முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 18: முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கூட்டம் தலைவர் ஜெகபர் அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் நாச்சிக்குளம் தாஹிர் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர செயலாளர் எஸ்.எம்.டி.நாசர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முத்துப்பேட்டை நகரம் முழுவதும் புதியதாக கொடி மரம் அமைத்து கொடி ஏற்றப்படும். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவரின் சிறப்பான பணிக்கு இந்த கூட்டம், பாராட்டை தெரிவிக்கிறது. உட்பட முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர துணைத் தலைவர்கள் வேல் துரை, குலாம்ரசூல், குமார் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவானந்த சாமி மற்றும் நிஜாம் மைதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
0 comments:
Post a Comment