒவ்வொரு பிரிவிற்கும் பொருப்புதாரிகள்  நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன .இந்த இஜ்திமா மாநாட்டில்  சிறப்பு பயான் செய்வதற்காக டெல்லி பேஷ் இமாம் ,மற்றும் ஹைதராபாத் ,பெங்களுரு  ,போன்ற பகுதிகளிலிருந்து இமாம்கள் ,மௌலவிகள் ,உலமாக்கள் ,ஆலிம்கள்  வந்திருந்தனர் .மாநாட்டு திடலை மத்திய உளவுத்துறையின் ஹெலிகாப்டர் வட்டமிட்ட வண்ணம்  இருந்தது .ஒரு சிறிய விளம்பரம் கூட இல்லாமல் அதுவும் சென்னை ,காஞ்சிபுரம்  ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மட்டுமே கலந்துகொண்ட  இந்த இஜ்திமா மாநாட்டில் எப்படி இத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டதை பார்த்த  அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துபோனார்கள் .குறிப்பாக  தமிழக  மற்றும் அகில இந்திய அரசியல் வாதிகளின் புருவத்தை உயர்த்தசெய்துள்ளது .அல்லாஹு அக்பர்  ..அல்லாஹு அக்பர் ..அல்லாஹு அக்பர் ....

நேரடி களதொகுப்பு :ஜே.ஷேக்பரீத்  

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.



பிப்ரவரி 14: சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். 

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பிலே  ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்

மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த நிலவை பிரிக்கும் அதிசயத்தை நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல்

தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் கொச்சின் ராயல் பேமிலி என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.

இறப்பு

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (Jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை

மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர்.

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.

இளம்பெண்கள், குடும்பப் பெண்கள், யாருடன் கொஞ்சிப் பேசலாம்? ஓர் பார்வை.!!!


உலகம், ஜுலை 26 : பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.]

ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். இந்நிலையில் பெண்கள் கொஞ்சிப்பேசினால் என்னவாகும் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும்.

ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வஇயுறுத்திக் கூறுகின்றது. பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
''நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்''. (அல்குர்ஆன் 33:32)
அதுவும் அல்லாஹ் யாரை நோக்கிக் கூறுகின்றான்? சதாவும் வஹீயின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரை நோக்கிக் கூறுகின்றான் எனும் போது மற்றவர்களின் நிலைமை எம்மாத்திரம்?
அல்லாஹ் பெண்களை வியாபாரம், தொழில், கல்வி, குடும்ப விவகாரங்கள் தொடர்பாக வெளியே செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் வரைகளையும், வரம்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இந்த வரம்புகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

தொடரும் அவலங்கள்

பெண்கள் இன்று வெளியே ஆட்டோ, கார், பஸ் ஆகியவற்றில் பயணம் செய்கின்றனர். இவற்றிற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் ஆட்டோ, கார், பஸ் டிரைவர்கள் கண்டக்டர்களிடம் அநாவசியமான பேச்சுக்கள்.
மளிகை, துணி, காய்கறி கடைகளில் சென்று பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கம் தடை விதிக்கவில்லை. ஆனால் அந்தக் கடைகளில் அதிலும் குறிப்பாக ஏ.சி. போடப்பட்ட நகைக் கடைகளில் ஒய்யாரமாக, உல்லாசமாக உட்கார்ந்து ஊர்பட்ட கதைகளைப் பேசிக் கொண்டிருப்பது.
மேற்கண்ட வியாபாரிகள் வீடுகளுக்கு வருகின்றனர். இதல்லாமல் கணவனின் நண்பர்கள் என்று பலர் வருகின்றனர். இத்தகையோரிடம் கட்டுப்பாடற்ற முறையில் பேச்சுக்கள் நீள்கின்றன.
தொலைபேசியில் தொடரும் பேச்சுக்கள் இன்று தொலைபேசி முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாகும். தொழில், வியாபாரம், குடும்பம், மருத்துவம் இன்னும் எண்ணிலடங்கா துறைகள் ரீதியிலான இதன் பயன்பாடுகளை நாம் பட்டியஇட முடியாது. இன்று வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களின் ஒரேயொரு ஆறுதல் தொலைபேசியில் தங்கள் துணைவியருடன் உரையாடுதல் தான். ஒரு தடவை மனைவியுடன் போனில் பேசி விட்டால் ஏதோ தாயகம் சென்று திரும்பிய ஒரு திருப்தி கிடைக்கின்றது.

