முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை நகரம் முழுவதும் காங்கிரஸ் கொடி ஏற்ற கூட்டத்தில் முடிவு.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 18: முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கூட்டம் தலைவர் ஜெகபர் அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் நாச்சிக்குளம் தாஹிர் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர செயலாளர் எஸ்.எம்.டி.நாசர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முத்துப்பேட்டை நகரம் முழுவதும் புதியதாக கொடி மரம் அமைத்து கொடி ஏற்றப்படும். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவரின் சிறப்பான பணிக்கு இந்த கூட்டம், பாராட்டை தெரிவிக்கிறது. உட்பட முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர துணைத் தலைவர்கள் வேல் துரை, குலாம்ரசூல், குமார் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவானந்த சாமி மற்றும் நிஜாம் மைதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

எதிரியையும் மன்னித்து வாழவைத்து அழகு பாருக்கும் மார்க்கம் உலகிலே இஸ்லாம் ஒன்றுதான்.









துபாய், ஆகஸ்ட் 18: குஜராத்தில் ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்களை கொன்று குவித்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.அவர்களின் சொத்துக்களை சூரையாடியதர்க்கு காரணமாக இருந்தவர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த மாநிலத்தில் (குஜராத்) இன்றுவரை அகதிகளாகவே வாழ்கின்ற சூழல்.. இத்தனைக்கும் மத்தியில் அமெரிக்காவே பலமுறை விசா கொடுக்க மறுத்த ஒரு மாபெரும் குற்றவாளி. இருந்தாலும் நாட்டின் பிரதமர் இந்த மோடி இஸ்லாமியர்களுக்கு செய்த அத்தனை துரோகங்களும் அறிந்து இருந்தும் தன் நாட்டுக்கு விருந்தாளியாக வந்தார் என்பாதால் அவரை (விருந்தாளியை) கண்ணியப்படுத்துகிரார்கள் இஸ்லாமியர்கள் என்றால், இதுதான் இஸ்லாம் கற்று கொடுக்கும் அழகிய மாண்பு.




அது மட்டும் அல்ல இந்த நாட்டில் எங்க மதத்தவருக்கு கோவில் கட்டி தாருங்கள் என்று கேட்டதற்கு அதையும் நாங்கள் கட்டி தருகிறோம் என்று கூறினார்களே இதுவா தீவிரவாதி மதம் பிற மதங்களை திட்டி மத்திக்க தெரியாதவன் உண்மையான முஸ்லிம் அல்ல அவ்வாறு எங்களது முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எங்களுக்கு கற்று தரவில்லை, இதன் மூலமாவது இஸ்லாமியர்களை அளிக்க முயலும் என்னத்தை நிறுத்துக்கொள்வது நல்லது. இல்லை எனில் அல்லாஹ் உங்களை அழித்துவிடுவான் அதற்க்கு நேரும் காலம் தேவையில்லை .



Reported By 



முஹம்மது இல்யாஸ். MBA, MA. Journalism & Mass Communication 

முத்துப்பேட்டை அருகே உலக மக்கள் தொகைதின பரிசளிப்பு விழா!



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 17: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின விழா வட்டரா அளவிலான பேச்சு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புஷ்பா தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு பேசினார், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் சுமதி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மிதுன், ஜான்ஜோசிக், வேம்பிரித்தியா, சத்யா, கலைமணிபாரதி, சாதம்உசேன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், சீனிவாசன், ராஜேஷ், ஹரிபாஸ்கர் மற்றும் சுகாதார செவிழியர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். 

Reported By

முஹம்மது இல்யாஸ். MBA. MA.JMC.

4 முஸ்லிம் மாணவர்கள் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீர் அதிகமானதால் 4 இறப்பு




கும்பகோணம், ஆகஸ்ட் 18: கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூரை சேர்ந்தவர் சித்திக். நாகை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார. இவரது மகன் சல்மான்கான் (15). கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
சித்திக்கின் தம்பி இஸ்மத் பாட்ஷாவீண் மகன் யாசர் அரபாத் (14), ஹனிபா (14) ஆகியோர் 9–ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை இவர்கள் 3 பேரும் கும்பகோணம் அருகே உள்ள மணஞ்சேரி பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டு தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் வருவதால் மாணவர்கள் 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர் அவர்களின் உடல்கள் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் ஈடுபட்டு உடலை மீட்டனர். தற்பொழுது பிரேத பரிசோதனைக்கா கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது. மருத்துவமணையில் இருந்து உடல்களை பெறுவதற்க்காக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது யாசின் அவர்கள் களத்தில் உள்ளார் .

தொடர்புக்கு : 9952838692

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)