முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

17 மாதங்களாக ரூமில் அடைத்துவைத்து முஸ்லிம் மாணவி கற்பழிப்பு :ஹைதராபாத்தில் பயங்கரம்


ஹைதராபாத், செப்டம்பர் 22: ஹைதராபாத் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவி ஒருவரை (பெயர் வெளியிடப்படவில்லை) அந்த கல்லூரியில் கேன்டீன் நடத்தி வரும் முதலாளி கடத்தி சுமார் 17 மாதங்கள் பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.அம்மாணவி அவனிடமிருந்து தப்பித்து வந்து காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது அவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.
அது குறித்த போலிசில் அம்மாணவி அளித்துள்ள புகார் பற்றிய விபரம் வருமாறு…


ஹைதராபாத் நகரின் டி.ஆர்.ஆர் என்ற பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று கொண்டிருந்த இந்த முஸ்லிம் மாணவி கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ம் நாள் அந்த கல்லூரியின் கேண்டீனில் உணவருந்த சென்ற வேளையில்,அந்த கேன்டீன் முதலாளி சத்யபிரகாஷ் சிங் என்பவன் அவர் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்தை கலந்து மயக்கமுறச் செய்து அம்மாணவியை கடத்தி சென்றுள்ளான்.ரகசிய இடங்களில் மறைத்து வைத்து இவரை சுமார் 17 மாதங்களாக சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியும் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.


தாம் சீரழிக்கப்படுவதை கண்டு அழுது புலம்பிய இம்மாணவிக்கு உதவி செய்வார் யாருமில்லாத நிலையில் தொடர்ந்து அந்த மாணவியை கொடுமைப்படுத்துவதிலும் பாலியல் ரீதியாக சீரழிப்பதிலும் தான் அவன் குறியாக இருந்துள்ளான். சில மாதங்கள் கழித்து இம்மாணவி அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வீட்டு முதலாளியின் நெருக்கடியை தொடர்ந்து இந்த மாணவியை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கிறான்.
முஸ்லிம் என்பதால் தான் உன்னை சீரழிக்கிறேன்..

தொடர்ந்து பாலியல் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருந்த அவன் எல்லா முஸ்லிம் பெண்களையும் இது போலவே நான் சீரழிப்பேன்.நான் சீரழிக்கும் ஐந்தாவது முஸ்லிம் பெண் தான் நீ என்றும்,மற்ற பெண்களையும் உன்னைப் போலவே சீரழித்து கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டேன் என்றும் அடிக்கடி கூறியிருக்கிறான். தமது தந்தை பாதுகாப்புத் துறையில் வேலை பார்ப்பதாகவும் தமது சகோதரன் ஒரு கிரிமினல் வழக்கறிஞர் என்பதாலும் இத்தகைய குற்றச் செயல்களுக்காக சட்டத்தின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தப்பி வருவதாக சொல்லியிருக்கிறான்.

பல்வேறு நெருக்கடிகளை,தாண்டி கடத்தப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் மே 2012ல் தனது அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் கடத்தப்பட்டு சீரழிக்கப்படுவதை பற்றி கூறியிருக்கிறார்.இதனையடுத்து அவரது குடும்பத்தினர் இது பற்றி காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர்.ஆயினும் இந்த புகார் குறித்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இம்மாணவி அவனது செல்போன் மூலமாக தனது அம்மாவை தொடர்பு கொள்ள முயன்ற போது நீ என்ன தான் முயன்றாலும் காவல் துறை என்னை அழைத்து செல்லும்.ஆனால் என்னை உடனடியாக வெளியே அனுப்பி விடுவார்கள்.தெலுங்கு தேச கட்சியின் பிரமுகரும் ஹைதராபாத் நகர முன்னாள் மேயருமான தீகலா கிருஷ்னா ரெட்டி தம்மை காப்பாற்றி விடுவார் என்று சொல்லியிருக்கிறான்.இந்த ரெட்டி தான் அந்த கல்லூரியின் உரிமையாளரும் கூட.

காவல் துறையினரும் கூட….
ஒரு முறை இந்த மாணவி தடுத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை பற்றி அக்கம் பக்கத்தில் இருப்போர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரை விசாரிப்பதற்காக அந்த வீட்டிற்கு வந்த போலிசார் மூன்று பேரும் இம்மாணவியை சீரழித்த கொடுமையும் நடந்திருக்கிறது.அந்த போலிசாரும் அவனுக்கு வேண்டப் பட்டவர்கள் என்கிறார் அந்த மாணவி.


