இலங்கை, ஜூலை 25 : எமது குடும்ப சாப்பாட்டை ஒரு சோறும் ஒரு கறியும் ஒரு சுண்டலுடன் மட்டுப்படுத்தி தியாகத்துடன் வாழ்ந்து சமூக சேவை செய்யும் நான் எனது கணவர் கூலி வேலை செய்து கொண்டு வரும் பணத்தை மிச்சம் பிடித்து அதையும் சமூக சேவைக்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் பயன் படுத்துவேன் என கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வாழைச்சேனையைச் சேர்ந்த புகாரி சித்தி சபீக்கா KWC க்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.
கேள்வி:நீங்கள் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என்ன?
பதில்:பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பெண்களுக்குதவவும் பெண்களின் நலனை கருத்திற் கொண்டுமே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
கேள்வி: சமூக சேவகியான நீங்கள் அரசியலில் குதிப்பதற்கு பிரதான காரணம் என்ன?
பதில்: அரசியலில் ஈடுபடுவதன் மூலம் பெண்களின் அரசியல் சார்ந்த விசயங்களை கவனிக்கமுடியும் அதற்காகவே அரசியலில் களமிறங்கியுள்ளேன்.
கேள்வி: நீங்கள் ஐக்கிய தேசியக்கட்சியை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன?
பதில்: ஐக்கிய தேசியக் கட்சி பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன் பெண்களின் உரிமை சார்ந்த விடயங்களிலும் பெண்களின் நலன் சார்ந்த விசயங்களிலும் அக்கறையுடன் செயலாற்றுகின்றது. மற்ற கட்சிகளை விட ஐக்கிய தேசியக்கட்சி எனக்கு பிடித்தமான ஒரு கட்சியாகும்.அத்தோடு இது ஒரு நேர்மையான கட்சியாகும்.
கேள்வி: நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு உங்கள் கணவர் ஆதரவு தெரிவிக்கின்றாரா?
பதில்: நான் அரசியலில் குதிப்பதற்கும் கிழக்கு மாகாண சபை தேர்;தலில் போட்டியிடுவதற்கும் முதலாவது ஆதரவு தெரிவித்தவர் எனது கணவரேயாகும்.
அத்தோடு எனது பிள்ளைகளான பாத்திமா அஸ்னா, பாத்திமா நாஸிபா, அகமட் ஆதில் ஆகிய மூன்று பிள்ளைகளும் ஆதர தெரிவித்ததுடன் இவர்களின் ஒத்துழைப்பு எனது அரசியல் நடவடிக்கை அதிகம் உள்ளது.
கேள்வி: உங்கள் கணவர் என்ன தொழில் செய்கின்றார்?
பதில்: எனது கணவர் மேஸன் தொழில் செய்பவர்
கேள்வி: உங்கள் கணவரின் பெயர் என்ன?
பதில்: முகம்மது ஈஸா,
கேள்வி: உங்கள் கனவரின் உழைப்பு உங்கள் குடும்ப செலவுக்கே போதுமாக இருக்குமா?
பதில்: கணவர் பல திசையிலும் உழைத்து வரும் பணத்தை கொண்டு குடும்ப வாழ்கையை நடத்த முடியாமல் இருக்கின்றது.
எனது மூன்று பிள்ளைகளின் கல்விச் செலவுக்கும் பயன் படுத்த வேண்டியுள்ளது.
கணவர் உழைத்து வரும் பணத்தில் தான் மிச்சம் பிடித்து சமூக சேவைக்கு பயன் படுத்துவேன்.
எனது வீட்டில் மிகவும் எளிமையான முறையிலேயே சமைப்பேன். ஓவ்வொரு நாளும் ஒரு சோறு மற்றும் ஒரு கறி ஒரு சுண்டல் அவ்வளவுதான் இதைவிட வேறு கறிகள் சமைப்பதே கிடையாது.
தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் சமூக சேவையில் ஈடுபடுகின்றேன்.
கேள்வி: உங்கள் பிரதேசத்தில் அரசியல் ஜாம்புவான்கள் இத் தேர்தலில் போட்டியிடும் போது நீங்கள் வெற்றி பெற சந்தர்ப்பம் உண்டா?
பதில்: எனது வீட்டின் வலது இடது இரண்டு புறங்களிலும் இரண்டு வேட்பாளர்கள் இருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் நிச்சயம் கிடைக்கும் நான் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நன்றி - எம்.எஸ்.என். நூர்தீன் இலங்கை
பாராட்டுவதா.?பரிதாபப்படுவதா? கிழக்குதேர்தலில் குதித்துள்ள முஸ்லிம் சகோதரி ஓர் பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment