முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

"இந்து'' ஆசிரியர் குழுவின் பார்வைக்கு...


இந்தியா, பிப்ரவரி 04/2016: எந்த மண்ணில் இஸ்லாம் தோன்றி வளர்ந்ததோ அந்த மண்ணில், நேர்வழி சென்ற கலீஃபாக்களின் காலம் முடிந்த பிறகு, சில அநாச்சாரங்களும் மூட நம்பிக்கைகளும் தோன்றின. இவற்றைக் கண்டித்து, மீண்டும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துரைக்கக் களம் கண்டவர்தான் இமாம் முஹம்மது அவர்கள்.

இவருடைய தந்தையின் பெயர்தான் அப்துல் வஹ்ஹாப். சீர்திருத்தம் செய்ய களம் கண்டவரோ மகன்; வசை வாங்கிக் கட்டிக்கொள்பவரோ தந்தை.  

இதைக்கூட தெரிந்துகொள்ளாமல்  வஹ்ஹாபியிசம் என்று சமஸ் பிதற்றியுள்ளார். அது மட்டுமல்ல, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பின் போது தங்கள் இன்னுயிர்களையும்  பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை ஆற்றியவர்கள் யார் தெரியுமா? வஹ்ஹாபிகள் என்று யாரை சமஸ் இன்று முத்திரை குத்துகிறாரோ அந்தத் தோழர்கள்தாம். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சமஸின் கண்களுக்கு  மனிதநேயச் செல்வர்களாய்த் தெரிந்தவர்கள் இன்று தீவிரவாதிகளாய்த் தெரிகிறார்கள். 

அது எப்படி? இடையில் என்ன மாயம் நிகழ்ந்தது? பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தலைவரை இந்திய முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று  தயங்காமல் அறிவுரை கூறுகிறார். “நீங்கள் பின்பற்றும் ஏக இறைவன் கொள்கை  எதை மிச்சம் வைக்கும்?” என்று  வெறுப்பு அரசியலை விதைக்கிறார். சமஸ் அவர்களும் இந்து நாளிதழும் முஸ்லிம் விரோதப்  போக்கைக் கட்டமைக்கத்  தீர்மானித்துவிட்டதாகவே தெரிகிறது.
இந்து ஆசிரியர்குழு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்  ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின்  வெறுப்புக்கும் "இந்து" நாளிதழ் ஆளாக நேரிடும்.

நன்றி:

சிராஜுல்ஹஸன்

சென்னை புத்தக கண்காட்சியில் மதவாதத்தை வென்றெடுத்து மனிதநேயம் காத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தாவா பணிகள். ஓர் பார்வை...

 நக்கீரன் (பத்திரிக்கையின்) ஆசிரியர் கோபால் அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் S.M. பாக்கர் அவர்கள் திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 போக்குவரத்து காவல்துரை அதிகாரிகளுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 நடிகர் ஜகன் அவர்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 உயர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் அவர்கள்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.


 உயர் நீதி மன்றத்தின் காவல்துறை மேல் அதிகாரி எம்.கீதா அவர்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.













சென்னை, பிப்ரவரி 04/2016: கடந்த 13.01.2016 முதல் 26.01.2016 வரை சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் தமிழ் திருநாள் பொங்கல் புத்தக கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 250 அரங்குகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு அரங்கிலும் பல்வேறு விதமான பதிப்பாளர்கள் இடம்பெற்றனர். இதில் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்தும் பதிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தக கண்காட்சியில் (சாஜிதா புக் செண்டர் அரங்கம் எண் 68 ல்) முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர்களுக்கு புனிதமான மார்க்கம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்கும் பொருட்டு நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் களமிறங்கி முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு சுமார் 2500 க்கும் மேற்பட்ட திருமரை குர்ஆனை வழங்கி உள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், திரைப்பட நடிகர்கள், பத்திரிகை நண்பர்கள், தொழிலதிபர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த புனிதமான குர்ஆனை வழங்கியிருக்கிறது. மேலும் இந்த நிகழ்வின் போது மாற்று மத சகோதரர்கள் சுமார் 3 பேர் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்டனர். மேலும் 500 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக விரைவில் ஏற்க்க இருப்பதாக தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு:

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட நிகழ்ச்சியின் போது முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர்கள் திருமரை குர்ஆனை  பெற்றவுடன் கூறிய சில வேதனையான விஷயம்:

