முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அடுத்து உதய மாத்தாண்டபுரத்தின் பறவைகள் சரணாலயம்.







முத்துப்பேட்டை, ஜனவரி 31: முத்துப்பேட்டை அடுத்து உதயமார்த்தாண்டபுரம் (நாட்சிகுலத்தில்)பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. டிசம்பர் 1998 - ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சரனாலயம் பல்வகை நீர்வகை இடம் பெயரும் நீர்பரவைகலான நாமக்கோழி, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, வக்கா, பெரிய வெள்ளை கொக்கு போன்ற வைகளின் இருப்பிடமாக விளங்குகிறது. இச்சரனாலயத்தின் மொத்த பரப்பளவு 46 ஹெக்டேர் ஆகும். இச்சரனாலயம் இயற்கையிலேயே நீர்பாசனத்திர்க்காக பயன்படுத்தப்படும் ஏரியாகும். இப்பகுதிக்கு தன்னேரானது மேட்டூர் நீர் தேக்கத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் முதலும், வடகிழக்கு பருவகாற்றின் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடியவும் வந்தடைகிறது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் முடிய இப்பகுதி வறண்ட நிலையில் காணப்படுகிறது. அருகிலுள்ள பெரூரான முத்துப்பேட்டை இச்சரனாலயத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. இச்சரனாலயத்திற்கு திருவாரூரிலிருந்து 65 கி.மீ மற்றும் தஞ்சாவூரிலிருந்து 68 கி.மீ. தூரத்தில் சாலை வழியாக வந்தடையலாம். அருகிலுள்ள முத்துப்பேட்டை ரயில் நிலையம் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இச்சரனாலயத்திற்கு பறவைகள் செப்டம்பர் முதல் வரத் தொடங்குகின்றன. பறைவைகளின் எண்ணிக்கை அதிக பட்சமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 10,000 க்கு மேல் காணப்படுகிறது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நத்தை கொத்தி நாரை இனங்கள் அதிகமாக காணப்படுவதே குறிப்பிடத்தக்க அம்சமாகும். இச்சரணாலயத்தில் அல்லிவகை, பெரம்புவகை நீரித்தாவரங்கள் போன்ற பல்வேறு வகையான தாவர வகைகள் உள்ளன. இச்சரணாலயத்தில் உள்ள மிதக்கும் நீர்த்தவரங்களின் மீது வால் அள்ளிக் குருவி போன்ற பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இவற்றை எல்லாம் பார்வை இட பார்வையாளர்களுக்கு இங்கு இரண்டு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், TR .அப்துல் ரஹ்மான்

தனியார் மையமாகும் தமிழக அரசு பேருந்துகள்...!!!