இப்படிப்பட்ட இந்தத் தொலைபேசி, முன் பின் தெரியாத பலருடன் பல கட்டங்களில் நீண்ட நேரம் பேசுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. வட்டிக் கடைக்காரர்கள், வீடியோ கேஸட் விநியோகிஸ்தர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போன்றவர்களிடம் பேசுவதற்காக இந்தத் தொலைபேசிகள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகின்றன.
பாட்டு கேட்டு போன் செய்தல் டிவிக்கள் அதிலும் கலர் டிவிக்கள் ஒவ்வொரு வீட்டிலும் சீரழிய ஆரம்பித்த பின் மார்க்கோனி கண்டுபிடித்த ரேடியோவுக்கு மவுசு இல்லாமல் போனது. நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகள்.

தமிழகத்தில் உள்ள மக்களை நரகப் படுகுழியில் கொண்டு போய் தள்ளுவதற்காக சன் நெட்வொர்க் நிறுவனத்தார் சன் டிவி, கேடிவி என்று எக்கச்சக்க சேனல்கள் ஆரம்பித்தது போதாது என்று சுமங்கஇ போன்ற கேபிள் டிவிக்களையும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பார்த்துக் கெட்டுப் போங்கள்! பார்த்துக் கெட முடியாத இடங்களில் கேட்டுக் கொண்டே கெட்டுப் போங்கள் என்று சூரியன் எஃப்.எம். ஆரம்பித்துள்ளனர்.

உங்களை நாங்கள் கெடுக்காமல் சும்மா விட மாட்டோம் என்று இந்த எஃப்.எம். அலைவரிசைகள் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன.
இப்போது இரண்டு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களும் ஒரு ரேடியோவை கட்டிக் கொண்டு பாட்டைக் கேட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்கின்றனர்.

இந்த எஃப்.எம். ரேடியோக்கள் கையாளும் புது முறை, கலாச்சாரத்தை மேலும் சீரழிக்கத் துவங்கியுள்ளது. வீட்டுப் பெண்களிடம் போன் செய்து உங்களுக்குப் பிடித்த பாட்டு என்ன? என்று கேட்கின்றனர். அதற்கு பாத்திமா பீவியும், பரக்கத் நிஸாவும் எங்களுக்கு இன்ன பாட்டு வேண்டும் என்று கேட்கின்றனர். இந்தப் பாட்டை விரும்புவதற்குக் காரணம்? என்று கேட்கும் போது, நாங்கள் திருமணம் முடித்ததும் முதன் முதஇல் பார்த்த படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது என்று பதில்.

அடுத்து நிலைய அறிவிப்பாளர், உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? என்று கேட்கிறார். உடனே இந்தப் பெண், விஜய் என்றோ அஜீத் என்றோ தங்களுக்குப் பிடித்த நடிகரைக் கூறுகின்றார்கள். டிவியிலும் இது போன்ற கேள்விக்குப் பதில் சொல்லும் பெண்களுக்கு அருகில் கணவனும் வெட்கம் கெட்டுப் போய் நிற்கின்றான்.

இது மாதிரி சொல்லும் போது இப்படிப்பட்டவளை இழுத்துப் பிடித்து சாத்தாமல் எருமை மாடு போல் அட்டியின்றி ஆத்திரமின்றி அப்படியே அசையாமல் நிற்கின்றான். ஒரு பெண்ணின் உள்ளம் அனைத்தும் தான் கொண்ட கணவனுக்கே சொந்தம் என்ற நிலை மாறி அடுத்தவனுக்கும் அங்கு இடமிருக்கின்றது என்றாகி விடுகின்றது. அதாவது தனது கணவனை விட அஜீத் தான் தனக்குப் பிரியம் என்ற படுமோசமான நிலைக்கு இவள் போகின்றாள் என்பதை அவளுடைய வார்த்தையே எடுத்துக் காட்டுகின்றது.

