முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

முத்துப்பேட்டையில் ஒரு புதிய முஸ்லிம் மருத்துவர் தயார்.


முத்துப்பேட்டை, மார்ச் 23: முத்துப்பேட்டையில் உள்ள ஜனாப். P.M. கமால் நாசர் அவர்களின் மகன் ஜனாப். சதாம் ஹுசைன் அவர்கள் கடந்த சில வருடமாக டாக்டர். பட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று புதிய மருத்துவராக முத்துப்பேட்டைக்கு விரைவில் வர உள்ளார். இவரின் வாழ்க்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


முத்துப்பேட்டையில் உள்ள மாணவர்கள் இவரைப் போன்று மருத்துவத்தில் மற்றும் அனைத்து துறைகளிலும் முதன்மை நிலையை அடைய பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். உங்களின் முயற்சிக்கு நாங்கள் உதவி புரியவும் தயாராக இருக்கிறோம் என்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். 

தொகுப்பு:

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் 

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய வினா,விடையும், வெற்றி பெற்றவர்களின் விபரமும்..


முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய மாபெரும் வினா விடை போட்டி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகமான வாசகர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தனர். மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட முதல் மூன்று பரிசை பெற்ற வாசகர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் இதில் கலந்து கொண்டு அனைத்து வாசகர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் தங்களுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வெற்றி பெற்றவர்களின் விபரம்:

முதல் பரிசு பெற்றவர் J.லாமிய அவர்கள் புதிய காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 26 பதில்.சரியானவை

இரண்டாவது பரிசு பெற்றவர் ம.கபீர் அவர்கள் தெற்கு தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 24 பதில்.சரியானவை

மூன்றாவது பரிசு பெற்றவர் ஆ.நே. ஹாஜா நஜுபுதீன் அவர்கள் புதுத் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 18 பதில் சரியானவை
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய கேள்வி பதில் போட்டி ஓர் பார்வை


முத்துப்பேட்டை, மே 31 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் நடைபெற்ற வினா விடை போட்டி குறித்த ஓர் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு தருகிறோம்..

1) இவ்வுலகில் மனிதனையும், ஜின்களையும் அல்லாஹ் எதற்காக படைத்தான்.?
(A) நன்றாக வாழ்வதற்கு (B) பிறருக்கு உதவி செய்ய (C) தன்னை வணங்குவதற்காக (D) ஏதும் தெரியாது.

விடை: (C) தன்னை வணங்குவதற்காக
2) இந்த உலகில் அல்லாஹ் வால் சபிக்கப்பட்ட சமுதாயம் எது?
(A) இந்து சமுதாயம் (B) கிருஸ்தவ சமுதாம் (C) புத்த சமுதாயம் (D) யூத சமுதாயம்.

விடை:(D) யூத சமுதாயம்
3) உலகில் முதன் முதலில் ராணுவத்தை (எல்லைப் பாதுகாப்புப் படையை) அறிமுகம் செய்தவர் யார்?
(A) அலி (ரலி) (B) உமர் (ரலி) (C) பிலால் (ரலி) (D) எதுவும் தெரியாது.

விடை:(B) உமர் (ரலி)
4) மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபருடன் பேசவே மாட்டன், அந்த மூவரில் ஒருவரின் செயலைக் குறிப்பிடுக?
(A) பெருமையடிக்கும் ஏழை (B) பெருமையடிக்கும் பணக்காரன் (C) எதுவும் தெரியாது.

விடை:(A) பெருமையடிக்கும் ஏழை
5) அல்லாஹ் எந்த நபியின் தியாகத்தை நினைவு கூர்வதற்காக ஹஜ்ஜை கடமையாக்கினான்?
(A) முஹம்மது நபி (ஸல்) (B) ஆதம் (அலை) (C) சுலைமான் (அலை) (D) இபுராஹீம் (அலை)

விடை: (D) இபுராஹீம் (அலை)
6) இந்த முஸ்லிம் சமுதாயத்தின் நம்மிக்கையார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாரை குறிப்பிட்டார்கள்?
(A) பிலால் ரலி, (B) அபு உபைதா ரலி, (C) அபூபக்கர் சித்திக் ரலி, (D) அன்னை ஆயிஷா ரலி