சென்னை,ஜனவரி 30 : தமிழகம் முழுவதும் பேருந்து போக்கு வரத்து இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் தனியார் வசமே இருந்தது. தி.மு.க. ஆட்சி காலத்தில் பேருந்து போக்கு வரத்து அரசுடைமையாக்கப்பட்டு தனியார் முதலாளிகளை ஓயா வைத்தது.ஆனால், போக்குவரத்தின் அத்தியாவாசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும், உலக சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்புக் குரைவாலும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சில்லரைக்கசுகள் அளவிலேயே பேருந்து பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால், போக்குவரத்துக் கழகம் நிறைந்த லாபம் ஈட்டும் துறையாக மாறியதும் அரசியல் அங்கே சதிராட்டம் போட, அதிகாரிகளும் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டதோடு கூட்டுக்கொல்லைகலையும் நிகழ்த்தினர்.எல்லாம் போக தற்போது முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதா மக்கள் எப்படியிருந்தாலும் பயனித்துதானே ஆகா வேண்டும் என்ற அசைக்க முடியாத எண்ணத்தில் பேருந்து பயணக்கட்டணத்தை எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்த்தினார், காரணம் அரசுக்கு நட்டமாம். இதையெல்லாம் விட தொடர்ந்து அரசுக்கு நட்டம் ஏற்படுவதால், அரசுப் பேருந்து வழித்தடங்களில் 45 சதவிகிதத்தை தனியாரிடம் கொடுக்கலாமா என்று தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த ரகசிய ஆலோசனை விவரத்தை தி.மு.க.வின் தொழிற்சங்கமான 'தொழிலாளர் முன்னேற்றக் கழகப் பேரவை' தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளின் தகவல் பலகைகளில் எழுதி வெளி உலகிற்கு சொல்லியது. சென்னை போக்குவரத்து கழகத்தில் 3 ,140 பேருந்துகள், மாவட்டங்களில் உள்ள நகரப் பேருந்துகள் 6 ,595 பேருந்துகள், மாவட்டப் பேருந்துகள் 8 ,007 , விரைவுபேருந்து மாநிலத்திற்குள் 545, மாநிலத்திற்கு வெளியே 359 , மலை சர்விஸ் 521 ஆகா மொத்தம் 19 ,167 அரசுப் பேருந்து வழித்தடங்கள் உள்ளன. இதில் 45 சதவீதம் அரசு பேருந்து வழித்தடங்களை, அதாவது ௯,௫௦௦ அரசுப் பேருந்து வழித்தடங்களை தனியார் வசம் கொடுக்கப்படும். இதில் 6 ,000 வழித்தடங்கள் அரசுக்கு லாபம் தரும் வழித்தடங்களும் அடங்கும். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செயலாளர் நடராசன் உண்மைதான் 45 சதவீத அரசுப் பேருந்து வழித்தடங்களை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளது என்றார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அறிய போக்குவரத்துத்துறை செயலர் பிரபாகரன்ராவ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு தலைவர் மீட்டிங்கில் இருக்கிறார், தலைவர் செயலரை பார்க்கபோயிருக்கிறார், என்று அவருடைய உதவியாளர் பதிலுரைத்தனர். ஆனால் அவர் அலுவலகத்தில் தான் இருந்தார், கடைசிவரை செயலருடன் பேச இணைப்புக் கொடுக்க வில்லை. ஆகா, அரசுப் பேருந்து தனியார் வசம் என்னும் விவகாரம் ஆலோசனை அளவிலேயே தற்போது இருக்கிறது என்பது உறுதியாகிறது. இந்த ஆலோசனையே முடிவாக உறுதியாகுமானால் தமிழக மக்கள் போக்குவரத்துச் சங்க தொழிலார்கள் தொடர்ந்து போராட்டத்தில் இறங்குவது தவிர்க்க முடியாததாகி விடும்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.

ஈரான் அணுசக்தி நிலையங்களை அழிக்க அமெரிக்காவிற்கு சக்தி இல்லை...


வாஷிங்டன்,ஜனவரி 29: பூமிக்கு அடியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவதற்கான மிக சக்தி வாய்ந்த வெடிக்குண்டை தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது அமெரிக்கா ராணுவத்தின் கைவசமிருக்கும் பங்கர் பஸ்டர் வெடிக்குண்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க முடியாது. இதனை புரிந்துக்கொண்ட அமெரிக்கா புதிய வெடிக்குண்டை தயாரிக்க திட்டம் வகுத்துள்ளது. இதனை குறிப்பிட்டு பெண்டகன் அமெரிக்க காங்கிரஸிற்கு ரகசிய அறிக்கையை இம்மாதம் அளித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு துறை அதிகாரியை மேற்கோள்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் கூறுகிறது.பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் மற்றும் காங்க்ரீட் சுவர்கள் ஆகியவற்றை துளைத்து உள்ளே செல்லும் சக்திமிகுந்த 20 வெடிக்குண்டுகளை தயாரிக்க பெண்டகன் இதுவரை 33 கோடி டாலர் தொகையை செலவிட்டுள்ளதாக பத்திரிகை கூறுகிறது. போயிங் நிறுவனம்தான் இக்குண்டுகளை தயாரித்து வருகிறது.பெரும் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க பங்கர் பஸ்டர் குண்டுகளுக்கு வலு இல்லை என்பதை கடந்த வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா ஒப்புக்கொண்டார்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், அபு மர்வா, ASNS .அப்துல் பாரி

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு...


