முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பழைய நிலைமைக்கு திரும்ப தயாராகும் துபாய் நகரம்...


துபாய், ஜனவரி 07 : வேலை தேடுவோர்க்கும், வேறு வேலைக்கு அல்லது நிறுவனத்துக்கு மாறிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் பிறந்திருக்கின்ற 2012 நல்ல ஆண்டாக இருக்குமென்று Gulf News ஆய்வு வெளியிட்டு இருக்கிறது. அமீரகத்தின் புகழ்பெற்ற நிறுவனங்கள் அடுத்து வரும் மாதங்களில் புதிய ஆட்களை தேர்ந்தெடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வின்படி 93 சதவீத நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை கூட்ட முடிவு செய்துள்ளன. இருந்தபோதும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் எச்சசரிக்கையுடனே இந்த நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அதிக விற்பனையாகும் நுகர்பொருள்கள் ,கட்டுமானம், மருத்துவம், மற்றும் காப்பீட்டு துறைகளில்தான் அதிகமான
வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. முதலீட்டு சம்பந்தமான வங்கித்துறைகள் கடந்த வருடம் இருந்த அதே அளவு வளர்ச்சியைத்தான்
பெறமுடியும் .அதே நேரம் ஒருங்கிணைந்த மற்றும் சில்லறை வங்கிதுறைகள பெரும் வளார்ச்சி பெறலாம் என்றும் அவற்றுள் வேலை வாய்ப்புகள் அதிகம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Gulf Recruitment Group என்ற நிறுவனத்தின் மேலாளர் ஆன மார்க் டிம்மிஸ்
என்பவரின் கருத்துப்படி அவர்களுடைய சந்தை ஆய்வுகளும், நடத்திய சர்வேக்களும் வேலைவாய்ப்புகள் மீண்டும் அமீரகத்தில் பிரகாசமாவதற்கான கதவுகளை திறந்திருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களும், உள்ளூரில் புகழ் பெற்ற நிறுவனங்களும் இந்த வருடத்தில் பெரும் வியாபார வளர்ச்சியை எதிர் நோக்கி இருப்பதால்
அவர்களுடைய வேலைக்கு ஆளெடுக்கும் துறைகளை முடுக்கிவிட்டுள்ளன. கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இவ்வருடத்தின் முதல் இரு கால ஆண்டுகளில் போதுமானதும் வெளிப்படியாக தெரியக்கூடியதுமாக பதினேழு சதவீத அளவுக்கு தங்களது திட்டங்களை இத்துறையில் வகுத்துள்ளன. இவைகளில் அதிக பட்சமாக திட்ட மேலாண்மையும், பொறியியல் திட்டங்களும் அடங்கும்.

காப்பீட்டு துறை தனது வருமானத்தை பெருக்ககூடிய வகையில் விற்பனை பிரதிநிதிகளை அதிகம் அமர்த்தும். அத்துடன் நஷ்ட ஈடுகளை நிர்வகிக்கவும் ,திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஆற்றல் பெற்றோருக்கு இந்த துறையில் அதிக வாய்ப்புக்கள் தேடிவர உள்ளன.

அமீரகத்தின் பொருளாதாரம் பலதுறைகளிலும் பீடுநடை போடத்துவங்கி இருப்பதும் எல்லா பிராந்தியம் மற்றும் வட்டாரங்களிலும் போதுமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதும் அதை முன்னிட்டு அந்த திட்டங்களுக்கு ஏற்ற வல்லமை பெற்றோர் தேர்வு செய்யப்பட இருப்பதும் வெள்ளிடை.ஆய்வின்படி பெரிய நிறுவங்கள் திறமைசாலிகளை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்குள் போட்டி போடத்தொடங்கிவிட்டன. ஆனாலும் தேவைக்கு ஏற்றபடி திறமைசாலிகள் கிடைப்பதில் பிரச்னை இல்லை என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன.

2011 வருடத்தோடு ஒப்பிடும்போது வங்கிகள் வர்த்தக கடன்களை முன்னை விட அதிகம் வழங்க தொடங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதால் எதிர்கால வர்த்தகம் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலும், சீன, இந்திய முதலிய நாடுகளில் உலவும் நிச்சயமற்ற பொருளாதார வளர்ச்சி உலகப்பொருளாதாரத்தை பொருத்தவரை நிச்சயமற்ற நிலைமைகளை உருவாக்கினாலும் வளைகுடா நாடுகளை அந்த பாதிப்புகள் தீண்டாத வண்ணம் வழக்கம் போல் ஐரோப்பிய முதலீடுகளையும், இந்திய சீன முதலீடுகளையும் கவரும் வண்ணம் அமீரகம் தொடர்ந்து செழிக்கும் வளம் கொழிக்கும் . வளைகுடாநாடுகளின் வளர்ச்சிக்கு உலகின் மற்ற பகுதிகளின் வீழ்ச்சி பெரும்காரணமாக அமையாது என்றே Gulf Recruitment Group கூறுகிறது.

நமது நிருபர்

இபுராஹீம் அன்சாரி.(துபாய்)

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் துபாய் கமிட்டி நடத்தும் இலவச மருத்துவ முகாம்..


முத்துப்பேட்டை,ஜனவரி 06 : இன்ஷா அல்லாஹ் வரும் ௦08.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 7 .30 மணிமுதல் பகல் 12 .30 மணி வரை முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல் மதரஸாவில் துபாய் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் இலவசமாக கீழ்க்கண்ட மருத்துவ பரிசோதனைகள் செய்து சான்றிதல் வழங்கப்படும். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
பரிசோதனை வகைகள்:
1) சர்க்கரை நோய் (Sugar) கண்டறிதல்.
2 ) இரத்த அழுத்தம் (Preasure) கண்டறிதல்.
3 ) இரத்த வகை (Blood Group) கண்டறிதல்.
4 ) கொழுப்பு (Coloushtral) கண்டறிதல்.
நிர்வாகிகள்:
PM . ஜாஹிர் உசேன்.தொடர்புக்கு: 97153 08228
M . ஷாகுல் ஹமீது. A .ஹாஜா நஜிபுதீன் (ஆ.நே)
எனவே அனைத்து முஹல்லாஹ் சகோதரர்களும் இதில் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
சேவையில் நட்புடன்.
நாட்சிகுளம் S .A .R . இரத்தப் பரிசோதனை ஆய்வகம்,
மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்.

நமது நிருபர்

K .எர்சாத் அஹமது

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” - RTI...!!!


இந்தியா,ஜனவரி 06 : 1. தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும்கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3.சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7.உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம் ?

எடுத்துக்காட்டாக,

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவுதிட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ?

இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,
( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் :378 ,
அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )
தேனாம்பேட்டை, சென்னை - 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580
Email : sic@tn.nic.in http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :-

Shri Satyananda Mishra

Chief Information Commissioner
Room No.306, II Floor
August Kranti Bhavan
Bhikaji Cama Place
New Delhi - 110 066.

Phone:- 011 - 26717355
E-mail :- s.mishra@nic.in http://cic.gov.in/

குறிப்பு :

மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் திருத்துறைப்பூண்டி தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.

சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.
source from www.muthupettaiexpress.blogspot.com

நமது நிருபர்

சேக்கனா M. நிஜாம்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)