முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்நதானில் (05.08.2015) நேற்று அனைத்து கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி நடந்த முழு அடைப்பிற்கு ஆதரவு அளித்து அனைத்து கடைகளும் அடைகப்பட்டிருந்தன. அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் கடையைத் திறக்கச் சொல்லி வறுப்புறுத்தினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெருகவாழ்ந்தான் போலீசார் இரு தரப்பினரின் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இருந்தாலும் வியாபாரிகள் மற்றும் முழு அடைப்பில் பங்கேற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கடைத் தெரு பகுதியில் கூட்டமாக கூடினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் பத்திரிக்கையர்ளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அவர்களது கோரிக்கைகளை வழியுறுத்தி பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் செல்வகுமார் கூறுகையில்: தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிய காந்தியவாதி சசிபெருமாள் தனது உயிரை இழந்துள்ளார்.
அவரது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி இன்று(நேற்று) நடக்கின்ற முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனை சீர் குலைக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் கடையைத் திறக்க வறுப்புறுத்தி உள்ளது கண்டிக்கக்குரியது. இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றார்.
Reporter By
முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication
0 comments:
Post a Comment