அபுதாபி,ஜனவரி 29 : தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா 3 நாட்கள் நடைபெற இருக்கிறது.ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன.உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்பை நோக்கமாக கொண்டு இவ்வேலை வாய்ப்பு விழா நடத்தப்பட்டாலும் மூன்றாவது நாள்(பிப்ரவரி-2) அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வேலைத் தேடுவோர் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ஜனவரி 31-ஆம் தேதி காலை 11 முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டுமே அனுமதி.பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 முதல் மதியம் 2 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) பெண்களுக்கு மட்டும்.மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) ஆண்களுக்கு மட்டும்.பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.இந்த வேலை வாய்ப்பு விழாவில் பங்கேற்க விரும்புவர்கள் www.tawdheef.ae என்ற இணையதளத்திற்கு சென்று முன்னரே பதிவுச் செய்துக்கொள்ளவும்.இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் முக்கிய நிறுவனங்கள்: அபுதாபி ஏர்போர்ட்ஸ் கம்பெனி, அபுதாபி கமர்ஸியல் வங்கி, அபுதாபி நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி, அபுதாபி நேசனல் ஹோட்டல்ஸ், அபுதாபி போலீஸ், அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி, அபுதாபி இஸ்லாமிக் வங்கி, அபுதாபி டூரிஸம் அதாரிட்டி, கமர்ஸியல் பேங்க் ஆஃப் இண்டர்நேசனல், டால்பின் எனர்ஜி, எமிரேட்ஸ் நியூக்ளியர் எனர்ஜி கார்ப்பரேசன், எமிரேட்ஸ் அலுமினியம், எமிரேட்ஸ் ட்ரைவிங் கம்பெனி, இத்திஹாத்(Ethihad), எடிசலாத்(Etisalat),ஃபர்ஸ்ட் கல்ஃப் வங்கி(Firstgulf bank), ஜெனரல் ஹோல்டிங் கார்ப்பரேசன், HSBC வங்கி, முபாதலா, நேசனல் பேங்க் ஆஃப் அபுதாபி, பெட்ரோஃபாக் எமிரேட்ஸ், பிரசிடன்ஸியல் கார்ட், யு.ஏ.இ எக்ஸ்சேஞ்ச், யாஸ் மரினா சர்க்யூட் ஆகியன இவ் வேலைவாய்ப்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இதுவரை அறிவித்துள்ளன. மேலும் கூடுதல் நிறுவனங்கள் இவ்விழாவில் பங்கேற்கும்.நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து வேலை தொடர்பாக விசாரிக்கலாம். பயோடேட்டா தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும். வேலைவாய்ப்பு விழாவையொட்டி பல்வேறு நிறுவனங்களின் மனித வளத்துறைகள் நடத்தும் செமினார்களில் இலவசமாக கலந்துக் கொள்ளலாம்.உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டும் தனியாக இண்டர்வியூ அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகமான உள்நாட்டினருக்கு வேலை வழங்குவோம் என பிரபல வங்கிகள் அறிவித்துள்ளன. எமிரேட்ஸ் என்.பி.டி(ENBD) இவ்வாண்டு குறைந்தது 250 உள்நாட்டினரை பணியில் அமர்த்தும். கடந்த ஆண்டு 462 பேரை நியமித்தது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

அபு மர்வா, J .ஷேக் பரீத் (துபாய்),

முத்துப்பேட்டை பேரூராட்சியின் அதிரடியான இறுதி முடிவுகள்,செயல் அலுவலர் தகவல்.


முத்துப்பேட்டை, ஜனவரி 28 : முத்துப்பேட்டை பேரூராட்சியின் அதிரடியான சில இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அவை பின் வருமாறு.
(1) முத்துப்பேட்டை பேரூராட்சி 1 முதல் 18 வார்டுகளில் உள்ள வீட்டு குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தவிர்க்கவும், தவறும் பட்சத்தில் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் வீடுகளில் மின் மோட்டாரை பறிமுதல் செய்வதுடன் அதற்கான செலவு தொகைகள் அனைத்தும் அந்தந்த வீட்டு உரிமையாளரிடம் வசூலிக்காப்படும். மேலும் கோர்ட் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
(2) சாலைகளில் திரியும் ஆடு, மாடுகளை அந்தந்த உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆடு, மாடுகளை காவல்துறை உதவியுடன் பிடித்து அடுத்த ஊர்களில் கொண்டு போய் விடப்படும்.
(3) பன்றியை வைத்துக்கொள்பவர் பன்றியினை அந்தந்த உரிமையாளர்கள் அதற்கான பாதுகாப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது முத்துப்பேட்டையில் இல்லாமல் வேறு பகுதிகளில் கொண்டு போய்விட வேண்டும். தவறும் பட்சத்தில் பன்றிகளை பிடித்து பேரூராட்சி மூலம் அப்புறப்படுத்தப்படும்.
(4) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆக்ரமனங்கள் அனைத்தும் எடுத்துவிட வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்ரமனங்கள் எடுத்து அதற்க்கான செலவுத்தொகையையும், தங்களிடம் வசூலிக்கப்படும். (குடிநீர் மின்மோட்டார்கள் எடுப்பது தவிர மற்றவர்களுக்கு கால அவகாசம் இல்லை) என்பதை இதன் மூலம் இறுதியாக தெரிவிக்கப்படுகிறது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், அபு மர்வா, TR .அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை TNTJ (ஆசாத் நகர் கிளை) சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்...