பெண்களைப் பற்றி இங்கு எழுதுவதால் ஆண்கள் ரொம்ப சுத்தம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. அடுத்து அப்படியே மைக்கைத் திருப்பி கணவனிடம், உங்களுக்குப் பிடித்த நடிகை யார்? என்று கேட்கிறார்கள். இந்த ஆடவனும் வெட்கமில்லாமல் ஏதேனும் ஒரு விபச்சாரியின் பெயரைக் கூறுகின்றான். டி.வி. அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை குடும்பக் கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைப்பது என்ற தீர்மானத்தோடு தான் வருகின்றார்கள். அதனால் தான் ஆணிடத்தில் கேட்கும் போது, பிடித்த நடிகை யார்? என்று கேட்பதும் பெண்ணிடத்தில், பிடித்த நடிகன் யார்? என்று கேட்பதும் இவர்களது வாடிக்கையாக உள்ளது.
இப்போது விஷயத்திற்கு வருவோம். எஃப்.எம். ரேடியோ வந்த பிறகு அனைத்துப் பேருந்துகளிலும், டீக்கடைகளிலும் இந்தக் குரல் தான் ஓங்கி ஒலிக்கின்றது.

இந்தப் பெண்மணி வீட்டிஇருந்து பேசுகின்ற இந்தப் பேச்சைக் கேட்டு பேருந்தில் பயணம் செய்யும் முஸ்இலிம்கள் வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கின்றது. இதில் இந்தப் பெண் தான் வசிக்கின்ற முகவரி, தன் கணவர் பார்க்கும் வேலை, தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டை உட்பட எதையும் விடாது சொல்இலித் தொலைக்கின்றாள்.
இதில் நிலைய அறிவிப்பாளரிடம் பேசும் போது கொஞ்சுகின்ற கொஞ்சல், சிணுங்குகின்ற சிணுங்கல், குழைகின்ற குழைவு இத்தனையும் கேட்கும் போது உண்மையில் நம்மால் பேருந்தில் இருக்க முடியவில்லை. கணவனிடம் காட்ட வேண்டிய கொஞ்சலையும் குழைவையும் யாரோ ஒரு நிலைய அறிவிப்பாளரிடம் காட்டுவது மட்டுமல்லாமல் அதைப் பகிரங்கமாக, பலர் கேட்கும் அளவுக்குக் காட்டுகின்றார்கள்.

இதில் பெயர், முகவரியை வேறு தெளிவாக அதிலேயே அறிவித்து விடுகின்றார்கள். இதைக் கேட்பவர்களில் அல்லாஹ் கூறுவது போல் உள்ளத்தில் நோயுள்ளவர்கள், சபல புத்தியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? சந்தர்ப்பம் கிடைக்காதா என்று சதி வலை பின்ன மாட்டார்களா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: ''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டில் உள்ளவர்களுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.'' (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 893)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவது போல் இத்தகைய பெண்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்இயே ஆக வேண்டும்.
''அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூஇயை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.'' (அல்குர்ஆன் 24:24,25)

இந்த வசனத்தின் படி மறுமையில் இவர்களது நாவுகளே அல்லாஹ்விடம் பேசும். அப்போது அல்லாஹ்விடமிருந்து தப்ப முடியாது. எனவே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று இத்தகைய பெண்களுக்கு நாம் அறிவுரை கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

எவரிடம் கொஞ்சிப்பேசலாம்?

அதற்காகாக பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

தமிசுதீன் (நாகைப்பட்டினம்)

மதுவை ஒலிக்க முஸ்லிம் பெண்கள் எடுத்த அவதாராம், மிரண்டு போன தமிழகம்..!!