விடை:(B) அபு உபைதா ரலி
7) தனது 17 வயதிலேயே இந்திய நாட்டிற்காக தன் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்று போர்க்களம் புறப்பட்ட தியாகி யார்?
(A) கஜினி முஹம்மது (B) திப்பு சுல்தான் (C) அவரங் சிப் (D) ஹைதர் அலி

விடை:(B) திப்பு சுல்தான்
8) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இபாதத்தின் சிறப்பைவிட........................சிறப்புதான் சிறந்தது என்று எதனைக் குறிப்பிட்டார்கள்?
(A) கல்வி (B) பொருளாதாரம் (C) பொதுலம் (D) வெற்றி

விடை:(A) கல்வி
9) அல்லாஹ் மூன்று நபர்களுக்கு சொர்கத்தை ஹராமாக்கி விட்டான், அதில் ஏதேனும் ஒரு நபரைப் பற்றி குறிப்பிடுக?
(A) ஏழைக்கு உதவி புரியாதவன் (B) பெற்றோருக்கு நோவினை செய்பவன் (C) எனக்கு தெரியாது.

விடை:(B) பெற்றோருக்கு நோவினை செய்பவன்
10) முதன் முதலில் இஸ்லாத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த பெண் சகாபி யார்?
(A) சுமையா ரலி, (B) ஆய்ஷா ரலி, (C) பாத்திமா ரலி, (D) கதிஜா ரலி

விடை:(A) சுமையா ரலி
11) இந்தியாவில் இஸ்லாமியர்கள் எத்துனை ஆண்டு காலம் ஆட்சி செய்தனர்.?
(A) 600 (B) 1100 (C) 900 (D) 1111

விடை: 1100
12) நபி (ஸல்) அவர்கள் இவர் அல்லாஹ்வின் வாள் (சைபுல்லாஹ்) என்று யாரை குறிப்பிட்டார்கள்?
(A) அலி ரலி (B) உமர் ரலி (C) காலித் பின் வாலித் ரலி (D) ஹம்சா ரலி

விடை: காலித் பின் வாலித் ரலி
13) எந்த கலிபாவால் பைத்துல் முக்கத்தஸ் (முதல் கிப்லாவை) யூதர்களிடம் இருந்து முதன் முதலில் மீட்டெடுத்த அந்த சகாபியின் பெயர் என்ன?
(A) அபூபக்கர் சித்திக் (B) உமர் ரலி (C) உஸ்மான் ரலி (D) அலி ரலி

விடை: உமர் ரலி
14) ஒரு நபித்தோழர் இறந்ததற்கு அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது, அந்த சஹாபியின் பெயர் என்ன?
(A) பிலால் ரலி (B) உஸ்மான் ரலி (C) அனஸ் பின் நள்ர் ரலி (D) ஸஆது பின் முஆத் ரலி

விடை: ஸஆது பின் முஆத் ரலி
15) நபி (ஸல்) அவர்கள் தமது விண்ணுலகப் பயணத்தின் போது சொர்கத்தில் ஒரு நபித்தோழரின் காலடி ஓசையை கேட்டார்கள் அந்த சஹாபியின் பெயர் என்ன?
(A) பிலால் ரலி (B) அலி ரலி (C) அபூபக்கர் சித்திக் (D) உமர் ரலி

விடை: பிலால் ரலி
16) அபூபக்கர் சித்திக் ரலி மற்றும் உமர் ரலி போன்ற மூத்த சகாபிகளுக்கு தலைமையேற்று படை நடத்திய சிறிய வயது நபித் தோழர் யார்?
(A) உஸ்மான் ரலி (B) உஸாமா பின் ஜைத் ரலி (B) அலி ரலி (D) ஏதும் தெரியாது

