முத்துப்பேட்டை, செப்டம்பர் 09: முத்துப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்ய இருப்பதாக திருத்துறைப்பூண்டி உதவி செயற்பொறியாளர் அழகேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில்: திருத்துறைப்பூண்டி உபகோட்டம் முத்துப்பேட்டை 33 ஃ 11 கே.வி. துணை மின்நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 10.09.2015 வியாழன் கிழமை (நாளை) நடைப்பெற உள்ளது அது சமயம் முத்துப்பேட்டை நகர் பகுதி, ஜாம்புவானோடை, கோவிலூர், கீழநம்மங்குறிச்சி, உப்பூர், ஆலங்காடு, செம்படவன்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் காலை 9-மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் என்று இவ்வாறு தனது செய்தி குறிப்பில் அழகேசன் தெரிவித்து உள்ளார்.
Reported By
முஹமது இலியாஸ்.
0 comments:
Post a Comment