முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் 2 வருடமாக நோன்பு நோற்று சாதனை படைத்தது வரும் 4 வயது சிறுவன்.



முத்துப்பேட்டை, ஜூலை 25 : முத்துப்பேட்டையில் இரண்டாவது வருடமாக 4 வயது சிறுவன் நோன்பு நோற்று வருகிறான். கடந்த சனிக்கிழமை இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான நோன்பு துவங்கியது. இந்த நோன்பு சுமார் ஒரு மாதம் கடைபிடிக்கப்படும் என்பது யாவரும் அறிந்ததே. அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து சாப்பிட்டு பின்னர் மாலை 6.30 மணிக்கு அவற்றை விடுதல் வேண்டும். இவற்றில் இடைவெளியில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும், அதில் சுபுஹு தொழுகை காலை 5.15 மணிக்கும், மதியம் லுகார் தொழுகை 12.30 மணிக்கும், அசர் தொழுகை மாலை 4 மணிக்கும், மக்ரிப் தொழுகை இரவு 6.45 க்கும், இஷா தொழுகை இரவு 8 மணிக்கு என்னும் ஐவேளை தொழுகைகளும் தொழவேண்டும். இதன் இடையில் அதிகாலை 4.30 மணிக்கு துவங்கும் நோன்பு பின்னர் விரதம் மலை 6.30 மணிக்கு தான் முடித்து பின்னர் சாப்பிட வேண்டும். இதற்க்கு இடையில் தண்ணீரோ, தின்பண்டங்களோ சாப்பிடக்கூடாது. இந்த நோன்பினை பிடிப்பது பெரியவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் இந்த வேளையில் 4 வயது சிறுவன் ரமலான் மாதத்தில் நோன்பிருந்து வருவது முத்துப்பேட்டை மக்களை பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் அந்த 4 வயது சிறுவனை நேரில் சென்று வாழ்த்தியும் சில செய்திகளை நம்முடன் பகிர்ந்ததையும் உங்கள் முன்பு எடுத்துரைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

"திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவைச் சேர்ந்த ஜாஹீர் ஹுசைன், முஹமது பாத்திமா இந்த இரு தம்பதிகளின் இரண்டாவது மகன் தான் முஹம்மது ரிஸ்வான். வயது 4, இங்குள்ள பிர்லியண்ட் மெட்ரிக் பள்ளியில் U.K.G. படித்து வருகிறான். படி சுட்டியான இவன் படிப்பிலும் மிகக் கெட்டிக்காரன், மேலும் எல்லா பாடத்திலும் முதல் மார்கே பெற்றுள்ளான். அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் முதல் பரிசுகளையும் வென்றுள்ளான். உலக கல்வியில் அதிகம் அக்கறைக் காட்டும் இந்த மாணவன் மார்க்கக் கல்விகளிலும் அதிகம் ஆசையுடயவனாக நோன்பு வைப்பதிலும் முதலிடம் வகிக்கிறான்.

நான் எல்லா நோன்பையும் கஷ்டம் இல்லமால் நோற்க அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் என்று கூறிய சிறுவன் உடல் வலிமையையும் எனக்கு கிடைக்க அல்லாஹ் விடம் எனக்காக துவா செய்யுங்கள் என்றும், என்னை போலா எல்லோ சிறியவர்களும் நோன்பு நோற்க வீட்டு பெற்றோர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்றும் எம்மிடம் கூறினான். இவற்றை படித்த அனைத்து சகோதரர்களும் இந்த இளம் வயது சிறுவனுக்கு அல்லாஹ் விடம் அதிகம் துவா செய்ய வேண்டுகிறோம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

யூசுப் அலி(அலீம்),AKLT .அப்துல் ரஹ்மான்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)