முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பாஜக வினர்தான் என்னை வெட்டினார்கள்; வெற்றி பரபரப்பு பேட்டி:


முத்துப்பேட்டை, ஜூலை 30: விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  திருவாரூர் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் வெற்றி. இவருக்கு  இஸ்லாமிய இளைஞர்களின்  பழக்க வழக்கம் அதிகம் .இவர் மர இழைக்கும் ஆசாரி தொழில் செய்து வருகிறார். கடந்த  5 ஆம் தேதி 4 பேர் கொண்ட மதவெறி கும்பல் வெற்றியை அரிவாளால் மிக கொடூரமாக கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது.

இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்த வெற்றியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாதாகவும், ஆனால் காவல்துறை, தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்,முதலில்முதல் கட்ட போராட்டமாக  சாலை மறியல் போராட்டத்தை நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினரை காவல் துறை சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக  தெரிகிறது.

கொலைவெறி கும்பல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள், தனது இரண்டாம் கட்ட போராட்டத்தை கையிலெடுத்து  "மயான கொட்டகையில்" சாகும் வரை உண்ணாவிரத  போராட்டத்தை மேற்கொண்டனர் . உண்ணாவிரத போராட்டம் இருந்தவர்களை வழுக் கட்டாயமாக காவல்துறை வெளியேற்றியது.

இரண்டுகட்ட போராட்டங்களிலும் நீதி கிடைக்காத காரணத்தினால் மனவுளைச் சலடைந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் இரண்டு பேர்  செல் போன் கோபுரத்தின்  உச்சிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர்.

நடைபெற்ற அத்தனை சம்பவங்களின் உண்மையும், பின்னணியையும் பற்றி   நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் விளக்கியுள்ளார் வெற்றி.

வெற்றியின் பரபரப்பு பேட்டி விரைவில் வீடியோ வடிவில் காணத் தவறாதீர்கள்.

சந்திப்பு: ஜே: ஷேக்பரீத்

4 comments:

  1. முத்துப்பேட்டை காவல்துறை உடனே பாஜக வினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் :இல்லை என்றால் முத்துபேட்டையில் உள்ள அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் களத்தில் இறங்க வேண்டும் :
    துபாய் --ஜெபெல் அலி போர்ட்டிளிருந்து :

    கே .மகாலிங்கம் ,சு .ஐயப்பன் ,எம் .தர்மராஜ் ,ச .விடுதலை செழியன்
    மற்றும் அரேபிய சிறுத்தைகள்

    ReplyDelete
  2. வெற்றி ஓர் தலித் என்ற காரணத்தினால் இவர் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை ஆட்சியாளர்களும், காவல்துறையினரும், ஊடகங்களும் உதாசினப் படுத்தியிருந்தாலும் இந்த தாக்குதல் உண்மையையும், பின்னணியையும் இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்க்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    முத்துப்பேட்டையிலிருந்து:

    பிரகாஸ், மணிகண்டன், செந்தில். விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய நகர நிர்வாகிகள் முத்துப்பேட்டை

    ReplyDelete
  3. கொலை செய்த நபரை காவல்துறை கைது செய்ய தாமதிப்பது ஏன்?

    ReplyDelete
  4. கொலை வெரி கொண்டு எமது இந்து சகோதரணை தாக்கிய மதவெரி கொண்ட நபரை காவல்துறை கைது செய்யாதது ஏன்?

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)