முத்துப்பேட்டை, அக்டோபர் 13 : திருவாரூர் மட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் SDPI சார்பில் தண்ணீர் குழாய் சின்னத்தில் 9 வது வார்டில் போட்டியிடப் போவதாக பாவா பகுருதீன் தெருவித்துள்ளர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நமது வார்டில் உள்ள அடிப்படை வசதிகளை சரி செய்து தருவேன் என்றும், தெரு விளக்கு இல்லாத இதுவரையும் செய்யபடாத சந்துகளுக்கு தெரு விளக்கு அமைத்து தர முயற்சி செய்வேன், செக்கடி குளம் அருகில் கட்டப்பட்ட பெண்கள் கழிவறையை செயல்பட விடாமல் தடுத்து அயோக்கியர்களின் முகத்திரையை கிழித்தெறியும் விதத்தில் மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வந்தே தீருவேன் என்றும்,பக்கீர் வாடி (மஜீதியா) தெருவிற்கு டெண்டர் விடப்பட்டு வேலை செய்யாமல் தாமதபடுத்தி வரும் சிமென்ட் சாலை 8 லட்சம் வடிகால் வசதி 1 .50 லட்சம் ஆகா மொத்தம் 9 .50 லட்சத்திற்கான வேலையை துரிதமாக, உடனடியாக நடைபெற ஆவணம் செய்வேன் என்றும் அவர் தெருவித்தார்.
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா.
முத்துப்பேட்டை பேரூராட்சி 9 வது வார்டுக்கு SDPI சார்பாக போட்டியிடும் பாவ பகுருதீன்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment