முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!
Showing posts with label முத்துப்பேட்டைச் செய்திகள். Show all posts
Showing posts with label முத்துப்பேட்டைச் செய்திகள். Show all posts

முத்துப்பேட்டை நகரம் பல்வேறு வசதிகள் இருந்தும் ஏன் தாலுக்காவாக மாறவில்லை, அரசியல் வாதிகளின் சூழ்ச்சியா?








முத்துபேட்டை, பிப்ரவரி 04/2016: திருவாரூர் மாவட்டதில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த சிறிய நகரம். சென்னையிலிருந்து சுமார் 350 கி.மீ தெற்கே அமைந்துள்ளது.
இவ்வூரில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் மற்றும் சதுப்புநில பகுதிகள்(Mangrove Forest) எனும் அழகிய சுற்றுலா தலம் இன்னும் வெளியுலகிற்கு தெரியாமலே உள்ள ஒரு அற்புதமான பொக்கிஷம். சொல்லப்போனால் இப்பகுதியில் உள்ள பலரும்கூட இங்கு சென்றுவந்ததில்லை எனலாம்.
பாமனி ஆறு, கோரை ஆறு, கிளைதாங்கி ஆறு, மரைக்கா கோரையாறு என பல்வேறு ஆறுகள் இப்பகுதியில் வங்க கடலில் (பாக் ஜலசந்தியில்) கலக்கும் இடமாகும். இந்த ஆறுகள் உருவாக்கியுள்ள லகூன் எனும் பகுதியும், 
இங்கு அமைந்துள்ள சதுப்பு நில காடுகளும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இப்பகுதியை மேலும் ரம்மியமாக்குகிறது.

இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் எளிதில் செல்லும் வண்ணம் சுந்தரம் பாலம் அருகேயோ அல்லது வேறு இடத்திலோ பிச்சாவரம், முட்டுக்காடு போன்ற இடங்களில் உள்ளது போன்ற படகுத்துறைகளைஅமைத்து தகுந்த வசதிகளை தமிழ்நாடு அரசும் சுற்றுலா துறையும் ஏற்படுத்தினால் கண்டிப்பாக இது அனைவரும் விரும்பும் ஒரு சுற்றுலா ஸ்தலமாக மாறும்.
தில்லைவிளாகம் ஸ்ரீராமர் கோவில் மற்றும் கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் போன்ற சரித்திர புகழ்பெற்ற ஆலயங்கள் அருகில் உள்ள முக்கிய இந்து ஆலயங்கள். ஜாம்பவனோடை தர்கா நாகூர் தர்காவைவிட பழமை வாய்ந்தது. இங்கு தினமும் ஏராளமான முஸ்லிம் யாத்திரீகர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்தும் வருகின்றனர்.
இவ்வூருக்கு செல்லும்போது இங்குள்ள ஐயர் கடை அல்வாவும் நாகூர் ஆண்டவர் கடை தம்ரூட் அல்வாவவையும் ருசிக்க மறக்காதீர்கள். திருநெல்வேலி அல்வாவைவிட ருசியானது. அதேபோல இங்குள்ள பரோட்டா கடைகளின் பரோட்டா சுவையைவிட தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடைக்காது (மதுரை மற்றும் விருதுநகர் உட்பட) என்று சவால் விட்டு சொல்லலாம்.
வேளாங்கன்னி, நாகூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவாரூர், திருத்துறைபூண்டி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் போண்றவை அருகில் உள்ள முக்கிய நகரங்கள்.
இவ்வளவு பெருமைவாய்ந்த இவ்வூரை இன்னும் தாலுகாவாக மாற்றுவதற்கும், இங்குள்ள சுற்றுலா தளத்தை உலக மக்களுக்கு கொண்டு சேர்கவும், மூடப்பட்டுள்ள காரைகுடி - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நிறைவேறுமா?

நன்றி

முத்துபேட்டை, ராஜேஷ்

முத்துப்பேட்டையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஓட்டலை காலி செய்யக் கோரிஜமாத் பிரமுகர்கள் ஓட்டலுக்குள் உள்ளிருப்பு போராட்டம்...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 03/2016: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே புதுப்பள்ளி வாசல் ஒன்று உள்ளது. இதன் அருகே இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 27 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த திரியெம் அஜீஸ் என்பவர் திரியெம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் 15 வருடங்களுக்கு முன்பு தனது ஓட்டலை திரியெம் அஜீஸ் அவரின் உறவினரான பாக்கம் கோட்டூரைச் சேர்ந்த ஹாஜா மைதீன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு ஹாஜா மைதீன் நடத்தி வந்தார். இந்த நிலையில் புதுப்பள்ளி வாசல் நிர்வாகம் ஓட்டல் இருக்கும் இடம் மற்றும் அதன் அருகில் உள்ள காலி இடத்தில் பெண்கள் மதரசா கட்ட முடிவு செய்தனர். அதன்படி ஓட்டல் உரிமையாளர் ஹாஜா மைதீனிடம் தனது ஓட்டலை காலி செய்யும் படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளிவாசல் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். 

அதற்கு ஓட்டல் உரிமையாளர் 3 மாதம் கால அவகாசம் கேட்டதால் கொடுக்கப்பட்டது. அதனால் சென்ற 31-ம் தேதி ஓட்டலை காலி செய்து கொள்வதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் ஹாஜா மைதீன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓட்டலை காலி செய்ய மறுத்து வக்கீல் நோட்டீஸ் ஒன்றை பள்ளி வாசல் நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளார். இதனால் பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 31-ம் தேதி ஓட்டலை காலி செய்யாமல் நேற்றும் ஹாஜா மைதீன் வழக்கம் போல் வியாபாரத்தை தொடர்ந்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் அவர்களுக்கு ஆதரவாக த.மு.மு.க நகரத் தலைவர் சம்சுதீன், மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது, எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், தி.மு.க மாவட்ட பிரதிநிதி இபுராஹிம், வார்டு செயலாளர் பியூட்டி நவாஸ்கான், ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சர்ச்சைக்குரிய அந்த ஓட்டலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

மேலும் உடனடியாக ஓட்டலை காலி செய்யவிட்டால் நாங்களே பிரித்து அகற்றுவோம் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கூச்சலிட்டனர். இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடமும் ஓட்டல் உரிமையாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் ஓட்டல் உரிமையாளர் ஹாஜா மைதீன் ஓட்டலை உடனடியாக காலி செய்வதாக உறுதி அளித்தார். அதன் பிறகே போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஓட்டலிலிருந்து வெளியேறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து குட்டிச்சுவராக ஆக்கிய பெருமை அ.தி.மு.க அரசை சாரும் என்பது பழ.கருப்பைய்யா மூலம் நிருபணமாகிவிட்டது. முத்துப்பேட்டை தி.மு.க கூட்டத்தில் மனுஷ்யபுத்திரன் பேச்சு.



முத்துப்பேட்டை, பிப்ரவரி 03/2016: முத்துப்பேட்டையில் நகர தி.மு.க சார்பில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் அவலங்களை விளக்கிய பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னால் பேரூராட்சி துணைத் தலைவர் ஹனிபா நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளரும் நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கவிஞர் மனுஷ்யபுத்தரன் கலந்துக் கொண்டு பேசுகையில்: தற்பொழுது நடக்கின்ற ஆட்சி ஊழல் நிறைந்த, மோசமான.. அவலமான ஆட்சி என்பது மக்கள் அனைவரும் உணர்ந்துவிட்டனர். 

மேலும் அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பைய்யா மூலம் தற்பொழுது நடப்பது கமிஷன் ஆட்சி என்பதும் மக்களின் வாழ்வாதரத்தை கெடுத்து குட்டிச்சுவராக ஆக்கிய ஒரு ஆட்சி என்பதும் நிருபணமாகிவிட்டது. திட்டங்கள் என்ற பெயரில் தற்பொழுது விளம்பர வெறிதான் நடந்து வருகிறது. ஆட்சி மீது ஊடகங்கள் குறைகளை சுற்றிக்காட்டி எழுதினால் அதற்கு விளக்கம் அளிக்காமல் அவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. முதலாளிக்களுக்குதான் இந்த அரசு சலுகைகளை காட்டி வருகிறது. தமிழகத்தில் எந்தந்த துறை அமைச்சர் என்று யாருக்கும் தெரியாது. ஓட்டு கேட்க மட்டும் முகத்தை காட்டுபவர்தான் ஜெயலிலதா, மக்களுக்கு பாதிப்பு என்றால் ஒழிந்து விடுவார். அதே நேரத்தில் மக்களை பார்த்து கண் கலங்கும் கலைஞர் தலைவரா? மக்களை பார்க்க நினைக்காமல் இருக்கும் ஜெயலலிதா தலைவரா? மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
 
கூட்டத்;தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை வே.மன்னர் மன்னன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட ஆதி திராவிட நல வாரிய செயலாளர் பிரபாகரன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் தேவதாஸ், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத் தலைவர் முத்துராமலிங்கம், நகர அவைத் தலைவர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிகள் அன்பழகன், தமீம், இபுராஹிம், கண்ணன், கோவிந்தராஜன்;, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் செல்வம், ராஜாராம், ரபிஅகமது, அன்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, ஜாம்பை கல்யாணம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவ.அய்யப்பன், ஜெகபருல்லா, ரெத்தினகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள்; ஆடரலசன், ரவிகுமார் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர்.


முத்துப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் அதிகாரி தகவல்


முத்துப்பேட்டை, செப்டம்பர் 09: முத்துப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்ய இருப்பதாக திருத்துறைப்பூண்டி உதவி செயற்பொறியாளர் அழகேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில்: திருத்துறைப்பூண்டி உபகோட்டம் முத்துப்பேட்டை 33 ஃ 11 கே.வி. துணை மின்நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 10.09.2015 வியாழன் கிழமை (நாளை) நடைப்பெற உள்ளது அது சமயம் முத்துப்பேட்டை நகர் பகுதி, ஜாம்புவானோடை, கோவிலூர், கீழநம்மங்குறிச்சி, உப்பூர், ஆலங்காடு, செம்படவன்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் காலை 9-மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் என்று இவ்வாறு தனது செய்தி குறிப்பில் அழகேசன் தெரிவித்து உள்ளார்.

Reported By 

முஹமது இலியாஸ்.

முத்துப்பேட்டை நகரம் முழுவதும் காங்கிரஸ் கொடி ஏற்ற கூட்டத்தில் முடிவு.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 18: முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கூட்டம் தலைவர் ஜெகபர் அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் நாச்சிக்குளம் தாஹிர் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர செயலாளர் எஸ்.எம்.டி.நாசர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முத்துப்பேட்டை நகரம் முழுவதும் புதியதாக கொடி மரம் அமைத்து கொடி ஏற்றப்படும். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவரின் சிறப்பான பணிக்கு இந்த கூட்டம், பாராட்டை தெரிவிக்கிறது. உட்பட முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர துணைத் தலைவர்கள் வேல் துரை, குலாம்ரசூல், குமார் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவானந்த சாமி மற்றும் நிஜாம் மைதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

முத்துப்பேட்டை அருகே உலக மக்கள் தொகைதின பரிசளிப்பு விழா!



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 17: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின விழா வட்டரா அளவிலான பேச்சு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புஷ்பா தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு பேசினார், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் சுமதி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மிதுன், ஜான்ஜோசிக், வேம்பிரித்தியா, சத்யா, கலைமணிபாரதி, சாதம்உசேன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், சீனிவாசன், ராஜேஷ், ஹரிபாஸ்கர் மற்றும் சுகாதார செவிழியர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். 

Reported By

முஹம்மது இல்யாஸ். MBA. MA.JMC.

முத்துப்பேட்டை போலீசை கத்தியால் குத்திய வாலிபரை 3 தினங்கள் ஆகியும் நீதிமன்றத்தில் ஒப்படைக்காத காவல் துறை.





முத்துப்பேட்டை ஆகஸ்ட் 13: இறந்துவிட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு.. 
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லியின் முயற்சியால்பின்னர் மாலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. முத்துப்பேட்டையில் கடந்த 10-ம் தேதி பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிபு மகன் வாசிம்கான்(20) என்ற வாலிபருக்கும் தெற்கு தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது(25) என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது தகவல் அறிந்து அப்பகுதிக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் ராமானுஜம், போலீசார் அரவிந்த், சுரேஷ் ஆகியோர் சென்றனர். அப்பொழுது அரவிந்த் என்ற போலீஸ் வாசிம்கானை பிடிக்க முயன்றார். அப்பொழுது வாசிம்கானுக்கு அரவிந்துக்கும் தகராறு ஏற்பட்டது. 

