முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!
Showing posts with label வளைகுடாச் செய்திகள். Show all posts
Showing posts with label வளைகுடாச் செய்திகள். Show all posts

வளைகுடா நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக…இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை !



உலகம், பிப்ரவரி 08/2016: வளைகுடா நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அந்த நாடுகளில் வேலைக்கு சென்ற இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல லட்சம் பேர், சொந்த ஊர் திரும்புகின்றனர்.

குவைத், பக்ரைன், கத்தார், ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள். இவை, வளைகுடா நாடுகள் என, அழைக்கப்படுகின்றன.இங்கு, கச்சா எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் அபரிமிதமான பணத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும், வெளிநாட்டு பணியாளர்களையே நம்பி உள்ளனர். பொறியாளர்கள், செவிலியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள், வீட்டுப் பணியாளர்கள் என, பெரும்பாலான பணிகளில், வெளிநாட்டினரே ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து, 50 லட்சம் – 70 லட்சம் தொழிலாளர்கள் அங்கு சென்று பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த, 10 லட்சம் – 15 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

கடந்த, 10மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தையில், அமெரிக்காவின் கொள்முதல் குறைவு; ஈராக் எண்ணெய் ஏற்றுமதிக்கு இருந்த தடை நீக்கம்; வளைகுடா நாடுகளின் எண்ணெய் நிறுவன கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு ஆகியவற்றால், கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால், பல எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு சென்றுள்ளன. தொடர்ந்து செயல்படும் நிறுவனங்களில், ஊதிய உயர்வு நிறுத்தம்; பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதி போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கச்சா எண்ணெய் மூலம் கிடைத்த வருவாயில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, வளைகுடா நாடுகளின் அரசுகள், புதிய வரிகளை விதிக்க துவங்கி விட்டன. குறிப்பாக, மின் கட்டணம்கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. நிறுவனங்கள் அளிக்கும் குடியிருப்பு வசதி ரத்து செய்யப்பட்டதால், வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்து விட்டது. வருமான வரி, 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதோடு, 4 சதவீத மதிப்புக் கூட்டு வரி, புதிதாக அறிமுகம்செய்யப்பட்டு உள்ளது. பள்ளி கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், வெளிநாட்டில் இருந்து சென்ற தொழிலாளர்களின், மாத வருவாயை முழுவதுமாக செலவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால், குடும்பத்துடன் வசித்து வந்த, இந்திய தொழிலாளர்கள், குடும்பங்களை, இந்தியாவுக்கு திரும்ப அனுப்புகின்றனர். தனியாக வசித்து வந்த பல தொழிலாளர்கள், மாத வருமானம் போதாத நிலையில், நாடு திரும்புகின்றனர்.

இப்படி நாடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவர்களின் மறுவாழ்வுத் திட்டங்களை, கேரள மாநில அரசு உருவாக்கி வருகிறது. தமிழக தொழிலாளர்கள் கொஞ்சம், கொஞ்சமாக நாடு திரும்பி வருவதால், அரசின் முழு கவனம், இன்னும் இவர்கள் பக்கம் திரும்பவில்லை.

சிந்திக்க வைத்த மூதாட்டியின் கேள்வியும், இதன் விளைவாக இஸ்லாத்தை தழுவிய கின்னஸ் பேட்டியாளரும்...


பாலஸ்தீன், 06/2016: 124 வயதுடையை மரியம் ஹம்தான் அம்மாஸ் என்பவர் பாலஸ்தீனிய பெண்மணியாவார்.
ஐந்துமுறை ஹஜ்ஜும், பத்து தடவை உம்றாவும் செய்துள்ள இவர், எப்பொழுதும் ஹிஜாபுடனேயே காணப்படுவதுடன், மிகவும் உறுதியான ஈமான் கொண்டவர்.
இவருக்கு 9 பிள்ளைகளும் 600 வழித்தோன்றல்களும் உள்ளனர்.
இவருடைய வயதை கின்னஸில் பதிவதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தின் அதிகாரிகள் இவரை பேட்டி எடுக்க முயற்சித்தபொழுது, இவருடைய ஹிஜாபை அகற்றும்படி கேட்டுக்கொண்டார்கள்.
இதனை ஏற்றுக்கொள்ளாத அம்மூதாட்டியிடம் அவர்கள், "உங்களுடைய வயதென்ன" என்று கேட்டார்கள்.
அம்மூதாட்டியும் சிரித்துக்கொண்டே 43 என்று பதிலளித்தவர், கின்னஸ் பேட்டியாளரை பார்த்து "நீங்கள் முஸ்லிமா" என்று வினவினார்.
"இப்பொழுது இது முக்கியமா" என்ற கின்னஸ் பேட்டியாளரின் கேள்விக்கு மூதாட்டி இவ்வாறு கூறினார்.....
"நீங்கள் எது சரி, எது பிழையென பகுத்தறியும் நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் முஸ்லிமல்ல. 
அதாவது நீங்கள் உண்மையை பொய்யிலிருந்து பிரித்தறிய
முடியாதவறாயிருக்கிறீர்கள். ஒரு குழந்தைக்குத்தான் இந்த நிலையிருக்கும்."

