முத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகர் ஊர்வலத்திற்கு முன் செல்லும் பிரசார வாகனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் கேட்டுக் கொண்டுள்ளது. முத்துப்பேட்டையில் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:
முத்துப்பேட்டையில் வரும் 7 ஆம் தேதி பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வருடந்தோறும் நடைபெறும் இந்த விநாயகர் ஊர்வலத்தில் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன் இந்திய தவ்ஹீத் ஜமாத் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் முடிவில், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு விநாயகர் பாதையை மாற்றம் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி மாற்றுப்பாதையில் ஊர்வலம் சென்று வந்த நிலையில் சில கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டன. இருப்பினும் தொடர்ந்து நடைபெறும் விநாயகர் ஊர்வலமும், ஊர்வலத்திற்கு முன் செல்லும் வாகன பிரசாரமும், இன உணர்வுகளை தூண்டும் விதமாகவும், ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. அதனை தடை செய்ய வேண்டும். மேலும், முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கக்கூடிய பகுதிக்குள் வரும்போது, கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால்தான் இப்பகுதியில் பதற்றம் ஏற்படுகிறது. இன உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் அமைதியை நிலை நாட்டி சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
சாதி, மத ஊர்வலங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பின்பற்றி உத்திரபிரதேச மாநிலத்திலும் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசை பின்பற்ற அனைத்து மத ஊர்வலங்களை தமிழகத்திலும் தடை செய்வது குறித்து தமிக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். முத்துப்பேட்டையில் பெறும் எதிர்பார்ப்போடு நடக்க இருக்கும் ஊர்வலத்தை காவல்துறை எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் முடித்துத்தர வேண்டும் என்றார்.
source from: www.muthupettaiexpress.com
Thanks for INTJ Mr. shibli and Muthupettai Express
ReplyDeleteஉங்களின் முயற்சியை இயக்க வேறுபாடு இன்றி பாராட்டுகிறேன்.அல்லாஹ் அருள் புரியட்டும்.
ReplyDeleteThanks for INTJ Mr. shibli and Muthupettai Express
ReplyDeleteஷிப்லி அண்ணன் விநாயகர் ஊர்வலத்தை முழுவதுமாக தடை செய்ய சட்டத்தில் இடம் இருந்தால் தயவு செய்து முயற்சி செய்யுங்கள்.
ReplyDeleteThanks for ur special interview
ReplyDeleteஇந்த தருணத்தில் இந்த பேட்டி முக்கியமானதும்,வரவேற்க தக்கதும்.வாழ்த்துக்கள்.
ReplyDeletePlease Band For this program.... totally in side the muthupettai
ReplyDelete