ஹைதராபாத், செப்டம்பர் 22: ஹைதராபாத் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவி ஒருவரை (பெயர் வெளியிடப்படவில்லை) அந்த கல்லூரியில் கேன்டீன் நடத்தி வரும் முதலாளி கடத்தி சுமார் 17 மாதங்கள் பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.அம்மாணவி அவனிடமிருந்து தப்பித்து வந்து காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது அவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.
அது குறித்த போலிசில் அம்மாணவி அளித்துள்ள புகார் பற்றிய விபரம் வருமாறு…
ஹைதராபாத் நகரின் டி.ஆர்.ஆர் என்ற பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று கொண்டிருந்த இந்த முஸ்லிம் மாணவி கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ம் நாள் அந்த கல்லூரியின் கேண்டீனில் உணவருந்த சென்ற வேளையில்,அந்த கேன்டீன் முதலாளி சத்யபிரகாஷ் சிங் என்பவன் அவர் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்தை கலந்து மயக்கமுறச் செய்து அம்மாணவியை கடத்தி சென்றுள்ளான்.ரகசிய இடங்களில் மறைத்து வைத்து இவரை சுமார் 17 மாதங்களாக சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியும் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.
தாம் சீரழிக்கப்படுவதை கண்டு அழுது புலம்பிய இம்மாணவிக்கு உதவி செய்வார் யாருமில்லாத நிலையில் தொடர்ந்து அந்த மாணவியை கொடுமைப்படுத்துவதிலும் பாலியல் ரீதியாக சீரழிப்பதிலும் தான் அவன் குறியாக இருந்துள்ளான். சில மாதங்கள் கழித்து இம்மாணவி அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வீட்டு முதலாளியின் நெருக்கடியை தொடர்ந்து இந்த மாணவியை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கிறான்.
முஸ்லிம் என்பதால் தான் உன்னை சீரழிக்கிறேன்..
தொடர்ந்து பாலியல் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருந்த அவன் எல்லா முஸ்லிம் பெண்களையும் இது போலவே நான் சீரழிப்பேன்.நான் சீரழிக்கும் ஐந்தாவது முஸ்லிம் பெண் தான் நீ என்றும்,மற்ற பெண்களையும் உன்னைப் போலவே சீரழித்து கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டேன் என்றும் அடிக்கடி கூறியிருக்கிறான். தமது தந்தை பாதுகாப்புத் துறையில் வேலை பார்ப்பதாகவும் தமது சகோதரன் ஒரு கிரிமினல் வழக்கறிஞர் என்பதாலும் இத்தகைய குற்றச் செயல்களுக்காக சட்டத்தின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தப்பி வருவதாக சொல்லியிருக்கிறான்.
பல்வேறு நெருக்கடிகளை,தாண்டி கடத்தப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் மே 2012ல் தனது அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் கடத்தப்பட்டு சீரழிக்கப்படுவதை பற்றி கூறியிருக்கிறார்.இதனையடுத்து அவரது குடும்பத்தினர் இது பற்றி காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர்.ஆயினும் இந்த புகார் குறித்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இம்மாணவி அவனது செல்போன் மூலமாக தனது அம்மாவை தொடர்பு கொள்ள முயன்ற போது நீ என்ன தான் முயன்றாலும் காவல் துறை என்னை அழைத்து செல்லும்.ஆனால் என்னை உடனடியாக வெளியே அனுப்பி விடுவார்கள்.தெலுங்கு தேச கட்சியின் பிரமுகரும் ஹைதராபாத் நகர முன்னாள் மேயருமான தீகலா கிருஷ்னா ரெட்டி தம்மை காப்பாற்றி விடுவார் என்று சொல்லியிருக்கிறான்.இந்த ரெட்டி தான் அந்த கல்லூரியின் உரிமையாளரும் கூட.
காவல் துறையினரும் கூட….
ஒரு முறை இந்த மாணவி தடுத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை பற்றி அக்கம் பக்கத்தில் இருப்போர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரை விசாரிப்பதற்காக அந்த வீட்டிற்கு வந்த போலிசார் மூன்று பேரும் இம்மாணவியை சீரழித்த கொடுமையும் நடந்திருக்கிறது.அந்த போலிசாரும் அவனுக்கு வேண்டப் பட்டவர்கள் என்கிறார் அந்த மாணவி.
பாதிக்கப்பட்ட அந்த மாணவி காவல்துறையிடம் நேரில் புகார் அளித்த போது…
இதனையைடுத்து அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.உடனே ஒரு மருத்துவமணைக்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைத்திருக்கிறான்.அந்த மருத்துவமணை டாக்டர்களிடமும் ஊழியர்களிடமும் தனது நிலையை விளக்கியுள்ளார்; அந்த மாணவி.அவர்கள் கூட இந்த அபலை மாணவிக்கு உதவத் தயாராக இல்லை.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 ம் தேதி குடித்து விட்டு வீட்டைப் பூட்டாமல் அப்படியே மயங்கி இருக்கிறான்.இதனை பயன்படுத்திக் கொண்டு அம்மாணவி அவன் பிடியிலிருந்து தப்பி வந்து தற்போது போலிசில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரையடுத்து அந்த மிருகத்தை காவல்துறை கைது செய்து பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.(கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.இந் சட்டத்தின் படி அந்த டெல்லி மானவியை சீரழித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது)
இது குறித்து ஆந்திர மாநில மனிதஉரிமை ஆணையம் காவல்துறைத் தலைவர் மற்றும் வருவாய்துறைக்கும் உரிய நடவடிக்கை எடுத்து விசாரனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு பொருளாதார உதவி செய்யுமாறு ஹைதராபாத் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணைய தலைவர் அம்ஜதுல்லா கான் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியிலும்,மும்பையிலும் பெண்கள் சீரழிக்கப்பட்டால் அது குறித்து முழு தகவல்களையும் அவ்வப்போது பதிவு செய்து வரும் ஊடகங்கள் சுமார் 17 மாத காலங்கள் முஸ்லிம் என்பதால் கடத்தி பாலியல் சீரழிவுக்கு உட்படுத்தப் பட்ட விவகாரத்தை நமது இந்திய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன.இந்த விரிவான தகவல் கூட துபையிலிருந்து வெளிவரும் கல்ஃப் நியூஸ் ஆங்கில ஏட்டின் இணைய தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை.
முஸ்லிம்களை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் அனுகும் இந்த விபச்சார ஊடகங்கள் தமது செயலை திருத்திக் கொள்ள முன் வரவேண்டும்.
முஸ்லிம்களை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் அனுகும் இந்த விபச்சார ஊடகங்கள் தமது செயலை திருத்திக் கொள்ள முன் வரவேண்டும்.
தொகுப்பு :ஜே .ஷேக்பரீத்
0 comments:
Post a Comment