முத்துப்பேட்டை, அக்டோபர் 11 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிக்கையை மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் வேட்பாலருமாகிய s .முஹம்மது மாலிக் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையை மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் மாவட்ட தலைவர் ஜனாப்.ஹுமாயின் கபீர் அவர்களிடம் கொடுத்து தேர்தல் அறிக்கையை இன்று உற்சாகத்துடன் வெளயிட்டார். இது பற்றி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், மக்களின் குறைகளை முழுமையாக கேட்டு அப்பிரச்சனைகளை முழுமையாக ஆராய்ந்த பின்பு தான் இவற்றை அறிக்கையாக வெளியிடப்பட்டது என்றும், தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறிதிகளை முழுமையாக நிறைவேற்றப் படும் என்றும் அவர் தெருவித்தார். இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர். வக்கீல் தீன் முஹம்மது, த.மு.மு.க. வின் தகரத் தலைவர். எம். சம்சுதீன், நகர துணைத் தலைவர். முஹம்மது யூசுப், த.மு.மு.க வின் நகர துணைச் செயலாளர், எஸ்.தாவூத், த.மு.மு.க. வின் நகர பொருளாளர் ஜெகபர் சாதிக், த.மு.மு.க வின் நகர ஒன்றிய செயலாளர் எம்.நெய்னா முஹம்மது, மனித நேய மக்கள் கட்சியன் நகர செயலாளர். கே.முஹம்மது யாசின், லக்கி சித்திக், மற்றும் கழக தொண்டர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Source From www.muthupettaiexpress.com
தேர்தல் அறிக்கைகள்:
1 ) தினமும் காலை, மாலை சுத்திகரிக்கப் பட்ட குர்டிநீர் வழங்கப்படும். குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளே செய்யப்படும்.
2 ) கொசு தொல்லை முற்றிலுமாக ஒழிக்கப்படும். கொசுவினால் ஏற்படும் நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப் படும்.
3 ) சுகாதார மேம்பாட்டிருக்கு நிரந்தர பயனளிக்கும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
4 ) தெருவிளக்கு இல்லாத பகுதிகளுக்கு உடனதியாக தெருவிலக்கு அமைக்க ஏற்பாடு செய்வேன்.
5 ) சொத்து வரிவித்திப்பில் உள்ள குறைபாடுகள் நீக்கப் பட்டு 20 % வரி குறைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன்.
6 ) பழுதடைந்த சாலைகள் உடனடியாக மேம்படுத்தப்படும்.
7 ) முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து குளங்களும் தூய்மை படுத்தப் பட்டு சுகாதார குலங்களாக மற்றப்படும.
8 ) பேரூராட்சி அலுவலக பனிகள் விரைந்து நடக்க, முழுமையாக கணினிமயமாக நடவடிக்கை மேற்கொள்வேன்.
9 ) ஆரம்ப சுகதர நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற முயற்ச்சி எடுப்பேன்.
10 ) நவீன் வசதியுடன் கூடிய மீன்புடித்துரைமுகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
11 ) முத்துப்பேட்டை யில் மீன்வளத்துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
12 ) மாத கோவில் தெரு (புதுக்குடி இருப்பு ) பகுதியில் நவீன கழிப்பறை வசதி செய்து தரப்படும்.
13 ) முத்துப்பேட்டையில் அரசு தொழிற்பயிற்சி அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
14 ) இரையில்வே நிலையம் அருகில் நவீன கழிப்பறை அமைத்து தருவேன்.
15 ) முத்துப்பேட்டை மையப் பகுதியில் இலைங்கருக்காக விளையாட்டு மைதானம் அமைத்து தருவேன்.
16 ) பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை நவீன படுத்தி தருவேன்.
17 ) துப்புரவு பணியாளர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி செய்து தருவேன்.
18 ) பிறப்பு, இறப்பு சான்றிதல் 24 மணிநேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
19 ) நகரின் மையப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு நவீன பூங்கா அமைத்து தருவேன்.
20 ) மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த் தடுப்புக்கு விரைந்து செயல்படுவேன்.
மீதமுள்ள தேர்தல் அறிக்கை பின் வருமாறு...
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி.EK .முனவ்வர் கான். அபு மர்வா
முத்துப்பேட்டை பேரூராட்சியின் தேர்தல் வாக்குறுதி! மாவட்ட MMK கட்சி வெளியீடு:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment