முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இந்த மேடையில் நிற்க வெட்கப் படுகிறேன் ! பெரியார் ஆவணப்பட விழாவில் அமீர் !




சென்னை, ஏப்ரல் 27:  பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர் அவர்கள் ஊடகத்தை இஸ்லாத்திற்காக பயன் படுத்துவதற்கு நமக்கு ஒரு நூற்றாண்டு ஆகி இருக்கிறது ! இதே தியேட்டரில் எத்தனையோ முறை கை தட்டல் விசில் ஆகியவற்றைக் கேட்டுள்ளேன் ! அல்லாஹு அக்பர் எனும் குரல் ஒலித்த போது சிலிர்த்தேன் ! ஆடல் பாடல் இல்லாத , நட்சதிரப்பட்டாளம் இல்லாத ஒரு ஆவணப்படத்திற்கு கை தட்டல் வாங்க முடியும் என்பதை இன்றைக்கு பார்த்த போது உண்மையிலேயே இதை இயக்கிய சிபிச்சந்தரை பாராட்டுகிறேன்.

ஏன் எனில் நான் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்துள்ளார் ! இந்தக் படக் குழுவினரோடு இந்த மேடையில் நிற்க வெட்கப்படுகிறேன்! ஏன் என்றால் 10 ஆண்டுக்கும் மேலாக திரைத் துறையில் இருந்தும் நாங்கள் செய்யாத வேலையை இவர்கள் செய்துள்ளார்கள் ! இந்த ஆவணப்படத்தின் போக்கை திசை மாற்றியவன் என்று சொன்னார்கள் ! உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை 'இந்த இடத்திற்கு இப்படிப் போகக் கூடாது இப்படிப் போகணும்' என்று அட்ரஸ் சொன்னத்ற்கே இந்த மேடையில் இவ்வளவு கண்ணியம் என்றால் உண்மையிலேயே ஒழுங்காக வேலை செய்திருந்தால் இந்நேரம் இது போன்று இஸ்லாத்தை சொல்லும் ஆவணப்படங்கள் எத்தனையோ வந்திருக்கும் என ஆதங்கப்பட்டார் !

சவூதியில் பணி புரிபவர்களின் கவனத்திற்கு!



சவூதி, ஏப்ரல் 25: சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியலை 08.04.2013 அன்று வெளியிட்டுள்ளது..
இந்த விபரங்கள் பின்வருமாறு:

1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.

மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

4. இக்காமா தொலைந்து விட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ராஃஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும் உம்ராஃஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.

மீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும் யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.

மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் ‘வெளிநாட்டவராக’ (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்

8. இக்காமா ஃ விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.

மீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.

9. ஹஜ்ஃஉம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.

மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.

10. தன்னுடைய கஃபீல் ஃ நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல்ஃநிறுவனம்ஃசொந்த தொழில் செய்வது – பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும் நிறுவத்தில் ‘கஃபாலத் – ஸ்பான்ஸர்ஷிப்’ மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.

மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது

11. தொழிலாளியின் கஃபீல் ஃ நிறுவனத்தில் வேலை செய்யாமல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.

மீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்

12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.

மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை – SR 5000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 50000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.

13. இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.

மீறினால்: முதல் முறை – SR 10000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 30000 அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்

மீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.

15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.

மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை

16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்…

ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.

17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல்ஃநிறுவனம் புகார் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்...

சென்னை பஸ் விபத்தில் உதவி புரிந்த முத்துப்பேட்டை வாலிபருக்கு பாராட்டு விழா.






சென்னை, ஏப்ரல் 25: சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது முத்துப்பேட்டையை சேர்ந்த வாலிபர் முஹம்மது ரியாஸ் என்பவர் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த விபத்து நேர்ந்த போது இவரின் முயற்ச்சியை கொண்டு காயமடைந்த 25 பேர்களையும் காப்பாற்றியது பெருமைக்குரியது. இவரின் மிகப்பெரிய உதவியால் பல மக்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டது. 

அப்போது அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல் துறையினர், பொது மக்கள், மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினார்கள்.