எனக்கும் முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனால் இதுநாள் வரைக்கும் எனக்கு இஸ்லாத்தை பற்றி எந்த ஒரு செய்தியும் சொன்னது கிடையாது, மேலும் நாங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் குர்ஆனை படிக்க கேட்போம் அதற்க்கு அவர்கள் தரமாட்டார்கள். அவற்றை நீங்கள் படிக்க கூடாது என்றும் எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். இப்படி எல்லாம் அந்த குர்ஆனை பெற்ற சகோதர சகோதரிகள் சொன்ன போது எங்களுக்கு வேதனையாக இருந்தது. எனவே (இந்த குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் ஓர் நல்லுபதேசமே அன்றி வேறில்லை) எனவே இந்த இறைவசனத்திற்கொப்ப இனியாவது நமது புனிதமான இஸ்லாத்தை நம்மளுடைய நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிரவும் இல்லை எனில் நீங்களும் குற்றவாளிகளாக நாளை மறுமையில் அல்லாஹ் வின் முன்பு நிற்க நேரிடும்.

தொகுப்பு:

அ.முஹம்மது இலியாஸ்.

பிரிட்டனில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு. 'Office of the National Statistics' (ONS) புள்ளி விவரம் வெளியீடு..!


பிரிட்டன், பிப்ரவரி 04/2016: "10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் முஸ்லிம் குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்"
பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகை புள்ளி விவரங்களின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது தெரியவந்துள்ளது.
தலைநகர் லண்டனின் பல பகுதிகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்கள் வசிப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள இந்த புள்ளி விவரத்தில்,
அடுத்த 10 ஆண்டுகளில் லண்டன் நகரின் அனேக பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகி விடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ப்ளேக் பர்னில்----29 சதவிகிதமும்
சிலூவில்-----------26 சதவிகிதம்
லியூடனில்-------- 25 சதவிகிதம்
பர்மிங்கமில்-------23 சதவிகிதம்
லேசீடரில்---------- 20 சதவிகிதம்
மான்செஸ்டரில்-18 சதவிகிதம், என முஸ்லிம்களின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துள்ளதாக மேற்படி புள்ளி விவரம் கூறுகிறது.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை ஒட்டுமொத்த பிரிட்டனிலும் சேர்த்து பார்த்தாலும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
நன்றி: 
மறுப்பு 

முத்துப்பேட்டை நகரம் பல்வேறு வசதிகள் இருந்தும் ஏன் தாலுக்காவாக மாறவில்லை, அரசியல் வாதிகளின் சூழ்ச்சியா?








முத்துபேட்டை, பிப்ரவரி 04/2016: திருவாரூர் மாவட்டதில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த சிறிய நகரம். சென்னையிலிருந்து சுமார் 350 கி.மீ தெற்கே அமைந்துள்ளது.
இவ்வூரில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் மற்றும் சதுப்புநில பகுதிகள்(Mangrove Forest) எனும் அழகிய சுற்றுலா தலம் இன்னும் வெளியுலகிற்கு தெரியாமலே உள்ள ஒரு அற்புதமான பொக்கிஷம். சொல்லப்போனால் இப்பகுதியில் உள்ள பலரும்கூட இங்கு சென்றுவந்ததில்லை எனலாம்.
பாமனி ஆறு, கோரை ஆறு, கிளைதாங்கி ஆறு, மரைக்கா கோரையாறு என பல்வேறு ஆறுகள் இப்பகுதியில் வங்க கடலில் (பாக் ஜலசந்தியில்) கலக்கும் இடமாகும். இந்த ஆறுகள் உருவாக்கியுள்ள லகூன் எனும் பகுதியும், 
இங்கு அமைந்துள்ள சதுப்பு நில காடுகளும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இப்பகுதியை மேலும் ரம்மியமாக்குகிறது.

இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் எளிதில் செல்லும் வண்ணம் சுந்தரம் பாலம் அருகேயோ அல்லது வேறு இடத்திலோ பிச்சாவரம், முட்டுக்காடு போன்ற இடங்களில் உள்ளது போன்ற படகுத்துறைகளைஅமைத்து தகுந்த வசதிகளை தமிழ்நாடு அரசும் சுற்றுலா துறையும் ஏற்படுத்தினால் கண்டிப்பாக இது அனைவரும் விரும்பும் ஒரு சுற்றுலா ஸ்தலமாக மாறும்.
தில்லைவிளாகம் ஸ்ரீராமர் கோவில் மற்றும் கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் போன்ற சரித்திர புகழ்பெற்ற ஆலயங்கள் அருகில் உள்ள முக்கிய இந்து ஆலயங்கள். ஜாம்பவனோடை தர்கா நாகூர் தர்காவைவிட பழமை வாய்ந்தது. இங்கு தினமும் ஏராளமான முஸ்லிம் யாத்திரீகர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்தும் வருகின்றனர்.
இவ்வூருக்கு செல்லும்போது இங்குள்ள ஐயர் கடை அல்வாவும் நாகூர் ஆண்டவர் கடை தம்ரூட் அல்வாவவையும் ருசிக்க மறக்காதீர்கள். திருநெல்வேலி அல்வாவைவிட ருசியானது. அதேபோல இங்குள்ள பரோட்டா கடைகளின் பரோட்டா சுவையைவிட தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடைக்காது (மதுரை மற்றும் விருதுநகர் உட்பட) என்று சவால் விட்டு சொல்லலாம்.
வேளாங்கன்னி, நாகூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவாரூர், திருத்துறைபூண்டி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் போண்றவை அருகில் உள்ள முக்கிய நகரங்கள்.
இவ்வளவு பெருமைவாய்ந்த இவ்வூரை இன்னும் தாலுகாவாக மாற்றுவதற்கும், இங்குள்ள சுற்றுலா தளத்தை உலக மக்களுக்கு கொண்டு சேர்கவும், மூடப்பட்டுள்ள காரைகுடி - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நிறைவேறுமா?

