முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நச்சுக் கருத்தை விதைக்கும் நக்கீரன்!!!


முத்துப்பேட்டை,அக்டோபர் 13 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட கருத்து முத்துப்பேட்டை மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்துவா? முஸ்லிமா? என்ற கேள்வியை எழுப்பி நச்சு கருத்தை வெளியிட்ட நக்கீரன், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலா அல்லது, இரு மதங்களுக்குமிடையே பிளவை ஏற்படுத்தும் விதத்திலா அவர்கள் வெளியிட்டார்கள் என்பது மக்களுக்கு புரியவில்லை. எனினும் முத்துப்பேட்டையை பொறுத்த வரையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து சமுதாய மக்களும் சகோதர் வாஞ்சையுடன் தான் வாழ்த்து வருகின்றனர் என்பது அந்த நாக்கீரனுக்கு தெரியவில்லையே என்பது முத்துப்பேட்டை மக்களின் கேள்வியாக இருக்கிறது. பல்வேறு ஆண்டுகளாக முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஒரு முறை முஸ்லிம்கள் மறுமுறை இந்துக்கள் என்று மாறி மாறி பதவியில் அமருகின்றனர். அவ்வாறு தனது பதவியை விட்டுக்குக் கொடுக்கும் மனப்பான்மையில் தான் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் எங்களிடம் ஏன் இந்த அவல போக்கு நக்கிரானுக்கு?
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் திருவாரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.கோபி. (DSP ) அவர்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட அந்த தகவலுக்கு இதுவரை யாரும் எழுத்து பூர்வமாக புகார்கள் தெருவிக்க வில்லை என்றும், அவ்வாறு யாரேனும் புகார் தெருவித்தால் சம்மந்தப் பட்டவர்கள் மீது விசாரணை நடத்துவோம் என்றும் அவர் தெருவித்தார்.
நக்கீரன் (இவர்களின்) முகத்திரையை கிழிக்கும் விதமாக முத்துப்பேட்டை நலம் விரும்பும் சகோதரர்கள் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சுவரொட்டி வெளியிட்டனர் அது பின் வருமாறு.


தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக லெப்பை தம்பி போட்டி:


முத்துப்பேட்டை, அக்டோபர் 13 : திருவாரூர் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு கணிப்பொறி என்ற சின்னத்தில் போட்டி இடுவதாக சுயேச்சை வேட்பாளர் லப்பை தம்பி தெருவித்தார், இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளின் மையப் பகுதி யில் நியாய விலை அங்காடிகளை திறக்க செய்து மக்கள் அலைகளிப்பில்லாமல் ரேசன் பொருட்கள் பெற ஆவணம் செய்யப்படும் என்றும், மிக முக்கியமான குடிநீர் வசதி தங்கு தடையின்றி முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், மின்விசிறி மின் கம்பங்கள் அமைத்து மிவசதி தங்கு தடையின்றி கிடைத்திட ஏற்பாடு செய்யப்படும் என்று, தார் சாலை, சிமென்ட் சாலை இல்லாத வார்டுகளில் இவைகளை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெருவித்தார். பள்ளிக் குழந்தைகள் சிறந்த முறையில் கல்வியில் திறமை பெறவும், அறிவாளியாகவும் வளர்ந்திட கல்வி நிறுவனங்களில் உரிய மக்கள் பிரதிநிதிகளை நியமித்து கண்காணிக்கப்படும் என்றும், கியாஸ் சிலிண்டர் வீட்டில் இருந்தபடியே பெற்றிட உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குதியோர் அதர வற்றோர், விதவை, திருமண உதவித்தொகை, மாற்று திறநாளிகளுக்கு அரசால் வழங்கப் படும் மாதாந்திர உதவித்தொகையினை பெற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெருவித்தார். மேலும் விவசாய தொழிலாளர்கள், தென்னை உரிமையாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், தென்னைத் தொழிலாளர்கள், தென்னை உரிமையாளர்கள் ஆகியோர் பாதிக்கப் படும் காலங்களில் மத்திய மாநில அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று தரப்படும் என்றும், மீனவ பேரு மக்களின் துயர் துடைக்க பேட்டை, ஆசாத் நகர் கொரையாற்று ஆறு முகத்துவாரங்களில் (ஐஸ் பிளான்ட்) கட்டிடம் பேரூராட்சி மூலம் அமைத்து தரப்படும் என்று அப்போது அவர் தெருவித்தார். அன்பிற்கினிய வாக்காளர்களே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தங்களுடைய வாக்குகளை தவறாமல் எனக்கு அளித்து பெருவாரியான முறையில் வெற்றிபெற செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டை பேரூராட்சி 9 வது வார்டுக்கு SDPI சார்பாக போட்டியிடும் பாவ பகுருதீன்!



முத்துப்பேட்டை, அக்டோபர் 13 : திருவாரூர் மட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் SDPI சார்பில் தண்ணீர் குழாய் சின்னத்தில் 9 வது வார்டில் போட்டியிடப் போவதாக பாவா பகுருதீன் தெருவித்துள்ளர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நமது வார்டில் உள்ள அடிப்படை வசதிகளை சரி செய்து தருவேன் என்றும், தெரு விளக்கு இல்லாத இதுவரையும் செய்யபடாத சந்துகளுக்கு தெரு விளக்கு அமைத்து தர முயற்சி செய்வேன், செக்கடி குளம் அருகில் கட்டப்பட்ட பெண்கள் கழிவறையை செயல்பட விடாமல் தடுத்து அயோக்கியர்களின் முகத்திரையை கிழித்தெறியும் விதத்தில் மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வந்தே தீருவேன் என்றும்,பக்கீர் வாடி (மஜீதியா) தெருவிற்கு டெண்டர் விடப்பட்டு வேலை செய்யாமல் தாமதபடுத்தி வரும் சிமென்ட் சாலை 8 லட்சம் வடிகால் வசதி 1 .50 லட்சம் ஆகா மொத்தம் 9 .50 லட்சத்திற்கான வேலையை துரிதமாக, உடனடியாக நடைபெற ஆவணம் செய்வேன் என்றும் அவர் தெருவித்தார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)