முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் காவல்துறை PFI கண்டனம்..


திருச்சி, செப்டம்பர்24: மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் காவல்துறை – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த கூட்டத்திற்கு தலைமையேற்று ஆட்சி நடத்தி, வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் விவசாய நிலங்களையெல்லாம் கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

தற்போது பா ஜ க வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக வருகின்ற செப்டம்பர் 26 அன்று தமிழகத்தின் திருச்சி மாநகருக்கு வருகை தர இருகின்றார்.


மோடியின் வருகைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக காவல் துறையின் நடவடிக்கைகள் திருச்சி மக்களுக்கு பீதியை கிளப்புவதாக அமைந்துள்ளது. 
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை அதற்கு மாற்றமாக பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் சோதனை நடத்துவதும், மாநாடு நடக்கக்கூடிய தினத்தில் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று மிரட்டுவதும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க சொல்வதும் சட்டத்திற்கு புறம்பான செயல்களாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை காவல்துறை உடனே நிறுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

மேலும் குஜராத்தில் முஸ்லிம்களின் மீது பொய் வழக்குகளை போடுவது, அப்பாவி மக்களை போலி மோதல்களில் சுட்டுகொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவரும் குஜராத் காவல்துறை மோடியின் பாதுகாப்பிற்காக திருச்சியில் முகாமிட்டிருப்பது தமிழக மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் மேல் மக்களுக்கு சந்தேகங்களை எழுப்புகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.


இப்படிக்கு
ஜெ. முகம்மது ரசின்
மாநில செயலாளர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)