முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் பரபரப்பு. பட்ட பகலில் பெண் தீ குளித்து சாவு.


முத்துப்பேட்டை ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை அம்பட்டாங்கொல்லை பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கரை ஓரம் நேற்று காலை பட்ட பகலில் ஒரு பெண் உடம்பில் மண்ணனையை ஊற்றி தீ வைத்த கொண்டு எரிந்த நிலையில் சத்தம் போட்டார். இதனை கண்ட பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்து நின்றனர். சற்று நேரத்தில் உடம்பில் பற்றிய தீ எரிந்து நிலையில் கீழே அந்த பெண் விழுந்தார். பின்னர் பொதுமக்கள் மணல்களை அள்ளி வீசி தீயை அணைத்தனர். அதற்குள் அந்த பெண்ணும் தீயில் கருகி இறந்து போனார். உடன் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் சென்று விசாரனை நடத்தினார்கள். 

இதில் அதே பகுதியை சேர்ந்த சாம்பசிவம் என்பவரது மனைவி சரோஜா(65) என்று தெரியவந்தது. மேலும் சரோஜா சில வருடங்களாக மன நலம் பாதிக்கப்பட்டு கோவில், தர்ஹா போன்றவைகளுக்கு சென்றும் குணம் ஆகாமல் வீட்டில் இருந்த அவர் நேற்று பகல் மண்ணனை கேன் மற்றும் தீ பெட்டியை எடுத்து சென்றும் கந்தப்பரிச்சான் ஆற்று திடலில் நின்று தீ வைத்து கொண்டதாக விசாரணையில் தெரிந்தது. இது குறித்து சரோஜாவின் உறவினர் சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை போலீசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பரபரப்பை ஏற்படுத்தியது.

முத்துப்பேட்டை தர்ஹாவில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி....




முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்பவானோடை தர்ஹாவில் மதநல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தர்ஹா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் தலைமை வகித்தார். ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக டிரஸ்டி தமீம் அன்சாரி சாஹிப் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன,; திருவாரூர் மாவட்ட எஸ்.பி.காளிதாஸ் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மதிவாணன் பேசுகையில்: இப்படி ஒரு புனித பாக்கியத்தை தந்த தர்ஹா நிர்வாகத்துக்கு நன்றி. மதங்களை கடந்து சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது. நாம் செய்த ஒவ்வொரு காரியமும் நல்லதே செய்ய வேண்டும். நல்லதே கருதவேண்டும் என்றலாம் இஸ்லாத்தில் போதிக்கப்பட்டு வருவதை நான் பல இடங்களில் கேட்டு உள்ளேன். அனைத்திலும் சமாதானம் என்ற ஒரே வாக்கியத்தையே மையப்படுத்துகிறது. இஸ்லாத்தில் போதிக்கப்படும் அனைத்திலும் சமாதானத்தையே கூறப்படுகிறது என்பது மகிழ்ச்சியை தருகிறது, இந்த நாளில் சகோதரத்துவத்தில் நாம் வாழ வேண்டும். மத நல்லினக்கத்தோடு வாழ வேண்டும் என்று நாம் உறுதி எடுப்போம் என்றார். மாவட்ட எஸ்.பி காளிதாஸ் மகேஷ்குமார் பேசுகையில்: இந்த நாளில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் விழா நடத்த கோரிக்கை வைத்தேன். செய்து கொடுத்த தர்ஹா நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவிக்கிறேன். அதே போல் இந்த இப்தார் நிகழ்ச்சியில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் இப்பொழுது நாம் காணமுடிகிறது. இது போல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்களை போன்றவர்கள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் மதியழகன், ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, முன்னால் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி, இன்ஸ்பெக்டர்கள்: எடையூர் பாண்டியன், முத்துப்பேட்டை சண்முகவேல், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஜாம்பை இளைஞர் நற்பணி மன்றம் தலைவர் கண்ணன், குட்டியர் பள்ளி தலைவர் காதர் உசேன், தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், ரோட்டரி தலைவர் வேதசங்கர், வர்த்தகக்கழக தலைவர் ராஜாராமன், பொதுச்செயலாளர் ராமலிங்கம், விவசாயிகள் பிரிவு நிர்வாகி முருகையன், சமூக ஆர்வலர் சுல்தான் இபுராஹிம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகம், புதுபள்ளி நிர்வாகி சிராஜிதீன், பேரூராட்சி கவுன்சிலர் நாசர், நகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னால் துணைத் தலைவர் கந்தவேல், மர்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளிமுத்து, தர்ஹா நிர்வாகி சேட்டு, திருத்துறைப்பூண்டி சிராஜிதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் தர்ஹா நூர் முகம்மது லெப்பை நன்றி கூறினார். 