விடை: உஸாமா பின் ஜைத் ரலி
17) கி.பி.1857 ல் நடத்திய சிப்பாய்களின் எழுச்சியின் போது முஸ்லிம் மக்கள் எத்துனை பேர் சகீதானார்கள் (கொல்லாப்பட்டனர்)?
(A) 20,000 பகதுர்ஷாவின் மகன் உள்பட (B) 27,500 பகதுர்ஷாவின் மகன் உள்பட (C) 27,000பகதுர்ஷாவின் மகன் உள்பட

விடை: 27,000பகதுர்ஷாவின் மகன் உள்பட
18) இங்கிலாந்து நாட்டில் வெள்ளையர் ஆட்சி நிலை நாட்ட வேண்டும் என்றால் குர்ஆனை கிழித்தெறிய வேண்டும் என்று சொன்னவன் யார்?
(A) பிரான்ஸ் மன்னன் கி.பி. 1888 (B) ஜோசெஹ்ப் இந்தி (C) அனீஸ் தாஸ் கி.பி. 1889 (D) பிரிட்டீஸ் மன்னர் கிலார்டு. கி.பி. 1885

விடை: பிரிட்டீஸ் மன்னர் கிலார்டு. கி.பி. 1885
19) இந்திய போராளி திப்புசுல்தான் அவர்கள் எந்த மொழியில் குர்ஆனை மொழி பெயர்த்தார்?
(A) ஹிந்தி (B) ஃபிரன்ஜூ (C) உர்து (D) ஆங்கிலம்

விடை: ஃபிரன்ஜூ
20) துருக்கியில் இஸ்லாமிய ஆட்சியை (கிலாஃபத்தை) யூதர்கள் எந்த ஆண்டு முழுமையாக ஆட்சியை கலைத்தனர்?
(A) 1924 பிப் 22 (B) 1928 மார்ச் (C) 1930 மே 30 (D) 1950 ஆகஸ்ட் 15

விடை: 1924 பிப் 22
21) எந்த நபியை அல்லாஹ் தாயும், தந்தையும் இல்லாமல் தன வடிவத்திலேயே படைத்தான், அந்த நபியின் பெயர் என்ன?
(A)நபி ஈசா அலை, (B) நபி இப்ராஹீம் அலை, (C) நபி ஆதம் அலை, (D) முஹம்மது நபி (ஸல்).

விடை: ஆதம் அலை.
22) எந்த நபியை அல்லாஹ் இவ்வுலகில் கடுமையான நோயைக் கொண்டு சோதித்தான்?
(A) நபி ஈசா அலை (B) நபி மூஸா அலை (C) நபி யூனிஸ் அலை (D) நபி ஐய்யூப் அலை

விடை: நபி ஐய்யூப் அலை
23) மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த சஹாபாக்களை (சஹாபிகளை) அரபியில் வரலாறு எவ்வாறு குறிப்பிடுகிறது?
(A) அன்சாரிகள் (B) முஹாஜிர்கள் (C) முஜாகிதீன்கள் (D) எதுவும் தெரியாது.

விடை: முஹாஜிர்கள்
24) உலக மக்களால் பாலைவனச் சிங்கம் எனப் போற்றப்பட்டவர் யார்?
(A) திப்பு சுல்தான் (B) மறுத்த நாயகம் யூசுப் கான் (C) உமர் முக்தார் (D) ஹைதர் அலி

விடை: உமர் முக்தார்
25) நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது நான்காவது வானத்தில் எந்த நபியை சந்தித்தார்கள், அந்த நபியின் பெயர் என்ன?
(A) நபி இத்ரீஸ் அலை (B) நபி மூசா அலை (C) நபி எஹ்யா அலை (D) நபி இல்யாஸ் அலை

விடை: நபி இத்ரீஸ் அலை
26) எந்த நபி இவ்வுலகில் ஆயிரம் வருடம் தூதுச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள், அந்த நபியின் பெயர் என்ன?
(A) நபி மூசா அலை (B) நபி நூஹு அலை (C) நபி சுலைமான் அலை (D) நபி ஆதம் அலை

விடை:நபி நூஹு அலை
27) திருமறைக் குர்ஆன் முழுமையாக (இவ்வுலகிற்கு) இறக்கி அருளப்பட்ட ஆண்டு?
(A) 21 ஆண்டு (B) 22 ஆண்டு (C) 23 ஆண்டு (D) 28 ஆண்டு