போலீஸ் அரவிந்த் போலீஸ் உடை அணியாமல் இருந்துள்ளார். அதற்கு வாசிம்கான் என்னை பிடிக்க நீ யாரு?.. போலீஸ் உடையும் அணியவில்லை.. நீ உயிருக்கு போராடிய ஆட்டு குட்டியை திண்டவன் தானே? என்று பேசினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்பொழுது ஆத்திரம் அடைந்த வாசிம்கான் போலீஸ் அரவிந்தை கத்தியால் குத்தினார். அதனையடுத்து மற்ற போலீசார் வாசிம்கானை மடக்கி பிடித்து கை கால்களை கட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சேர்த்தனர். காயம் அடைந்த போலீஸ் அரவிந்த் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். வாலிபர் வாசிம்கான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டது. 

ஆனால் நீதி மன்றத்தில் ஒப்படைக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்துக்குள் கைதியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் வாசிம்கானை அன்று இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்திலும், பிறகு 11-ம் தேதி காலை விசாரணை என்ற பெயரில் எடையூர் காவல் நிலையத்திலும், நேற்று 12-ம் தேதி காலை முத்துப்பேட்டை காவல் நிலையத்திலும் வைத்து வாலிபர் வாசிம்கானை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கை, கால் கட்டப்பட்டிருந்த வாலிபர் வாசிம்கான் உடல் நிலை சோர்வாக காணப்பட்டு மிகமும் மோசமான நிலையில் இருந்துள்ளார். 

இதனைக்கண்ட காவலர் ஒரு ஒருவர் வாசிம்கான் மீது பரிதாபப்பட்டு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வாசிம்கானின் நண்பர்கள் உறவினர்கள் நேற்று வாசிம்கானைப் பார்க்க முத்துப்பேட்டை காவல் நிலையம் சென்றுள்ளனர். அதற்கு போலீசார் அனுமதிக்காமல் மறுத்து திருப்பி அனுப்பினர். அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பல மணி நேரம் காவல் நிலையம் வெளியில் காத்திருந்தனர். அப்பொழுது போலீசார் பரப்புடன் காணப்பட்டதால் வாசிம்கான் இறந்துவிட்டதாக முத்துப்பேட்டை முழுவதும் தகவல் பரவியது. இதனையடுத்து இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் முகம்மது ஷிப்லி துரிதமாக மாவட்ட எஸ்.பி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். 

மேலும் அவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நீதிமன்ற விதிமுறையை மீறி வாசிம்கானை நீமன்றத்தில் ஒப்படைக்காமல் வைத்து துன்புறுத்தி வருகிறார்கள். வாலிபரின் உடல்நிலை மோசமாக உள்ளது. உடன் நீதிமன்றத்தில் அந்த வாலிபரை ஆஜர்ப்படுத்தாவிட்டால் சென்னையில் டி.ஜி.பி.ஐயை சந்திப்பேன். தமிழக முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்றார். அதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ஜெயசந்திரன் உத்தரவுப்படி முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் மேற்பார்வையில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அதிரடியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்ட வாலிபர் வாசிம்கானை காவல் நிலையம் எதிர்புறம் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்துவிட்டு நேற்று மாலை திருத்துறைப்பூண்டி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதனால் வாலிபர் வாசிம்கான் இறந்துவிட்டதாக வெளியான செய்திக்கும் முத்துப்பேட்டையில் ஏற்பட்ட பரபரப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 

இந்த சம்பவம் குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி கூறுகையில்: காவலர் ஒருவரை தாக்கிய புகாரில் வசீம்கான் என்ற இளைஞரை முத்துப்பேட்டை காவல்துறை கைது செய்து ரிமாண்ட் செய்யாமல் இரண்டு நாட்களாக சட்ட விரோத காவலில் வைத்து அடித்து, துன்புறுத்தி வருவதாக இன்று(நேற்று) காலை அவரது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தனர். உடனடியாக நான் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருணை தொலைபேசி மூலம் பல முறை தொடர்பு கொண்டேன். அவர் எடுக்கவில்லை. அவரிடம் கூறும் படி அவரின் உதவியாளரிடம் தெரிவித்தும் அலட்சியப்படுத்திவிட்டார். 

அதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட உளவுத்துறை அதிகாரிகளிடம் முத்துப்பேட்டை காவல்துறையின் சட்ட விரோத நடவடிக்கைகள் தவறானது என தெரிவித்தேன். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வசீம்கான் என்ற இளைஞர் இன்று(நேற்று) மாலை ரிமாண்ட் செய்யப்பட்டார். எஸ்.பி.பட்டிணம், ஆம்பூர், சேலம் போன்ற இடங்களில் சமீபத்தில் நடத்த காவல்நிலைய சாவுகளின் வடுவே இன்னும் ஆறாத நிலையில் இது போன்ற காவல்நிலைய துன்புறுத்தல்கள் நடைபெறுவது வருத்தத்திற்குரியது. ஒரு சில காவல்துறையினர் செய்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளால் மொத்த காவல்துறையும் கெட்ட பெயரை சுமக்க வேண்டியுள்ளது. வசீம்கானை ரிமாண்ட் செய்யாமல் இரண்டு நாட்கள் சட்ட விரோத காவலில் வைத்து துன்புறுத்திய முத்துப்பேட்டை காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Rported By 

முஹம்மது இல்யாஸ். MBA, MA. JMC 

தமிழகத்தை யாராலும் காப்பாற் இயலாது, இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்..