சென்னை,மார்ச் 08 : நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக மது மற்றும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி சென்னை இராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. இதில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவி ஆர். ஜீனத் ஆலிமா தலைமை தாங்கி நடத்தித்தந்தார்.தமிழகத்தில் தற்போதையை கணக்கெடுப்பின் படி 6696 டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகிறது எனவும் 4350 பார்கள் இயங்கி வருகிறது எனவும் கூறப்படுகிறது. மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று ஒவ்வொரு மதுக்கடைகளிலும் எழுதி வைத்துவிட்டு அதை அரசாங்கமே நடத்தும் அவல நிலை நமது இந்தியாவில் மட்டுமே காண இயலும். சமூகத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே சமூகத்தை சீரழிக்கக்கூடிய மதுவிற்கு அங்கீகாரம் அழித்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. மதுவை அருந்திவிட்டு தன்னிலை உணராமல் சாலை ஓரங்களில் விழுந்துகிடக்கும் அவலங்களை நம்மால் காண முடிகிறது. அச்சாலை வழியாக செல்லும் பெண்களுக்கும், பள்ளிக்குழந்தைகளுக்கும் பெரும் இடையூறாக அமைந்துவிடுகிறது என்பதற்கான மாற்று கருத்து யாருக்கும் இருக்கவியலாது.அதே போன்று இந்தியாவில் பெண்களுக்கென்று தனி கவுரவமும், மரியாதையும் எப்போதுமே இருக்கும். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்று போற்றி புகழ்ந்து கொண்டிருந்த நமது தேசத்தில் ஆபாசம் என்ற ஒழுக்கக்கேடு புகுந்து சமூகத்தை சீரழித்து வருகிறது. பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் நிலை அதிவேகமாக பரவி வருகிறது. எனவே சமூகத்தை சீரழிக்கக்கூடிய மது மற்றும் ஆபாசத்தை எதிர்த்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக உலக மகளிர் தினமான மார்ச்-8ஐ முன்னிட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் ஹெச். ஆயிஷா ஹமீது அவர்கள் "மது மற்றும் ஆபாசம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட N.W.F-ன் மாநில துணைத்தலைவி எம். நபிஸாபானு "இன்றைய பெண்களின் நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இறுதியாக சென்னை மாவட்ட செயலாளர் எஸ். அஹமது மல்லிகா நன்றியுரை நிகழ்த்தினார். இப்பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

ஓடும் ரயிலில் ஒரு உரையாடல் !


நெல்லை, மார்ச் 05 : நெல்லை எக்ஸ்ப்ரெஸ் எழும்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. என்னுடன் அமர்ந்திருந்த பயணக் கூட்டாளிகளைச் சுற்றிலும் பார்த்தேன் யார் யாரோ அறிமுகமில்லாத பல முகங்கள் அதில் என் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞரின் திருமுகம் என்னைக் கவர்ந்தது, அழகான ஷேவ் செய்யப்பட்ட -இளமையும் அமைதியும்தவழும் களையான முகம் . வயது முப்பத்தைந்து இருக்கலாம் அரைக்கை
ஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். "யாரோ ? நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் . " என்று எண்ணிக் கொண்டேன். புகை வண்டி புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரவு சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அந்த இளைஞர் மேலே அப்பர் பெர்த்தில் படுத்து விட்டார்.

உறங்கும் பயணிகளை தன் கற்பத்தில் சுமந்து கொண்டு உறங்காமல் ஓடிக் கொண்டிருந்தது அந்த நெல்லை விரைவுப் புகை வண்டி.

பலபல என்று விடிந்தபோது விருதுநகரில் அந்த இளைஞர் விழித்தார் கை கால் முகம் கழுவி காப்பியும் அருந்தி விட்டு உடை மாற்றத் தொடங்கினார் . மாற்று உடையில் அவரைக் கண்டதும் ஓரளவு திகைத்துத்தான் போனேன். ஆம் ! அத்துணை நேரமும் அவரை செல்வக் குடியில் பிறந்த ஒரு வாலிபர் எனக் கருதியிருந்த என் முன் அவர் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரின் உடையில் காட்சியளித்தார் .

