சென்னை, ஜனவரி 01: உங்கள் முன்னால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மிக பிரமாண்டமாக ஒரு நரேந்திர மோடி என்கிற ஒரு பலூன் நின்றுகொண்டிருக்கிறது. அதை,ஒற்றுமை என்ற சின்ன ஊசி எடுத்து குத்தி உடைக்க வேண்டும்.இந்த பலூனை நீங்கள் உடைக்க வில்லையென்றால்... நண்பர்களே ஒருவேளை,மோடி வந்து இந்தியாவில் உட்கார்ந்து விட்டால்,ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு அந்த கும்பலை நீங்கள் அரியாசனத்தை விட்டு இறக்கவே முடியாது!இதை நான் உங்களை அச்சப்படுத்த சொல்லவில்லை..நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' -இந்த ரீதியில் பேசிய தோழர் சண் டி.வி வீர பாண்டியன்,
நான் எந்த இயக்கத்தையும் சாராதவன்.ஊடகம் தான் எனது இயக்கம்.எனது நிகழ்ச்சியில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் வருகிறார்கள்;எனக்கு தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு.அது வேறு விஷயம்;ஆனாலும்,நீங்கள் சார்ந்திருக்கிற (முஸ்லிம்)சமூகம் என்ன கருதுகிறது;என்ன செய்ய வேண்டும்?உங்கள் முன் இருக்கும் கடமை என்ன என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்தியாவில்,குறிப்பாக தமிழகத்தில்,முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இருக்கின்ற பலவீனமாக நான் கருதுவது ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாதது தான்.
முஸ்லிம்களிடம் வலிமையான ஊடகங்கள் இல்லை;முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை குறித்த செய்திகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த முஸ்லிம்கள் ஊடகத்துறையில் பங்கெடுப்பது அவசியம்;என்றெல்லாம் எஸ்.டி.பி,ஐ கட்சி சென்னையில் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய பேச்சுக்களுக்காக சங்க பரிவாரம் அவர் மீது நாலாபுறங்களிலுமிருந்து தாக்குதல்களை துவங்கி இருக்கிறது.
கருத்தை கருத்து தளத்தில் எதிர்கொள்ளாமல்,அவரை நோக்கி ஆபாச அர்ச்சனைகளையும் துவங்கி இருக்கின்றன சங் கும்பல்.பொதுவாக முஸ்லிம் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும்,அனைத்து தரப்பினரிடமும் இயல்பாக பழகக்கூடியவர் தோழர்.வீர பாண்டியன்.தமிழ்அமைப்புகள்,இடதுசாரிகள்,சமூகவியலாளர்கள்,பி.ஜே.பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்பினர்,பத்திரிகையாளர்கள் என அனைவரோடும் எந்த வேறுபாடும் பாராமல் நட்பு பாராட்டுபவர்.தான் இன்ன சமூகத்தின் ஆதரவாளன் என்கிற வண்ணப்பூச்சுக்கு உட்படுத்திக்கொள்வதை தவிர்த்து வருபவர்.இவை அவர் சண் டி.வி.யில் அவர் நடத்தும் நிகழ்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது;தமது நடுநிலை தன்மை சந்தேகத்திற்குள்லாகிவிடக்கூடாது என்பதில் அவர் எடுக்கும் கவனம் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.இதை புரிந்தவர்கள் தான் தமிழக ஹிந்துத்துவா அமைப்பினரும்.ஆயினும்,அவர் முஸ்லிம்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தியதையும்,மோடியை பற்றி விமர்சனம் செய்ததையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் மீது பாய்ந்து பிறாண்டுகிறார்கள்.
சண் டி.வி நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள சங் கும்பல் அந்த டி.வி நிர்வாகத்தை சந்தித்து,வீர வீர பாண்டியனை நீக்கவில்லையென்றால்,சன் டி.வி நிகழ்ச்சிகளில் ஹிந்துத்துவாக்கள் யாரும் பங்கெடுக்க மாட்டார்கள் என அந்த நிர்வாகத்தை நிர்பந்தப்படுத்தியுள்ள செய்தி,ஹிந்துத்துவாவினரின் சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கு சான்று மட்டுமல்ல அவர்களின் வெறித்தனத்திற்கும்,குரூர சிந்தனைக்கும் சான்றுகள் தான்.
சண் டி.வி நிர்வாகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று வந்தவர் யார் தெரியுமா? தோழர் வீர பாண்டியன் நடத்தும் நிகழ்ச்சிக்கு, தோழர்.வீர பாண்டியனால்-முஸ்லிம்களைவிட,இடது சாரிகளை விட,காங்கிரஸ் காரர்களை விட சமூகவியலாலர்களை விட,மனித உரிமை ஆர்வலர்களை விட அதிகமாக அழைக்கப்படும் ப.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.டி.ராகவன் தான்.(இது குறித்து நேரடியாகவே தோழர் வீர பாண்டியனிடம் நான் விமர்சனம் வைத்திருக்கிறேன்.)நிகழ்ச்சி முடிந்த பின்பும், இயல்பாக ராகவனிடம் பேசிக்கொண்டிருப்பார் வீர பாண்டியன்.அந்த ராகவன் தான் இன்று இவருக்கு எதிரான கும்பலுக்கு தலைமை தாங்கி வந்திருக்கிறார்.