தஞ்சை, ஆகஸ்ட் 12: அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்...
மீத்தேன் என்னும் எமன்
இன்று காலை தஞ்சையில்
காவேரி பாசன
பகுதிகளை பாலைவனமாய் மாற்ற
கூடிய மீத்தேன்
எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை
மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய
கருத்தரங்கத்திற்கு செல்லும்
வாய்ப்பு கிட்டியது..ஏற்க
னவே இது பற்றி அறிந்திருந்தாலும்
மேலும் அது பற்றிய விளக்கங்கள்
தெளிவாய் அறிய
வேண்டி கலந்துகொண்டேன்.
ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல்
அல்ல இது...அனைவரையும்
அதாவது ஒட்டுமொத்த
தமிழகத்தையும் அழிக்க கூடிய
கொடிய அரக்கன்
இது எனபது அறிந்து பெரும்
அதிர்ச்சியே ஏற்பட்டது.
அனைத்து நட்புகளுக்கும் நான்
வைக்கும்
வேண்டுகோள் ....பொறுமையாய்
படித்து அறிந்து இதை முடிந்த
அளவுக்கு பகிருங்கள் என்பதே.
முற்றிலும் பாலைவனமாய்
மாறப்போகும் தமிழகத்தின்
நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்
என்றும்
அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகு
ம் மாவட்டங்கள்
திருவாரூர் ,நாகை மாவட்டம் ஆகிய
இரண்டும் தான் என்பதே நான்
இது வரை அறிந்த
விபரம்...உண்மை அதுவல்ல
என்பதை பல தகவல்களோடும் ,
நடந்த உண்மைகளோடும்
ஒப்பிட்டு இன்று நடந்த
கருத்தரங்கில் பொறியாளர்கள்
கூறியது மனதை பதைபதைக்க
வைத்தது.
சில நாட்கள் முன் புதிதாய்
வெளிவந்த
கத்தி படத்தை ஒரு நண்பர்
குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும்
வாய்ப்பு கிட்டியது..அப்படத்தில்
ஒரு இடத்தில கதாநாயகன்
தஞ்சை மாவட்டத்தில்
ஆழ்துளை கிணறு மூலம் மீத்தேன்
எடுக்க போகிறார்கள்
என்று கூறியதும் நண்பரின்
மனைவி என்னிடம் கேட்ட
கேள்வி மீத்தேன் எடுப்பது என்றால்
என்ன , எங்கே என்ற விபரம்
தான்.சற்றே அதிர்ச்சியோடு அவரை நோக்கி விபரம்
கூறினேன்..அதிர்ச்சிக்கு காரணம்
எங்கே மீத்தேன் எடுக்க
போகிறார்களோ அதற்கு வெகு அருகில்
அவர் பிறந்த மண் ...மீத்தேன் எடுக்க
போகும் விபரம்
இங்கு இருப்போற்க்கே சரிவர
தெரியாத
ஒரு செய்தி என்பதே உண்மை..இதே கருத்தை இன்றைய
கருத்தரங்கிலும் பகிர்ந்தனர்.
இன்னும் அதிக அளவில்
இது மக்களை அடைய
வேண்டும்...எதிர்ப்பு வலுக்க
வேண்டும் என்றும் தெரிவித்தனர்..
எங்கேயோ போடப்போகும்
ஆழ்துளை கிணறுதானே நமக்கு என்ன
வந்தது என்று எண்ண வேண்டாம்
தோழமைகளே..
1.நிலத்தடியில் சுமார் 6000
அடி ஆழத்தில்
நிலக்கரியோடு இருக்கும்
மீத்தேனை எடுக்க
நிலக்கரி இருக்கும் மட்டம்
வரை நிலக்கரிப் படிவத்தில்
இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
2.கடும் உப்பும், பிற மாசுகளும்
நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
தாவர உயிரியல் மற்றும்
நுண்ணுயிர்களைக் கொல்லும்
ஆற்றல் வாய்ந்தது.
3.அதோடு நிலம் சுடுகாடாய்
மாறும்.
4.கடல் நீர் உள் நுழையும்.
5.நிலம் சுமார் 20
அடிகளுக்கு உள்வாங்கும்.
6.கட்டிடங்கள், பாலங்கள்,
ஆற்றுக்கரைகள் , கோயில்கள்
சிதையும்.நிலநடுக்கங்கள்
ஏற்படும் .
7.குடிநீர் , பாசன நீர் தரும்
நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்
போகும்.
8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும்
ஆழ்துளை குழாய் இட
பயன்படுத்திய ரசாயனங்கள்,
மீத்தேன் ஆகியவை கலக்கும்.
இச்செயல் முறை மண்ணையும்,
நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக
நாசம் செய்யும்.
ஒப்பந்தம் போட்டிருக்கும்
ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும்
இடம் 691 சதுர
கிலோமீட்டர் .ஆனால்
பாதிப்பு ஏற்படபோகும்
மூன்று மாவட்டங்களின்
பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர்
அதாவது 21 லட்சம் ஏக்கர்
நிலங்களை நாசம் செய்யும்.
மொத்த ஆழ்துளை கிணறுகளின்
எண்ணிக்கை 2000.
அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும்
மாவட்டங்கள் புதுக்கோட்டை,
திருச்சி மற்றும் கடலூரும் தான்.
இதனால் காற்றும் மாசுபட
போவதால் அது ஒட்டுமொத்த
தமிழகத்தையும் பாதிக்கபோகும்
கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம்.
ஒட்டுமொத்தமாக
இப்பகுதி பாலைவனமாய் மாற
போவதால் 50 லட்சம் மக்களின்
வாழ்க்கை கேள்விக்குறியாய்
நிற்கிறது..சென்ற
அரசு ஒப்பந்தத்தில்
கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும்
போராட்டம் காரணமாய் இந்த
அரசு தற்காலிகமாய்
நிறுத்தி வைத்துள்ளது.இந்த
ஒப்பந்தம் மட்டும் மீண்டும்
தொடர்ந்தால் ...............
தமிழகத்தை யாராலும் காப்பாற்
இயலாது. .அதற்கு முன் மக்கள்
விழித்தெழ வேண்டியது மிக
அவசியம் மற்றும் அவசரமும் கூட.

R.SARAVANAN.MA.BL.MPHIL.MBA.MLM.
ADVOCATE.HIGH COURT.
CHENNAI.
PLEASE SHARE IT.
THANK YOU.
SAVE TAMILNADU.

முத்துப்பேட்டை செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு குடியிருப்பு வாசிகளுக்கு நேற்று பேரூராட்சி இறுதி நோட்டீஸ். வாங்க மறுத்த குடியிருப்புகளில் நோட்டீசை ஒட்டியதால் பரபரப்பு.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கடந்த ஆண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டரைக்குளத்தில் நடந்த முறைக்கேடான பணிகளை எதிர்த்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து உயர்நீதி மன்றம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைக்கேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி 3 மாதங்களுக்கு முன்பு பட்டரைக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் மற்றும் பள்ளி வாசல்கள் உட்பட ஏராளமான குடியிருப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது.

 இந்த நிலையில் அதே வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற வழிக்காட்டுதலின் படி சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கடந்த மாதம் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு அகற்ற தான் அனுப்பிய மனு மீது தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை.