அருகில் அமர்ந்திருந்த அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைப் பார்த்ததும் அவருடன் ஏதாவது பேசவேண்டுமென என் துடுக்கு மனம் துடித்தது. நெல்லை வரை பொழுதும் போகவேண்டுமே

பேசத் தொடங்கினேன் ! சென்னையில் பாதிரியார்களின் மாநாட்டுக்கு சென்று வருவதாகவும் , பாளையம்கோட்டையில் வசிப்பதாகவும் அவர் தம்மைப் பற்றிக் கூறினார் . அவர்களின் மத குருவாக ஆவதற்குரிய கல்வி, பயிற்சி சடங்குகள் முதலியவைகளையும் இனிமையுடன் விவரித்தார் . நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அன்புடனும் கனிவுடனும் விளக்கம் கூறினார். அவரது பேச்சும் பதிலளித்த முறையும் சகஜமாகப் பழகிய விதமும் "இன்னும் ஏதாவது கேள் " என்று என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தன ! சரி ! நாம் என்ன கேட்டாலும் இவர் கோபப் பட மாட்டார் ! என்ற தைரியம் வந்து விட்டது எனக்கு !

" சார் ! உங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எனக்கு சில சந்தேகங்கள் ! உங்களிடம் அதைக் கேட்டு நீக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ! கேட்கலாமா சார் ? நீங்கள் தவறாக நினைக்க வில்லையென்றால் கேட்கிறேன் " என்று ஆரம்பித்தேன் !

"ஏன் ? தாராளமாகக் கேளுங்கள்" எனப் புன் முறுவல் பூத்தார் !

"சார் ! எங்களுடைய வேதத்திற்கு "குரான்" என்று பெயர் ! இந்தப் பெயர் அந்த வேதத்திலேயே சொல்லப் பட்டிருக்கிறது ! அதேபோல் உங்களுடைய வேதமாகிய பைபிளில் "பைபிள்" என்று எங்காவது வருகிறதா ?

"இல்லை !" - அவரது பதில் .

"அப்படியானால் உங்கள் வேதத்திற்கு "பைபிள்" என்று எப்படிப் பெயர் வந்தது ? யாரால் சூட்டப் பட்டது ? "

"நல்ல கேள்வி; ஆனால் உடனடியாக என்னால் பதில் சொல்ல முடியவில்லை "

"சார் ! வருத்தப் படக் கூடாது ! பதினேழு ஆண்டுகள் நீங்கள் பாதிரியார் ஆவதற்குப் பயிற்சி பெற்றும் இந்தச் சந்தேகத்திற்கு யோசித்துத் தான் பதில் சொல்ல வேண்டுமா ?"

" சார் ! இன்னொரு சந்தேகம் ! எங்களுடைய வேதமாகிய குர் ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டது. உங்களுடைய பைபிளை எந்த மொழியில் இயேசு கூறினார் ?"

"ஹிப்ரூ மொழியில்"

" சரி ! நாங்கள் இன்ஜீல் வேதம் சுர்யானி மொழியில் அருளப்பட்டதாக நம்புகிறோம் ! ஆனால் அந்த மொழி உங்களுக்கு தெரியுமா ? "

"தெரியாது !"

"அப்படியானால் நீங்கள் எந்த மொழியில் உங்கள் பைபிளை ஓதுகிறீர்கள் ?"

"ஆங்கிலத்திலும் தமிழிலும் , பிற மொழிகளிலும் "

"எங்கள் குர் ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் ! அது எந்த அரபு மொழியில் அருளப்பட்டதோ அதே மொழியில் ஒரு புள்ளியும் மாறாமல் இன்றளவும் உயிருடன் இருக்கிறது ! எங்களில் சின்னஞ் சிறு வயதினரும் அதை ஓதத் தெரிந்திருக்கின்றனர் ஆனால் உங்களுடைய வேதமாகிய பைபிளோ எந்த மொழியில் இயற்றப் பட்டதோ அந்த ஒரிஜினல் மொழியில் இன்று இல்லை என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இன்று உங்களிடம் இருப்பதெல்லாம் வெறும் மொழிபெயர்ப்புக்கள் மட்டுமே !"