இந்த விஷயத்தில் முஸ்லிம் அமைப்புகள் உள்பட பல தரப்புகள் மீது வருத்தம் ஏற்படுகிறது.ஒரு ஊடகவியலாளர் பகிரங்கமாக மிரட்டப்பட்டிருக்கிறார்,அவரை பனி நீக்கம் செய்யவேண்டும் என நிர்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது;ஆபாச தொலைபேசி தாக்குதல்கள் நடத்தப் பட்டிருக்கிறது; கருத்து சுதந்திரம்,ஜனநாயகத்தன்மை மீதெல்லாம் தாக்குதல் தொடுக்கப் பட்டிருக்கிறது ஆயினும் ஊடகங்கள் 'நமக்கென்ன' என அசாத்திய அமைதி காக்கின்றன.
இடது சாரிகளோ,தமிழ் அமைப்புகளோ,இஸ்லாமிய அமைப்புகளோ உரிய வகையில் இதை கண்டிக்க முன் வரவில்லை.
கவுண்டர் ஆச்ஷனாக,ஹிந்துத்துவாவினரின் நெருக்கடிக்கு பணிந்து வீர பாண்டியனின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யும் நிலை வந்தால்,ஹிந்துத்துவாவினர் கலந்து கொள்ளும் நிகழ்சிகள் மட்டுமல்ல;சன் டி.வியின் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கூட நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்று அறிவிக்க வேண்டியவர்கள் மௌனம் காக்கிறார்கள்;அவ்வளவு கூட வேண்டாம்,குறைந்த பட்சம் ஒரு கன்னடன அறிக்கை கூட வெளியிடவில்லையே.முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே கருத்து சுதந்திரம் பேசும் எழுத்தாளர்கள்/கவிஞர்கள் கூட்டமைப்பு எல்லாம் எங்கே போயின ? குறிப்பிடும் படியாக,இந்த விஷயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க வில்லையே ஏன்?இதை நாம் கண்டித்துதானே ஆகவேண்டும்?.
முஸ்லிம்கள் விஷயத்தில் கருத்து சுதந்திரம்,படைப்பு சுதந்திரம்,புடலங்காய் என்றெல்லாம் கொந்தளிக்கும் ஊடகங்கள், சக ஊடகவியலாளரின் கருத்து சுதந்திரம் மீதும்,ஜனநாயக உரிமை மீதும் பட்டவர்த்தனமாக தாக்குதல் நடந்ததை மெளனமாக அங்கீகரிப்பது ஊடகங்களின் கமர்ஷியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி என்பதா?நாங்களும் காவிக்கு மாறிட்டோம் என்று சொல்வதாக எடுத்துக்கொள்வதா?
எதுவாக இருந்தாலும் 'நெருக்கடி கொடுக்க எங்களுக்கும் தெரியும்' என்பதை இடது சாரிகள்,தமிழ் அமைப்புகள், ஏனைய பிற அமைப்புகளைக் காட்டிலும் முஸ்லிம் அமைப்புகள் காட்டியிருக்க வேண்டிய தருணம் அது !
திரு.வீரபாண்டியன் அவர்கள் கலந்துகொண்ட இயக்கத்தின் அல்லது கட்சியின் பெயரைக்கூட இது குறித்த செய்திகளில் வெளியிட மறுக்கும் முஸ்லிம்களின் உரிமையை நாட்ட புறப்பட்ட முஸ்லிம் அமைப்பின் வஞ்சக புத்தியை என்ன வென்பது இவர்கள் எப்படி ஒற்றுமையாக குரல்கொடுப்பார்கள்?
ReplyDeleteஇஸ்லாமியர்களின் எதிராக எப்போதும் ச்ன்குகும்பம், கருணாநிதி குடும்பங்கள் அனைத்தும் எதிரிகள் தான்...
ReplyDeleteநண்பர் வீரப்பாண்டி அவர்களே கவலை வேண்டாம்... உங்களை இழந்த சன் டிவி அதிகமாக வருத்தப்படும்.....
ReplyDeleteமிகவும் அருமையான காணொளியை வெளியிட்ட முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வலைதள நிர்வாகத்தினருக்கு நன்றி!
ReplyDeleteஇன்றைய உலகில் முஸ்லிம்களுக்கு ஊடகத் துறை என்பது மிகவும் இன்றியமையாதது என்பதை அழகாக விளக்கியுள்ளார் சன் டிவி வீரபாண்டியன்..
(இன்ஷா அல்லாஹ்), அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் என்னும் நேர்வழியை கொடுப்பானாக.. ஆமீன்!
அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் என்னும் நேர்வழியை கொடுப்பானாக.. ஆமீன்
ReplyDelete