இந்த மனிதாபிமானத்தோடு செயல்பட்ட இந்த வாலிபரை கெளரவ விக்கும் விதமாக சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழாவும் நடைபெற்றது. 

அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முஹம்மது ரியாஸ் அவர்கள், எனது ஊர் முத்துப்பேட்டை ஆகும், அங்குள்ள அனைத்து மக்களுமே மனிதநேயம் மிக்கவர்கள் என்றும், இந்த ஊரில் வாழ்ந்ததினால் எனக்கும் மனிதநேயம் தொற்றிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். 

முத்துப்பேட்டையில் காதல் தம்பதிகள் ஓட்டம்.!!! கைது செய்த காவல்துறை.



முத்துப்பேட்டை, ஏப்ரல் 21:  முத்துப்பேட்டை டவுன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (53). இவரது மகள் தஸ்மிஷ்ஷா (17). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அலாவுதீன் (24). இவர் வெளிநாடு சென்று விட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தஸ்மிஷ்ஷா கல்லூரிக்கு செல்லும்போது அலாவுதீனுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 17- ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற தஸ்மிஷ்ஷா வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அப்துல் லத்தீப் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை எங்கள் தெருவை சேர்ந்த அலாவுதீன் கடத்திவிட்டார். எனது மகளை கண்டுபிடித்து தரவேண்டும். அலாவுதீன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மதுக்கூரில் உள்ள உறவினர் வீட்டில் அலாவுதீனும், தஸ்மிஷ்ஷாவும் தங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று இருவரையும் மீட்டு முத்துப்பேட்டைக்கு அழைத்து வந்தனர். தஸ்மிஷ்ஷா மைனர் பெண் என்பதால் அவரை விடுவித்தனர். அலாவுதீனை போலீசார் கைது செய்து முத்துப்பேட்டை சிறையில் அடைத்தனர்.

அப்துல் ரஹ்மான் MP வீட்டில் சோதனை :முத்துப்பேட்டை காவல்துறையின் அராஜாகம்


சென்னை, ஏப்ரல் 08:  வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., இல்லத்தில் காவல்துறையினர் அத்து மீறி அநாகரீகமாக நடந்து கொண் டது பற்றி விசாரித்து நட வடிக்கை எடுக்கும்மாறு காவல்துறை உயர் அதிகாரி களுக்கும், நாடாளுமன்ற
மக்களவை சபாநாயகருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று 08.04.2013 காலை வெளிவந்த தினமலர் நாளி தழில், வேலூர் எம்.பி. அண் ணன் மகன் வைர நகைகளுடன் தலைமறைவு என செய்தி வெளியிடப்படிருந்தது. 
அத்துடன் அவரது சென்னை இல்லத்தில் சோதனை நடப்பதாக தலைமை செயலகத்திலிருந்து பரப்பப்ட்ட செய்தியை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.இது பற்றி கேரள தொலைக்காட்சி ஊடங்களில் எழுத்துக்கள் ஓடவிடப்பட்டன. 

இச்செய்தி தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு தொலை பேசி விசாரிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இது பற்றி நாம் விசாரித்து அறிந்த வரையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:

எம். அப்துல் ரஹ்மான் எம்.பியின் புதல்வியின் திரு மணம் வரும் மே 5ம் தேதி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் அக்குடும்பம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. எம்.பியின் உடன் பிறந்த சகோதரர் ராஜ் முஹம்மது புதல்வர் முஹம்மது நிஜாம் வெளிநாட்டில் பணி செய்கிறார். இவர் மீது கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் ராஜேஷ்குமார் என்ற காவல் துறை அதிகாரி தலைமையில் 5ம் தேதி மாலை போலீசார் முத்துப்பேட்டைக்கு சென்றுள் ளனர். அங்கு குற்றம் சுமத்தப் பட்டவரை தேடுவதற்கு பதிலாக எம்.பியின் முத்துப்பேட்டை இல்லத்தின் முன் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் காவல்துறை கூட்டத்தை கூட்டி பரபரப்பை உண்டாக்கி யுள்ளனர்.

அதன் பின்னர் இரவு (சூரிய அஸ்தமனத்திற்கு பின்) 7 மணி யளவில் எத்தகையை சோதனை வாரண்டும் கைது வாரண்டும் இல்லாமல் எம்.பி.யின் இல்லத் தில் நுழைய முற்பட்டிருக்கின் றனர்.