 மேலும் உயர் நீதி மன்றம் உத்தரவுபடி தமிழக அரசு நியமணம் செய்த தனி ஆணைப்படி அவர்கள் பணி செய்யாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர எனக்கு அனுமதித் தர வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க முடிவு செய்து கடந்த மாதம் 40 ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியலை பேரூராட்சியில் ஒப்படைத்தனர். 

அதன்படி சென்ற மாதம் பேரூராட்சி சார்பில் செக்கடிக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள 10 நாள் கெடு விடுத்து நோடீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள முன்வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள குடியிருப்பு வாசிகளுக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து இறுதி நோட்டீஸ் வழங்கினர். பலரும் நோட்டீசை வாங்க மறுத்தனர் அதனாலும், பலர் வீட்டில் இல்லாததாலும் அவர்களது குடியிருப்புகளில் பேரூராட்சி அலுவலர்கள் நோட்டீசை ஒட்டி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Reporter By   

முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication  

முத்துப்பேட்டை திருமணம் நிகழ்ச்சிக்கு திடீரென்று வந்த நடிகர் பாக்கிய ராஜ். பெரும் பரபரப்பு.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் தொழில் அதிபர் டாக்டர்.ஹைதர் அலி வீட்டு திருமணம் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். அப்பொழுது எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென்று நடிகர் பாக்கியராஜ் திருமண மண்டபத்துக்கு மணமக்களை வாழ்த்த வந்திருந்தார். 
இதனைக் கண்ட மக்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு நலம் விசாரித்ததுடன் அவருடன் நின்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஆனது. பின்னர் மண மேடைக்கு சென்ற நடிகர் பாக்கியராஜ் மணமக்களை வாழ்த்தியும் தொழில் அதிபர் ஹைதர் அலியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மதிய உணவை சாப்பிட்டு விட்டு அங்கு இருந்தவர்களிடம் எழிமையாக நின்று பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பி சென்றார்.

Reporter By   

முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication  

முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தானில் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி கடை அடைப்பு. ஆளுங்கட்சி பிரமுகர்கள் கடையைத் திறக்கக் கூறியதால் பெரும் பரபரப்பு.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்நதானில் (05.08.2015) நேற்று அனைத்து கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி நடந்த முழு அடைப்பிற்கு ஆதரவு அளித்து அனைத்து கடைகளும் அடைகப்பட்டிருந்தன. அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் கடையைத் திறக்கச் சொல்லி வறுப்புறுத்தினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெருகவாழ்ந்தான் போலீசார் இரு தரப்பினரின் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

இருந்தாலும் வியாபாரிகள் மற்றும் முழு அடைப்பில் பங்கேற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கடைத் தெரு பகுதியில் கூட்டமாக கூடினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் பத்திரிக்கையர்ளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அவர்களது கோரிக்கைகளை வழியுறுத்தி பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் செல்வகுமார் கூறுகையில்: தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிய காந்தியவாதி சசிபெருமாள் தனது உயிரை இழந்துள்ளார். 

அவரது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி இன்று(நேற்று) நடக்கின்ற முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனை சீர் குலைக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் கடையைத் திறக்க வறுப்புறுத்தி உள்ளது கண்டிக்கக்குரியது. இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றார்.

Reporter By   

முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication  

முத்துப்பேட்டை குத்பா பள்ளி வளாகத்தில் மீண்டும் கலை கட்டிய நோன்பு 27 விருந்தோம்பல் புகைப்பட காட்சி







முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: நமதூர் முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசலில் கடந்த சில வருடங்கள் கழித்து இந்த 2015 ஆம் வருடம் மீண்டும் நோன்பு பிறை 27 ஆம் கிழமை அழகிய விருந்தோம்பல் நடைபெற்று இதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தல 100 சகன் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ஏராளாமான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விருந்துகள் பரிமாறப்பட்டன.

Reporter By 

முஹமது இல்யாஸ். MBA , MA. Journalism & Mass Communication 

உயர் நீதிமன்றம் உத்தரவுபடி பட்டரை குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில், பள்ளிவாசல்கள் வீடுகள் இடிக்கப்பட்டது.