முத்துப்பேட்டை, ஜனவரி 26 : 63 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் காளி இரத்த வங்கி இணைத்து மாபெரும் இரத்த தான முகாமை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் கட்டிடத்தில் இன்று காலை நடத்தினார்கள்.இதற்க்கு TNTJ திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜனாப். M .I . இஸ்மத் பாட்சா அவர்கள் தலைமை வகித்தார். பின்பு Dr. சண்முக சுந்தரம் (காளி இரத்த வங்கி தஞ்சாவூர்), Dr . இளங்கோ MBBS .,MRSH ., (Lion) FCP , Dr . முருகேசன் MS . FAC ., Dr . மீரா உசேன் MD ., Dr .கணேஷ். MBBS ., Dr . அபுதாஹிர்.MBBS ., வழக்கறிஞர் G .உமர் கத்தாப்.MA .BL. ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த இரத்த தான முகாமில் சுமார் 40 பேர் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை கொடுத்தனர். இந்த இரத்ததானம் முகாம் முத்துப்பேட்டை II (ஆசாத் நகர் கிளை) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான், K .எர்சாத் அஹமது,

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் சேவைகளும் மக்களின் வரவேற்ப்பும்..


முத்துப்பேட்டை, ஜனவரி 26 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி மற்றும் முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமிர்ற்கு முத்துப்பேட்டை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு வந்துள்ளது.நடந்து முடிந்த இலவச மருத்துவ முகாமின் சோதிக்கப்பட்ட மருத்துவத்தின் ரிசல்ட்டை இன்று வெளியிடப்பட்டது. அதில் சுமார் 250 நபர்களுக்கு தங்களுடைய பெயர் மற்றும் வீட்டு முகவரி மற்றும் இரத்த குறியிடு ஆகியவைகளை அடையாள அட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டு அவற்றை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதில் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் A .ஹாஜ நஜுபுதீன், சோழநாடு க.மு. நெய்னார் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது போன்ற நல்ல சேவைகளை செய்து வரும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி மென் மேலும் வளர இறைவனை துவா செய்கிறோம் என்று முத்துப்பேட்டை மக்கள் கூறினார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான், K .எர்சாத் அஹமது

முத்துப்பேட்டை ஆ.நெ.பள்ளியில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா...









முத்துப்பேட்டை,ஜனவரி 26 : முத்துப்பேட்டையில் உள்ள பிரபலாமான பள்ளி கூடம் ஒன்றான நமதூர் ஆ.நெ. தொடக்கப்பள்ளி தான் என்று எல்லோராலும் கூராப்படும். ஏனெனில் இந்த பள்ளி கூடத்தில் பயின்றவர்கள் தற்போது முன்னணி நிறுவத்தில் தலைவராக பணியாற்றி வருகின்றனர். அந்த அளவிற்கு பல்வேறு தலைவர்களை உருவாக்கிய பெருமை இந்த பள்ளி கூடத்திற்கு சேரும். மேலும் இப்பள்ளி குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மேலாளர் ஜனாப். நத்தர்சா, மற்றும் மேலாளர் ஜனாப். NM . முஹைதீன் அப்துல் காதர், ஜனாப். டாக்டர். முஹம்மது மீரா லெப்பை, EX .DCO ,ஜனாப். காதர் முஹைதீன், மற்றும் SDPI 9 வது வார்டு கவுன்சிலர் M. பாவா பகுருதீன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from www.muthupettaiexpress.blosgpot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNSஅப்துல் பாரி,EKAமுனவ்வர் கான், அபு மர்வா

மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு...