" மற்றவர்கள் முன்நிலையில் உலகாயுத விடயங்களில் தங்களை பெருமைபடுத்தப்பட்டவர்களாகவும், படைத்தவன் முன் சிறுமைபட்டவர்களாகவும் இருப்பார்கள்.ஆகவே நான் இவ்வுலக வாழ்வை தேர்ந்தெடுப்பதா??? மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வை தேர்ந்தெடுப்பதா???"
"அதாவது உலகின் ஆதாயங்களுக்காக பெருமைப்பட்டவளாக இருப்பதா??? அல்லது படைத்தவனின் திருப்தியைபெற்று மரணத்திற்குபின் பெருமையுடையவளாக இருப்பதா???
இதில் எதை நான் தேர்ந்தெடுப்பது???"

மூதாட்டியின் இக்கேள்வியினால் கின்னஸ் பேட்டியாளர் பதில்
கூற முடியாமல் திகைத்து நின்றார்.

பணம், புகழ் போன்ற இன்னோரன்ன உலக ஆதாயங்களை பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கும் மனிதர்கள் மத்தியில், இந்த வயதான பெண்மணியின் ஈமானின் உறுதி அவரை சிந்திக்க வைத்தது.
அவரின் திகைப்பை கண்ணுற்ற மூதாட்டி , "நீங்கள் திரும்பிச்சென்று நன்றாக சிந்தித்துவிட்டு திரும்பிவாருங்கள். நீங்கள்வரும்வரை நான் இறக்க மாட்டேன்." என்று சிரித்தவாறே கூறினார்.
இச் சம்பவத்தின்மூலம் நடந்தது ஓர் அதிசயம்...........
இதன்பின்னர் ஏழுமாதங்கள் கடந்த நிலையில் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார் அந்த கின்னஸ் பேட்டியாளர். இதிலிருந்து நான்கு மாதங்களின் பின் இம்மூதாட்டியும் இறைவனடி சேர்ந்தார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்)

கின்னஸ் புத்தகம் வெளியிடுவோர் மூதாட்டியை எதற்காக ஹிஜாபை நீக்கும்படி கேட்டுக்கொண்டார்கள் என்பது விந்தையாகவே உள்ளது.
நன்றி 
Gulf News 

இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.








துபாய், பிப்ரவரி 03/2016: இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டி சார்பாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் செயல்வீரர்கள் ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் துபை தேராவில் உள்ள மலபார் ரெஸ்டாரண்டில் இனிதே நடைபெற்றது.
இக்கூட்டத்தை இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் துபை மண்டல தலைவர் யூசுஃப் தலைமையேற்று துவங்கி வைத்தார். இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் பொது செயளாலர் பத்ரு ஜமான் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டியின் தமிழ் மாநில தலைவர் திருச்சி முபாரக் மற்றும் தமிழ் மாநில துணை தலைவர் பிரேம் நஸீர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
 இதனையடுத்து தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை நடத்த இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் கோட்டைக்கள் ஹுசைன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக வருகை புரிந்திருந்தார். அழகிய முறையில் கட்சியின் கட்டுப்பாட்டுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில் கீழ்கண்ட நிர்வாக குழு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியல் கல்ச்சுரல் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக குழு விபரம்.

தலைவர் – முகமது ரஹீஸ்  ( மதுக்கூர் )
துனை தலைவர் – செய்யாத்  (ஆதிரம்பட்டினம்)
பொதுச்செயலாளர்  அஸ்கர் அலி
செயலாளர்கள் – ஜாகிர் ( மதுக்கூர் )
செயலாளர்கள் - நூருல் ஹசன் (ஆதிரம்பட்டினம்)

 இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டி த திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு விபரம்.

 தலைவர் – இத்ரீஸ் (முத்துப்பேட்டை)
துனை தலைவர் – ஷைக் தாவூத்  ( முத்துப்பேட்டை)
 பொதுச்செயலாளர் – முஹிதீன்  ( பூத மங்களம்)
செயலாளர்கள் – யூசுப்  ( அத்திக்கடை )
செயலாளர்கள் - பரக்கத் அலி ( முத்துப்பேட்டை)

 இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டி திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு விபரம்.
 கட்சியின் செயல்திட்டம் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ் மாநில தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து கேள்வி பதில் மற்றும் சமகால அரசியல் சூழ்நிலைகளை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இறுதியாக ஜனாஃப் இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் துபை மண்டல செயளாலர் அஷதுல் ஹக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் துபை மண்டல செயளாலர் முகமது ரஹீஸ் அவர்கள் நெறிப்படுத்தி அழகுற தொகுத்து வழங்கினார்.

 இதில் செய்ல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

நன்றி:

ரெங்கிஷ் கான் 

துபாயில், 330 பேர் இஸ்லாத்தை ஏற்றனர், துபாய் இஸ்லாமிய விவகாரத்துறை வெளியிடு...


துபாய், ஆகஸ்ட் 19: இஸ்லாமிய விவகாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது. இஸ்லாமிய விவகாரத்துறை சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முஹம்மது பின் ராசீத் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் பல் சமய உரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் பலர் பங்கேற்றனர். இஸ்லாம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டதுடன் அவர்கள் தங்களுக்கு இஸ்லாம் குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர். மேலும் இதில் துபாயில் 330 ரமலான் மாதத்தில் இஸ்லாத்தை ஏற்றனர். இவர்களில் 92 பேர் ஆண்கள், 238 பேர் பெண்கள் ஆவார்கள். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Reported By 

முஹம்மது இல்யாஸ்.

எதிரியையும் மன்னித்து வாழவைத்து அழகு பாருக்கும் மார்க்கம் உலகிலே இஸ்லாம் ஒன்றுதான்.









துபாய், ஆகஸ்ட் 18: குஜராத்தில் ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்களை கொன்று குவித்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.அவர்களின் சொத்துக்களை சூரையாடியதர்க்கு காரணமாக இருந்தவர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த மாநிலத்தில் (குஜராத்) இன்றுவரை அகதிகளாகவே வாழ்கின்ற சூழல்.. இத்தனைக்கும் மத்தியில் அமெரிக்காவே பலமுறை விசா கொடுக்க மறுத்த ஒரு மாபெரும் குற்றவாளி. இருந்தாலும் நாட்டின் பிரதமர் இந்த மோடி இஸ்லாமியர்களுக்கு செய்த அத்தனை துரோகங்களும் அறிந்து இருந்தும் தன் நாட்டுக்கு விருந்தாளியாக வந்தார் என்பாதால் அவரை (விருந்தாளியை) கண்ணியப்படுத்துகிரார்கள் இஸ்லாமியர்கள் என்றால், இதுதான் இஸ்லாம் கற்று கொடுக்கும் அழகிய மாண்பு.




அது மட்டும் அல்ல இந்த நாட்டில் எங்க மதத்தவருக்கு கோவில் கட்டி தாருங்கள் என்று கேட்டதற்கு அதையும் நாங்கள் கட்டி தருகிறோம் என்று கூறினார்களே இதுவா தீவிரவாதி மதம் பிற மதங்களை திட்டி மத்திக்க தெரியாதவன் உண்மையான முஸ்லிம் அல்ல அவ்வாறு எங்களது முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எங்களுக்கு கற்று தரவில்லை, இதன் மூலமாவது இஸ்லாமியர்களை அளிக்க முயலும் என்னத்தை நிறுத்துக்கொள்வது நல்லது. இல்லை எனில் அல்லாஹ் உங்களை அழித்துவிடுவான் அதற்க்கு நேரும் காலம் தேவையில்லை .



Reported By 



முஹம்மது இல்யாஸ். MBA, MA. Journalism & Mass Communication 

தன்னுடைய ஈமானை இழக்காத ஆடு மேய்த்த சூடானி....அவருக்கு சவுதி அரசு 40,000,00 ரியால் லட்சம் வெகுமதி...





சவுதி அரேபியா, ஆகஸ்ட் 15: ஒரு  நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ  நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு நாட்டில், புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.

இறையச்சத்துக்கான முதன்மை பரிசு மறுவுலக சுவனப்பரிசுதான். மற்றபடி இவ்வுலக பரிசு 40 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் அதுவும் ஒரு சோதனையே என்று கூறிக்கொண்டு... பதிவுக்கு செல்வோம் சகோஸ்.


சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், காரில் பிரயாணித்து வந்த சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டு மந்தையில் ஒன்றை தமக்கு தரச்சொல்லி கேட்க...