முத்துப்பேட்டையில் திருமண உதவி பணம் பெற லஞ்சம் வாங்கிய பெண் கிராம நல அலுவலர் கைது.நாகை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.




முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த பேட்டை அங்களம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பரமணியன்(45), மாட்டு வண்டியின் கூலி தொழிலாளியான இவரது மகள் மாரியசெல்வி(26)க்கு கடந்த 11.07.2014 அன்று பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு திருமணம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் நடைபெற்றது. அதற்காக தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தில் பணம் பெற கடந்த 22.06.2014 அன்று முத்துப்பேட்டை ஒன்றிய குழு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அன்றைய நாள் முதல் சுப்பிரமணியனை தினமும் ஒவ்வொரு ஆவனங்களை கேட்டு அலையவிட்ட கிராம நல அதிகாரிகள் இறுதியாக கடந்த 21.07.2014 திங்கள் அன்று சுப்பிரமணியன் வீட்டை கிராம நல அலுவலர் சீதா லட்சுமி தலைமையில் மூன்ற பெண் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணியத்திடம் இதில் நிறைய பணிகள் இருப்பதாகவும், பத்தாயிரம் வரை செலவு இருப்பதாகவும் அலுவலர் சீதா லட்சுமி, சுப்பிரமணியத்திடம் பத்தாயிரம் பணம் கொண்டு வரும் படி கூறி சென்றுள்ளார். 

இந்த நிலையில் அடுத்த நாள் அலுவலகம் சென்ற சுப்பிரமணியன் தான் மிகவும் சிரமப்படுவதாகவும் அதனால் என்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார். அதற்கு அலுவலர் சீதா லட்சுமி சும்மா சம்மா இங்கு வர கூடாது. இறுதியாக எட்டாயிரம் பணம் கொண்டு வந்து கொடுத்தால் தான் உதவி பணம் பெற்று தருவேன் என்று கோபமாக கூறி உள்ளார். இதனால் அதிர்ப்தி அடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மாரிசெல்வி ஆகியோர் நேற்று முன்தினம் 24.07.2014 தேதி மீண்டும் அலுவலர் சீதா லட்சுமியை நேரில் சந்தித்த போது மீண்டும் அதே பாணியில் அலுவலர் சீதா லட்சுமி கூறி திருப்பி அணுப்பி உள்ளார். இதனால் மன உலைச்சல் அடைந்த சுப்பிரமணியன், நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் படி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.சிவஞான வடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சந்திரன், உதவி அலுவலர்கள் ரவி சந்திரன், பாண்டியன், சந்திரபாலன், அன்பழகன் ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 2.30 மணிக்கு அலுவலகத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். அப்பொழுது சுப்பிரமணியத்திடம் ரசாயணம் தடவிய ரூபாய் 8 ஆயிரம் பணங்களை கொடுத்து அனுப்பினர். 

அலுவலர் சீதா லட்சுமி பணத்தை பெற்று கொண்டு நாளை மீண்டும் ஒரு சான்று கொண்டு வரும் படி கூறினார். இதனை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை பல மணி நேரம் சோதனையிட்டு அலுவலர் சீதா லட்சுமியை கைது செய்து கோர்டில் ஆஜர் படுத்த நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட அலவலர் சீதா லட்சுமியின் கணவர் சேகர் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலராக இருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசில் மாட்டி பணி நீக்கம் செய்யப்பட்டவர். தற்பொழுது திருத்துறைப்பூண்டி ம.தி.மு.க நகர செயலாளாராக உள்ளார். இச்சம்பவம் செய்தி மக்கள் மத்தியில் பரவியதால் முத்துப்பேட்டையில் பெரும் பரபர்பபு எற்பட்டு உள்ளது. 


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)