முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 17: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின விழா வட்டரா அளவிலான பேச்சு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புஷ்பா தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு பேசினார், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் சுமதி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மிதுன், ஜான்ஜோசிக், வேம்பிரித்தியா, சத்யா, கலைமணிபாரதி, சாதம்உசேன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், சீனிவாசன், ராஜேஷ், ஹரிபாஸ்கர் மற்றும் சுகாதார செவிழியர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
Reported By
முஹம்மது இல்யாஸ். MBA. MA.JMC.
0 comments:
Post a Comment