விடை: 23 ஆண்டு
28) ஐவேலை தொழுகையில் மொத்தம் எத்துனை ரக்ஆத்துகள் உள்ளன?
(A) 17 ரக்ஆத்துகள் (B) 15 ரக்ஆத்துகள் (C) 16 ரக்ஆத்துகள் (C) 18 ரக்ஆத்துகள்

விடை: 17
29) வட்டி வாங்கி வந்தவர்களை நபி (ஸல்) அவர்களுக்கு மிஹ்ராஜ் சென்ற போது காட்டப்பட்டது, அவர்களின் நிலை எவ்வாறு இருந்தது?
(A) உடல் முழுவதும் இல்லை (B) வயறு ஊதிப் போய் இருந்தது (C) கால் இரண்டும் இல்லை (D) எனக்கு தெரியாது

விடை: வயறு ஊதிப் போய் இருந்தது
30) நாய் மற்றும் உருவப்படம் உள்ள வீட்டிற்குள் யார் நுழைய மாட்டார்கள்?
(A) மலக்குகள் (B) பணம் செல்வம் (C) செய்தாங்கள் (D) எனக்கு தெரியாது
விடை: மலக்குகள்

source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

மனையியல் பாடத்தில் மாநில அளவில் 2 வது இடம் பிடித்த முஸ்லிம் மாணவி.

காயல்பட்டினம், மே 22 : நடந்து முடிந்த +2 தேர்வில் மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா அவர்கள் தெரிவித்ததாவது. மாநிலத்தில் இரண்டாமிடம் என்ற இந்த சாதனை எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது... இதற்காக முதலில் என்னைப் படைத்து பராமரிக்கும் இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
தொகுப்பு
AKL .அப்துல் ரஹ்மான்.

+2 தேர்வு முடிவுகள் முதல் 3 இடத்தை பிடித்த நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகள்


சென்னை, மே 22 : +2 தேர்வின் முடிவுகள்: தமிழகத்தில் +2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2 ந்தேதி தொடங்கி 25 ந்தாம் தேதிவரை நடைபெற்றது. இதில் 3 .38, லட்சம் மாணவிகளும் தேர்வு எழுதினர். +2 தெருவுக்கான முடிவுகள் இன்று காலை 11 மணி அளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் இதில் மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்களில் 6 ,55 ,594 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 2518 மாணவர்கள் 200 / 200 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் முதல் 3 இடங்களை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். முதல் இடத்தை சுஷ்மிதா (1189) மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை கார்த்திகா, அசோக்குமார், மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் (1188) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தை மகேஸ்வரி, பிரபா சங்கரி என்று இரண்டு மாணவிகளும் (1187) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

IAS , IPS , IFS வெறும் கனவல்ல நிஜமே


இந்திய, பிப்ரவரி 16 : இந்த ஆண்டிற்கான(2012) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான தேதி அறிவிக்கபட்டு உள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் தேதி(20.05.2012)அன்று, முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும். இந்திய ஆட்சி பணி தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் தான், இந்தியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ்(IAS), இந்தியன் போலீஸ் சர்வீஸ்(IPS), இந்தியன் பாரின் சர்வீஸ்(IFS), இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ், இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான 25 சிவில் சர்வீஸ் பணிகளில் சேர முடியும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு கட்டணம்:

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.UPSCயின் http://upsconline.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்துஅனுப்ப வேண்டும்.

