முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 09: முத்துப்பேட்டையில் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே நாளில் பா.ஜ.க. கட்சியின் மாநில செயலாளர் முத்துப்பேட்டையை சேர்ந்த முருகானந்தத்திற்கு பிறந்த நாள் என்றும், இவரது பிறந்த நாள் விழாவை சந்தை அருகே உள்ள SVK அன்பு திருமண மண்டபத்தில் கொண்டாடப் பட்டதாகவும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்) இந்த பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. வின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்ததாகவும், மேலும் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேட்டையிலிருந்து குட்டியார் பள்ளி வழியாகவும், தம்பிக்கோட்டையிலிருந்து புதுத்தெரு பள்ளிவாசல் வழியாகவும் பெருநாள் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், மேலும் ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகேயும் பட்டாசுகளை வெடித்து வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், இதை பார்த்த சில இஸ்லாமிய நண்பர்கள் இவற்றை தட்டிக்கேட்ட தாகவும் கூறப்படிகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)
மேலும் நேற்று இரவு இஸ்லாமிய நண்பர்கள் 2 சக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததற்கு போலிசார் அவர்களை மடக்கி பிடித்து அபராதமும் விதித்துள்ளனர். ஆனால் இன்று பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் மூன்று மூன்று பேராக வருவதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிரச்சனையை கேள்விப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றதாகவும், அப்போது அனைத்து இளைஞர்கள் மீது போலிசார் லத்தி சார்ஜ் பண்ணியதாகவும், இதனால் இளைஞர்கள் மீது காலில் பலமாக உள் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் ஆசாத் நகர் நாகூர் கனி என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)
மேலும் காயல் பட்டினத்தை சேர்ந்த ஓர் இஸ்லாமியரை முத்துப்பேட்டை சந்தை அருகே வைத்து பா.ஜ.க. வினர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)
மேலும் அடையாளம் தெரியாத சில பேர் நான்கு கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி வர்த்தகம் சங்கம் சார்பில் புகார் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)
எனவே யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது பாராபட்சமின்றி தக்க நடவடிக்கை எடுத்து முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் கட்டிக்காக்க வேண்டுமென முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் கேட்டுக்கொள்கிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)
அப்பாவி மக்கள் மீது பலியை போடும் காவல் துறை
ReplyDeleteகுற்றவாளி மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்
intha visayathil kaval thurai unmaiyana kutra valiyai kandu pidichu thahunda nadavadikkai edukkappada vendum
ReplyDeleteஅரசியலில் ஆதங்கத்தை தேட பா.ஜ.க. வின் நாடகம் இந்த முத்துப்பேட்டை கலவரம் ஏற்பாடு
ReplyDeleteயா அல்லாஹ் இந்த கொடிய வர்களிடமிருந்து எங்களை காப்பாற்றுவாயாக
ReplyDeleteஇவர்களுக்கு உன்னுடைய மார்கத்தை ஏற்கும் தகுதியை அருள்வாயாக
ReplyDeleteBullshit janata party can do nothing....
ReplyDeleteHow the police give permission muslins streets in eid day, police take aection against bjp.
ReplyDeleteTake a interview the polish ask the priliant questins and puplish by your media
1.How you give permission in muslims streets in eid day.
2. whey are not take aection against bjp?
3. whey you are not give sequrity in muslims down arieas?
4. what is the aection against bjp aqust?
then only they will wakeup. the puplick will know the truth.
அப்பாவி மக்கள் மீது பலியை போடும் காவல் துறை
ReplyDeleteகுற்றவாளி மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்
the culprits ... who initiated the riots must be punished... not the innocents..
ReplyDeletethe police is the "first accused" in this case....