முத்துப்பேட்டை, ஜனவரி 31: முத்துப்பேட்டை அடுத்து உதயமார்த்தாண்டபுரம் (நாட்சிகுலத்தில்)பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. டிசம்பர் 1998 - ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சரனாலயம் பல்வகை நீர்வகை இடம் பெயரும் நீர்பரவைகலான நாமக்கோழி, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, வக்கா, பெரிய வெள்ளை கொக்கு போன்ற வைகளின் இருப்பிடமாக விளங்குகிறது. இச்சரனாலயத்தின் மொத்த பரப்பளவு 46 ஹெக்டேர் ஆகும். இச்சரனாலயம் இயற்கையிலேயே நீர்பாசனத்திர்க்காக பயன்படுத்தப்படும் ஏரியாகும். இப்பகுதிக்கு தன்னேரானது மேட்டூர் நீர் தேக்கத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் முதலும், வடகிழக்கு பருவகாற்றின் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடியவும் வந்தடைகிறது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் முடிய இப்பகுதி வறண்ட நிலையில் காணப்படுகிறது. அருகிலுள்ள பெரூரான முத்துப்பேட்டை இச்சரனாலயத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. இச்சரனாலயத்திற்கு திருவாரூரிலிருந்து 65 கி.மீ மற்றும் தஞ்சாவூரிலிருந்து 68 கி.மீ. தூரத்தில் சாலை வழியாக வந்தடையலாம். அருகிலுள்ள முத்துப்பேட்டை ரயில் நிலையம் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இச்சரனாலயத்திற்கு பறவைகள் செப்டம்பர் முதல் வரத் தொடங்குகின்றன. பறைவைகளின் எண்ணிக்கை அதிக பட்சமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 10,000 க்கு மேல் காணப்படுகிறது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நத்தை கொத்தி நாரை இனங்கள் அதிகமாக காணப்படுவதே குறிப்பிடத்தக்க அம்சமாகும். இச்சரணாலயத்தில் அல்லிவகை, பெரம்புவகை நீரித்தாவரங்கள் போன்ற பல்வேறு வகையான தாவர வகைகள் உள்ளன. இச்சரணாலயத்தில் உள்ள மிதக்கும் நீர்த்தவரங்களின் மீது வால் அள்ளிக் குருவி போன்ற பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இவற்றை எல்லாம் பார்வை இட பார்வையாளர்களுக்கு இங்கு இரண்டு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், TR .அப்துல் ரஹ்மான்
முத்துப்பேட்டை அடுத்து உதய மாத்தாண்டபுரத்தின் பறவைகள் சரணாலயம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment