சென்னை, ஆகஸ்ட் 19: பிறையை கண்ணால் பார்த்து அமல் செய்வதே நபிவழியாகும்.பிறை விசயத்தில் தற்பொழுது நிகழும் சிறு குழப்பத்தை சரி செய்யும் பொருட்டு ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி "பிறை ஓர் ஆய்வு"என்ற தலைப்பில் மார்க்க மற்றும் விஞ்ஞான அடிப்படையில் டிவிடி தயார் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
நேற்று(17.08.15)ஐஎன்டிஜேவின் மாநில நிர்வாகிகள் மற்றும் ஹிலால் கமிட்டியை சேர்ந்த பிர்தவுஸ்,முகம்மது முகைதீன்,முகம்மது ஷிப்லி ஆகியோர் அரசு தலைமை காஜி மற்றும் ஜமாத்துல் உலமா சபையை சேர்ந்த தர்வேஷ் ரசாதி ஆகியோரை சந்தித்து,பிறை ஓர் ஆய்வு டிவிடியை வழங்கினர்.
ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி பிறை விசயத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த, தொடர்ந்து பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.
Reported By
SMB
0 comments:
Post a Comment