பாதிக்கப்பட்ட அந்த மாணவி காவல்துறையிடம் நேரில் புகார் அளித்த போது…

இதனையைடுத்து அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.உடனே ஒரு மருத்துவமணைக்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைத்திருக்கிறான்.அந்த மருத்துவமணை டாக்டர்களிடமும் ஊழியர்களிடமும் தனது நிலையை விளக்கியுள்ளார்; அந்த மாணவி.அவர்கள் கூட இந்த அபலை மாணவிக்கு உதவத் தயாராக இல்லை.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 ம் தேதி குடித்து விட்டு வீட்டைப் பூட்டாமல் அப்படியே மயங்கி இருக்கிறான்.இதனை பயன்படுத்திக் கொண்டு அம்மாணவி அவன் பிடியிலிருந்து தப்பி வந்து தற்போது போலிசில் புகார் அளித்துள்ளார்.


இப்புகாரையடுத்து அந்த மிருகத்தை காவல்துறை கைது செய்து பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.(கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.இந் சட்டத்தின் படி அந்த டெல்லி மானவியை சீரழித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது)


இது குறித்து ஆந்திர மாநில மனிதஉரிமை ஆணையம் காவல்துறைத் தலைவர் மற்றும் வருவாய்துறைக்கும் உரிய நடவடிக்கை எடுத்து விசாரனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு பொருளாதார உதவி செய்யுமாறு ஹைதராபாத் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணைய தலைவர் அம்ஜதுல்லா கான் உத்தரவிட்டுள்ளார்.


டெல்லியிலும்,மும்பையிலும் பெண்கள் சீரழிக்கப்பட்டால் அது குறித்து முழு தகவல்களையும் அவ்வப்போது பதிவு செய்து வரும் ஊடகங்கள் சுமார் 17 மாத காலங்கள் முஸ்லிம் என்பதால் கடத்தி பாலியல் சீரழிவுக்கு உட்படுத்தப் பட்ட விவகாரத்தை நமது இந்திய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன.இந்த விரிவான தகவல் கூட துபையிலிருந்து வெளிவரும் கல்ஃப் நியூஸ் ஆங்கில ஏட்டின் இணைய தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை.
முஸ்லிம்களை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் அனுகும் இந்த விபச்சார ஊடகங்கள் தமது செயலை திருத்திக் கொள்ள முன் வரவேண்டும்.

   தொகுப்பு    :ஜே .ஷேக்பரீத்

மோடியை இந்துக்கள் ஆதரிக்கவில்லை :மனிதநேய மக்கள் கட்சி கருத்து !!

மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு நாடெங்கிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது!

பலர் மகிழ்ச்சியடைகிறார்கள்! பலர் கவலைப்படுகிறார்கள்! பலர் பதறுகிறார்கள்! நாடெங்கிலும் வெவ்வேறு விதமான உணர்வுகள் பிரதிபலிக்கிறது என்பது உண்மை!

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு! வெறித்தனம் கொண்டவர்களை இந்தியர்கள் அங்கீகரிப்பதில்லை!

அரசியல் தெளிவுள்ளவர்கள் நிதானமாகவே இருக்கிறார்கள். காரணம் பாஜக நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றப் போவதில்லை! 200 இடங்களை நெருங்குவதே ஒரு பெரும் போராட்டமாக இருக்கும் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்!

அந்த 200 இடங்களை ஒருவேளை நெருங்கினாலும், அத்வானி ஆதரவு எம்.பி.க்கள் கலகம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. ம.பி.யின் பாஜக முதல்வர் சிவ்ராஜ்சிங் சவ்கான், அத்வானியின் ஆதரவாளர். அவர்தான் அதிகமாக எம்.பி.க்களை பாஜகவுக்கு வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது பிராந்தியக் கட்சிகளில் மராட்டியத்தில் சிவசேனாவை மட்டுமே பாஜக நம்பியுள்ளது.

மோடி பிரதமர் வேட்பாளர் என்றதும் ஜெயலலிதாவே சற்று அச்சத்தில்தான் இருக்கிறார். அதனால்தான் ‘சோ’ அவரை அவசரமாக சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

‘மோடி‘க்கு ஆதரவாக சில ஊடகங்கள்தான் மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. ‘நன்றி’ விசுவாசம் அவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது போல? (பணம் பத்தும் செய்யும்).

