முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை: காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த கணவன், பெண் தற்கொலை முயற்சி.!



முத்துப்பேட்டை, அக்டோபர் 12 : முத்துப்பேட்டையில் உள்ள செம்படவன்காடு பாமணி ஆற்றில் இளம்பெண் குத்தித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகள் மீனா (27) பீகாம் பட்டதாரியான இவர் கடந்த ஒருவருடம் தனது தாயார் உடல் நிலை சரி இல்லாததால் ஜாம்புவோநோடை தர்ஹாவில் வேண்டுதலுக்காக தனது தாயாருடன் மீனா தங்கி உள்ளார். 

பல மாதங்கள் தங்கி உள்ள மீனா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் சேக் அப்துல் காதர் அவர்களின் மகன் மீரா உசேன் மீது காதல் ஏற்பட்டு கடந்த வருடம் இருவரும் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் தனது தாயாரும் இறந்து விட்டார். இந்த நிலையில் மதுக்கூரில் உள்ள மீனாவின் அண்ணன் வீட்டில் இருவரும் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். 

அப்போது மீரா உசேனும் அங்குள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மீராஉசேன் அடிக்கடி காணமல் போவதும் திரும்ப வருவதுமாக இருந்துள்ளார். இந்த நிலையில் மீராஉசேனுக்கு ஏற்கனவே ஆலங்காட்டை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி உள்ள சம்பவம் தெரிகிறது அதிர்ப்த்தி அடைந்த மீனா மீரா உசேனிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மீரா உசேனை காணவில்லை. மேலும் மீனா எங்கும் தேடியும் கிடைக்காததால் முத்துப்பேட்டைக்கு வந்து முதல் மனைவியிடம் விசாரித்தார் அப்போது முதல் மனைவிடம் தங்கி உள்ளதாக தெரிகிறது. மேலும் இருவரும் மீனாவை  திட்டியதாக கூறப்படுகிறது. 

மேலும் மீரா உசேன் மீனாவை பார்த்து நான் இனிமேல் உன்னிடம் சேர்ந்து  வாழமாட்டேன் என்றும் உறுதியுடன் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்பப்த்தி அடைந்த மீனா என்ன செய்வது என்று நடந்தே பல மீட்டர் தூரம் சென்றுள்ளார். மேலும் இதனால் ஆத்திரம் அடைந்த மீனா இனி நம்ம வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணி ஒரு வெள்ளை பேப்பர் தாளில் என் சாவுக்கு காரணம் மீரா உசேனும் அவரின் முதல் மனைவியும் தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு செம்படவன் காடு பாமணி ஆற்று பாலத்தின் மீது ஏறி குத்தித்து உள்ளார். 

இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஸ்டாலின், அழகர் ஆகியோர் குதித்த பெண்ணை காப்பாற்றி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மீனாவை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், ஏட்டு சந்திரமோகன் ஆகியோர் விசாரித்து மீனாக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மீனா தற்போது 5 மாதம் கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.   
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

விரைவில் SDPI கட்சியில் இணைகிறார் முத்துப்பேட்டை ஷேக் பரீத் :







முத்துப்பேட்டை, அக்டோபர் 11:  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சமூக பணியாற்றியவர் ஷேக்பரீத் .இவர் முத்துப்பேட்டையில் உள்ள மரைக்காயர் தெருவை சார்ந்தவர் .த .மு .மு .க .வில்  ஆரம்ப காலத்தில் அடிப்படை உறுப்பினராக தனது அஸ்தி வாரத்தை துவக்கிய ஷேக்பரீத்  பின்பு நகர செய்தி தொடர்பாளர் ,நகர மருத்துவ சேவை அணி செயலாளர், நகர துணை செயலாளர் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர், என்று படிப்படியாக உயரம் நோக்கி சென்றார் . பிறகு சிறிது காலம் இவர் சென்னையில் பணியாற்றிகொண்டிருக்கும்போது தென் சென்னை மாவட்ட மாணவரணி  செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டார் . வின் தொலைக்காட்சியில் வளைகுடா செய்திபிரிவின் துணை ஆசிரியராக பணியாற்றியவர் . இளம் வயதிலேயே பத்திரிக்கை துறையில் ஆர்வம் கொண்ட இவர் த.மு.மு.க வின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான மக்கள் உரிமை ,மற்றும் வேறு சில பத்திரிக்கைகளிலும் ஆக்கங்கள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை எழுதி வந்தார் .

கடந்த சுனாமி பேரழிவின் போது நாகை ,கீச்சாங்குப்பம், நாகூர்,திருப்பட்டினம், காரைக்கால், போன்ற பாதிக்க பட்ட இடங்களில் மக்கள் பணியாற்றியவர். மதவாத, தேசவிரோத, பா.ஜ .க . இந்து முன்னணி, ஆர் .எஸ் .எஸ் போன்ற வகுப்புவாத சக்த்திகளை எதிர்ப்பதை தனது உயிர்  மூச்சாய் கொண்டவர்.  முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை  ஏற்படுத்தும் முயற்சியாக, கடந்த 8 ஆண்டுகளாய் சகோதரத்துவத்தை உண்டாகும் கைப்பந்து போட்டிகளை மாநில அளவில் நடத்தி அணைத்து சமுதாய மக்களின் கவனத்தை ஈர்த்தவர் .கடந்த ஆண்டு நடை பெற்ற விளையாட்டு போட்டியில் ,பா .ஜ .க .வில் மத்திய அமைச்சராக இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அறந்தாங்கி திருநாவுக்கரசரை அழைத்து வந்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியவர் .

அறந்தாங்கி திருநாவுக்கரசர் முத்துப்பேட்டைக்கு இவர் நடத்திய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள வந்த போது ,இவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பாரதிய ஜனதா கட்சியினர் சாலைமறியலில்  ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது .

நமது நிருபர் : AKL. அப்துல் ரஹ்மான் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)