சென்னை, ஜனவரி 25 : தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- விண்ணப்பம் எப்போது?
ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.
நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம். சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம் .ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த தகவலை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மூலமாகவும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் வாயிலாகவும் அறிவிக்கச் செய்துள்ளோம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.
தமிழக கோட்டா அதிகரிப்பு
தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்டு வெற்றி ஈட்டித்தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.
சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.
நடவடிக்கை உறுதி
இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.
கர்நாடகாவில் ஹஜ் இல்லம்
எனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அம்மாநில முதல்-மந்திரி சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார். ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 15-ந் தேதி மதியம் 12 மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது.
அதேபோல், பெங்களூர் தேவனஹல்லி – சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3.17 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகா அரசு சார்பில் ஹஜ் கர் என்ற ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு இந்திய ஹஜ் கமிட்டி தன் பங்காக ரூ.21/2 கோடி வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
source from www.muthupettaiexpress.blogspot.com

நமது நிருபர்

ஷேக் அஸ்லம் அஹமது

முத்துப்பேட்டை TNTJ சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்...








முத்துப்பேட்டை, ஜனவரி 25 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) & திருவாரூர் வண்டாம்பானை லயன்ஸ் கண் மருத்துவமனை மற்றும் திருவாரூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் IOL (லென்ஸ்) பொருத்தும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், இன்று காலை நமது மஸ்ஜித் நூற் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை TNTJ வின் நகர தலைவர் ஜனாப். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமை ஏற்றார். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜனாப். புஹாரி, நகர பொருளாளர் ஜனாப். ஜாகிர் உசேன், துணைத்தலைவர் ஜனாப். அப்துல் வக்கீல், துணைசெயலாளர் ஜனாப். முஹம்மது லுக்மான் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

K . எர்சாத் அஹமது, TR .அப்துல் ரஹ்மான்

22 ஆம் ஆண்டு முத்துப்பேட்டை புகாரி சரீப் மஜ்லீஸ் இன்று முதல் துவக்கம்...



முத்துப்பேட்டை, ஜனவரி 25 : முத்துப்பேட்டையில் கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது நமதூர் புகாரி சரீப் மஜ்லீஸ்.அதன் அடிப்படையில் இந்த வருடம் 22 ஆம் ஆண்டு 25 .01 .2012 இன்று முதல் மிக சிறப்பாக துவக்கப்பட்டது. இதில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அரபி மூலம் படித்து அவற்றை தமிழில் பொழிபெயர்ப்பு செய்யப்படும். அதன் அடிப்படையில் ஜனாப். அப்துல் லதீப் ஆலீம் அவர்கள் ஈமானின் முக்கியத்தை பற்றி சிறப்பாக உரை நிகழ்த்தினார். அதில் இபுறாஹீம் (அலை), முஹம்மது நபி (ஸல்), அன்னை ஆய்ஷா மரியம் ஆகியோரின் ஈமான் எவ்வாறு இருந்தது என்றெல்லாம் நமக்கு நினைவு படுத்தினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தினமும் காலை ஃபஜர் தொழுகை முடிந்தது முதல் காலை 8 .45 மணிவரையிலும் தொடர்ந்து ஒருமாத காலாம் வரை பல்வேறு தலைப்புகளில் சிறப்பு பயான் நடைபெறும்.எனவே அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

U .பத்ரு ஜமான் (அரூஷி)

சவூதியில் உள்ள SMEH என்ற பிரபல நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை...


சவுதிஅரேபியா, ஜனவரி 24 : சவுதியில் உள்ள பிரபல நிறுவனமான "SMEH " என்ற நிறுவனத்திற்கு மருத்துவமனை பராமரிப்பு வேளைக்கு கீழ்க்கண்ட படிப்புடையவர்கள் உடனடியாக ஆட்கள் தேவை.
1 ) Electrical Engineer (BE) 5 years Experiences Salary 2800 - 3000
2 ) Mechanical Engineer (BE) 5 years Experiences Salary 2800 - ௩௦௦௦
3 ) Electrical Technician (BE) Salary 1300
4 ) Auto Electrician Salary 1200
5 ) Electrician Technician Salary 1200
6 ) A/C Technician Salary 1200. Mechanical Technician Salary 1200 . Dip/ITI for 3 years Exp.
இந்த நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் நேர்முறை தேர்வுகள் நடைபெறும்.
இது குறித்து தாங்கள் மேலும் தெரிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: யாசர் சென்னை 72005 00225

முத்துப்பேட்டையில் வருகிற 25 ஆம் தேதி புகாரி சரீப் துவக்கம்...


