முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை போலீசை கத்தியால் குத்திய வாலிபரை 3 தினங்கள் ஆகியும் நீதிமன்றத்தில் ஒப்படைக்காத காவல் துறை.





முத்துப்பேட்டை ஆகஸ்ட் 13: இறந்துவிட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு.. 
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லியின் முயற்சியால்பின்னர் மாலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. முத்துப்பேட்டையில் கடந்த 10-ம் தேதி பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிபு மகன் வாசிம்கான்(20) என்ற வாலிபருக்கும் தெற்கு தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது(25) என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது தகவல் அறிந்து அப்பகுதிக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் ராமானுஜம், போலீசார் அரவிந்த், சுரேஷ் ஆகியோர் சென்றனர். அப்பொழுது அரவிந்த் என்ற போலீஸ் வாசிம்கானை பிடிக்க முயன்றார். அப்பொழுது வாசிம்கானுக்கு அரவிந்துக்கும் தகராறு ஏற்பட்டது. 

போலீஸ் அரவிந்த் போலீஸ் உடை அணியாமல் இருந்துள்ளார். அதற்கு வாசிம்கான் என்னை பிடிக்க நீ யாரு?.. போலீஸ் உடையும் அணியவில்லை.. நீ உயிருக்கு போராடிய ஆட்டு குட்டியை திண்டவன் தானே? என்று பேசினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்பொழுது ஆத்திரம் அடைந்த வாசிம்கான் போலீஸ் அரவிந்தை கத்தியால் குத்தினார். அதனையடுத்து மற்ற போலீசார் வாசிம்கானை மடக்கி பிடித்து கை கால்களை கட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சேர்த்தனர். காயம் அடைந்த போலீஸ் அரவிந்த் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். வாலிபர் வாசிம்கான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டது. 

ஆனால் நீதி மன்றத்தில் ஒப்படைக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்துக்குள் கைதியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் வாசிம்கானை அன்று இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்திலும், பிறகு 11-ம் தேதி காலை விசாரணை என்ற பெயரில் எடையூர் காவல் நிலையத்திலும், நேற்று 12-ம் தேதி காலை முத்துப்பேட்டை காவல் நிலையத்திலும் வைத்து வாலிபர் வாசிம்கானை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கை, கால் கட்டப்பட்டிருந்த வாலிபர் வாசிம்கான் உடல் நிலை சோர்வாக காணப்பட்டு மிகமும் மோசமான நிலையில் இருந்துள்ளார். 

இதனைக்கண்ட காவலர் ஒரு ஒருவர் வாசிம்கான் மீது பரிதாபப்பட்டு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வாசிம்கானின் நண்பர்கள் உறவினர்கள் நேற்று வாசிம்கானைப் பார்க்க முத்துப்பேட்டை காவல் நிலையம் சென்றுள்ளனர். அதற்கு போலீசார் அனுமதிக்காமல் மறுத்து திருப்பி அனுப்பினர். அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பல மணி நேரம் காவல் நிலையம் வெளியில் காத்திருந்தனர். அப்பொழுது போலீசார் பரப்புடன் காணப்பட்டதால் வாசிம்கான் இறந்துவிட்டதாக முத்துப்பேட்டை முழுவதும் தகவல் பரவியது. இதனையடுத்து இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் முகம்மது ஷிப்லி துரிதமாக மாவட்ட எஸ்.பி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். 

மேலும் அவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நீதிமன்ற விதிமுறையை மீறி வாசிம்கானை நீமன்றத்தில் ஒப்படைக்காமல் வைத்து துன்புறுத்தி வருகிறார்கள். வாலிபரின் உடல்நிலை மோசமாக உள்ளது. உடன் நீதிமன்றத்தில் அந்த வாலிபரை ஆஜர்ப்படுத்தாவிட்டால் சென்னையில் டி.ஜி.பி.ஐயை சந்திப்பேன். தமிழக முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்றார். அதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ஜெயசந்திரன் உத்தரவுப்படி முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் மேற்பார்வையில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அதிரடியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்ட வாலிபர் வாசிம்கானை காவல் நிலையம் எதிர்புறம் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்துவிட்டு நேற்று மாலை திருத்துறைப்பூண்டி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதனால் வாலிபர் வாசிம்கான் இறந்துவிட்டதாக வெளியான செய்திக்கும் முத்துப்பேட்டையில் ஏற்பட்ட பரபரப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 

இந்த சம்பவம் குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி கூறுகையில்: காவலர் ஒருவரை தாக்கிய புகாரில் வசீம்கான் என்ற இளைஞரை முத்துப்பேட்டை காவல்துறை கைது செய்து ரிமாண்ட் செய்யாமல் இரண்டு நாட்களாக சட்ட விரோத காவலில் வைத்து அடித்து, துன்புறுத்தி வருவதாக இன்று(நேற்று) காலை அவரது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தனர். உடனடியாக நான் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருணை தொலைபேசி மூலம் பல முறை தொடர்பு கொண்டேன். அவர் எடுக்கவில்லை. அவரிடம் கூறும் படி அவரின் உதவியாளரிடம் தெரிவித்தும் அலட்சியப்படுத்திவிட்டார். 

அதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட உளவுத்துறை அதிகாரிகளிடம் முத்துப்பேட்டை காவல்துறையின் சட்ட விரோத நடவடிக்கைகள் தவறானது என தெரிவித்தேன். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வசீம்கான் என்ற இளைஞர் இன்று(நேற்று) மாலை ரிமாண்ட் செய்யப்பட்டார். எஸ்.பி.பட்டிணம், ஆம்பூர், சேலம் போன்ற இடங்களில் சமீபத்தில் நடத்த காவல்நிலைய சாவுகளின் வடுவே இன்னும் ஆறாத நிலையில் இது போன்ற காவல்நிலைய துன்புறுத்தல்கள் நடைபெறுவது வருத்தத்திற்குரியது. ஒரு சில காவல்துறையினர் செய்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளால் மொத்த காவல்துறையும் கெட்ட பெயரை சுமக்க வேண்டியுள்ளது. வசீம்கானை ரிமாண்ட் செய்யாமல் இரண்டு நாட்கள் சட்ட விரோத காவலில் வைத்து துன்புறுத்திய முத்துப்பேட்டை காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Rported By 

முஹம்மது இல்யாஸ். MBA, MA. JMC 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)