ஒரு விளக்கு அணைவதற்கு முன்பு வேகமாக எரியும்! அதன் ஒளி வடிவம் ஆகும்! பிறகு அணைந்து விடும்! மோ(ச)டி வித்தைகளின் இறுதி நிலை அப்படித்தான் ஆகும் என்பதை விரைவில் நடக்கவிருக்கும் 5 வடமாநில தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!

அதே நேரம் காங்கிரஸ் கட்சி தனது தூக்கத்தைக் கலைத்து வெளிவர வேண்டும்! 81 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது, நாட்டின் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களுக்கு 5 மடங்கு நட்டஈடு வழங்குவது, சாலையோர வியாபாரிகளின் வாழ்வுரிமையைக் காத்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வழங்கியது, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தது போன்ற நல்ல சாதனைகளை மக்களிடம் எடுத்துச்செல்ல பிரச்சாரக் குழுக்களை அமைத்து செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது!

குறிப்பாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகவும், பிரியங்கா காந்தியை பிரச்சாரக்குழு தலைவராகவும் முன்னிறுத்தினால் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புற மக்களும் காங்கிரஸை நோக்கி திரள்வார்கள்!

மோடிக்கு நகர்ப்புற மக்களுக்கு மத்தியில்தான் பரபரப்பு இருக்கிறது. ஆனால் நேரு குடும்பத்திற்குத்தான் கிராமப்புறங்களிலும் செல்வாக்கு இருக்கிறது.

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்திலும், ஈழத்தமிழர்களுக்கான துரோகம் விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டால் அதன் வெற்றி பிரகாசமாகும்!

இன்னும் காலமிருக்கிறது! மோ(ச)டியை முனை மழுங்கச் செய்யும் மாநில கட்சிகளுடனான உறவை அக்கட்சி வலுப்படுத்திக் கொள்வதும் நலம் பயக்கும்!
அதேசமயம், சிறுபான்மையினரும், நலிந்த பிரிவு மக்களும் மோ(ச)டியைக் கண்டு பதறத் தேவையில்லை.

இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் உணர்வோடும், சகோதரத்துவத்தோடும் நம்மோடுதான் உள்ளார்கள்!

மோ(ச)டி அலை வீசவில்லை! வீசுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது!


ராஜபக்ஷே சந்திக்கும் அதே நெருக்கடிகளை மோ(ச)டியும் சந்திக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!

அவரை முன்னிறுத்துவது அரசியல் பேரழிவு என அத்வானியே கூறியுள்ளார்! அது யாருடைய அரசியல் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

எனவே சமூக ஊடகங்களில் பணியாற்றும் மத நல்லிணக்க மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் குஜராத்தின் கிராமப்புற நிலை குறித்தும், அங்கு மோடியின் தவறான நிர்வாகக் குறைகள் குறித்து புள்ளி விபரங்களைக் கணக்கெடுத்து, ஒப்பீட்டளவில் மோடி, பீஹாரின் நிதிஷ்குமாரின் சாதனைகளை விட பின்தங்கியுள்ள உண்மைகளை அம்பலப்படுத்திட வேண்டும்!

மாறாக, தனிநபர் விமர்சனம் மூலம் மோடிக்கு அனுதாபத்தையோ, விளம்பரத்தையோ ஏற்படுத்திக் கொடுத்திடக் கூடாது!

காரணம் மோடி அதைத்தான் விரும்புகிறார்.



M.தமிமுன் அன்சாரி ,
 மாநில பொது செயலாளர்
 மனிதநேய மக்கள் கட்சி ! !

3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை..


பஹ்ரைன், செப்டம்பர் 19: 3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை

தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட். இவரது மனைவி அனிஷா. பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார்.


பஹ்ரைன் நாட்டுக்காரர் ஒருவருக்கு கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை வாங்கி தரும் தரகராக சிக்கந்தர் சாம்ராட்டும் பஹ்ரைனில் தங்கி தொழில் செய்து வந்தார்.

இவரது தொழில் கூட்டாளி சுமார் 65 ஆயிரம் பஹ்ரைன் தினார்களை மோசடி செய்துவிட்டார். அதனால், 2010ம் ஆண்டு பிறந்த மகளுக்கு பணம் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் வாங்க முடியாமல் போனது.

இதற்கிடையில், மனைவியின் நர்ஸ் வேலைக்கான ஒப்பந்தமும் காலாவதியாகி விட்டது. குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத சாம்ராட், மனைவி, பிள்ளைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட முடிவு செய்தார்.