பெண்கள், SC, ST, உடல் ஊனமுற்றோர் தவிர்த்து, மற்ற அனைவரும் தேர்வுக்கட்டணமாகரூபாய் 50 செலுத்த வேண்டும்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்ச தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமோ பட்டம் பெற்றிருத்தல் அல்லது அதற்கு இணையான கல்வி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.. பட்டபடிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்களும் முதல் நிலை தேர்வில் கனல்து கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் மெயின் தேர்வு எழுத செல்லும் பொது, தேர்ச்சி பெற்ற கல்வி சான்றிதழ்களின்நகல்களை சமர்பிக்க வேண்டும். பட்டபடிப்புகளுக்கு இணையான டிப்ளமோ சான்றிதழ்கள் பெற்றவர்களும் இதில் அனுமதிக்கபடுவர். அத்தோடு 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெரும் மாணவர்கள், இந்திய நிர்வாகப் பணிகளில் சேர்ந்து நாட்டின் கொள்கை ரீதியான பல முடிவுகளை எடுக்கும் உயர்ந்த வாய்ப்பை பெறுகிறார்கள்.

தேர்வு நடைமுறை :

இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நடைபெறும் முதல்நிலை(Preliminary) தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டமாக நடைபெறும் மெயின் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இத்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, மாணவர்களின் திறமையின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு நியமிக்கபடுகிறார்கள்.

முதல்நிலை தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள். அதன் முதல்தாள் “ஜெனரல் ஸ்டடீஸ்(General Studies) எனப்படும் பொது அறிவு தாளில் ஏற்கனவே இருந்த பல பாடங்கள் தற்போதும் இடம் பெற்று உள்ளன. தேசிய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சியியல், சுற்றுசூழல், பல்லுயிர் பெருக்கம், பருவநிலை மாற்றம் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளில் அன்றாட பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து முதல்தாளில் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மணி நேரம் நடைபெறும் இத்தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.

இரண்டாம் தாள் முற்றிலும் திறனறித் தேர்வாக (Civil Services Aptitude Test – CSAT) மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவேஇருந்து வந்த விருப்பப்பாடம் இனி இருக்காது. இந்தத் தாளில் Comprehension, Communication Skills, Inter Personal Skills , Logical Reasoning, Decision Making & Problem Solving,, General Mental Ability, English Language Comprehension Skills என்று பாடத் திட்டமே லேசாகபதட்டம் கொள்ளவைக்கிறது. கணிதத்திற்கும் ஆங்கிலப் புலமைக்கும் தீனிபோடுவதற்கு ஏதுவாக இந்தப் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த இரண்டாம் தாளுக்கான மதிப்பெண்கள் 200.

ஆனால் இதுதான் இப்போது பெருத்த விவாதத்துக்கு உள்ளான ஒன்றாகியுள்ளது. இந்தஆப்டிடியூட் பாடம் இதுவரை நம் தமிழக மாணவர்களுக்கு எந்தப் பள்ளி, கல்லூரிகளிலும் கற்றுத்தரப்படுவதில்லை. அதனால் இனி கிராமப்புறம் மற்றும்தமிழ்வழியில் பயிலும் மாணவர்களால் ஐ.ஏ.எஸ். என்பதை நினைத்தும் பார்க்கமுடியாது என்ற அச்சம் பரவலாக கிளறிவிடப்படுகிறது. ஐஐடி, ஐஐஎம் மனதில்வைத்துத்தான் CSAT கொண்டு வரப் பட்டதோ என்ற சந்தேகம் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இதனால் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இத்தேர்வு மாற்றத்தால் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை. மனப்பாடத்திற்கும்ஞாபக சக்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த பழைய தேர்வு முறையைவிட இந்த முறை தகுதியானவர்களை பிரித்தறிய வாய்ப்பாக இருக்கும். உதாரணமாகஒரு பிரச்சினைக்கான சூழலைக் கேள்வியாகக் கேட்டு நான்கு விதமான தீர்வுகளில்மிகப் பொருத்தமான ஒன்றை நம் பதிலாகக் கேட்பார்கள். தேர்வர் அதிகஉணர்ச்சிவயப்படக்கூடியவரா, மிஸ்டர் கூல் பெர்சனாலிலிட்டியா, சட்டத்தைமட்டும் கடுமையாக பின்பற்றும் நபரா, சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒரேஅளவீட்டில் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் சோதித்து அறிகிறார்கள்.

