முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து குட்டிச்சுவராக ஆக்கிய பெருமை அ.தி.மு.க அரசை சாரும் என்பது பழ.கருப்பைய்யா மூலம் நிருபணமாகிவிட்டது. முத்துப்பேட்டை தி.மு.க கூட்டத்தில் மனுஷ்யபுத்திரன் பேச்சு.



முத்துப்பேட்டை, பிப்ரவரி 03/2016: முத்துப்பேட்டையில் நகர தி.மு.க சார்பில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் அவலங்களை விளக்கிய பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னால் பேரூராட்சி துணைத் தலைவர் ஹனிபா நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளரும் நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கவிஞர் மனுஷ்யபுத்தரன் கலந்துக் கொண்டு பேசுகையில்: தற்பொழுது நடக்கின்ற ஆட்சி ஊழல் நிறைந்த, மோசமான.. அவலமான ஆட்சி என்பது மக்கள் அனைவரும் உணர்ந்துவிட்டனர். 

மேலும் அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பைய்யா மூலம் தற்பொழுது நடப்பது கமிஷன் ஆட்சி என்பதும் மக்களின் வாழ்வாதரத்தை கெடுத்து குட்டிச்சுவராக ஆக்கிய ஒரு ஆட்சி என்பதும் நிருபணமாகிவிட்டது. திட்டங்கள் என்ற பெயரில் தற்பொழுது விளம்பர வெறிதான் நடந்து வருகிறது. ஆட்சி மீது ஊடகங்கள் குறைகளை சுற்றிக்காட்டி எழுதினால் அதற்கு விளக்கம் அளிக்காமல் அவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. முதலாளிக்களுக்குதான் இந்த அரசு சலுகைகளை காட்டி வருகிறது. தமிழகத்தில் எந்தந்த துறை அமைச்சர் என்று யாருக்கும் தெரியாது. ஓட்டு கேட்க மட்டும் முகத்தை காட்டுபவர்தான் ஜெயலிலதா, மக்களுக்கு பாதிப்பு என்றால் ஒழிந்து விடுவார். அதே நேரத்தில் மக்களை பார்த்து கண் கலங்கும் கலைஞர் தலைவரா? மக்களை பார்க்க நினைக்காமல் இருக்கும் ஜெயலலிதா தலைவரா? மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
 
கூட்டத்;தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை வே.மன்னர் மன்னன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட ஆதி திராவிட நல வாரிய செயலாளர் பிரபாகரன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் தேவதாஸ், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத் தலைவர் முத்துராமலிங்கம், நகர அவைத் தலைவர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிகள் அன்பழகன், தமீம், இபுராஹிம், கண்ணன், கோவிந்தராஜன்;, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் செல்வம், ராஜாராம், ரபிஅகமது, அன்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, ஜாம்பை கல்யாணம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவ.அய்யப்பன், ஜெகபருல்லா, ரெத்தினகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள்; ஆடரலசன், ரவிகுமார் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர்.


0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)