முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!
Showing posts with label திருமணச்செய்தி. Show all posts
Showing posts with label திருமணச்செய்தி. Show all posts

நிக்காஹ்: "K.முஹம்மது முஹைதீன்"















முத்துப்பேட்டை, ஜனவரி 04: முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவை சேர்ந்த K.முஹம்மது முஹைதீன் அவர்களின் திருமண விழா கடந்த 25-12-2014 அன்று குத்பா பள்ளிவாசலில் மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .இவர்கள் ஈருலகிலும் வெற்றி பெற முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் மனமார வாழ்த்துகிறது. 

மணமகனை வாழ்த்த :0091--999 44 34 892

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: K. சாகுல் ஹமீது அழைப்பு...





முத்துப்பேட்டை,பிப்ரவரி 22: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ரபிவுல் ஆஹிர் பிறை 29,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 02-03-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை குத்பா பள்ளிவாசலில்  எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு:  K. சாகுல் ஹமீது 

மேலும் தொடர்புக்கு:

K. சாகுல் ஹமீது 


துபாய் தொடர்புக்கு: 00971 - 56 33 360 93..

முத்துப்பேட்டை தொடர்புக்கு: (விரைவில் தெரிவிக்கப்படும்)

நிக்காஹ்: "M. முஹம்மது யூனுஸ். MBA "








முத்துப்பேட்டை, பிப்ரவரி 18: மர்ஹூம் A.S. அபூபக்கர், மர்ஹும். M.M. முஹம்மது தம்பி மரைக்காயர் ஆகியோரது பேரனும்,  முஹம்மது முஹைதீன் அவர்களின் செல்வ புதல் வனுமாகிய M. முஹம்மது யூனுஸ். MBA மணாளருக்கும்,


மர்ஹும் சாகுல் ஹமீது, ஜனாப் MS, முஹம்மது அலியார் ஆகியோரின் பேத்தியும், LMS முஹம்மது முஹைதீன் ஆகியோரின் மகளுமாகிய M. ஹதீஜா BSC. மணாளிருக்கும்   

 ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டு ரபியுல் ஆஹீர் பிறை 15 அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 16-02-2014  ஞாயற்று    கிழமை அன்று முத்துப்பேட்டை கொய்யா மகாலில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து நண்பர்களும் மற்றும் உற்றார் உறவினர் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டு  வாழ்த்தினார்கள். மணமக்கள் எல்லாம் வளமும் பெற்று வளமோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக ஆமீன் ......


நிக்காஹ் "EK உமர் முக்தார் "











மர்ஹூம் தியாகி  EK முஹம்மது இஸ்மாயில்,மர்ஹூம் ஆலிம்  EK முஹம்மது தமீம் ஆகியோரின் பேரனும் ,EK மஹபூப் அலிகான் அவர்களின் செல்வ புதல்வனுமாகிய 

           EKM உமர்முக்தார் மணாளருக்கும்,

மர்ஹூம் UK உதுமான்கனி மற்றும் PSN சாகுல் ஹமீத் அவர்களின் பேத்தியுமாகிய 

            சுமையா பாத்திமா  மணாளிக்கும் 

கடந்த 29-12-13     ஞாயிறு அன்று முத்துப்பேட்டை கொய்யா மகாலில் மிக விமர்சையாக நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் M .தமீமுன் அன்சாரி ,வெல்பேர் பார்டியின் தமிழக தலைவர் SN .சிக்கந்தர் ,பத்திரிக்கையாளர் சுதாங்கன் ,மூன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் .ஷாநவாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .மணமக்கள் எல்லாம் வளமும் பெற்று வளமோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக ஆமீன் ......

திருமணச் செய்தி: முத்துப்பேட்டை கருப்பட்டி ஹாஜா இல்ல திருமண விழா அழைப்பிதல்...



முத்துப்பேட்டை, டிசம்பர் 10: இன்ஷா அல்லாஹ் வருகிற டிசம்பர் மாதம் 22.12.2013 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் திருச்சி, காஜாமலை நூர் மஹாலில் நிக்காஹ் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து மறுநாள் 23.12.2013 மதியம் 1.00 மணியளவில் முத்துப்பேட்டை, ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மதரஸாவில் வலிமா விருந்து நடைபெறயிருப்பதால் எனது உற்றார், உறவினர்கள் மற்றும் அனைத்து நண்பர்களும் தவறாது கலந்து கொண்டு எங்களின் ஈருலக வாழ்கைக்கு துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்..

بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

 என்றும் அன்புடன்..

-          K.A.N.ஹாஜா கமால் MBA
               ( கருப்பட்டி ஹாஜா )


நமது நிருபர்:

AKL அப்துல் ரஹ்மான்...

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: "தவ்சிஃப் அஹமது" அழைப்பு:



முத்துப்பேட்டை,நவம்பர் 09 : முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 முஹர்ரம் பிறை 27,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-12-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால்  நிச்சயித்த வண்ணம் திருத்துறைப்பூண்டி விஜிலா திருமண மஹாலில்  எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு: 

மேலும் தொடர்புக்கு:

பவுசுல் ரஹ்மான்: 
கிட்டங்கித் தெரு: 
தொலைபேசி எண்: 0091 7845 412 661

நமது நிருபர் 

AKLT. அப்துல் ரஹ்மான்.

கோலாகலமாக நடைபெற்ற கொய்யா இல்லத் திருமணம் - களைகட்டியது கொய்யா மஹால் !!























முத்துப்பேட்டை,செப்டம்பர் 09: செல்வந்தர் கொய்யா   NA ரெஜாக் ஹாஜியார் அவர்களின் பேரனும், நேனா மோட்டார்ஸ் உரிமையாளர் புது தெரு  ASN முஹம்மது இப்ராஹீம் A. ஹஜ் அவர்களின் செல்வப் புதல்வனுமாகிய,   மௌலவி M  முஹம்மது முஜாஹிதீன் அவர்களுக்கும், செல்வந்தர் கொய்யா ஹாஜி SMKN முஹம்மது தாவுது மரைக்காயர் அவர்களின் பேத்தியும், பூக்கொய்யா ஹாஜி செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களின், செல்வப் புதல்வியுமாகிய S.ரஹ்மத் நிஷா அவர்களுக்கும், கடந்த 01-09-2013 அன்று கொய்யா மஹாலில் நிக்காஹ் நடைபெற்றது. சரியாக காலை 11 மணிக்கு நிக்காஹ் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஜமால் பாய் அவர்களின் மகனார் மௌலவி இத்ரீஸ் ஆலிம்   சுமார் 40 நிமிடங்கள் சிறப்பு பயான் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் ,வர்த்தகர்கள் ,உலமா பெருமக்கள் ,பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . குறிப்பாக இந்தியன்  யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் mp , நாகை நாடாளுமன்ற  உறுப்பினர் AKS விஜயன் ,MP, தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோ. பழனிசாமி, பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் NR ரங்கராஜன், பட்டுக்கோட்டை நகரமன்ற உறுப்பினர் SR ஜவஹர்பாபு, திருத்துறைபூண்டி  சட்டமன்ற உறுப்பினர் கே. உலகநாதன், மற்றும் பலர் கலந்துகொண்டனர் .



வந்திருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பல்வேறு பணிகளின் காரணமாக திருமணம் முடிந்த பின்னரே வந்து கலந்துகொண்டனர் . 



ஆயிரக்கணக்கானோர் வருகை தந்ததால்  கொய்யா மஹால் நிரம்பி வழிந்தது. ஆண்களுக்காக மதிய விருந்து கொய்யா மஹாலிலும், பெண்களுக்காக மதிய விருந்து கொத்பா பள்ளிவாசலிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதனால் கூட்ட நெரிசலை தவிர்த்து தொய்வின்றி உணவு பரிமாற்றம் நடப்பதற்கு ஏதுவாய் அமைந்தது .மேலும் அனைவரது தாகம் தீர்க்க குளிர்பானமும் விநியோகிக்கப்பட்டது . இதற்காக பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட குளிர்பான கம்பெனி ,கொய்யா மஹால் நுழைவு வாயிலில் பிரத்தியேகமாக ஸ்டால் அமைத்திருந்தது முத்துப்பேட்டை திருமண வரலாற்றில்  புதுமை என  வந்திருந்தவர்கள் கூறினார்கள் . 



திருமண மாப்பிள்ளை அரபுகள் அணியக்கூடிய தோப்பு  மற்றும் தலையில் கருப்பு நிற தலைப்பா அணிந்து மிகவும் எளிய  தோற்றத்தில் காட்சியளித்தார். மணமக்கள் நீடூழி வாழ வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.



தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)