"எந்த மொழியாக இருந்தாலும் அந்தந்த மொழிக்கென்று சில தனித் தன்மைகள் இருக்கும் ! ஆங்கிலமோ , தமிழோ அரபியோ எதுவாக இருந்தாலும் சரிதான் ! ஒரு மொழியிலுள்ள வேதத்தையோ , இலக்கியங்களையோ எவ்வளவுதான் திறமையுடன் பிற மொழிகளில் பெயர்த்தாலும் மூல நூலின் சாறை யதார்த்தத்தை பிற மொழிகளில் அப்படியே கொண்டு வந்திட முடியாது ! எப்படியும் சிறிது கூடவோ குறையவோ தான் மொழி பெயர்க்க முடியும் இல்லையா ? "

"ஆம்....உண்மைதான் !"

"அப்படியானால் உங்களுடைய பைபிள் மூல மொழியில் இல்லை என்பதால் அது தன் ஒரிஜினாலிட்டியை இழந்து விட்டது ! இப்போது உங்களுடைய கையில் இருக்கும் பைபிள் "ஒரிஜினல்" அல்ல என்று நான் சொன்னால் உங்களால் அதை எப்படி மறுக்க முடியும் ?"

"..........................." (பதில் இல்லை )

"இரவா வரம் பெற்ற உங்கள் இயேசுவின் வேத மொழி இறந்து விட்டது என்று சொல்வது உங்கள் வேதத்துக்கும் உங்கள் மதத்துக்கும் பெருமையா ? உங்கள் பைபிள் எப்படி உயிருள்ளதாக இருக்க முடியும் ?

"................................."(பதில் இல்லை)

சிறிது நேர மௌன இடைவெளி. எங்களுடன் அதே பெட்டியில் பயணம் செய்த மற்றவர்கள் அனைவரும் இந்து நண்பர்கள் எங்களது உரையாடலை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர் !

மீண்டும் தொடர்ந்தேன் !

"சார் ! இன்னும் ஒரு சந்தேகம் ! என்னுடைய தகப்பனாரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம் .அந்தக் கொலைகாரனை மட்டுமல்ல அவன் பயன்படுத்திய துப்பாக்கியை எப்போது பார்த்தாலும் எனக்கு என் தந்தையின் நினைவும் , இந்தத் துப்பாக்கியால் அல்லவா என் தந்தை கொல்லப்பட்டார் என்ற ஆத்திரமும்தான் எனக்கு ஏற்படும் இல்லையா ?"

"துப்பாக்கியைப் பார்க்கும்போதெல்லாம் என் தந்தையைக் கொன்ற கருவி என்ற காரணத்தால் அவைகளின் மீது வெறுப்புதான் ஏற்படுமே தவிர "ஆஹா ! என் தந்தையைக் கொன்ற துப்பாக்கியே வா ! என் கண்ணே! " என்று அதன் மீது பிரியமோ வாஞ்சையோ ஏற்படுமா ? ஏற்படாதே ! ஏனெனில் சராசரி மனித இயல்பே அதுதான் ! கொலைக் கருவிகள் மீது மனிதனுக்கு நேசம் ஏற்பட எந்த நியாயமும் இல்லை . அல்லவா ?"

"ஆம் ! சொல்லுங்கள் "

" ஆனால் உங்கள் ஏசுவைக் கொன்ற கொலைக் கருவி சிலுவை ! அதில் அறைந்து தான் கொன்றார்கள் என்று நீங்கள் சாதிக்கிறீர்கள் ! அப்படியானால் உங்களுடைய பிதா -மகன்-பரிசுத்த ஆவியான கடவுளையே கொலை செய்யக் காரணமான அந்தச் சிலுவையின் மீது உங்களுக்கு வெருப்பல்லவா ஏற்படவேண்டும் ? மாறாக அதன் மீது அன்பும் பக்தியும் கொள்கிறீர்களே ! எப்படி ? தமது குருநாதரான கடவுளை கடவுளின் குமாரனை கொலை செய்த கொலைக் கருவியான
சிலுவையின் மீது பிரியம் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வருகிறது ?இது மனித இயல்புக்கே முரண் அல்லவா ?"

"அது மட்டுமல்ல ! சாதாரணமாக கொலைக் கருவி யார் கையில் இருக்கிறதோ அவன்தான் கொலைகாரனாய்இருக்க முடியும் ! அல்லது அவனுக்கும் கொலைக்கும் எப்படியேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் . இல்லையா ? சாதரணமாக இந்த முடிவுக்கே எல்லோரும் வருவர் !"

"ஆனால் கிரிஸ்துவர்கலாகிய நீங்கள் உங்கள் இயேசு பெருமானை கொலை செய்த ஆயுதத்தை கையிலும் கழுத்திலும் மாட்டிக் கொண்டு போற்று கிறீர்களே ! இதைப் பார்க்கும் எந்த மனிதனுக்கும் ஒருவேளை இயேசுவை நீங்கள் தான் கொலை செய்தீர்களோ என்ற சந்தேகம் வராதா ?"

"இயேசு கிருஸ்துவைசிலுவையில் அறைந்து கொன்ற யூதர்களுக்கு வேண்டுமானால் சிலுவை புனிதச் சின்னமாக விளங்கலாமே தவிர கிருஸ்துவர்கலாகிய உங்களுக்கு எப்படி அது புனிதமாக இருக்க முடியும்? "

"......................................" (பதில் இல்லை)

" சார் நான் என் மனதில் எழுந்த சில சந்தேகங்களைத்தான் கேட்டேன் ! நீங்களோ மௌனம் சாதிக்கிறீர்கள் ! ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் உங்களிடம் மறைந்து விட்டது போல் தெரிகிறது ! எனது கேள்விகளால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்குமானால் நான் இனி கேட்கவில்லை ! சரியா சார் ?"

"இல்லை; வருத்தம் இல்லை ! ஆனால் எங்கள் கிருஸ்த்துவ மதத்தைப் பற்றி ஒரு முஸ்லிம் எப்படியெல்லாம் கருதுகிறார் எனபது குறித்து நேரடியாக அறிந்து கொள்ள இந்த உரையாடல் ஒரு வாய்ப்பு ! அதற்காக ரொம்ப தேங்க்ஸ் ! நீங்கள் கேட்ட கேள்விகள் எனது சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது ! அதற்காகவும் நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் ! "
பாதிரியாரான அந்த ரயில் நண்பர் இப்படிக் கூறி முடிப்பதற்கும் ரயில் நெல்லை சந்திப்பை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது, கைலாகு கொடுத்தபடி இருவரும் விடைபெற்றோம்.

(சிலேடைக் கவிஞர் சிராஜ் அப்துல் ஹை -என்ற நூலிலிருந்து பீ. எம் கமால்,கடையநல்லூர்)

இஸ்லாத்தின் பார்வையில் "காதலர் தினம்" INTJ தலைவர் SM .பாக்கர் அவர்களின் பேட்டி..