ஆடு மேய்ப்பவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆட்டு மந்தை, நான் எப்படி இதை உங்களுக்கு தரும் அதிகாரம் பெற முடியும்?' என்று கூறி ஆட்டை தரமறுக்க...

அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி விட்டு, தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட பணத்தாசை காட்டி வந்தவர்கள் கேட்க... 

அவரோ... இருநூறல்ல... இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை நான் உங்களுக்கு விற்க மாட்டேன்' என்று உறுதியாக கூற... 

அந்த சவூதி சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் உரிமையாளரோ வேறு யாருமோ உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் ஆட்டை நல்ல விலைக்கு விற்க பயம் கொள்கிறீர்?' என்று மீண்டும் பணத்தாசை காட்டி வற்புறுத்த, 

அதற்கு அந்த சூடானிய முஸ்லிம் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப் கூறியவார்த்தை... மாஷாஅல்லாஹ்... வரலாற்று புகழ்பெற்று விட்டது.

'அல்லாஹ் எங்கு சென்றான்.. அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா... அவன் உங்களையும் கண்காணிக்கிறானே... " 

...என்று எதிர்கேள்வி கேட்டு ஆட்டை தரவோ விற்கவோ மிகத்திடமாக மறுத்துவிடுகிறார். 

இது பற்றிய சோதனையாளர்களின் காணொளி யூ ட்யூபில் ஏற்றப்பட்டு வெளி வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது. 

அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்..! அந்த சூடான் சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் தமது இருப்பிடத்துக்கு அழைத்து உபசரித்து... பாராட்டி, 200,000 சவூதி ரியால் பணத்தை  பரிசாக கொடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளுடன் சகோ. யூசூப் உள்ள புகைப்படங்களை அடுத்து காணுங்கள்.

மாஷா அல்லாஹ். 
இதற்கு முன்னரே... அல் ஹுசைனி பவுண்டேஷன் என்ற நிறுவனம், 20,000 சவூதி ரியால் வெகுமதியை அந்த சகோதரருக்கு வழங்கியுள்ளது. 

மேலும்,  20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் வேறோரு இடத்தில் இருந்து அதாவது சில தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சில கொடையாளிகள் குழு மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.

மாஷாஅல்லாஹ், மப்ரூக்.

ஆக மொத்தம்...
தூய்மையான இறையச்சத்துக்கு சுமார் நாற்பது லட்சம் ரூபாய் சன்மானத்தை அல்லாஹ் இவ்வுலகிலேயே சகோ. யூசுஃபுக்கு வழங்கி, தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான். இன்னும் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

"அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்". (அல்குர்ஆன் 65: 2-3).


Reported By

அப்துல் ரஹ்மான். 


முஸ்லிம்கள் தேசிய அரசியலை முன்னெடுக்கவேண்டும்!” – துபையில் நடந்த இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி விழாவில் வேண்டுகோள்!







துபாய், டிசம்பர் 28: பல்வேறு சமூக நலப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆற்றி வரும் சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அமீரகப் பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி (ICS) துபையில் நேற்று (26.12.2014) நடத்திய மாபெரும் கருத்தரங்கில் அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் வலசை ஃபைஸல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

“தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு வெற்றிடமாகவே உள்ளது. ஹிந்துத்துவாவின் கட்டாய வெறுப்பு மற்றும் திணிப்பு அரசியலை உணர்ந்து உறுதியுடனும், விவேகத்துடனும் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்” என்று அவர் தனது சிறப்புரையில் கூறினார்.

முன்னதாக துபை மண்டல பொது செயளாலர் பத்ர் ஜமான் வரவேற்புரை நிகழ்த்தினார். அமீரக தமிழ் பிரிவு தலைவர் நிழாம் தலைமையுரை ஆற்றினார். துபை மண்டல தலைவர் சுஹைல் யூசுஃப் முன்னிலை வகித்தார்.

அடுத்து, சிறப்புரையாற்றிய ICS-யின்அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் அவர்கள் தனது சிறப்புரையில் மேலும் கூறியதாவது:
இந்தியாவை ஒருமைப்படுத்தியது முஸ்லிம்கள். இந்தியாவுக்கு முஸ்லிம்கள் செய்த சேவையைச் சொல்வதென்றால் இது ஒன்று போதும். இந்தியா என்னும் நாட்டை உருவாக்கவும், இந்திய விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அரும் பாடுபட்டு அளப்பரிய தியாகங்களைச் செய்தவர்கள் முஸ்லிம்கள். ஆதிக்க சக்திகளுக்கெதிராக விடுதலைப் போரைத் துவக்கியவர்கள் முஸ்லிம்கள். அப்படி தியாகம் செய்துள்ள முஸ்லிம்களின் நிலை சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை மிகுந்த பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த உரிமைகள் கூட இன்று இல்லை. இந்நிலையை மாற்ற முஸ்லிம் சமுதாயம் அரசியல் தளத்தில் வலுவாக கால் பதிக்க வேண்டும். இன்று கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்று நாம் போராடுகிறோம், கவலைப்படுகிறோம்.