முத்துப்பேட்டை, ஜனவரி 20 ௦: கடந்த 21 ஆண்டுகளாக நமதூரில் சிறப்புடன் நடைபெற்று வரும் புகாரி ஷரீபு மஜ்லீஸின் 22 ம் ஆண்டு நிகழ்வு இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1433 ரபியுல் அவ்வல் பிறை 1 (25 .01 .2012 ) புதன் கிழமை தொடங்கி பிறை 30 (23 .02 .2012) வியாழக்கிழமை நிறைவு பெறவிருக்கிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் அடங்கிய ஹதீஸ் தொகுப்புகளின் விளக்கம் கேட்டுப் பயன் பெற வருகை தந்து கண்ணியத்துடன் மஜ்லிஸை சிறப்பித்து ஒத்துழைக்க வேணுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நேரம் காலை 7 .45 வரை ஹதீஸ் ஓதி 8 .30 மணி வரை அதன் விளக்கம் கூறப்பட்டு துஆவிற்குப் பிறகு நாற்சா வழங்குவதுடன் நிறைவு பெரும்.
source from www.muthupettaiexpress.blogspot.com
இப்படிக்கு
புகாரி ஷரீபு மஜ்லிஸ்

நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, TR . அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் (TNTJ) நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்...


முத்துப்பேட்டை, ஜனவரி 20 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) & திருவாரூர் வண்டாம்பானை லயன்ஸ் கண் மருத்துவமனை மற்றும் திருவாரூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் IOL (லென்ஸ்) பொருத்தும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், வருகிற 25 .01 .2012 அன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை முத்துப்பேட்டை மஸ்ஜிதுந் நூர் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும், மேலும் இந்த முகாமில் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு பெற்றவர்கள் இலவசமாக திருவாரூர் வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை அழைத்து செல்லப்படுவார்கள். இதில் உணவு தங்குமிடம் மருந்து மற்றும் IOL விழி லென்ஸ், போக்குவரத்து ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் தொடர்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 96982 56747 , 99942 03523
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, TR .அப்துல் ரஹ்மான்

அதிரையில் தீ விபத்து : மீட்பு பணியில் பாப்புலர் ப்ரண்ட்.







அதிரை, ஜனவரி 18 : அதிராம்பட்டினம் CMP லைன் VKM ஸ்டோர் அருகே உள்ள ஓர் வீட்டு மாடியில் உள்ள கூரை திடீரென தீப்பிடித்து முழுவதும் பரவியது. இது பற்றி தகவலரிந்த பொது மக்களும் அதிரை நகர பாப்புலர் பிரன்ட் செயல் வீரர்களும் விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்குமேல் போராடி தீயை அனைத்து, மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். பாப்புலர் பிரன்ட் செயல் வீரர்களின் பணியினை கண்ட அதிரை காவல் ஆய்வாளர் திரு. செங்கமலக்கண்ணன் அவர்கள் பாராட்டினார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவ்வூர் பொது மக்கள் அதிரையில் தீவிபத்து தொடர்வதும் நாங்கள் தீயை அணைத்த பிறகுதான் தீயணைப்பு துறையினர் வருகை தருகிறார்கள் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட எங்க ஊருக்கு உடனடியாக "தீயணைப்பு நிலையம்" அமைக்க வேண்டும் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தார்கள்.

நமது நிருபர்

ரிப்போர்ட்டர் K . எர்சாத் அஹமது

SDPI சார்பில் திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம்










திருவாரூர், ஜனவரி 18 : SDPI கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாரூர் ஹோட்டல் ராயல் பார்க்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்ட மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சத்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த சிகழ்ச்சியில் முல்லை பெரியார் பிரச்சனை சம்மந்தமாக மத்திய அரசு, தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும், உச்ச நீதி மன்ற ஆணையை கேரளா அரசு பின்பற்ற வேண்டும் என்றும்,விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்ட கமிட்டியிடம் தங்களால் இயன்ற உதவியை மாநில தலைமையிடம் செளுத்துப்படி மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சத்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு SDPI திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலைமை ஏற்றார். கட்சியின் பொது செயலாளர் ஜனாப். அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்ப்புரை ஏற்றார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் நகர நிர்காகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற SDPI கட்சியின் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

K . எர்சாத் அஹமது, MJ .சாதிக்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)