இதன்மூலம் டெல்லிலியில் உள்ள பெரிய நிறுவனங்கள் தரும் குறிப்புகளை மட்டும்ஆண்டுக்கணக்காக மனப்பாடம் செய்து படித்துவரும் மாணவர்கள் இனிமேல்வடிகட்டப்படுவார்கள். மருத்துவம்படித்திருந்தாலும் கலைப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும் இனி மதிநுட்பம்எனும் ஒரே அளவுகோலில் தான் பரிசோதிக்கப்படுவார்கள். ஆரம்பக் காலத்தில்கலைப் படிப்பைப் படித்து வருபவர்களுக்கும், தாய்மொழியில் கல்விபயின்றவர்களுக்கும் CSAT தேர்வு கொஞ்சம் சிரமம் என்பது உண்மைதான்.அதற்குக் காரணம் பாடத்திட்டத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் கணிதம்தான்!

அரசுமற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாற்றப்பட்ட தேர்வுமுறைக்குத்தகுந்தபடி தங்கள் பயிற்சி வகுப்பின் முறைகளையும் மாற்றிக் கொண்டுதற்போது இந்த பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சி அளித்து வருகிறார்கள்.இந்தத் தேர்வுமுறையால் கல்லூரி நாட்களிலிருந்தே இந்தியில் விருப்பப்பாடங்களை எடுத்து பல வருடங்களாக மனப்பாடம் செய்து படித்து வரும் வடமாநிலமாணவர்களுக்கும் பாதிப்புதான். ஆனாலும் முதல்நிலைத் தேர்வுத்தாள்ஆங்கிலத்திலும்,இந்தியிலும் இருப்பதால் இந்தி மாணவர்களுக்கு அது சாதகமாக இருக்கும்.

முக்கிய தேதிகள்: 2012ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு 04.02.2012 , பூர்த்திசெய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதி 05.03.2012 , தேர்வு நடைபெறும் நாள் 20.05.2012 .

தொகுப்பு

source from: www.mttexpress.com
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,EKA .முனவ்வர் கான், அபு மர்வா

ஓர் நற்செய்தி!! : அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்


சென்னை, டிசம்பர் 25 : இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.
இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை சென்றடைய ஓர் அரிய, எளிய மாற்று வழி இருப்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?இதனை பற்றி விவரமாக அறிந்து கொள்ள இந்த லிங்க் ஐ பார்க்கவும்
Link à ஆளும் சக்தியா? அதிகார சக்தியா?
இதற்காக உருவாக்கப்பட்டது தான்
Al-Idara I.A.S guidance center
அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்
இதன் நோக்கம்
நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும் சாதிக்க முடியாததெல்லாம் I.A.S அதிகாரிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும். மேற்கண்ட பெரிய பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் இயக்குபவர்கள் I.A.S அதிகாரிகள் தான் என்பதையும், அந்த அதிகார மையத்தை கை பற்றுவது இயலாத காரியம் இல்லை என்பதையும் உணர மறுக்கின்றனர்.
இதை பற்றி முழுமையான முறையில் விழிப்புணர்வூட்டி I.A.S-க்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து, சென்னை, மற்றும் டெல்லியில் உள்ள சிறந்த I.A.S பயிற்சி அகாடமிகளுடன் இனைந்து செயலாற்றவும், அதன் மூலம் நமது இளைஞர்களை இறை அச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வுகளை ஊட்டி பக்குவபடுத்தி இஸ்லாத்திற்கும், இந்தியாவிற்கும் விசுவாசமான IAS அதிகாரிகளாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
ஆலோசனை குழு
இதற்கான ஆலோசனை குழுவில் (ADVISORY BOARD) தற்போது பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற I.A.S அதிகாரிகளை இணைத்து அவர்களது மேலான ஆலோசனைகளுடன் இயங்க உள்ளது.

ஆர்வமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
அடிப்படை தகுதிகள்
ஏதேனும் ஒரு UG டிகிரி முடித்து இருக்க வேண்டும்
21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்

தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை.
822, மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
அண்ணா சாலை, சென்னை .
Ph. 98408 99012, 98847 06795
ஈமெயில் : admin@makkamasjid.com

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)