கடைசி மகளுக்கு பாஸ்போர்ட் எடுக்காததால் அவளை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு மோசடி செய்த பஹ்ரைன் ஆசாமி மீது கோர்ட்டில் வழக்கு போட்டு விட்டு நீதி தேவனின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். வக்கீலுக்கு கொடுக்க பணம் இல்லாததால் பல வக்கீல்கள் இவரது வழக்கில் ஆஜராகாமல் இழுத்தடித்துக்கொண்டு வருகின்றனர்.

குடித்தனம் இருக்கும் வீட்டின் வாடகை பாக்கி ஆயிரம் தினாருக்கு மேல் ஏறிவிட்ட நிலையில் 3 வயது மகளை பார்த்துகொள்ள யாரும் இல்லாததால் வேலைக்கு கூட செல்லாமல் பூங்கா, மசூதி, கார் நிறுத்துமிடம் என கடந்த 6 மாத காலமாக சரியான உணவு இல்லாமல் சிக்கந்தர் வெட்டவெளியில் மகளுடன் காலம் கடத்தி வருகிறார்.

இந்திய தூதரகம் அங்கு என்ன தூங்கிகொண்டா இருக்கு? இவருக்கு உதவ முன் வரவேண்டும்.



முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம்: பாதையை முற்றிலும் மாற்றுவதே நிறந்தர தீர்வு! TNTJ கூட்டத்தில் முடிவு.



முத்துப்பேட்டை, செப்டம்பர் 19: முத்துப்பேட்டையில் நடைபெற்ற  வினாயகர் ஊர்வலத்தின் போது விஷமிகள் ஒரு வீட்டின்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது சம்மந்தமாகவும் ஊர்வலத்திற்க்கு அனுமதி கொடுத்த நேரத்தில் வராமல் வேண்டுமென்றே இரவு வேளையில் ஊர்வலம் வந்தது சம்மந்தமாகவும் இதே நிலை வருங்காலங்களில் தொடராமல் இருக்க என்ன செய்யலாம் என முடிவு எடுக்க முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் கிளைகளின் ஒருங்கினைந்த கூட்டம் ரஹ்மத் பள்ளிவாசலில் நடந்தது.

பல வருடங்களாக இந்த பிரச்சனை நீடித்துவர காரனம் இந்துக்கள் அதிகமக வாழும் பகுதிக்குள் ஊர்வல பாதையை அமைத்து கொள்ளாமல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிக்குள் பிரச்சனை செய்ய என்றே ஊர்வலம் வருவதுதான் காரனம் என்பது தெளிவாக தெறிகிரது.

நாளைக்கு முஸ்லிம்கள் எதாவது ஒரு ஊர்வலம் எனும் பேரில் இந்து பகுதிக்குள்தான் போவோம் என சொன்னால் எப்படி சட்டம் ஒழுங்கை காரனம் காட்டி அனுமதி கொடுக்க மாட்டார்களோ அதே போல இவர்கள் வினாயகரை தூக்கிகொண்டு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்குள் வர அனுமதிக்ககூடாது.

எத்தனையோ தடவை எத்தனையோ வாக்குறுதிகள் அவர்களிடம் பெற்றுகொண்டு அனுமதி கொடுத்தும் அதை அவர்கள் கொஞ்சம்கூட மதிக்காமல் மீறியே வருகிறார்கள்.

காவல்துறையும் இதற்க்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இனி அடுத்தவருடம் நடக்காது என நம்மை சமாதனபடுத்துவதுதான் வாடிக்கையாகி விட்டது.

இதனால் இனிவரும் காலங்களில் மக்கள் அமைதியாக வாழ  ஊர்வல பாதையை மாற்றி அமைப்பதுதான் ஒரே வழி என கருதுகிறோம்.

ஊர்வல நேரத்தை காலை 10 மனிமுதல் பகல் 2 மனிக்குள்ளாகவும்  மன்னார்குடி ரோடு வழியாக ECR ரோட்டில் போக பாதையை மாற்றி அனுமதி கொடுக்கும்படியும்,நேற்று தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் மனு கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் நகல்  டிஎஸ்பி,  எஸ்பி,  டிஐஜி, ஐஜி,  இன்னும் முதலமைச்சரின் தனிபிறிவு அதிகாரி ஆகியோருக்கும் தவ்ஹித்ஜமாத்  மாவட்ட,  மாநில தலமைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)