முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் தொழில் அதிபர் டாக்டர்.ஹைதர் அலி வீட்டு திருமணம் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். அப்பொழுது எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென்று நடிகர் பாக்கியராஜ் திருமண மண்டபத்துக்கு மணமக்களை வாழ்த்த வந்திருந்தார்.
இதனைக் கண்ட மக்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு நலம் விசாரித்ததுடன் அவருடன் நின்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஆனது. பின்னர் மண மேடைக்கு சென்ற நடிகர் பாக்கியராஜ் மணமக்களை வாழ்த்தியும் தொழில் அதிபர் ஹைதர் அலியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மதிய உணவை சாப்பிட்டு விட்டு அங்கு இருந்தவர்களிடம் எழிமையாக நின்று பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பி சென்றார்.
Reporter By
முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication
0 comments:
Post a Comment