முத்துப்பேட்டை, ஏப்ரல்/17/2015: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மிக பெரிய பரப்பளவில் பட்டரைக்குளம் உள்ளது. இதில் சுற்று புறமும் தனியார் ஆக்கிரமிப்பு செய்ததால் குளம் சுருங்கி குட்டையாக மாறிவிட்டது. மேலும் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்களையும் தனியார் ஆக்கிரமித்தால் தண்ணீர் வர தடைப்பட்டு குளம் வரண்டு போகி இதனால் சுமார் 10 வருடங்களுக்கு மேல் குளம் மக்கள் பயன் பாட்டில் இல்லாமல் போனது. இந்த நிலையில் சென்ற ஆண்டு பேரூராட்சி நிர்வாகம் மக்கள் பயன் பாட்டில் இல்லாத இந்த பட்டரை குளத்திற்கு தூர் வாரி சுத்தம் செய்ய 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டு செய்தது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் மதிப்பீட்டுக்கு முரனாக குளத்துக்குள் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு வசதியாக தடுப்பு சுவர் மற்றும் நல்லநிலையில் இருந்த படித்துறைகளை இடித்து புதிய படித்துறை கட்டும் பணிகளை மேற்கொண்டனர். இதனை தடுத்து நிறுத்த முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகமது மாலிக் என்பவர் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தார். இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை. 

இதனால் அதிர்ப்தி அடைந்த சமூக ஆர்வலர் முகமது மாலிக் இதனை எதிர்த்து கடந்தாண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பேரூராட்சி நிர்வாகம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 3 மாதக்காலம் அவகாசம் கோரியது. அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் பேரூராட்சி நிர்வாகம் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு வருகிற மார்ச் 15-ந்தேதிக்குள் நீதிமன்றதில் ஆதாரங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி பேரூராட்சி நிர்வாகம் பட்டரைக்குளத்தை அளவீடு செய்து ஒரு கோவில், இரண்டு பள்ளிவாசல், மற்றும் 39 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோடீஸ் அனுப்பியது. இதில் பேரூராட்சியில் பணி புரியும் துப்பரவு தொழிலாளர்களின் 25 வீடுகள் முழுவதும் அகற்றும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் யாரும் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. அதனால் சென்ற மாதம் 15-ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கால அவசாசம் கோரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் கடும் கண்டனத்துடன் ஏப்ரல் 23-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அதற்கான ஆதரங்களை கோர்டில் ஒப்படைக்க வேண்டும் என்று பல கண்டிசன்களுடன் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டனர். இந்த நிலையில் கடந்த வாரம் பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மீண்டும் இறுதி நோடீஸ் அனுப்பியது. இதனையும் யாரும் கண்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று காலை ஆக்கிமிப்புகளை அகற்ற மன்னார்குடி ஆர்.டி.ஓ.செல்வசுரப்பி தலைமையில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், தணைத் தாசில்தார், அன்பழகன், பேரூராட்சி உதவி இயக்குனர் மணி, செயல் அலுவலர்கள் சித்தி விநாயக மூர்த்தி, நாராயண மூர்த்தி, காளியப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் தினேஷ் குமார், கிருஷ்ணக்குமார், ராஜராஜசோழன் மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பேரூராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மறறும் வருவாய் துறையினர் முன்னிலையில் ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். அப்பொழுது திருவாரூர் ஏ.டி.எஸ்.பி.ராமசந்திரன் தலைமையில், முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், மன்னார்குடி டி.எஸ்.பி.அருளானந்தம் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிருத்தப்பட்டிருந்தது. இதில் குளத்தின் வடக்கு கறையில் இருந்த விநாயகர் கோவில் தெற்கு கரையில் இருந்த மதினா பள்ளிவாசல் ஆகியவை அடியோடு இடித்துத்தள்ளப்பட்டது. மேற்கு கரையில் உள்ள புதுப்பள்ளி வாசல் சுற்று சுவர் மற்றும் அப்பகுதியில் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. 

பின்னர் துப்புரவு பணியாளர்களின் வீடுகள் இடிக்கும் பொழுது அதிகாரிகளுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் துப்பரவு பணியாளர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு கூடி நின்று அழுது தடுக்க முயன்றனர். இருந்தும் அதிகாரிகள் அதிரடியாக வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் சுமார் 30 பேர் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குளத்தை சுற்றிலும் கூட்டமாக கூடி வேடிக்கை பார்த்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் முத்துப்பேட்டையில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துப்பேட்டையில் பல முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)