ஆனால் இந்நிலைக்கு முக்கிய காரணம் அரசியல் தளத்தில் நாம் வலுவாக கால் பதிக்காததே. அரசியலில் வலுவாக காலூன்றிய சமூகங்கள் எல்லா துறைகளிலும் முன்னேறியுள்ளன. அது இல்லாத காரணத்தினாலேயே முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ளனர்.

இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகள் என்பது தமிழக அளவிலுள்ள பிரச்னைகள் மட்டும் அல்ல. நாம் அந்தக் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளை நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். வடநாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக உள்ளது. அவர்கள் சேரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதில் அகில இந்திய அளவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டதே சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ). துவங்கிய குறைந்த காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக SDPI வளர்ந்து வருகிறது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் நம்பிக்கையாக எஸ்.டி.பி.ஐ திகழ்கின்றது.

பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலை சமூகம் உணர்ந்து வீரியத்துடன் நமது உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொடர்ந்து ஆக்கபூர்வமான, தன்னலமற்ற அரசியல் பணிக்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி தனது முழு பங்களிப்பையும் கொடுக்கும்.

இவ்வாறு அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் ICS-ன் உறுப்பினர் சேர்க்கை படிவம் வெளியிடப்பட்டது. அதில் அமீரக தலைவர்கள் முன்னிலையில் திரளாக மக்கள் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியில் இணைந்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ICS-ன் கர்நாடக மாநில பொது செயலாளர் ஸஹீருல் ஹக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக, அமீரக செயலாளர் அபுல் ஹஸன் அவர்கள் நன்றியுரையை நவின்றார். கலந்துகொண்டவர்கள் ICS-ன் நிர்வாகிகளிடம் கைலாகு கொடுத்து, தங்கள் மகிழ்ச்சியையும், ஆதரவையும் தெரிவித்தனர்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் இல்யாஸ்... 

இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி துபாயில் நடத்தும் மாபெரும் பொதுக் கூட்டம்...

துபாய், டிசம்பர் 24: இன்றைய அரசியல் நமது பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் வருகிற 26.12.2014 நாள் வெள்ளிக்கிழமை. இடம் மலபார் ஹோட்டல் தேரா துபாய். தலைமை முஹம்மது நிழாம். அமீராக தலைவர் தமிழ்நாடு, முன்னிலை சுகைல் யூசுப், துபாய் மண்டல தலைவர். சிறப்புரை வலசை ஃபைசல், அமீரக பொதுசெயலாளர் தமிழ் மாநிலம், இதில் இந்திய அரசியலையும் இன்றைய சூழ்நிலைகளையும் அறிந்து முன்னேற்ற பாதையை நோக்கி முன்னேறி  ஒன்றிணைவோம் என்று அனைத்து நண்பர்களையும் அழைக்கிறது இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி. அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  
இப்படிக்கு: 
துபாய் மண்டல துணைத் தலைவர் பத்ரு ஜமான் 

ஈத் பெருநாள் கொண்டாட்டம்: வளைகுடா நாடுகளை கலக்கிய முத்துப்பேட்டை இளைஞர்கள் !!!























































துபாய், அக்டோபர் 04:  ஈத் பெருநாள் உலகெங்கிலும் நேற்று (04-10-14) மிகவும் விமர்சையாக   கொண்டாடப்பட்டது. துபாய், கத்தார், குவைத், சவுதி அரேபியா, போன்ற நாடுகளில்  பணிபுரியும் முத்துப்பேட்டை இளைஞர்கள் மிகவும் உற்சாகத்துடனும்  கோலாகலத்துடனும் ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடினர் பின்னர் ஒருவரையொருவர்  ஆரத்தழுவி  அன்பையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டு  அகமகிழ்ந்தனர்.

 வாழ்த்துக்களுடன்  ...

            ஜே :  ஷேக் பரீத்
              A   :    முஹம்மது இலியாஸ் MBA ,
                          (MA .JOURNALISM & MAASS COMMUNICATION)

உங்களின்  மேலான கருத்துக்கள் மற்றும் தொடர்புக்கு :

                             0091-7200-11-6852,        00971-55 786 5516
                           
                     


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)