கூத்தநல்லூர், செப்டம்பர் 03: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மாநகராட்சி உட்பட்ட முஸ்லிம் மாணவிகள் பெரும்பாலானவர்கள் படிக்கும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், இனிமேல் பள்ளிக்கு வரும் முஸ்லிம் மாணவிகள் தலையில் முக்காடு (ஸ்கார்ஃப் ) அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்து வந்தால் முட்டி போட வைப்பேன் என்றும் முஸ்லிம் மானவிகை பார்த்து கடுமையாக மிரட்டி உள்ளார். இவரின் மிரட்டலுக்கு பயப்படாத மாணவிகள் இன்று தலையில் முக்காடு (ஸ்கார்ஃப்) அணிந்து சென்றுள்ளனர். இதனைக் கண்ட தலைமை ஆசிரியர் தலையில் முக்காடு (ஸ்கார்ஃப்) அணிந்துள்ள மாணவிகளுக்கு தண்டனை அளித்துள்ளார். இந்த தகவல் அறிந்த பெற்றோர்கள், ஊர் ஜமாத்தார்கள், மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் உட்பட அனைவரும் பள்ளியின் முன் திரண்டனர். தகவல் அறிந்த காவல்துறை பிரச்சனை இல்லாமல் சுமுக முடிவு எடுக்க தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
chidambaram thil inntha kotomai unntu yoravatu kaparkala.?
ReplyDeleteபள்ளி மாணவிகளிடம் நஞ்சை விதைக்கு இது போன்ற ஃபாசிஸ வெறியர்களை பணியிலிருந்து விளக்க வேண்டும்
ReplyDeleteபள்ளி மாணவிகளிடம் நஞ்சை விதைக்கும் இது போன்ற ஃபாசிஸ வெறியர்களை பணியிலிருந்து விளக்க வேண்டும்
Deleteமத துவேசத்தை தூண்டும் இது போன்ற ஊர்வலத்திற்கு தடை வித்திக்க வேண்டும் தமிழக அரசு....
ReplyDeleteமதம் எதுவரை போகிறது
ReplyDelete