சென்னை, பிப்ரவரி 14 : இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம் என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவர் SM . பாக்கர் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு: இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் வலிகெடுவதற்கு உண்டான வாசல்கள் திறந்து விடப்படுகின்றது. அதில் ஒரு புறம் இந்த காதலர் தினம். காதலை இஸ்லாம் மறுப்பதில்லை. ஆனால் காதல் என்கிற பெயரில் நடக்கின்ற இந்த "காம விளையாட்டுகளைத்தான்" இஸ்லாம் தடுக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் தவறான பார்வை கண்கள் செய்யும் விபச்சாரம் ஆகும். தவறான பேச்சு நாவு செய்யும் விபச்சாரம் என்றார்கள். இன்றைக்கு இந்த இரண்டும்தான் காதல் என்கிற பெயரில் நடக்கிறது. மேலும் அல்லாஹ் திருமரையிலே விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள் என்று கூறுகிறான். இந்த அடிப்படையில் எந்த ஓர் முஸ்லிம் பெண்ணோடு அல்லது ஆணோடு தவறான பார்வை மற்றும் தவறான பேச்சு, தனித்திருத்தல் ஆகியவைதான் இன்றைக்கு காதலாக காதலர் தினத்தன்று நடக்கின்ற நிகழ்வாக கருதப்படுகின்றது. ஆணும், பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கு ஷைத்தான் இருக்கின்றான் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் ஷைத்தானுடைய வலையிலே இருந்து தங்களுடைய மார்கத்தை இழப்பதோடு தங்களுடைய குடும்பத்திற்கும் தவறான பெயரை வாங்கித்தருகின்றனர். இதைத்தடுக்கும் முகமாக கடந்த காதலர் தினத்தன்று கலாச்சார சீரழிவின் களமாக சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளீர் அணி தாவா பணியிலே இறங்கி இந்த சீர்கேட்டை தடுக்க முனிந்த போது இந்த சமுதாயத்தின் அவளம் வெளிப்பட்டது. கடற்கரையில் காதலர்களோடு இருந்த பர்தா அணிந்த 10 ஜோடிகளிடத்தில் தங்கள் தாவாவை செய்த போது அதிலே 9 பேர் முஸ்லிம் அல்லாத ஆணுடன் இருந்தது தெரியவந்தது. அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மகளீர் குழுவினர் சம்மந்தப்பட்டவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எடுத்துச் சொல்லி ஒரு சில குடும்பத்தாரிடம் தெரியப்படுத்தி சீர்கேட்டை தடுத்தனர். சென்னை மெரீனா கடற்கரையில் பிடிப்பட்ட 10 பேரில் 9 பேர் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களோடு காதல் என்றால் சென்னை, மற்றும் மாநிலம் முழுவதும் எவ்வளவு பேர் என்பதை நினைத்து பார்க்கும் போது சமுதாயத்தின் நிலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கிய முதலே இதற்கான பிரச்சாரங்களை INTJ தொடங்கி விட்டது. இருப்பினும் INTJ வாழ் மட்டுமே இந்த கலாசார சீர்கேட்டை தடுத்து நிறுத்திவிட முடியாது. இதற்கான அனைத்து சமுதாய அமைப்புகளும், அனைத்து முஹல்லா ஜமாஅத்தார்களும் களமிறங்கி போராடினால் தான் இந்த கலாசார சீர்கேட்டுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அப்போது அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாநில செயலாளர் செங்கிஸ்கான் உடனிருதார் .
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com

தொகுப்ப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு...


சென்னை, ஜனவரி 25 : தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- விண்ணப்பம் எப்போது?
ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.
நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம். சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம் .ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த தகவலை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மூலமாகவும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் வாயிலாகவும் அறிவிக்கச் செய்துள்ளோம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.
தமிழக கோட்டா அதிகரிப்பு
தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்டு வெற்றி ஈட்டித்தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.
சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.
நடவடிக்கை உறுதி
இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.
கர்நாடகாவில் ஹஜ் இல்லம்
எனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அம்மாநில முதல்-மந்திரி சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார். ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 15-ந் தேதி மதியம் 12 மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது.
அதேபோல், பெங்களூர் தேவனஹல்லி – சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3.17 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகா அரசு சார்பில் ஹஜ் கர் என்ற ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு இந்திய ஹஜ் கமிட்டி தன் பங்காக ரூ.21/2 கோடி வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
source from www.muthupettaiexpress.blogspot.com

நமது நிருபர்

ஷேக் அஸ்லம் அஹமது

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)