நன்றி

முத்துபேட்டை, ராஜேஷ்

பெங்களூருவில் கொடூரம்: வெளி நாட்டு முஸ்லிம் மாணவியை நிர்வாணமாக்கி தாக்குதல்!




பெங்களூரு, பிப்ரவரி 04/2016: தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாணவியை நிர்வாணமாக்கி பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 31-ம் தேதி இரவு, சாலையில் நடந்து சென்ற சபானா தாஜ் என்ற பெண் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அந்த காரை ஓட்டி வந்த நபர், சூடான் நாட்டை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்ற மாணவர் என தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இஸ்மாயிலை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தான்சானியாவைச் சேர்ந்த இளநிலை வர்த்தக மேலாண்மை (பி.பி.எம்.) படித்து வரும் மாணவி உட்பட சிலர், விபத்து ஏற்பட்ட இடம் வழியாக காரில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், காரை மடக்கி அவர்களை தாக்கியுள்ளது. இதில், காரில் இருந்த மாணவி ஒருவரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், மாணவியை கடுமையாக தாக்கியதோடு, நிர்வாணமாக்கி போலீசார் முன்னிலையிலேயே ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. அப்போது, கிழிந்த ஆடையுடன் தன் மானத்தை காப்பாறிக்கொள்ள அந்த மாணவி, அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது, அவரைத் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை கீழே இழுத்துப் போட்டு உதைத்துள்ளது.


அதேநேரத்தில், விபத்து ஏற்படுத்திய காரையும், தான்சானியா மாணவியின் காரையும் அந்த கும்பல் தீ வைத்துள்ளது. விபத்து ஏற்படுத்திய நபருக்கும், அந்த மாணவிக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது குறித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் மெகாரிக் கூறும்போது, ''மாணவியிடம் இருந்து புகார் பெறப்பட்டு உள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்துவிடுவோம். இது போன்ற தாக்குதல்களை அனுமதிக்கவே முடியாது" என்றார்.



இதனிடையே, தான்சானியா அரசு இந்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் பயிலும் தான்சானிய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.



இந்நிலையில், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தச் சம்பவம் மிகவும் வெட்ககேடானது. இதற்காக மிகவும் வேதனைப்படுகிறேன். கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாரமையாவைத் தொடர்பு கொண்டு, தான்சானிய மாணவியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளேன்" என்று கூறி உள்ளார்.

'ஆதார் அட்டை' இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட் பெறலாம்!


சென்னை, பிப்ரவரி 04/2016: பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை சமர்ப்பித்தால் 3  நாட்களில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள முடியும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,

" சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, காவல்துறை  அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்குக்  கட்டணம் 1,500 ரூபாய் தான். இந்த நடைமுறையை வெளியுறவு துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது.

இனிமேல் சாதாரண முறையில் 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது  'ஆதார்' அட்டை, 'பான்கார்டு' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், காவல்துறை அறிக்கை பெறாமலே  பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், காவல்துறை அறிக்கை பெறப்படும்.

தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும்  'தக்கல்' முறையும் அமலில் உள்ளது.அதற்குக்  கட்டணம் 3,500 ரூபாய் ஆகும்.

ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, 'ஆன்லைனில்' தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற வேண்டும். திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரையிலான 5  நாட்களில்  வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறை உறுதி செய்த தேதியை மறுமுறை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

காவல்துறையின் அறிக்கை பெற விண்ணப்பதாரரின் விவரங்கள் மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு  சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட  21 நாட்களுக்கு முன் மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும். 

பாஸ்போர்ட் உதவிமையங்கள், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன.இதற்கு சேவை கட்டணம் 100 ரூபாய்.

மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, வரும் 7ம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள் வரும்  8 ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம்" என்று கூறினார்.  

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)