எம்.பியின் வயதான தாயார் தன் வீட்டில் எந்த ஆண்களும் இல்லை. ஆண்கள் வந்த பின் வாருங்கள் என கூறியிருக் கிறார் ஆனால் கதவை திறக்க வில்லையெனில் உடைத்து உள்ளே வருவோம் என அடம் பிடித்த காவல்துறையினர் அத்து மீறி உள்ளே நுழைந்திருக்கின்றனர்.  ஒவ்வொரு அறையாக தேடி பார்த்தும் தாங்கள் தேடியது கிடைக்க வில்லை என திரும்பி சென்றிருக்கின்றனர்.

எம்.பி.யின் இல்லம் தேவை யில்லாமல் அவமானப்படுத்தப் பட்டதற்கு உள்ளுர் காவல் நிலைய ஆய்வாளர் செங்குட்டு வன் என்பவரே காரணம் என்றும் எண்ணற்ற புகார்களின் பேரில் பணிமாற்றம் செய்யப்பட்ட அவர் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் 

முத்துப்பேட்டைக்கே வந்துள்ளார் என்றும் அவரே தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிவிட்டார் என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தினர். தனது திட்டப்படி 6ம் தேதி காலை முத்துப்பேட்டை வந்த எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. காவல்துறை அதிகாரிகளிடம் ஒரு எம்.பியின் இல்லம் எனத் தெரிந்தும் எத்தகையை சோதனை வாரண்டும் இல்லாமல் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டது ஏன் எனக் கேட்ட போது தவறாக நடந்து விட்டது மன்னித்துக் கொள்ளுங்கள்  என்று மட்டுமே சொல்லியுள்ளனர். 

ஆனால் ஊடங்களில் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற் படுத்தும் வகையில் செய்தி வந்துள்ளதே ஆகவே நான் நவடிக்கை எடுப்பேன் என எம்.பி. உறுதியாக கூறிவிட்டார். 
இதன்படி தஞ்சாவூர் காவல் துறை துணைத் தலைவரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டு ள் ளது.

இதனிடையே சென்னையில் உள்ள எம்.பி.யின் இல்லத்தில் சோதனை நடைபெறுவதாக இன்று காலை தலைமை செயவகத்திலிருந்து செய்தி பரப்பப்பட்டு ஊடகத் தினர் ஏராளமானோர் குவிந்த னர்.

ஆனால் எத்தகைய சோதனையும் நடைபெறவில்லை என்பதும், இது வீண் புரளி என்பதும் தெரிந்து அவர்கள் கலைந்து சென்றனர். திட்ட மிட்டப்படி எம்.பியின் குடும்பத் தினர் திருமண அழைப்பிதழை கொடுப் பதற்காக காலை யிலேயே வெளியில் சென்றி ருந்தனர். எம். அப்துல் ரஹ்மான் எம்.பியும் வேலூர் தொகுதியில் நடை பெறும் விழாவில் பங்கேற்க சென்றிருந்தார்.

ஆனால் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது. 
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபாடு கொண்டு உழைப்பதாலும், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மிகச்சிறந்த பணியாற்றுவ தாலும், நாடாளுமன்ற நடவடிக் கைகளில் அற்புதமாக வாதம் செய்வதாலும் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி அனைவராலும் புகழப்படுகிறார். அவரது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டே இச்சதி நடைபெறுவதாக தெரிகிறது.

எனவே இந்த சோதனை மற்றும் புரளி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கு புகார் செய்ய இருப்பதாக எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. செய்தியாளர் களிடம் தெரிவித்தர்.

முத்துப்பேட்டையில் முஸ்லிம் பெண் கொலை தற்கொலையாக மாற்ற முயற்ச்சி


முத்துப்பேட்டை, ஏப்ரல் 03: முத்துப்பேட்டையில் முஸ்லிம்  பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவற்றை தற்கொலையாக மாற்ற முயற்ச்சி மேற்கொண்டுள்ளார்கள். இது குறித்து மக்கள் ரிப்போர்ட் பத்திரிகை கூறும் செய்தியை காண்போம்.

நன்றி


மக்கள் ரிப்போர்ட்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)